August 2012

வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதாப இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் (அல்சர்) இருக்கலாம், என்கிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள கொலேரேக்டல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன். அவர் மேலும் கூறியதாவது:-
இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம்.


1) குடல் புண் எதனால் ஏற்படுகிறது?:
*மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
**புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.
2) குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்:

1. வாய்வுக் கோளாறில் ஏற்படும் குடல் புண்.
2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.
3) குடல் புண்ணின் அறிகுறிகள்:

காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாக அர்த்தம்.
இந்தப் பகுதியில் ஏற்படும் அசவுகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.
சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக காணப்படுகிறது.
4) குடல் புண்ணோடு சேர்ந்து நெஞ்செரிச்சல்:
சிலநேரங்களில் அமில நீரானது, வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம்.வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.
இந்த மாதிரியான அசவுகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும்.
சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.
5) குடல் புண்ணினால் ஏற்படும் ரத்தப் போக்கு:
சிலருக்கு வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாக கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம். மருத்துவம் செய்யா விட்டால் குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யா விட்டால் ரத்தக் கசிவும் சமயத்தில் ரத்தப் போக்கும் ஏற்படும்.
இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.
ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படு கிறது. அதனால் வயிற்றை அறை தோல்களில் வீக்கம் ஏற்படு கிறது.

இதை உடனடி அறுவை சிகிச்சை மூலமே குணப் படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும் அறுவைச் சிகிச்சையால் தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
6) குடல் புண் குணமடைய செய்ய வேண்டியவை:
குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவைட்டிய லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும். மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.
*1.வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.
*2.மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.
*3.பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.
*4.பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்ட வுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.
*5.இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம். யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும்.
*6.எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும். முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும்.
*7.புகை பிடிக்கக் கூடாது, மது, காபி பானங்கள் குடிக்க கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. அதிகமாகக சாப்பிடக் கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.
7) குடல் புண்ணுக்கு நவீன சிகிச்சைகள்:
1.செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறு வலி போன்றவை அடிக்கடி வந்தால் அல்சர் இருப்பது நிச்சயம். எனவே இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
*2.வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும். இதை மாத்திரைகள் மூலம் குறைக்க முடியும். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
*3.அல்சரை குணப்படுத்த தற்போது புதுவித மருந்து, மாத்திரைகள் உள்ளன. அவற்றை வயிறு தொடர்பான சிறப்பு மருத்து வர்கள் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது நல்லது. மருந்து கடைக்காரர்களிடம் சென்று ஏதாவது சில மாத்திரைகளை வாங்கி உட் கொள்வது ஆபத்தானது.
*4. நவீன சிகிச்சை மூலம் சென்னையை சேர்ந்த பல அல்சர் நோயாளிகள் குணமடைந் துள்ளனர். அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது.
*5.குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்னப பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளை சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
*6.குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம், காபி, மது, கார்பண்டை ஆக்சைடு அடைக்கப்பட்ட குளிர் பானங் களை தவிர்க்க வேண்டும், டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ****நன்றி : .....என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்..faris fana

ஸ்லாத்தைப் பொறுத்தவரை, குடும்பப் பொருளாதாரப் பொறுப்பு ஆண்களுக்கானது என்பதால், பணம் சம்பந்தப்பட்ட ஸகாத்தும் ஆண்களுடைய கடமையே என்கிற தவறான எண்ணமே பரவலாக நிலவுகிறது. இஸ்லாத்தில் ஈமான், தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய ஐந்தும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை என்றே கூறப்பட்டுள்ளதே தவிர, ஆண்களுக்கு ஐந்து கடமைகளும், பெண்களுக்கு நான்கு மட்டுமே என்று சொல்லப்படவில்லை!!

திருக் குர் ஆனில், 31 இடங்களில் ஸகாத்தைப் பற்றிக் கூறும் இறைவன், அவற்றில் ஒரு இடத்திலும் ஆண்களை மட்டும் விளித்துச் சொல்லவில்லை. ”ஈமான் கொண்டவர்களே” என்றுதான் பொதுவாக அழைத்துச் சொல்கிறான். இன்னும் சொல்லப்போனால், ஒரு இடத்தில் குறிப்பாக பெண்களைத்தான் அழைத்து ஸகாத் கொடுக்கச் சொல்கிறான்:
[33:33] (நபியின் மனைவிகளே!) ..... தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்.
ஆகவே குடும்பத்தின் பொருளாதார பொறுப்பனைத்தும் ஆணின் மேல் உள்ளதால் பெண்கள், தம்முடைய ஸகாத்திற்கும் ஆணே பொறுப்பு என்று தவறாக எண்ணி தட்டிக் கழிக்க இயலாது. எப்படி பெண்களின் ஈமான், தொழுகை, நோன்பு ஆகியவற்றிற்கு அப்பெண்களேதான் பொறுப்போ, அதேபோல பெண்களின் ஸகாத்திற்கும், ஹஜ்ஜிற்கும் பெண்கள்தான் பொறுப்பு!! ஆண்கள் அல்ல!!

ஸகாத் கொடுக்குமளவுக்கு பெண்களுக்கென்ன சொத்துகள் இருக்கப் போகிறது என்று தோன்றும். தாமே சம்பாதித்தவைகள், நகைகள், பெற்றோர் வழி வந்த சொத்துகள், கணவர் பரிசளித்த வீடு/நிலம், மகன் வாங்கிக் கொடுத்தது என்று ஏதேனும் ஒன்றாவது பெண்களுக்கு இருக்கும்.

இங்கே பெண்களுக்கு ஸகாத் கடமை உண்டு என்று சொல்லும்போது, கணவனுள்ள பெண்களை மட்டும் குறிக்கவில்லை. விவாகரத்தானவர்கள், விதவைகள், திருமணமாகாதவர்கள், ஆதரவற்றவர்கள் என்று யாரானாலும், ஸகாத்திற்குரிய அளவை அடைந்த செல்வத்தை உடைய எல்லோருக்கும் - மனநலம் பாதிக்கப்பட்டவரானாலும்கூட - ஸகாத் கடமையாகும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

காத்திற்கான விதிகளும்கூட எல்லாருக்கும் பொதுவானவையே. முதலாவது, ஜகாத் கொடுக்கக் கடமைப்பட்டவர் தனது செல்வம் முழுமைக்கும் சொந்தக்காரராக இருக்க வேண்டும் என்பது பெண்களின் விஷயத்தில் அதிகம் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.
[57:7] நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து (அல்லாஹ்வுக்காகச்) செலவு செய்யுங்கள்;
ஏனெனில், இஸ்லாமைப் பொறுத்த வரை ஒருவர் தம் மனைவிக்கு, அல்லது தாய்க்கு வீடு-தோட்டம்-நகை என்று எவற்றையாவது வாங்கிக் கொடுத்தால், அது அவர்களுக்கான அன்பளிப்பாகக் கருதப்படும். அதன்மீதான முழு உரிமையும், அச்சொத்தின்மூலம் வரக்கூடிய வருமானம், செலவினங்களுக்கும் இறப்பு வரை அப்பெண்களே முழு பொறுப்பாளர் ஆவர்.

ஆனால், இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில், வரிவிலக்கு அல்லது நிலஉச்சவரம்பு போன்ற சட்டரீதியான காரணங்களுக்காக, ஒருவர் தாம் வாங்கும் சொத்தை தன் பெயரில் வாங்காமல், தன் மனைவி-மக்கள்-உறவினர் மீது வாங்குகின்றனர். இந்நிலைகளில், ஆவணப்படி உரிமையாளர் ஒருவராக இருந்தாலும், அதன் முழு பயனாளர் அதை வாங்கியவரே ஆவார். இம்மாதிரியான சூழ்நிலைகளில் வாங்கியவரே அதன் ஸகாத்திற்குப் பொறுப்பாளராகிறார்.
ஏன், இன்னும் நிறைய குடும்பங்களில் நகைகள் வாங்கப்படுவதன் காரணமே, “முதலீடு” என்பதுதான். பணமாக இருப்பதைவிட நகையாக இருந்தால், மதிப்பும் கூடும்; அவசரத் தேவைக்குப் பணமாக மாற்றிக் கொள்ளுவதும் எளிது. ஆகவே, பெண்கள் தங்களிடமிருக்கும் நகைகள் தங்களுக்கான அன்பளிப்பாக வாங்கித் தரப்பட்டனவா, அல்லது “அணிந்துகொள்ளலாம்; அதே சமயம் அவசரத்திற்குத் தேவைப்பட்டால் அடமானம் வைக்கவோ விற்கவோ வாங்கித் தந்தவருக்கே உரிமை” என்ற நிலைப்பாடு உடையதா என்பதை தெளிவுபடுத்திக் கொண்டால், ஸகாத் யாருடைய பொறுப்பு என்பது தெரியும்.

அதாவது, தனது பெயரில் இருக்கும் சொத்திற்கு அதிகாரம் பெறாதவர்கள் மீது ஸகாத் கடமையில்லை. செல்வத்திற்கு முழு உரிமை பெற்றவர்கள் மீதே ஸகாத் கடமையாகும்.

ரண்டாவது நிபந்தனை, அளவு:
[2:219] (நபியே) எதை (இறைவழியில்) செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக!
எந்தப் பொருளுமே, வீடு, நிலம், சேமிப்புப் பணம் போன்றவற்றில், நமது அடிப்படைத் தேவைகளுக்குப் போக மிஞ்சியவற்றிற்குத்தான் ஸகாத். ஆனால், ஒரு விஷயம் யோசித்துப் பார்த்தால், பெண்களுக்கு எந்தவிதமான பொருளாதார நிர்ப்பந்தமுமில்லை. அவர்களின்மீது யாருக்குமான பராமரிப்பும் கடமை கிடையாது. ஆகவே அவர்களிடம் இருக்கும் எல்லா சொத்துக்களுமே, அநேகமாக அவர்களின் சேமிப்பாகத்தான் ஆகும்.

அதே சமயம், கணவனால் வீடு வாங்க முடியவில்லை. ஆனால், மனைவியிடம் ஒரு வீடு இருந்து, அதில் வசித்து வருகிறார்கள் என்றால், மனைவி அதற்கு ஸகாத் கொடுக்கத் தேவையில்லை. அதுபோலவே சேமிப்புப் பணத்திற்கும், பிற சொத்துக்களுக்கும் ஒப்பிட்டுப் பார்த்து, ஸகாத்தைத் தீர்மானிக்கவும்.

பெண்களின் நகைகள் என்று வரும்போது, வெவ்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அதாவது, பெண்களுக்கு நகைகள் அவசியத்தின் அடிப்படையிலானவை என்பதால் நகைகளுக்கு ஸகாத்தே கொடுக்கத் தேவையில்லை என்பது ஒரு கருத்து. அடுத்த கருத்து, அவர்கள் அன்றாடம் அணியும் நகைகள் தவிர்த்து மற்றவை எல்லாம் ஸகாத்திற்கு உட்பட்டவை என்பது.

எனினும், நகைகளுக்கு ஸகாத் கண்டிப்பாகக் கொடுத்தேயாக வேண்டும் என்பது கீழ்வரும் ஹதீஸிலிருந்து தெளிவாகிறது:
கெட்டியான இரு வளையல்கள் அணிந்திருந்த தனது மகளை அழைத்துக் கொண்டு இறைத்தூதரிடம் வந்த ஒரு பெண்மணியை நோக்கி "இவ்வளையல்களுக்கு ஜகாத் வழங்கி விட்டாயா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது "இல்லை" என்று அப்பெண்மணி பதிலளித்தார். "மறுமை நாளில் நெருப்பிலான இரு வளையல்கள் இவற்றிற்குப் பகரமாக அல்லாஹ் உமக்கு அணிவிப்பதை விரும்புகின்றாயா?" என நபி(ஸல்) அவர்கள் கூறியதும், அவற்றை கழற்றி இறைத்தூதரிடம் கொடுத்துவிட்ட அப்பெண்மணி, "இவ்விரண்டும் அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் உரியது" என்று கூறினார். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி). நூல்: அபூ தாவூத், நஸாயி, திர்மிதி, தாரகுத்னி
 
தங்கநகைகளுக்கு இறைவன் விதித்துள்ள அளவு (நிஸாப்), 88 கிராம் - அதாவது 11 பவுன்கள். இந்த அளவில், அல்லது அதைவிட அதிகமாகத் தங்கம் நம்மிடம் இருந்தால், அதற்கு (11 பவுனையும் சேர்த்து) 2.5% சதவிகிதம் தங்கமாகவோ, அல்லது அதற்கீடான பணமாகவோ தகுதி வாய்ந்தவர்களுக்கு தர்மமாகக் கொடுக்கவேண்டும்.

பெண்களிடம் புழங்கப்பட்டு வரும் வெள்ளி நகைகளுக்கும், அதன் நிஸாப் அளவான 600 கிராமை அடைந்தால், 2.5% ஸகாத் உண்டு.

மேலும், வைரம், நவரத்தினங்கள், ப்ளாட்டினம் போன்றவற்றிற்கும் ஸகாத் கொடுப்பது குறித்தும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. கொடுக்க வேண்டும் என்ற கருத்துடையவர்கள், அதன் மதிப்பில் 20% கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள்.

மூன்றாவது நிபந்தனை: கால அளவு:

அதாவது, ஸகாத்திற்கான நிஸாப் அளவை அடைந்த பொருள், நம்மை அடைந்து ஓராண்டு காலம் நிறைந்திருக்க வேண்டும். அதுவரை அதற்கு ஸகாத் கடமையாகாது. உதாரணமாக, ஒருவரிடம் 88 கிராம் தங்கம் சேர்ந்து ஒரு வருடம் நிறையப் போகும் சமயத்தில், அதில் கொஞ்சம் செலவழிந்துவிட்டால், அந்த வருடம் தங்கத்திற்கு ஸகாத் கிடையாது. மறுபடி அது 88 கிராம் எடையை அடைந்து, அதன்பின் ஒரு வருடம் நிறைந்தபின்பே ஸகாத் கடமையாகும்.

பெண்கள் ஸகாத் கொடுப்பதில், முக்கிய பிரச்னையாகப் பார்க்கப்படுவது, வருமானமின்மை. அதாவது, பெரும்பாலான பெண்கள் வேலைக்குப் போவதில்லை என்பதால், அவர்களுக்கென்று தனி வருமானமில்லாத பட்சத்தில், ஸகாத்தை எப்படிக் கொடுக்கமுடியும்? ஆகவே, அவர்களுக்காக கணவனே ஸகாத் செலவை ஏற்றுக் கொள்ளவேண்டுமா என்பது பலரின் சந்தேகம். ஏற்கனவே நாம் பார்த்தபடி, ஸகாத் ஒவ்வொருவரின் தனிக்கடமை. என்னதான், கணவன் -மனைவி உறவு என்பது மிகவும் நெருக்கமான உறவு என்றாலும், ஒருவரின் மார்க்கக் கடமைகளுக்கு அடுத்தவர் பொறுப்பாக மாட்டார்.

அதன்படி, கணவனுக்கு மனைவியின் ஸகாத்தைச் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை. எனினும், மனைவியின் சம்மதத்தோடு அவர் பொறுப்பேற்றுக் கொள்ளலாம்.

வருமானமில்லை என்பதைக் காரணமாகச் சொல்லும் அதே சமயம், அப்பெண்கள் நிஸாபை எட்டிய அளவு செல்வத்திற்குச் சொந்தக்காரர்கள் என்பதை மறந்துவிடுகிறோம். செல்வம் அதிகமாக இருப்பதால்தானே, ஸகாத் கொடுக்கும் நிலையை எட்டுகிறார்கள்? ஆக, வருமானமில்லை என்பதைச் சொல்லித் தப்பிக்க முடியாது. வருமானமில்லை என்பதால் நமது சொத்துக்களுக்கு உரிய சொத்து வரி இத்யாதிகளை அரசாங்கத்திற்குச் செலுத்தாமல் இருக்கிறோமா?

எனில், எப்படிக் கொடுப்பது? உங்களிடம் சேமிப்புப் பணம் இருந்தால் அதிலிருந்து கொடுக்கலாம். உங்களின் கைச்செலவுக்கெனக் கிடைக்கும் பணத்தைச் சேமித்து வைத்து, அதிலிருந்தும் கொடுக்கலாம். அல்லது, ஸகாத்தை தங்கமாகவேக்கூடக் கொடுக்கலாம். போலவே, மற்ற சொத்துக்களுக்கும் அதன் ஸகாத்தைக் கணக்கிட்டு, அதற்கு ஈடான தங்கம் அல்லது வெள்ளியை ஸகாத்தாகக் கொடுக்கலாம்.

உதாரணமாக, 50 பவுன் நகையும், 20 இலட்சம் பெறுமானமுள்ள ஒரு நிலமும் உங்களுக்கு இருக்கிறதென்றால், நகைக்கு 10 கிராம். நிலத்திற்கான ஸகாத் 50,000 ரூபாய் அல்லது அதற்கீடான சுமார் 16 கிராம் நகை. ஆக மொத்தம் 26 கிராம் நகையை ஸகாத்தாகக் கொடுக்கலாம்.

யாருக்குக் கொடுப்பது:

ஸகாத் கொடுப்பதற்கு இறைவன் குர் ஆனில் எட்டு வகையினரை அடையாளம் காட்டித் தந்திருக்கிறான். அதன்படி கொடுக்கலாம். மேலும், உதவி செய்யப்படுவதற்கு நம் உறவினர்களே அதிகத் தகுதியுடைவர்கள் என்பதும் ஹதீஸ்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.” என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். புஹாரி: பாகம் 2, அத்தியாயம் 24, எண் 1427-1428
சரி, நெருங்கிய உறவினர் என்றால்..... சித்தி, மாமா, ஒண்ணுவிட்ட தம்பி... என்றெல்லாம் சொல்லலாம். இதைவிட நெருங்கிய உறவுகளுக்குக் கூட ஸகாத் கொடுக்கலாம் - தகுதி இருந்தால்!! கீழே வரும் ஹதீஸைப் பாருங்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) உடைய மனைவி ஸைனப்(ரலி) அறிவித்தார்.
நான் பள்ளிவாயிலில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்' எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ்(ரலி)வுக்கும் மற்றும் என் அரவணைப்பிலுள்ள அனாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் என்னுடைய அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்காகவும் என்னுடைய பொருளைச் செலவழிப்பது தர்மமாகுமா என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ்(ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள் எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி(ஸல்) அவர்கள் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரின் நோக்கமும் என்னுடைய நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால்(ரலி) வந்தார். அவரிடம் நான் என்னுடைய கணவருக்கும் என்னுடைய பராமரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கவேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் 'ஸைனப்' எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'எந்த ஸைனப்?' எனக் கேட்டதும் பிலால்(ரலி), 'அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி(ஸல்) 'ஆம்! ஸைனபுக்கு இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததிற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது" எனக் கூறினார்கள். புஹாரி பாகம் 2, அத்தியாயம் 24, 1466.

ம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். அவர்களிடம் நான், இறைத்தூதர் அவர்களே! (என் முதல் கணவரான) அபூ ஸலமாவின் குழந்தைகளுக்குச் செலவழிப்பதற்காக எனக்கு நன்மையுண்டா? அவர்களும் என்னுடைய குழந்தைகளே! எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீ அவர்களுக்காகச் செலவு செய்! அவர்களுக்காக நீ செலவு செய்ததற்கான நன்மை உனக்குண்டு” எனக் கூறினார்கள். பாகம் 2, அத்தியாயம் 24, எண் 1467
 
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து இன்னொரு விஷயமும் தெளிவாகின்றது. அதாவது சில பெண்கள் கணவனின் வருமானம், செல்வத்தை வைத்தே தம் குடும்பத்தின் ஸகாத்தைத் தீர்மானிப்பார்கள். அவ்வாறல்ல. வருமானக் குறைவு அல்லது கடன்கள் காரணமாக கணவன் ஸகாத் கொடுக்கும் நிலையில் இல்லை என்றாலும், நிஸாபை எட்டிய மனைவிக்கு ஸகாத் கடமையே.

ஸ்லாம், பொருளாதாரப் பொறுப்புகள் உள்ள ஆணின் மீதும் ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளது; பொருளாதார நிர்ப்பந்தம் ஏதுமில்லாத பெண்களின் மீதும் கடமையாக்கியுள்ளது. இதன்மூலம் தெரியவருவதென்ன?

பெண்ணின் உடமைகள் அவளுக்கு மட்டுமே உரிமையுடையதே தவிர, கணவனுக்கோ, குடும்பத்தினருக்கோ அவற்றில் (அவள் வாழ்நாளில்) உரிமையில்லை என்பது மிகத் தெளிவாக விளங்கும். இன்றைய குடும்பங்களில், மனைவி-மருமகளின் நகை,சொத்தில் அவளைவிட கணவனுக்கும், அவன் குடும்பத்தினருக்கும்தான் அதிகப் பாத்தியதை இருப்பதைப் போல நடந்துகொள்கிறார்கள். குடும்பத்தில் ஒரு சின்ன பணத் தேவை வந்தாலும், உடனே மனைவியின் நகைகள்தான் அடமானத்திற்குப் போகும்!! எத்தனை பெண்களின் நகைகள் இப்படியே அடமானத்தில் முழுகிப் போயிருக்கின்றன? ஒருவேளை தனியே வாழும் அவசியம் அப்பெண்களுக்கு ஏற்பட்டால் ஒன்றுமில்லாமல் பரிதவிக்கும் நிலையிலாகிறார்கள்!!
எத்தனை குடும்பங்களில் மாமியார்கள், வீட்டுக்கு வந்த மருமகளின் நகைகளைப் போட்டு தன் மகளின் திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள்? அவளின் பெற்றோருக்குக் கஷ்டம் வந்தால்கூட, அவளுக்கு தன் உடமைகளைக் கொண்டு உதவிட உரிமையில்லாத நிலை உள்ளதே!

கேட்டால், ”என் மனைவியே எனக்குச் சொந்தம் எனும்போது அவளின் நகைகளும் என்னுடையதாகாதா?” என்று கேள்வி எழுப்புவார்கள் சில ‘பொறுப்பான’ ஆண்கள்!! ஸகாத்தைத் தனிநபர் கடமையாக்கியிருப்பதன் மூலம் இந்தக் கேள்விக்கு ”இல்லை” என்று தெளிவாக, உறுதியாக இறைவன் பதில் கூறுகிறான். பெண்களின் நகைகள், அவர்களின் சொத்துகள், அவற்றின்மூலம் வரும் வருமானங்கள், அவளது சம்பாத்தியங்கள், சேமிப்புகள் - எல்லாம் அவளுடையதே, எதிலும் மற்றவர்களுக்கு உரிமையில்லை. அவளாக விரும்பிக் கொடுத்தாலன்றி அவளை நிர்பந்திக்க முடியாது என்பதையும் அறியத் தருகிறான்...By:faris fana

உலகின் புரிந்து கொள்ள முடியாத ஒரு மர்மங்களில் பெர்முடா முக்கோணமும் ஒன்று..பெர்முடா,ப்ளோரிடா மற்றும் போர்டேரிகோ ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட முக்கோண வடிவ கடல் பகுதியே பெர்முடா முக்கோணம் எனபடுகிறது.. இந்த பகுதியினூடாக செல்லும் கப்பல் மற்றும் விமானகளில் பல மாயமாக மறைவதும்,விபத்துகுள்ளவதும் புரிந்து கொள்ளமுடியாத புதிராக உள்ளது..

இந்த மர்மம் வெளிச்சத்துக்கு வந்தது ம் 1945 ஆண்டு நடந்த ஒரு சம்பவம் மூலம் ஆகும்..1945ம் ஆண்டு பயிற்சிக்காக புறப்பட்டு சென்ற அமெரிக்க கடற்படையை சேர்ந்த flight19 எனும் விமானம் மாயமாக மறைந்து போனது...முதலில் காலநிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளகியிருக்கலாம் என்றே கருதப்பட்டது..

ஆனால் ஆய்வுகளின் படி அன்று வானிலை மிக அமைதியாக இருந்ததாகவும்,விமானத்தை ஒட்டிய விமானி மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவர் என்றும் கூறப்பட்டது..காணாமல் போன விமானத்தை தேடி 13 பேர் கொண்ட ஓர் மீட்பு குழு இன்னுமொரு விமானத்தில் புறப்பட்டது.... ஆனால் பயிற்ச்சி விமானம் போலவே மீட்பு விமானமும் மாயமாக மறைந்து போனது..

இன்று வரை அந்த இரு விமானங்களுக்கும் அதில் பயனித்தவர்களுகும் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது..மூன்று வருடங்கள் கழித்து 32 பயணிகளுடன் போடேரிகோவிலிருந்து மியாமி நோக்கி புறப்பட விமானம் மாயமாக மறைந்தது..இன்றுவரை அதன் சிதைவுகள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை..
இதே வருடம் அசாரோசில் இருந்து பெர்முடா நோக்கி புறப்பட்ட விமானம் மாயமாக மறைந்து போனது..பின்பு 1949 ம் ஆண்டு பெர்முடாவில் இருந்து ஜமெயக்கா நோக்கி புறப்பட்ட விமானம் காணாமல் போனது...

இதே போல் 1963ம் ஆண்டு 39 பேருடன் சென்ற கப்பல் ஒன்று இந்த பகுதியில் மாயமாய் மறைந்தது...பின்பு 1969 ம் ஆண்டு இந்த முக்கோணத்தின் மீது பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தின் ரேடியோ தொடர்பு அறுந்து போய் பின்பு அதன் கெதி யாருக்கும் தெரியாமல் போனது..
இந்த மர்மங்களுக்கு பலர் பலவிதமான விளக்கம் கொடுத்தனர்..சிலரின் கருத்துப்படி இந்த கடல் பகுதியில் ராட்சச சுழிகள் இருப்பதாகவும் அவைதான் கப்பல்களை விழுங்குவதாகவும்,வேறு சிலரோ இந்த பகுதியில் எதோ ஒரு அமானுஷ்ய சக்தி உலாவுவதாகவும் அவைதான் இந்த கானாமல்போதல்களுக்கு காரணம் எனவும் கூறுகின்றனர்...

ஆனால் ஆராய்சியாளர்களின் கருத்து வேறுமாதிரி உள்ளது....சில இயற்கை நிகழ்வுகள் தான் இதற்கு காரணம் என்பதே இவர்களின் வாதமாகும்..இந்த முக்கோண பகுதியில் மின்காந்த புலம் ஏனைய இடங்களை விட வலுவாக இருப்பதாக ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்....வலுவான மின்காந்த புலத்தால் கப்பல் மற்றும் விமானங்களின் திசையறி கருவிகள் குழப்பமடைந்து அவை வேறு திசையில் பயணித்து விபத்துக்குள்ளவதாக விஞ்ஜானிகள் தெரிவிகின்றனர்..மேலும் கடலுக்கு அடியில் இருந்து வெளிப்படும் மெதேன் வாயு காரணமாக தண்ணீரின் அடர்த்தி குறைவடைந்து கப்பல்கள் மூழ்குவதாகவும் தெரிவிக்க படுகிறது....யார் என்ன கூறினாலும் பெர்முடா முக்கோணம் பல மர்மங்களை கொண்ட பயங்கர இடமாகவே இன்றும் கருத படுகின்றது....

அந்த பகுதில் என்ன நடக்கிறதென்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...

இதையும் பார்க்க:-
                                 *திருக்குர்ஆனை தொடக் கூடாதாமே?!!
                                 * இஸ்லாமிய புது வருடமாகிய ஹிஜ்ரி , முஹர்ரம் 1434
                                 * நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே!
                                 * வானவர்கள் என்றால் யார் ?
                                 * பெண்களுக்கு ஸகாத் கடமையா?


By:faris fana

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.

கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி.

சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது.

பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன.
சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத்

தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.
எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும்.
கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம்,

 மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.By:faris fana

ரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரக்கூடிய மாதமான‌ ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம். இந்த ஷவ்வால் மாதத்தில் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி(ஸல்)அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றாகும். இந்த ஆறு நோன்புகளையும் நோற்பதினால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை நமக்கு கிடைக்கும். ஆனால், நம்மில் அநேகமானோர் இந்த ஷவ்வால் மாத ஆறு நோன்பைப் பற்றி முழுமையாக அறியாத நிலையில் இருக்கிறோம். இன்னும் சிலர் இந்த‌ நோன்பின் சிறப்பை அறிந்தும் அதைக் கடைப்பிடிப்பதில் அலட்சியம் செய்கின்றனர். இன்னும் சிலரோ அறியாமையால், பெண்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்றுவதற்காக‌ இது அவர்களுக்கு மட்டும் உரியது என்று கருதுகின்றனர்.


யார் ரமலான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம் என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஸ் பெண்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக முஸ்லிம்கள் அனைவருக்கும் கூறப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஷவ்வால் நோன்பின் சிறப்பும் தத்துவமும்:
நாம் நோற்கும் ஒவ்வொரு நோன்புக்கும் 10 நன்மைகள் என்ற‌ அடிப்படையில் நமது முப்பது நோன்புகளுக்கு 300 நோன்புகளின் நன்மைகள் என்பதுடன், தொடர்ந்து வரக்கூடிய ஷவ்வாலின் இந்த ஆறு நோன்புகளுக்கு (6x10 =) 60 நோன்புகள், ஆக (300+60 =) 360 நோன்புகள் என்று ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மை நமக்கு கிடைக்கிறது என்பதை ஹதீஸ்களில் இருந்து அறிய முடிகிறது. ஆறு நோன்பின் தத்துவம் இது தான்!
இப்படிப்பட்ட சிறப்புமிக்க நோன்பை பலர் நோற்பதில்லை. ரமலான் மாதத்தின் 30 நோன்பை நோற்ற நமக்கு இந்த ஆறு நோன்புகளை நோற்பது ஒன்றும் சிரமமான காரியமல்ல. நன்மை எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதை ஆர்வத்துடன் தேடி முறையாக செயல்படுத்துவதே மறுமையை நம்பக்கூடிய முஃமீன்களின் அழகிய பண்புகளாக இருந்தது என்பதற்கு உத்தம நபித்தோழர்களின் சரித்திரங்கள் நமக்கு சான்று பகர்கின்றன. எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதிவிட‌க் கூடாது. அதன் சிறப்புகளையும் அளப்பரிய நன்மைகளையும் உணர்ந்து அவற்றை அடைய விரும்பியவர்கள் நோற்றுக்கொள்ளலாம்.

ஆறு நோன்புக்கு ஆதாரமில்லையா?

இந்த ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்று சில‌ர் கூறுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறானதாகும். ஆறு நோன்பு நோற்பதற்கு ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.

ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது; அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃப்வான்(ரலி); நூல்: தாரிமி (இதே ஹதீஸ் இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது)

எப்போது நோற்கவேண்டும்?

ஆறு நோன்புகளை பெருநாள் முடிந்து மறுநாளே ஆரம்பித்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நோற்க வேண்டுமா? அல்லது இம்மாதத்தில் ஏதேனும் ஆறு நாட்களில் விட்டு விட்டு நோற்கலாமா? என்பதற்கான விளக்கத்தைப் பார்ப்போம்.

யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நோன்புகள் நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்.
அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி); நூல்:முஸ்லிம்

இந்த ஹதீஸில் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "தொடர்ந்து" என்ற வார்த்தையிலிருந்து பெருநாளைக்குப் பிறகுள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்கவேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது தவறான கருத்தாகும். ஏனெனில் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, வரக்கூடிய‌ ஷவ்வாலிலும் ஆறு நாட்கள் நோன்பைத் தொடரவேண்டும் என்ற கருத்தில்தான் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே தவிர, பெருநாள் முடிந்து மறுநாளே ஆரம்பிக்கவேண்டும் என்றோ, அதை ஆறு நாட்களும் தொடர்ச்சியாகப் பிடிக்கவேண்டும் என்றோ கூறப்படவில்லை.

ரமலானைத் தொடர்ந்துதான் ஆறு நாட்கள் நோன்பு பிடிக்கவேண்டும் என்று அப்படியே வைத்துக் கொண்டாலும், பெருநாளில் நோன்பு பிடிப்பதற்குத் தடை உள்ளது. ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள் கூட ஷவ்வால் பிறை 2 லிருந்து 7 வரை தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்றுதான் கூறுகின்றனர். இதில் "ரமலானைத் தொடர்ந்து" என்ற கருத்து அடிபட்டுப் போகின்றது. ஒரு நாள் விடுபட்டு விட்டால்கூட‌ அது ரமலானின் தொடர்ச்சியாக ஆகாது. மேலும் ஷவ்வால் பிறை 2 லிருந்து 7 வரைதான் ஆறு நோன்பு பிடிக்கவேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை. எனவே ஆறு நோன்புகள் தொடர்ச்சியாகப் பிடிக்கவேண்டும் என்பது ஆதாரமற்றதாகும். நபி(ஸல்)அவர்கள் ஷவ்வால் மாதத்தில் நோற்க வேண்டும் எனக்கூறினார்களே தவிர, ஷவ்வால் மாதத்தில் இந்த நாட்களில்தான் வைக்கவேண்டுமெனக் கூறாததால் ஷவ்வால் மாதத்தின் எந்த நாட்களிலும் தொடர்ந்தோ,விட்டுவிட்டோ வைக்கலாம். ஆக, (ஈதுல் பித்ர்) பெருநாள் முடிந்து மறுநாளிலிருந்தே தொடர்ச்சியாக ஆறு நாட்கள் இடைவிடாது நோன்பு நோற்கவேண்டுமென்பதே அவசியமில்லை. ஆனால் "ஷவ்வாலில்" என்று ஹதீஸ்களில் இடம் பெறுவதால் ஷவ்வால் மாதம் முடிவதற்குள் அந்த ஆறு நோன்புகளையும் வைத்து விட வேண்டும்.

அதாவது ஆறு நோன்புகளை நோற்கக்கூடிய ஒவ்வொருவரும் தத்தமது வசதிக்கு ஏற்ப ஷவ்வால் மாத கால எல்லைக்குள் அந்த நோன்புகளை நோற்றுவிடவேண்டும். இதையே மேற்கண்ட‌ ஹதீஸ்களும் கூறுகின்றன‌. எனவே, இந்த‌ நோன்புகளை தொடர்ச்சியாக பிடிக்கவேண்டுமென்றோ அல்லது மாதத்தின் ஆரம்பப் பகுதியில்தான் பிடிக்கவேண்டுமென்றோ இல்லை என்பதை இங்கு நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். மேலும் பெருநாளைக்கு மறுநாள் முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் பிடிக்கவேண்டும் எனும்போது இந்த நாட்களில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களோ அந்த நாட்களில் நோற்க இயலாமல் போகும் மற்றவர்களோ அந்த நன்மையை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆறு நோன்பு பற்றிய இதர சந்தேகங்களும் தெளிவுகளும்:
 • தனித்தனியாக ஆறு நோன்புகளையும் நோற்கலாம் எனும்போது வெள்ளிக்கிழமை வந்தால் அந்த நாளில் தனித்து நோற்கலாமா?

அப்படி இந்த ஆறு நோன்புகளையும் விட்டு விட்டு நோற்கும்போது வெள்ளிக் கிழமைகளில் தனியாக நோற்க முடியாது என்பதால் (பார்க்க), இடையில் வெள்ளிக்கிழமை வருமேயானால், வியாழக்கிழமையுடனோ சனிக்கிழமையுடனோ இணைத்தே நோற்கவேண்டும்.
 • ரமலான் கழித்து ஆறு நோன்பு பிடிக்கும் நேரத்தில் ரமலானில் விடுபட்ட நோன்பை நிறைவேற்றிவிட்டுதான் இந்த நோன்புகளை நோற்கவேண்டுமா?

கடமையான வணக்கம் மற்றும் உபரியான வணக்கம் என்ற இரண்டிலும் கடமையான வணக்கத்திற்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும். எனவே முதலில் களாவான நோன்புகளை நோற்ற பின்னர் இந்த சுன்னத்தான நோன்புகளை நோற்பதே சிறந்தது. ஏனெனில்,மனிதனின் வாழ்க்கைக் காலத்துக்கு எத்தகைய உத்தரவாதமும் கிடையாது. சில வேளை அவர் நோயாளியாகலாம். அல்லது ஏற்கனவே இருந்ததற்கு மேல் பலவீனப்பட்டு போக‌லாம். அல்லது மரணித்து கூட‌ விடலாம். எனவே ஒவ்வொருவரும் தன் மீதுள்ள கடமையான பொறுப்பை நிறைவேற்றிய பின்னர் சுன்னத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவதே பொருத்தமானதாகும். ரமலான் மாத நோன்பை இஸ்லாம் கடமை என விதித்துள்ளதால் அதை நிறைவேற்றிவிட்டால், இறைவனின் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். அதன் பின்னர் உபரியான நோன்பையும் நிறைவேற்றலாம். அதேசமயம், விடுபட்ட நோன்பு அதிக அளவில் இருந்து, அதையெல்லாம் நிறைவேற்றுவதற்குள் ஷவ்வால் முடிந்துவிடும் என்று அஞ்சினால், முதலில் ஷவ்வாலின் நோன்புகளை வைத்துக்கொள்ளலாம்.

இதல்லாமல், சில‌ சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் ரமலான் மாதம் விடுபட்ட நோன்பை அடுத்த ரமலானுக்கு முன் வரும் ஷஃஅபான் மாதம் வரை
நோற்கலாம் என்பதற்கு அன்னை ஆயிஷா(ரலி)அவர்களின் அறிவிப்பிலிருந்து விளக்கம் பெறமுடிகிறது.

"எனக்கு ரமலானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அவற்றை ஷஃஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களின் பணிவிடையில் ஈடுபட்டதே இதற்கு காரணம்."
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி); நூல்கள்: புகாரி,முஸ்லிம்

அந்த‌ இடைப்பட்ட பத்து மாத கால எல்லைக்குள் ஆயிஷா(ரலி)அவர்கள் சுன்னத்தான நோன்புகள் எதனையும் நோற்றிருக்கமாட்டார்கள் என கூற‌முடியாது. ஏனெனில், அவர்களின் நோன்பு தொடர்பாக வந்துள்ள பெரும்பாலான‌ அறிவிப்புகளில் அவர்கள் சுன்னத்தான நோன்புகளை அதிகம் நோற்பவராக இருந்தார்கள் என்றே வந்துள்ளன. ஆக, விடுபட்ட ஃபர்ளான நோன்புகளை வேண்டுமென்றே தள்ளிப்போடாமல், தவிர்க்கமுடியாத அவசிய தேவைகளுக்காக பிற்படுத்தி நிறைவேற்றலாம் என்று விளங்கலாம்.
 • விடுபட்ட‌ ரமலான் நோன்பையும் ஷவ்வாலின் ஆறு நோன்பையும் சேர்த்து நிய்யத் வைத்தால் இரண்டுக்குமுரிய நன்மைகளும் சேர்ந்து கிடைக்குமா?

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போன்று ஃபர்ளான‌ வணக்கங்களையும் சுன்னத்தான வணக்கங்களையும் இணைத்து செய்ய‌முடியாது. எவ்வாறு ஃபர்ளான தொழுகையையும் சுன்னத்தான தொழுகையையும் சேர்த்து ஒரே தொழுகையாக தொழ முடியாதோ அதைப் போல்தான் ஃபர்ளுடன் சேர்த்து எந்த உபரியான வணக்கங்களையும் செய்ய முடியாது. ஃபர்ளு என்பது வேறு, உபரியான வணக்கம் வேறு. இரண்டையும் தனித்தனியாக நிறைவேற்றும்போதுதான் அதனதன் நன்மைகள் கிடைக்கும்.
 • ஷவ்வால் முடிந்ததும் அதற்காக ஒரு பெருநாள் கொண்டாடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?


'நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு நாட்களைதான்(பெருநாட்களாக) கொண்டாடுவதற்கு நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.'
அறிவிப்பவர்:அனஸ்(ரலி); நூல்: அபூதாவூது, நஸயீ

ஆகவே, இந்த இரு நாட்களைத் தவிர வேறு எந்த நாட்களிலும் பெருநாள் கொண்டாட அனுமதியில்லை.

'நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாகச் செய்பவரது வணக்கம் நிராகரிக்கப்படும்' என்ற நபிகளாரின் எச்சரிக்கை கவனத்திற்கொள்ள
வேண்டியதாகும்.
அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி); நூல்:புகாரி

(அல்லாஹ் மிக அறிந்தவன்!)
(By:farisfana)

                                        தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

உண்மையான இறையச்சத்தோடு தியாகமும் தன்னார்வத் தொண்டும் எந்த சமுதாய மக்களால் அதிகமாக செய்யப்படுகிறதோ அவர்களை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவார்கள்.
தியாக உள்ளத்தோடு செய்யப்பட்ட ஒரு மருத்துவத் தொண்டிற்கு இறைவன் அளித்த வெகுமதியைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
ஆப்ரிக்காவின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான கெமரூன் நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள பபான்கி என்ற ஒரு கிராமம். கல்வியறிவோ, விழிப்புணர்வோ இல்லாத பழங்குடி மக்கள் வாழும் ஊர் அது.
அந்த கிராமத்தில் ஏழ்மையில் வாடிய ஒரு பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒன்றோடு ஒன்று தாறுமாறாக ஒட்டிக் கொண்டு பிறந்தது. அந்தக் குழந்தைகளைப் பராமரிக்க இயலாமல் தாய் மிகவும் சிரமப்பட்டார். மேலும் அது சைத்தானின் பிள்ளைகள் என்று அந்த கிராம மக்கள் தூற்றி வந்தனர்.
அந்த நேரத்தில் கெமரூன் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த சவூதி சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அல் ராபிஆ அவர்கள் அந்தக் குழந்தையை தனித்தனியாகப் பிரித்து எடுக்கும் பொறுப்பையும் செலவையும் தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
ஏப்.21, 2007 அன்று சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட அக்குழந்தைகளுக்கு 16 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் 65 மருத்துவர்கள் கலந்து கொண்டு வெற்றிகரமாக இரு குழந்தைகளையும் பிரித்து எடுத்தனர்.    
இந்தச் செய்தி பபான்கி கிராமத்திற்குக் கிடைத்தவுடன் அந்தப் பழங்குடி இன மக்கள் வாழும் கிராமமே சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். சவூதி மருத்துவ வரலாற்றில் இது ஒரு சாதனையாகக் கருதப்பட்டது.
அதற்குப் பிறகுதான் ஆச்சரியம் நடந்தது. அறுவை சிகிச்சை நடந்து சரியாக ஒரு ஆண்டு கழித்து அந்த கிராமத்திற்கு 2008 ஏப்.21 அன்று சென்ற கெமரூன் நாட்டு அதிகாரிகள் வியப்படைந்தனர். ஒரு ஆண்டு காலத்தில் 1000 பேர் வாழும் பழங்குடி இன கிராம மக்களில் 400 பேர் இஸ்லாத்தைத் தழுவி இருந்தனர். அதோடு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து குழந்தைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டதைக் காண வரும் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு அன்றாடம் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைத் தழுவி வருகின்றனர்.
இந்த ஆண்டு ஹஜ் செய்வதற்காக பபான்கி கிராமத்தில் இருந்து சுல்தான் ஒமர் என்ற அந்த பழங்குடி இன முக்கியஸ்தர் தலைமையில் 26 பேர் வந்திருந்தனர். அவர்கள் டாக்டர் அல் ரபீஆ அவர்களுக்கும், அறுவை சிகிச்சையின் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்ட சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
அந்த இரண்டு குழந்தைகளுக்கும் தற்போது தலா ஒவ்வொரு கால்தான் இருக்கிறது. செயற்கைக் கால் பொருத்துவதற்கு மீண்டும் சவூதி அரேபியா செல்ல இருக்கின்றனர். அந்த குழந்தைகளின் தாய் எமரன்ஸியாவாக இருந்தவர் தற்போது ஆயிஷா என்றும், தந்தை நகோங் ஜேம்ஸ் அகும்பு தற்போது அப்துல்லாஹ் என்றும் மாறி தீனுல் இஸ்லாத்தைக் கடைபிடித்து பிறருக்கும் வழிகாட்டி வருகின்றனர்.

இதையும் பார்க்க:-
                          * ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சி படிகள் (பெற்ற...
                          * பெர்முடா முக்கோணம் (சைத்தானின்முக்கோணம்)
                          * இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்! – Part 2
                          * ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முற...
                          * மன அமைதிக்கு மனைவி அவசியம்

ஒரு குழந்தை, எப்போது நடக்கும் , தவழும் , பேசும் , போன்ற எதிர்பார்ப்பு குழந்தை பிறக்கும் போதே பெற்றோருக்கும் பிறது விடும்.


உண்மையில் ஒரு குழந்தையின் வளர்ச்சியானது ஒரு படிமுறையாக கட்டமைக்கப் பட்டதாகும். குறிப்பிட்ட காலத்தில்தான் ( வயதில்) குறிப்பிட்ட செய்முறைகளை செய்வதற்குரிய ஆற்றல் அந்தக் குழந்தைக்கு உருவாகும்.

இவ்வாறு ஒவ்வொரு வயதிலும் ஒரு குழந்தை அடைய வேண்டிய ஆற்றல் அந்த வயதிற்குரிய வளர்ச்சி எல்லை (mile stone ) எனப்படுகிறது.

அதாவது ஒரு எட்டு மாதக் குழந்தையின் வளர்ச்சி எல்லையானது (mile stone) தாவழப் தொடங்குதல் .

இவ்வாறு மனிதனின் வளர்ச்சி எல்லை நான்கு முக்கிய பிரிவுகளில் நடைபெறுகிறது.
 1. அசைவு சம்பந்தமான வளர்ச்சி (தவழுதல், நடத்தல், ஊடுதல்)(GROSS MOTOR)
 2. சமூகத்தோடு ஐக்கியமாகும் வளர்ச்சி( சிரித்தல், கையசைத்தல், )(SOCIAL)
 3. நுணுக்கவேலைகள் மற்றும் பார்வை(FINE MOTOR)
 4. பேச்சு மற்றும் செவிப்புல வளர்ச்சி(SPEECH AND HEARING )


இந்த இடுகையில் முதலாவது பிரிவில் ஏற்படுகின்ற வளர்ச்சிப் படிமுறைகளை பார்ப்போம்.

 1. தலைய நேராக வைத்திருத்தல் (head control ) ------- 4 மாதம்
 2. குழந்தை உடம்பை சுழற்றுதல்(குப்புறப் படுத்தல்) ------- 3 - 6 மாதம்
 3. துணையாக நாம் பிடித்துக் கொள்ளும்போது இருத்தல் -------5 மாதம்
 4. எந்தத் துணையும் இல்லாமல் இருத்தல் ------- 6மாதம்
 5. தவழுதல் -------- 8மாதம்
 6. எழுந்து நிற்றல் -------- 9மாதம்
 7. பிடித்துக் கொண்டு நடத்தல் ---------10மாதம்
 8. துணையின்றி நடத்தல் ---------12மாதம்
 9. ஓடுதல் -------- 15மாதம்
 10. ஒரு பந்தை உதைத்தல் -------- 24மாதம்
 11. மூன்று சக்கரங்களைக் கொண்ட வண்டியை மிதித்தல் --------36மாதம

மூன்று மாதம் வயதுடைய குழந்தை செய்ய வேண்டியவை..

அசைவு சம்பந்தமான செயற்பாடுகள்

 • தலையை நிமிர்த்தி வைத்திருக்கும் திறன் .
 • குப்புறப் படுத்திருக்கும் போது தலை மற்றும் நெஞ்சினை உயர்த்துதல
 • அசையும் பொருள் அல்லது நபர்களை தொடர்ச்சியாக பார்த்தல்

உணர்ச்சி மற்றும் சிந்தனை சம்பந்தமானவை

 • ஒலி வரும் திசையை நோக்கி தலையைத் திருப்புதல்
 • நீங்கள் ஒலி எழுப்பி விளையாட்டுக் காட்டுவதை உணர்ந்து ரசித்தல்
 • நீங்கள் சிரிக்கும் போது பதிலுக்குச் சிரித்தல்

ஆறு மாதக் குழந்தையின் திறன்கள்

அசைவு சம்பந்தமானவை

 • இருத்தி வைக்கும் போது தலையை நேராக வைத்திருத்தல்
 • தூரத்தில் இருக்கும் விளையாட்டுப் பொருட்களை எட்டிப் பிடித்தல்
 • சூப்பிப் போத்தலைப் பிடித்து பால் குடிக்க முயற்சித்தல்
 • விளையாட்டுப் பொருட்களை ஒரு கையில் இருந்து இன்னொரு கைக்கு மாற்றுதல்
 • தானாக எழுந்து இருத்தல் உடம்பை உருட்டிக் கொண்டே அசைதல்

உணர்ச்சி மற்றும் எண்ணம் சம்பந்தமானவை

 • சாப்படைக் கொடு போகும் போது வாயைத் திறத்தல்
 • மற்றவர்கள் செய்யும் சிறிய செயல்களை திருப்பிச் செய்ய முயற்சித்தல்

பேச்சு


 • நெருக்கமானவர்களின் முகங்களை அறிந்து கொள்ளுதல்
 • தொந்ததரவுக்கு உள்ளாகும் போது அழுதல்
 • கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்து சிரித்தல்

ஒரு வயதுடைய குழந்தையின் திறன்கள்

அசைவு சம்பந்தப்பட்டது

 • சூப்பியில் இருந்து கோப்பையினால் குடிக்கப் பழகுதல்
 • சிறிய உணவுத்துண்டுகளை தானாகவே எடுத்து வாயில் வைத்துச் சாப்பிடுதல்
 • துணையின்றி சில அடிகள் நடத்தல்

உணர்ச்சி சம்பந்த பட்டவை

 • மற்றவர்கள் செய்யும் செயற்பாடுகளை தானும் செய்ய முயற்சித்தல்
 • இசையை கேட்டு சிறிய உடல் அசைவுகளைக் காண்பித்தல்
 • தூரத்தில் உள்ள விளையாட்டுப் பொருட்களை தேடித் போய் விளையாட முயற்சித்தல்


பேச்சு

 • அம்மா அப்பா தவிர்ந்த வேறு ஒரு வார்த்தையை பேசத் தொடங்குதல்
 • வீட்டில் உள்ள மற்றவர்களின் பெயர்களை அறிந்து கொள்ளுதல்
 • மற்றவர்களோடு பேச முயற்சித்தல்
 • வீட்டில் உள்ளவர்களோடு நெருக்கமாகப் பழகி வெளியாட்களோடு அன்னியத்தைக் காண்பித்தல்
 • பெரியவர்கள் சொல்லும் சிறிய சிறிய கட்டளைகளை உணர்ந்து கொள்ளுதல்.

இவ்வுலகில் நம்முடைய‌ தேவைகள் அதிகமாகும்போது அதற்கேற்றவாறு வணிகங்களையும், உற்பத்திகளையும் பெருக்குவதோடு வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளையும் அமைத்துக் கொள்வது நமக்கு அவசியமாகி வருகின்றன. அதுபோன்ற அவசியத் தேவையாகிப்போன‌, வந்த பிறகு வருந்துவதைவிட வரும் முன் காப்பதே சிறந்தது என்ற அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட முறைகளில் ஒன்றுதான் இன்றைய "இன்சூரன்ஸ்" முறையாகும்.

கப்பல் மூலமாக‌ வணிகம் செய்துவந்த வணிகர்கள், இயற்கை சீற்றங்களினால் பொருட்கள் சேதமடைந்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை சமாளிப்பதற்காக‌ யோசித்து உருவாக்கிய‌துதான் காப்பீட்டு முறைகளின் ஆரம்பம் என்பதாக சொல்லப்படுகிறது. 'அசம்பாவிதங்கள் இதிலும்கூட‌ நடக்கலாம்' என இன்றைக்கு நாம் நினைக்கும் பெரும்பாலான‌ விஷயங்களுக்கு இந்தக் காப்பீட்டு முறை ஏற்படுத்தப்பட்டு அது ஒரு பெரிய துறையாகவே விளங்குகிறது. இந்த முறையானது எதிர்காலத்தில் நாம் எதிர்பாராமல் நடக்கக்கூடிய விபத்துகள் மற்றும் பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்புகளிலிருந்து மீட்பதின் மூலம் ஓரளவுக்காவது அதன் பாதிப்புகளை ஈடுசெய்து பாதுகாப்பு தருவதாக உள்ளதால் இதை 'காப்பீடு' என்கிறார்கள். இவற்றில்,

ஆயுள் காப்பீடு (Life Insurance)
சுகாதாரக் காப்பீடு (Health Insurance) அல்லது
மருத்துவக் காப்பீடு (Medical Insurance)
வாகனக் காப்பீடு (Vehicle Insurance)
இல்லக் காப்பீடு (Home Insurance)
பயணக் காப்பீடு (Travel Insurance)
விபத்துக் காப்பீடு (Casualty Insurance)
சொத்துக் காப்பீடு (Property Insurance)
பொறுப்புக் காப்பீடு (Liability Insurance)
வரவுக் காப்பீடு (Credit Insurance)
தொழில் காப்பீடு (Business Insurance)
ஊடகக் காப்பீடு (Media coverage Insurance)
வளர்ப்பு பிராணிகள் காப்பீடு (Pet Insurance)
மங்கைய‌ர் காப்பீடு (Women Insurance)
பயிர்க் காப்பீடு (Agri-Insurance)

போன்ற‌வையும், இன்னும் பல வகைகளும் உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. இப்படியான காப்பீட்டு நிறுவனங்கள் நாடு முழுவதும் அரசு சார்ந்த நிறுவனங்களாகவும் பல தனியார் நிறுவனங்களாகவும் உள்ளன. இதில் எந்த வகையான காப்பீட்டு முறையாக இருந்தாலும் அவை எல்லாமே குறிப்பிட்ட சில ஒப்பந்தங்களின்படியே செயல்படுத்தப்படுகின்றன.

ஒருவர் காப்பீடு செய்யும் பொருளுக்கு சேதம் அல்லது அழிவு ஏற்பட்டால், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள‌ தொகையையோ அல்லது பொருளின் சந்தை விலையையோ அல்லது இழப்பீட்டைச் சமாளிக்கும் வகையிலான ஒரு தொகையோ காப்பீட்டு நிறுவனம் கொடுப்பதாகவும், அதற்காக காப்பீடு செய்பவ‌ர் குறிப்பிட்ட ஒரு தொகையை ப்ரீமியமாக செலுத்தவேண்டும் என்றும் ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் செய்திருப்பார்கள். ப்ரீமியம் என்பது, உதாரணமாக ஒரு பாலிசிதாரர் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வாகனத்தையோ, வீட்டையோ இன்ஷூர் செய்வதற்கு ஒரு வருஷத்திற்கு கொடுக்கும் விலை சுமார் ரூ. 2,000 என்றால் அந்த தொகைதான் "ப்ரீமியம்" (Premium) எனப்படுகிறது.

இவ்வாறு நிர்ணையிக்கப்படும் அந்த ஒப்பந்த அடிப்படை(Policy)க்கு உட்பட்ட விபத்துகளினால் ஏற்படும் சேதமோ அல்லது அழிவோ இயற்கையானது அல்லது இழப்பீடு கொடுப்பதற்கு தகுதியானது என்று (ஒப்பந்த விதிகளை வைத்து) அந்த நிறுவனம் முடிவெடுக்கும் பட்ச‌த்தில், காப்பீடு செய்யப்பட்ட தொகையை அந்த நபருக்கு காப்பீடு நிறுவனம் இழப்பீடாக கொடுத்துவிடுகிறது. பொருளுக்கு சேதமோ, இழப்போ ஏற்படாத மற்ற பாலிசிதாரர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகை திருப்பித் தரப்படாது. இதுதான் இன்சூரன்ஸின் பொதுவான நிலையாகும். சுருங்கச் சொல்வதாக இருந்தால் ஒரு நபருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை/பாதிப்பை பல ந‌பர்களும் பகிர்ந்துக் கொள்ளவும், தனக்குரிய தற்காப்பு நடவடிக்கையாக அமைத்துக் கொள்ளவும் செய்யப்படும் ஒரு ஏற்பாட்டு முறைதான் "இன்சூரன்ஸ்" ஆகும்.

அதேசமயம் இந்த கான்செப்ட் "ஆயுள் காப்பீடு" என்று சொல்லப்படும் Life Insurance க்கும் பொருந்துமா? என்றால், ஒருசில பாலிசிகளைத் தவிர மற்ற அனைத்தும் முழுமையாக பொருந்தாது. ஏனெனில் பெரும்பாலான லைஃப் இன்சூரன்ஸ்களில் மணி பேக் (Money Back) இடம் பெற்றிருக்கும். அதுவும் பாலிசியின் முடிவில் "போனஸ்" என்ற பெயரில் வட்டித் தொகையும் கணக்கிட்டுக் கொடுக்கப்படும். அது எந்த விதத்தில் சரியானது? அதில் எந்த வகை பாலிசிகள் சரியானதல்ல? என்பதையெல்லாம் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நாம் வரக்கூடிய பதிவில் பார்க்கப் போகிறோம் (இன்ஷா அல்லாஹ்)!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு.... சகோதர, சகோதரிகளே  வாருங்கள்    இணையத்தின் ஊடாக நாம் தூய வழியில் பயணிப்போம்....!!!
இறைவனின் பேரருளால் நாங்கள் இந்த வலைதளத்தை துவக்கியிருப்பதன் நோக்கம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே தவிர வேறில்லை. இறைவன் எங்களின் இந்த முயற்சியை அங்கீகரித்து மக்கள் இதன் மூலம் பயன்பெறும் வகையில் ஆக்கியருள பிரார்த்திக்கிறோம்.
இந்த வலைதளம் எந்த ஒரு இயக்க சார்பும் இல்லாதது. இறைவன் நமக்கு சூட்டிய பெயராகிய ‘முஸ்லிம்கள்’ என்ற அடிப்படையில் ‘நாம் அனைவரும் மார்க்க சகோதரர்கள்’ என்பதைக் குறிக்கோளாகக் கொண்டது. இதில் உள்ள ஆக்கங்கள் அனைத்தும் குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்தது. இதில் தவறுகள் இருந்து யாரேனும் தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினால் மிகுந்த நன்றியுடன் திருத்திக் கொள்வோம். மேலும் இந்த வலைதளத்திற்கான வளர்ச்சிக்கு உங்களின் ஆதரவும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.
இந்த தளமானது என்னுடைய  முயற்ச்சியில் வெளியிடப்பட்டது இதை முதலில் எனக்கும் இரண்டாவதாக உங்களுக்கும் சொல்லுகின்றன் இதை அனைபரும் தூயவழியில் பயணித்து செயல் படுவோம்..!

இதை பார்த்து செயல்பட வல்ல இறைவன் அருள் புரிவானாக..ஆமீன்..

இந்த தளமானது 11/08/2012  அன்று இலங்கை நேரம் 11:30pm கட்டார் நேரம் 09:00pm  திறக்கப்பட்டது இந்த தளத்தை திறப்பதற்க்கு உதவி செய்த இந்தியாவைச் செர்ந்த முன்நாள் பத்திரிகை ஆசிரியர்    Mr.ஹைதர் அலி  அவர்கள் அவர்களுக்கு எனது நன்றிகள் மற்றும் எனது தளத்தை பார்வையிடுகின்ற   சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் எனது நண்பர்களுக்கும்  நன்றியை தெரிவித்துக் கொள்கின்றன்........!!!

இந்த தளத்தில் ஏதாவது பிழைகள் இருந்தால் அல்லது சந்தேகங்கள் இருந்தால் இந்த Email :farisakptt@gmail.com  -   sykpe id : fana .11 இல்  தெரிவிக்கவும்.....நன்றி


                                                                                                            இப்படிக்கு
                                                                                             Akkaraipattu Thawheeth Thuyavali                                                                                                                             SRILANKA


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget