September 2012

வரதட்சணை வன்கொடுமைக்கு யார் காரணம்?
வரதட்சணை ஒரு வன் கொடுமை என்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள்.(பணத்திமிர், பேராசை கொண்டவர்களைத் தவிர). இந்த வரதட்சணை எனும் கொடுமையின் காரணமாக,இலங்கையில் அனைத்து முஸ்லிம்  பெண்கள்,அதிலும் கிழக்கு மாகணத்தில்
அவதிக்குள்ளாக்கப்பட்டும், பரிதாபகரமான முறையில் மரணத்தை தழுவும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சட்டம் புத்தக கட்டுக்களிலும், ஆள்வோர் மற்றும் பணத்திமிர் கொண்டோரின் சட்டைப்பையில் படுத்து தூங்குகிறது.

இந்த அவலம் எல்லா மத மக்களிடமும், சாதிகளிலும் புரையோடி,இன்று வரதட்சணை கொடுப்பது ஒரு பேஷன் போன்று ஆகிவிட்டது. இந்த அவலங்களுக்கெல்லாம் யார் காரணம்? இந்த வரதட்சணையால் வரும் கேடு என்ன? அதற்கு இஸ்லாம் என்ன தீர்வு சொல்கிறது? என இன்ஷா அல்லாஹ் அலசுவோம்.

எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?

அன்னிய மதத்தவரின் கலாச்சாரத்தை எந்த ஒரு முஸ்லிம் பின்பற்றுகிறாரோ அவர் அந்த மதத்தைச் சார்ந்தவரே (எம்மைச் சார்ந்தவரல்லர்) என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அமுத மொழியை எச்சரிக்கையை அறியாதவர்களாக அல்லது அறிந்தும்

அலட்சியப்படுத்தியவர்களாக அழிவைத் தரும் இந்த அனாச்சாரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம். எதற்காக யாருடைய நலனுக்காக நாம் சிந்திக்க வேண்டாமா?

ஜமாஅத்துக்கு கமிஷன்?
ஒரு பெண்ணை மண மேடையில் அமர்த்துவதற்காக வரதட்சணை என்னும் மரணப் படுகுழியில் விழும் பெற்றோர்கள் எத்தனை பேர்? குமர் காரியம் என்று பிச்சைக்காரர்களாக கையேந்தி வரும் முஸ்லிம்கள் எத்தனை பேர்? உடன் பிறந்த சகோதரிகளை 'கரை' ஏற்றுவதற்கு கடல் கடந்து சென்று உழைத்து உருக்குலைந்து வளைகுடா நாடுகளில் வாலிபத்தை தொலைத்து நிற்கும் சகோதரர்கள் எத்தனை பேர்? கல்யாணம் என்பதே கானல் நீராகி கண்ணீர் சிந்தி நிற்கும் கன்னியர் எத்தனை பேர்? வாழ்க்கையில் விரக்தியுற்று வேலி தாண்டி ஓடிய வெள்ளாடுகள் எத்தனை, எத்தனை? என்றேனும் இந்த சமுதாயம் இதனை எண்ணிப் பார்த்து இருக்குமா?

அறியாமைக் கால அரேபியர் பிறந்த பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர். நவீன காலத்தில் வரதட்சணைக்கு பயந்து வயிற்றில் உள்ள கருவை ஸ்கேன் செய்து பெண் என்று தெரிந்தாலே கருவறையை கல்லறையாக்கி விடுகின்றனர். இதையும் மீறி பிறக்கும் பெண் சிசுக்களுக்கு இருக்கவே இருக்கிறது கள்ளிப்பாலும், நெல்மணியும் இதுதான் 21ம் நூற்றாண்டின் நாகரீகம்.

இதில் எதைப்பற்றியும் சிந்திக்காமல் "வாங்குகின்ற வரதட்சணையை வாங்கிக் கொள்ளுங்கள் கவலையில்லை, ஜமாஅத்துக்கு செலுத்தவேண்டிய கமிஷனை கொடுத்து விடுங்கள் என்று நிர்வாகிகளும் ஜமாஅத்துகளும் தங்களுடைய கடமையை செவ்வனே செய்து வருகின்றனர்.

"அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாக) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வெறெதற்கும் அஞ்சாதவர்களே என குர்ஆன் கூறுகிறது. (அல்குர்ஆன் 9:18)

இத்தகைய தகுதி படைத்தவர்களா தமிழகத்தின் பெரும்பான்மை பள்ளிகளை பரிபாலனம் செய்து வருகின்றனர்? அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாக இருந்தால் தானே பள்ளிவாசலின் வருமானத்திற்கென வரதட்சணைக்கு வக்காலத்து வாங்கமாட்டார்கள்.

குர்ஆன், சுன்னாவை பின்பற்றுவது ஒன்றுதான் ஒரே வழி!
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்.(4:4) என்ற அருள்மறையின் கட்டளைகளை மணமக்களும் அவர்தம் பெற்றோர்களும் எண்ணி பார்க்க வேண்டாமா? ஜம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மணப்பெண்ணிடம் வரதட்சணை வாங்கிக்கொண்டு அதிலிருந்து சிறு அற்ப தொகை 1001 ரூபாயை மணபெண்ணுக்கு மஹராக வழங்கி மணமுடிக்கும் மகா கெட்டிகாரர்கள் இந்த சமூகத்தில் இருக்கவே செய்கிறார்கள். 'மஹர் வழங்கி மண முடியுங்கள்" என்ற மறை மொழியை அப்படியே பின்பற்றுகிறார்களாம்! இந்த அயோக்கியர்கள்.

அல்லாஹ்வின் தூதர் எதை உங்களிடம் கொண்டு வந்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள், இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் (59:7)

அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் (33:36)

மேற்கண்ட இறைவசனங்களின் படி நிராகரித்து வழிகேட்டிலும் குஃப்ரிலும் விழுந்து நாசமாவதா? என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். ஒருத்தியை வாழ வைக்க ஒரு குடும்பத்தையே வறுமையிலும் கடன் தொல்லையிலும் தள்ளிவிடுவது என்ன நீதி? தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு அறிவிலி தொடங்கி வைத்த இந்த தீமை இப்போது காட்டுத்தீயாக பரவி பெரும் நாசம் விளைவித்து வருகின்றது.

"ஜந்தாறு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி" இது முதுமொழி. இப்போது "ஒரே ஒரு பெண் பிறந்தால் அவனும் ஓட்டாண்டி" இது புதுமொழி.
இத்தீமையை ஒழிக்க அல்லாஹ்வின் தூதர் நம்மிடையே விட்டுச் சென்ற குர்ஆன், சுன்னாவை பின்பற்றுவது ஒன்றுதான் ஒரே வழி. நம் சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் கட்டுப்பட்டு நடப்பது என்ற திடமான உறுதியான முடிவை மணமக்களும், பெற்றோர்களும், ஜாமாஅத்தார்களும் மேற்கொண்டு நடைமுறைக்கு கொண்டு வருவோமேயானால் வரதட்சணை என்ன - மனிதனை வாட்டி வதைக்கும் அத்தனை தீமைகளுக்கும் நாம் சமாதி கட்டிவிடலாம்.

இறைவன் தன் திருமறையில் "விசுவாசிகளே நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்" என்று கூறுகின்றான். அத்துடன் நம் சந்ததிகளையும் பிள்ளை பிராயம் முதல் இஸ்லாமிய நெறியில் வளர்த்திடல் வேண்டும். அப்போதுதான் அடுத்த தலை முறையாவது வரதட்சணையைப் பற்றி எண்ணிப்பார்க்காது மேலும் திருமணம் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற நிலை மாறி இறையச்சத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்ற நிலை வர வேண்டும்.

சமுதாயத்துக்கு ரோஷம் வருவதாகத் தெரியவில்லை!!
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4)

ஒவ்வொரு ஆண் மகனும் திருமணம் செய்யும்போது மனைவிக்கு மஹர் எனும் மணக் கொடை வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் இவ்வசனம் கட்டளையிடுகிறது .முஸ்லிம் சமுதாயத்தில் அங்கம் வகிக்கின்ற பலர் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வரும் அவல நிலையை நாம் பார்க்கிறோம். இந்த அவலத்திற்கு ஊர் ஜமாஅத்தினரும் மார்க்க அறிஞர்களும் ஒத்துழைக்கக் கூடியவர்களாகவோ அல்லது கண்டு கொள்ளாதவர்களாகவோ இருப்பதையும் பார்க்கிறோம்.

வரதட்சணை கொடுமை வசதியில்லாத காரணத்தினால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்சிகள், மணவாழ்வு தள்ளிப் போகும் ஏக்கத்தால் பெண்கள் மனநோயாளிகளாகிப் போகும் நிகழ்சிகள் அன்றாடம் நடந்தாலும் இவையெல்லாம் சமுதாயத்தின் கல் மனதைத் கரைப்பதாக இல்லை.

தக்க தருணத்தில் மணமாகாத காரணத்தால் பெண்கள் வழிதவறிச் செல்வதும், அதன் காரணமாக அந்தக் குடும்பமே அவமானத்தால் தலை குனிவதும் பல ஊர்களில் அன்றாட நிகழ்சிகளாகிவிட்டன. சமுதாயத்துக்கே இதனால் அவமானம் ஏற்ப்பட்டாலும் சமுதாயத்துக்கு ரோஷம் வருவதாகத் தெரியவில்லை.

பெண் குழந்தையை பெற்றெடுத்த காரணத்துக்காக ஊர் ஊராகப் பிச்சை எடுத்துத் தான் வரதட்சனை தரப்படுகிறது என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் அந்தப் பிச்சைப் பணத்தை வாங்குவதற்கு ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை. உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் பிறந்த குழந்தையின் வாய்க்குள் நெல்லைப் போட்டு சாகடிக்கும் செய்திகளும், நகர்ப்புறங்களில் கருவில் பெண் குழந்தை இருப்பதை ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டு கருவிலேயே சமாதி கட்டும் செய்திகளும் இடம் பெறாத நாளே இல்லை.

இதற்கெல்லாம் காரணம் வரதட்சணைக் கொடுமை தான் என்பது நன்றாகத் தெரிந்த்திருந்தும் இந்தக் கொடுமையிலிருந்து விலகிக் கொள்ள முஸ்லிம் சமுதாயம் மறுத்துவருகிறது. இந்திய அரசாங்கம் வரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று அறிவித்து இருந்தாலும் நடைமுறைப் படுத்தாத இந்தச் சட்டத்தால் எந்த முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. ஆங்காங்கே வரதட்சனையை ஒழிப்பதற்கு பல வகையான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இல்லற வாழ்கையில் இருவரும் மகிழ்சி அடையும் போது இருவருக்கும் சமமான பங்கு இருக்கும் போது யாரும் யாருக்கும் வரதட்சனை கொடுக்கத் தேவையில்லை. என்று பெண்கள் இயக்கங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் திருமறைக் குர்ஆனோ வரதட்சனையைக் ஒழித்துக் கட்டுவதில் உலகத்துகே முன்னணியில் நிற்கிறது...

By:FARIS FANA

                                              தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

பெண்கள் தங்களுடைய மேணியில் எந்த அளவு மறைக்க வேண்டும் கை பாதம் முகம் இவைகளை கட்டாயமாக மறைக்க வேண்டுமா? என்பன பல சட்டங்களை ஆதாரத்துடன் பார்க்கயிருக்கிறோம்.
பெண்களுடைய ஆடைகளை பற்றி பேசக்கூடிய வசனங்கள் திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் நிறையவே காணப்படுகின்றன அதில் திருக்குர்ஆனின் 24 வது அத்தியாயம் 31 வது வசணமும் ஒன்று இந்த வசணத்தில் பெண்கள் முன்னால் இருக்கும் முழுமையாக மறைக்க வேண்டும் யார் முன்னால் இருக்கும் முழுமையாக மறைக்க வேண்டியதில்லை என்பதை கூறுகின்றன.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.

அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். அல்:குர்ஆன் (24: 31)

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது'' என்று கூறுவீராக! அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.அல் குர்ஆன் (33 : 59)

இந்த வசணங்கள் யார் முன்னால் அலங்காரத்தை மறைக்க வேண்டும் யார் முன்னால் மறைக்க வேண்டியதில்லை என்பதை தெளிவாக சொன்னாலும் இதில் விபரங்களை நாம் தெளிவு படுத்த வேண்டியதுள்ளது. இந்த வசனத்தில் தங்களுடைய அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று இடம் பெற்றுள்ளது இதில் அலங்காரம் என்று வருகின்ற அரபி வாசகம் ஸீனத் என்பதாகும் இந்த ஸீனத் என்ற வார்த்தைக்கு சிலர் அழகு என விளங்கிக் கொண்டனர். அழகு வேறு, அலங்காரம் வேறு என்பதை இவர்கள் உணர்வதில்லை.

இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்பதை திருக்குர்ஆனில் இடம் பெற்ற இதே வார்த்தைக்கு என்ன பொருள் செய்யப்பட்டுள்ளது என்பதை கவனித்தால் இதை நாம் தெரிந்து கொள்ளலாம். ''எங்கள் இறைவா! ஃபிர்அவ்னுக்கும், அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும், செல்வங்களையும் அளித்திருக்கிறாய்! எங்கள் இறைவா! உன் பாதையி­ருந்து அவர்களை வழி கெடுக்கவே (இது பயன் படுகிறது). எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை அழித்து, அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணாமல் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார். (அல் குர்ஆன் 10:88)

இந்த வசனத்தில் இதே ஸீனத் என்ற வார்த்தை இடம் பெருகிறது இந்த வசணத்திறற்கு இந்த பொருளைத்தவிர வேறு பொருள் செய்ய முடியாது.
இந்த வார்த்தைக்கு இவர்கள் கூறிவது போன்று அர்த்தம் வைத்து கொண்டால் என்ன பொருள் வரும் யா அல்லாஹ் இவ்வுலகில் இவர்களுக்கு அழகையும் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய் என்ற பொருள் வரும் இதி­ருந்து அவர்கள் அனைவúம் வெள்ளையாகவே இருந்தனர் என்று சொல்ல வருகின்றனர்.

இதே போன்று திருக்குர்ஆனில் இடம் பெற்ற மற்றொரு வசணங்களையும் நாம் எடுத்துக்கொள்வோம்.''பண்டிகை நாளே உங்களுக்குரிய நேரம். முற்பக­ல் மக்கள் ஒன்று திரட்டப்படட்டும்'' என்று அவர் கூறினார். (அல் குர்ஆன் 20:50)

இந்த ஆயத்திலும் ஸீனத் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது ஏனென்றால் பண்டிகை நாளில் தான் மக்கள் அலங்கரிப்பார்கள் அதனால் ஸீனத் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது இவர்கள் பொருள் கொள்வதைப்போல வைத்தால் என்னவாகும் இந்த நாளில் மட்டும் அவர்கள் அழகாக இருபபார்கள் என்ற அர்த்தம் வந்து விடும்.

தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். ''காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்'' என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர். (அல் குர்ஆன் 28:79)
இந்த வசனத்திலும் ஸீனத் என்ற வாôத்தை இடம் பெற்றுள்ளது இதற்கு அலங்காரம் என்று தான் பொருள் இவர்கள் கூறுவதைப் போன்று அழகு என்ற பொருள் கொண்டால் காரூனும் தனது சமுதாயத்திடம் அழகுடன் சென்றான் என்ற அர்த்தம் வரும்.

இந்த வசணங்களிளெல்லாம் அலங்காரம் என்பது உடலை குறறிக்காது மாறாக அலங்காரத்தை குறிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அலங்காரம் என்பது இயற்கையாக ஒருவருக்கு அமைந்துள்ள அழகைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக புற சாதனங்களால் ஏற்படுத்தப்படுகின்ற அழகே அலங்காரம் எனப்படும். உதட்டுச் சாயம் பூசுவது, நகை களால் ஜோடனை செய்வது, மேக்கப் பொருட்களைப் பயன்படுத்துவது, ஆடைகளால் அழகை அதிகரிப்பது, இவை ஜீனத் என்ற சொல்­ல் அடங்கும். எனவே இவ்வசனத்தில் கூறப்படுகின்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முன் இது போன்ற உபரியான சாதனங்களால் அலங்காரம் செய்த நிலையில் பெண்கள் காட்சி தரக் கூடாது என்று விளங்க வேண்டும்.

இரண்டாவதாக இந்த வசணத்தில் இடம் பெரும் கிமார் என்ற வார்த்தைக்கு சிலர் முகத்தை மூடும் ஆடை என்று விளங்கி கொள்கின்றனர் கிமார் என்ற வார்த்தைக்கு பல பொருள்கள் இருந்தாலும் நபி ஸல் அவர்கள் பொண் மொழிகளை கவனித்தால் அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் எதைக்குறிப்பிடுகிறான் என்பது தெளிவாகி விடும்.முத­ல் முகத்தை மறைக்க வேண்டும் என்று சொல்லக்கூடியவர்களின் ஆதாரங்களை பாôத்து விட்டு முகத்தை மறைக்க வேண்டிய கட்டாயமில்லை விரும்பினால் அணிந்து கொள்ளலாம் என்று வரக்கூடிய ஹதீஸ்களை பார்க்கலாம்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு இஹ்ராம் அணிந்தவர்களாக (ஹஜ்ஜுக்காக புறப்படுவோம்) வாகணத்தில் செல்பவர்கள் எங்களை கடந்து செல்வார்கள் அவர்கள் எங்களை நேரிட்டால் நாங்கள் எங்களுடைய மேலங்கியை தலையி­ருந்து முகத்தின் மீது போட்டுக்கொள்வோம் எங்களை அவர்களை கடந்து சென்று விட்டால் நாங்கள் (முகங்களை) திறந்து விடுவோம் என்று ஆயிஷா (ர­) அவர்கள் கூறுகிறார்கள்.நூல்: அபூதாவூத் (1562)

முத­ல் இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை ஏனென்றால் இந்த செய்தியின் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஸீத் பின் அபீ ஸியாத் என்பவர் இடம் பெறற்றுள்ளார் இவரை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
இமாம் அஹ்மத் அவர்கள் இவருடைய ஹதீஸ் தகுதியானதாக இல்லை என்றும் இப்னு மயீன் அவர்கள் இவர் பலமானவர் இல்லை என்றும் மறற்றொரு நேரத்தில் பலவீனமானவர் என்றும் அபூ ஸர்ஆ அவர்கள் இவர் பலவீமானவர் இவருடைய ஹதீஸ்களை எழுதிக்கொள்ளலாம் ஆனால் ஆதாரம் பிடிக்க கூடாது என்றும் இமாம் அபூஹாதம் அவர்கள் இவர் உறுதியறற்றவர் என்றும் இப்னு ஹிப்பான் அவர்கள் இவர் நேர்மையாளர்தான் என்றாலும் இவருடைய வயது அதிகமான போது இவருடைய மணண சக்தி மோசமாகி விட்டது.

 (இந்த நிலையில்) இவர் தனது மணணத்தி­ருந்து சொல்ல ஆர்பித்தார் என்றும் இதனால் நிராகரிக்கப்பட வேண்டிய செய்திகள் வர ஆரம்பித்து விட்டன என்றும் யஃகூப் பின் சுப்யான் அவர்கள் இவர் சரியான அறிவிப்பாளராக இருந்தாலும் இவரை அறிஞர்கள் இவர் மூளை குழம்பிய காரணத்தினால் விமர்சனம் செய்துள்ளனர் என்றும் இவர் முஜாஹிதிடமிருந்து செய்திகளை அறிவிக்கிறார் ஆனால் இவருடைய அவரிடமிருந்து கேட்டதில் ஆட்சேபனை இருக்கிறது என்றும் இமாம் நஸயீ அவர்கள் பலவீனமானவர் என்றும் இமாம் தாரகுத்னி அவர்கள் ஆதாரப்பூர்வமான கிதாபுகளில் இவருடைய பலவீனமான செசய்திகளை பதிவு செய்யக்கூடாது இவர் அதிகமாக தவறிழைப்பவர் இவர் தனக்கு சொல்லப்பட்டதை அப்படியே கூறுவார் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.நூல்: தஹ்தீப் தஹ்தீப் (பாகம் 11 பக்கம் 288)
எனவே இந்த செய்தியை ஆதாரமாக ஏறற்றுக்கொள்ள முடியாது.
இது போன்ற மறற்றொரு செய்தியும் இப்னு குஸைமாவில் இடம் பெறற்றுள்ளது

நாங்கள் ஆண்களுக்காக முகங்களை மூடிக்கொள்வோம் இன்னும் அதற்கு முன்னால் தலைவாரிக்கொள்வோம் என்று அஸ்மா பின்த் அபீ பக்கர் (ர­) அவர்கள் கூறுகிறார்கள்.நூல்: இப்னு குஸைமா (பாகம் 4 பக்கம் 203)
இந்த ஆதாரப்பூர்வமானது என்றாலும் இந்த செய்தியை மட்டும் வைத்து முடிவுக்கு வரக்கூடாது ஏனென்றால் இதற்கு மாற்றமான செய்திகளும் இருக்கின்றன.

(ஆயிஷா (ர­) அவர்கள் அவதூறு சம்மந்தப்பட்ட விஷயத்தில) ஆயிஷா (ர­) அவர்கள் கூறுகிறார்கள் நான் தங்கியிருந்த அந்த இடத்திறற்கு (ஸப்வான் பின் முஅத்தல்) வந்தார் அவர் அங்கே தூங்கி கொண்டிருந்த ஒர் உருவத்தை பார்த்தார் பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதறற்கு முன்னர் அவர் என்னை பார்த்திருந்தார் ஆகவே என்னை பார்த்ததும் அவர் என்னை அடையாளம் புரிந்து கொண்டார் அவர் என்னை அறிந்து கொண்டு இன்னா ­ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன் என்று சப்தத்தை கேட்டு நான் கண் விழித்தேன் உடனே என் முகத்திரையால் என் முகத்தை மறைத்துக் கொண்டேன். (ஹதீஸின் சுருக்கம்)நூல்: புகாரி (4141)

இதே கருத்தில் அமைந்திருக்கின்ற மற்றொரு செய்தியும் இருக்கின்றது.
இப்னு உமர் (ர­) கூறியதாவது அல்லாஹ்வின் தூதரே இஹ்ராம் அணிந்திருக்கும் போது எந்த ஆடைகளை நாங்கள் அணியலாம் என்று நீங்கள் கட்டளையிடுகின்றீர்கள் ? என்று ஒரு மணிதர் எழுந்து கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் சட்டைகளையும் கால் சட்டைகளையும் தலைப்பாகையும் தொப்பிகளையும் அணியாயதீர்கள் ஒருவரிடம் செருப்புகள் இல்லை என்றால் அவர் காலுறைகளை கரண்டைக்கி கீழ் உள்ள பகுதி வரை கத்தரித்துக்கொள்ளட்டும் குங்குமப் பூச்சாயம் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதைனையும் அணியாதீர்கள் இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரையும் அவள் கையுரைகளையும் அணியகக்கூடாது என்று பதிலளித்தார்கள்.நூல்:புகாரி (1838)

மேலே குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும் பெண்கள் ஆண்கள் முன்னிலையில் மறைக்க வேண்டும் என்று காட்டுகின்றன ஆனால் இந்த ஹதீஸின் கருத்துக்கு மாற்றமான கருத்தை தரக்கூடிய செய்திகளும் இருக்கின்றன அந்த செய்திகளை இப்போது பார்ப்போம். பழ்ல் இப்னு அப்பாஸ் (ர­) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் இருந்தார் அப்போது கஸ்அம் குலத்தை சார்ந்த ஒரு பெண்மணி வந்தார் பழ்ல் அவர்கள் அவளையே பார்த்தார் அவளும் அவரை பார்த்தார் நபி ஸல் அவர்கள் பழ்ல் உடைய முகத்தை வேறொரு திசையின் பக்கம் திருப்பினார்கள் அப்போது அப்பேண்மனி நபி (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதரே நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்கள் மீது ஹஜ்ஜை கடைமையாக்கிருக்கின்றான் ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது எனவே அவருக்கு பகரமாக ஹஜ் செய்யலாமா எனக்கேட்டார்கள் நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள் இது இறுதி ஹஜ்ஜிலங் நடந்தது.நூல்: புகாரி (1513)

புகாரி (6228) யின் மற்றொரு ஹதீஸில் முகம் வென்மையான பெண் வந்தாள் என்றும் அவருக்கு அவளுடைய அழகு கவர்ந்தது என்றும் வந்துள்ளது.
இதே புகாரி 811 இழக்கம்மிட்ட செய்தியில் அவள் இளைஞியாக இருந்தாள் என்று வந்துள்ளது.

மேலே குறிப்பிட்ட செய்தியில் வந்த பெண்மணி முஸ்­ம் என்று வந்திருக்கிறது ஏனென்றால் அந்த பெண்மணி ஹஜ்ஜைப்பற்றி கேட்டிருக்கிறார் இரண்டாவதாக நபி (ஸல்) அவர்ளின் கடைசி காலத்தில் நடந்துள்ளது என்றும் தெரிகிறது.

இந்த ஹதீஸின் விளக்கவுரையில் ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிடும் போது...
இதில் முஃமினான பெண்கள் அனைவரும் மீதும் நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் மீது அவசியம் இல்லை என்பதை காட்டுகிறது அப்படி அவசியம் இருந்தால் அப்பெண்னை (முகத்திரையால்) மூடும் படி ஏவியிருப்பார்கள் பழ்ல் அவர்களுடைய முகத்தை திருப்பயிருக்கவும் மாட்டார்கள் இன்னும் இதில் பெண்களுடைய முகத்தை மறைக்க வேண்டும் என்பது.

கட்டாயமில்லை இந்த செய்தியில் அவர்களிடத்தில் தொழுகையில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியது கடமையில்லை என்றும் இஜ்மா ஏற்பட்டு இருக்கிறது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் எழுதுகிறார்கள்.
இதே கருத்தில் அமைந்திருக்கின்ற மற்றொரு செய்திகளையும் பார்ப்போம்.
அப்துர் ரஹஙமான் பின் ஆபிஸ் அவர்கள் கூறியதாவது நான் இப்னு அப்பாஸ் (ர­) அவர்களிடம் நீங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழகையில் கலந்ததுண்டா என்று கேட்டேன் அதற்கவர்கள் ஆம் நெருக்கமான உறவு இல்லாவிட்டால் நான் சிறுவனாக இருந்த நிலையில் அதில் கலந்து கொண்டிருக்க முடியாது என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள் கஸீர் பின் ஸல்த் (ர­) என்பவரின் இல்லத்தினருகில் இருந்த அடையாளனத்திருகில் வந்தார்கள் பிறகு தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள் பிறகு பெண்களிடம் வந்தார்கள் அவர்களுடன் பிலால் (ர­) அவர்கள் இருந்தார்கள் பெண்களுக்குப் போதனை செய்து தர்மம் செய்யும்மாறு வ­யுறுத்தினார்கள் அப்பெண்கள் குணிந்து தம் கைகளால் பிலாலுடைய துணியில் பொருட்களைப் போட்டதை நான் பார்த்தேன் பிறகு நபி (ஸல்) அவர்கள் பிலாலுடன் தமது இல்லத்திற்கு புறப்பட்டார்கள் என்றாôகள்.நூல்: புகாரி (977)

இந்த செய்தியில் பெண்கள் தங்கள் கைகளால் ஆற்ôரணங்களை கழற்றி போட்டுள்ளார்கள் இந்த செய்தி பெண்கள் தங்களுடைய கைகளையும் மறைக்க வேண்டும் என்று கூறுவோறுக்கு மறுப்பாக அமைந்திருக்கிறது ஷைக் பெண்கள் தங்களுடைய கைகளை மறைக்க வேண்டும் அதுவும் மறைக்கப்பட வேண்டிய உறுப்புகளில் அடங்கும் என்று கூறுவோர் தெளிவான ஆதாரத்தை முன்வைக்க வில்லை இன்னும் சொல்லப்போனால் பொதுவாக எது மக்களிடம் வழக்கத்தில் இருக்கிறதோ அதை ஒரு செய்தியாக அறிவிப்பதில்லை உதாரணமாக காலை உணவு எல்லோறும் சாப்பிடுவார்கள் என்று வைத்துக்கொள்வோம் இதை யாரும் ஒரு செய்தியாக நாங்கள் அனைவரும் காலை உணவு சாப்பிட்டோம் என்றும் சொல்ல மாட்டார்கள் இதே போல்தான் பெண்கள் ஆண்கள் அனைவúம் கைகளை திறந்திருப்பார்கள் இது வழமையானது இதை யாரும் பெண்கள் தங்களது கைகளை திறந்திருந்தார்கள் என்று அறிவிக்க மாட்டார்கள்.

இதனால்தான் ஹதீஸ்களில் தெளிவாக பெண்கள் கைகளை திறந்திருந்தார்கள் என்று நாம் பார்த்த வரை வர இல்லை பெண்கள் கைகளை மறைத்துதான் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள்தான் அதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும்.
மற்றொரு ஆதாரத்தையும் பார்ப்போம்.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ர­) அவர்கள் கூறியதாவது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன் அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழகை நடத்தினார்கள் பாங்கோ இகாமத்தோ இல்லை பிறகு பிலால் (ர­) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தை கடைபிடிக்கும் மாறும் இறைவனுக்கும் மாறும் வ­யுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வலங்கினார்கள் பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்கு சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள் மேலும் பெண்களை நோக்கி தர்மம் செய்யுங்கள் நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவிர்கள் என்று கூறினார்கள் அப்போது பெண்கள் நடுவி­ருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து ஏன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள் அதறட்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாக குறை கூறுகின்றீர்கள் நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள் அப்போது அப்பெண்கள் தம் காதனிகள் மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்கனை பிலால் (ர­) அவர்களின் ஆடையில் போட்ôர்கள்                  நூல்: முஸ்­ம் (1612)

இந்த செய்தியில் கண்ணங்கள் கருத்த பெண்மணி எழுந்து கேட்டார் என்று வந்துள்ளது முகத்தை அண்றைய பெண்கள் மறைத்தார்கள் என்று சொன்னார்கள் அந்த பெண்மணி கருத்த கண்ணங்களை கொண்டிருந்தார்கள் என்று பிலால் (ர­) அவர்களுக்கு தெரியும். பெண்கள் முகத்தை முழுவதுமாக திறந்திருந்தால்தான் கண்ணங்கள் தெரிய வாய்பு உள்ளது ஆயிஷா (ர­) கூறியதாவது முஃமினான பெண்கள் தங்களின் ஆடைகளால் போôத்திக்கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் பஜ்ரு தொழுகையில் கலந்து கொள்பவர்களாக இருந்தார்கள் தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்கு திரும்புல்வார்கள் இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது.நூல்: புகாரி (578)

இந்த செய்தியில் இருட்டாக இருந்த காரணத்தினால்தான் பெண்களை அடையாளம் காணமுடியாது என்று கூறுகிறார்கள் இருட்டாக இல்லை என்றால் அவர்களை அடையாளம் காணமுடியம் என்று தெரிகிறது.
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ர­) அவர்கள் கூறுகிறார்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் திடீரென (பெண்களைப்) பார்ப்தை பற்றி கேட்டேன் அதற்கு நபியவர்கள் என்னுடைய பார்வையை திருப்பும் படி ஏவினார்கள் என்று கூறுகிறார்கள்.நூல்: முஸ்­ம் (4018)

பெண்கள் தங்களுடைய முகத்தை மூட வேண்டும் என்று இருந்தால் நபி (ஸல்) அவர்களிடத்தில் இந்தக்கேள்வியை கேட்டிருக்கவும் மாட்டார்கள் நபி (ஸல்) அவர்கள் பார்வையை திருப்பும் படியும் ஏவியிருக்கவும் மாட்டார்கள் முகத்தை திறந்திருந்த காரணத்தினால்தான் இந்த கேள்வி எழ முடியும்.
அதா பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது இப்னு அப்பாஸ் (ர­) என்னிடம் சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை காட்டட்டுமா என்று கேட்டார்கள் நான் ஆம் ( காட்டுங்கள்) என்று சொன்னேன் அதற்கு அவர்கள் இந்த கருப்பு நிற பெண்மணிதாம் அவர் இவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நான் வ­ப்பு நோயால் அவதிப்படுகிறேன் அப்போது என் உட­ருந்து ஆடை வெளிப்பட்டு விடுகிறது ஆகவே எனக்காக அல்லாஹ்விடம் பிரார்தனை செய்யுங்கள் என்றார் நபி (ஸல்) அவர்கள்.

 நீ நினைத்தால் பொருமையாக இருந்து கொள்ளலாம் இதற்கு பதிலாக உனக்கு சொர்க்கம் கிடைக்கும் நீ விரும்பினால் உனக்கு குணம் கிடைக்கும் படி பிரார்த்திக்கிறேன் என்று சொன்னார்கள் இந்தப்பெண்மணி நான் பொருமையாகவே இருந்து விடுகிறேன் ஆனால் உடல் திறந்து விடுகிறது அப்படி திறந்து கொள்ளாலமல் இருக்க அல்லாஹ்விடம் பிரரார்த்தியுங்கள் என்று சொன்னார்கள் அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்னுக்கு பிரார்த்தனை செய்தார்கள்.நூல்: புகாரி (5652)

இந்த செய்தியை நன்கு கவனித்தால் நமக்கு ஒர் உண்மை புலப்படும் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு பின்பும் நபித்தோழியர்கள் முகத்தை முடாமல் சென்றுள்ளார்கள் இப்படி சென்றிருந்தால்தான் இப்னு அப்பாஸ் (ர­) அவர்கள் தாபிஈ ஆன அதா அவர்களை கூப்பிட்டு அடையாளம் காட்டிருக்கிறார்கள் முகத்தை மூடியிருந்தால் துள்ளியமாக இவர்கள் தான் சொர்க்கத்தைக்கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட பெண் என்று சொல்ல
முடியுமா?

பாத்திமா பினத் கைஸ் (ர­) கூறியதாவது என் கணவர் ஆபூ அம்ர் பின் ஹப்ஸ் (ர­) அவர்கள் என்னை மூன்றாவது தலாக் சொல்­ விட்டார் அப்போது அவர் வெளியூரி­ருந்தார் பின்னர் அவருடைய பிரிதிநிதி தொ­ நீக்கப்படாத சிறிதளவு போதுமையை எனக்கு அனுப்பி வைத்தார் அதைக் கொண்டு நான் எரிச்சலைடைந்தேன் அதற்கு அந்த பிரிதிநிதி அல்லாஹ்வின் மீது ஆனையாக நாங்கள் உனக்கு ஜீவனாம்ஸம் தங்கும் இடம் எதையும் தரவேண்டியதில்லை (இது உதவியாக தரபட்டதுதான்) என்று கூறினார் எனவே நான்.

அ;லலாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்தததை அவர்களிடம் தெரிவித்தேன் அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்களும் அவர் உனக்கு அவர் ஜிவனாம்ஸம் தங்கும் இடம் எதையும் தரை வேண்டியதில்லை என்று கூறிவிட்டு உம்மு ஷரீக் என்ற பெண்னின் இல்லத்தில் என்னை இத்தா இருக்குமாறு என்னை பணித்தார்கள் பிறகு அவர் எனது தோழர்கள் அடிக்கடி சந்திக்கும் பெண்மணி ஆவார் நீ உன் தந்தையின் சகோதரர் புதல்வர் இப்னு உம்மி மக்தூம் அவர்களிடம் அவர்களது இல்லத்தில் இத்தா இருந்து கொள் ஏனெனில் அவர் கண் பர்வையற்ற மனிதர் ஆவார் நீ உன் (துப்பட்டா) துணியை கழற்றி கொள்ளலாம் நீ இத்தாவை முழுமையாக்கியதும் எனக்கு தெரிவிப்பாயாக என்று கூறினார்கள்.

அவ்வாறே நான் இத்தாவை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்டளிடம் வந்து முஆவியா பின் அபீ சுப்யான் (ர­) அவர்களும் அபூ ஜஹ்ம் பின் ஹீதைபா (ர­) அவர்களும் என்னை பெண் கேட்கின்றனர் என்று சொன்னேன் அதற்கு அ;ல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஜஹம் தனது கைத்தடியை தோளி­ருந்து கீழே வைக்க மாட்டார் கோபக்காரர்) மனைவியை கடுமையாக அடித்து விடுபவர் முஆவியா அவர் ஒர் ஏழை அவரிடம் எந்த செல்வமும் இல்லை நீ உசாமா பின் ஸைதை மணந்து கொள் என்று கூறினார்கள் நான் உசாமாவை விரும்ப வில்லை பிறகு ஸல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீ உசாமா வை மணந்து கொள் என்று (மீண்டும்) சொன்னார்கனள் ஆகவே நான் அவரை மணந்து கொண்டேன் அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான் நான் பெருமிதம் அடைந்தேன்.                                நூல் : முஸ்­ம் (2953)

இந்த செய்தியிலும் நாம் கருத்துக்கு வழுவூட்டும் பல கருத்துக்கள் இருக்கின்றன பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்று சொன்னால் ஏன் பாத்திமா அவர்களை கண்பார்வையற்ற ஸஹாபியிடம் இத்தா இருக்க சொல்ல வேண்டும்? மாறாக ஸஹாபிகள் அவர்களை பார்க்க நேரிடும் என்ற காரணத்தினால்தான் இந்த கட்டளையை இட்டார்கள்.

உபைதில்லாஹ் பின் அப்தில்லாஹ் அவர்கள் கூறியாதாவது என் தந்தை அப்தில்லாஹ் பின் உத்பா (ர­) அவர்கள் உமர் பின் அப்தில்லாஹ் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள் அதில் சுபை பின்த் ஹாரிஸ் (ர­) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சுபைஆ மார்க்க தீர்ப்பு கேட்டது பற்றியும் அதற்கு அளித்த பதில் பற்றியும் கேட்டு எழுதுமாறு

பணித்திருந்தார்கள் அதன் படி சுபைஆ (ர­) அவர்களில்டம சென்று உமர் பின் அப்தில்லாஹ் அவர்கள் கேட்டரிந்து பின் தனது தந்தைக்கு பதில் இவ்வாறு எழுதினார்கள் சுபைஆ (ர­) பனு ஆமிர் பின் லுஅய் குலத்தை சார்ந்த சஅத் பின் கவ்லா (ர­) அவர்களுக்கு வாழ்க்கை பட்டிருந்தார் சஅத் (ர­) அவர்கள் பத்ரு போரில் கலந்து கொண்ட ஸஹாபியாவார் விடைபெரும் ஹஜ்ஜின் போது ஸஅத் (ர­) அவர்கள் இறந்து விட்டார் அப்போது சுபைஆ (ர­) கற்பம் முற்றிருந்தார் ஸஅத் (ர­) அவர்கள் இறந்து நீண்ட காலம் ஆகியிருக்க வில்லை அதற்குள் சுபைஆ (ர­) அவர்கள் பிரசித்து விட்டார் உதிரப்போக்கி­ருந்து சுபைஆ (ர­) சுத்தமான போது பெண் பேச வருபவர்களுகங்காக தண்னை அலங்கரித்து கொண்டார் அப்போது பனு அப்துத்தார் குலத்தை சார்ந்த அபூ ஸனாபில் (ர­) அவர்கள் சுபைஆ (ர­) அவர்களிடம் திருமணம் புரியம் ஆசையில் திருமணம் புரிபவர்களுக்ôக உங்களை அலங்கரிப்பவர்களாக காண்கிறேன்

அல்லாஹ்வின் மீது ஆனையாக நான்கு மாதம் பத்து நாள் முடியும் வரை நீங்கள் மறுமணம் புரிந்து கொள்ள முடியாது என்று கூறினார்கள் சுபைஆ (ர­) அவர்கள் கூறுகிறார்கள் அபூ ஸனாபில் கூறியதை நான் எடுத்துக்கொண்டு நான் மாலை நேரத்தில் எனது உடையை உடுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் இது பற்றி கேட்டேன் அதற்கு அவர்கள் நீ பிரசவித்து விட்ட போதே (மணம் புரிந்து கொள்ள அனுமதிக்கபட்ட வளாக ஆகிவிட்டாய் ) நீ விரும்பினால் மணம் செய்து கொள் என்று நபி (ஸல்) அவர்கள் மார்க்க தீர்ப்பு வங்கினார்கள்.நூல்: புகாரி (3991)

இந்த செய்தியில் சுபைஆ (ர­) அவர்கள் அலங்கரித்து கொண்டதினால்தான் சுபைஆ (ர­) அவர்களிடம் அபூ ஸனாபில் கேட்டார் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்று இருந்தால் அலங்காரம் செய்திருப்பதை எப்படி பார்த்தார்? இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது பெண்கள் முகத்தை மறைக்க வேண்டிய கட்டாயமில்லை.

இன்னும் சொல்லப்பபோனால் இன்றைய காலகட்டத்தில் இதை அணியாமல் இருப்பது மிகவும் அவசியமானதாகும் ஏனென்று சொன்னால் சமூக விரோதிகள் இதை பயன்படுத்திக்கொண்டு பல தீமைகளில் ஈடுபடுவார்கள் சென்ற வார உணர்வு (ஜீன் 22) இதழில் இடம் பெற்ற ஒரு செய்தியை பார்த்திருப்பீர்கள் ஒரு கல்லூரி மாணவன் தனது சக மாணணவர்களிடம் நான் ஒரு நாள் முழுவதும் பெண் வேடத்தில் இருக்கப் போகிறேன் முடிந்தால் என்னை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் என்று சொல்­ முஸ்­ம் பெண்கள் அணியக்கூடிய பர்தாவை அணிந்து கொண்டு பெண்கள் இருக்கும் இடத்திற்கும் பெண்கள் போகும் இடத்திற்கெல்லாம் இவனும் சென்றுள்ளான் இறுதியில் போ­ஸிடம் இவன் மாட்டவே விபரம் வெளிவந்தது.

பாருங்கள் இஸ்லாம் வ­யுறுத்தாத காரியத்தை பெண்கள் அணிய இன்று அது ஒரு கே­ப் பொருளாக ஆகிவிட்டது இன்று சினிமா காட்சிகளிலும் இந்த ஆடையை அணிந்து கொண்டு இஸ்லாத்தை கொச்சைப்படுத்துகிறார்கள் இதை பெண்கள் உணர்ந்து இந்த முகத்திரையை விட்டால்தான் இந்த மாதிரி குற்றங்களில் ஈடுபடுவோறை தடுக்க முடியும் சினிமாக்களில் கொச்சையாக சித்தரிப்பதையும் நிறுத்த முடியும்.

இன்னும் சொல்லப்போனால் எவன் எந்தப் பெண்னை அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்றாலும் அழைத்துச்சென்று விடலாம் இந்த மாதிரி நடப்பதற்கும் வாய்புகள் இருக்கிறது கருப்பொழுக்கம் உள்ள பெண்களுக்கும் மிகவும் நன்மை பயக்கூடியதாக இருக்கிறது.
பெண்கள் பாதங்களை மறைக்க வேண்டுமா?

முகத்தை மறைக்க வேண்டும் என்று எபப்படி சொன்னார்களோ அதைப்போன்று பாதங்களை மறைக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர் இதற்கு அவர்கள் ஒரு ஹதீஸை தவறாக புரிந்த காரணத்தினால்தான் அந்த ஹதீஸை பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் யார் தனது ஆடையை பெருமைக்காக இழுத்துச் செல்கிறாரோ அவரை கியாம நாளில் அல்லாஹ் பார்க்கமாட்டான் அப்போது உம்மு ஸல்மா (ர­) அவர்கள் பெண்கள் தங்களுடைய ஆடையின் ஓரங்களை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள் அதற்கவர்கள் ஒரு ஜான் இறக்கி கொள்ளட்டும் என்றார்கள் உம்மு ஸல்மா அவர்கள் யாரசூலுல்லாஹ் பாதங்கள் தெரியுமே என்றார்கள் அதற்கவர்கள் ஒரு முழம் இறக்கி கொள்ளட்டும் அதை விட அதிகப்படுத்த வேண்டாம் என்றார்கள்.
நூல்: திர்மிதி (1653)

நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜான் பெண்கள் முட்டுகா­ருந்து இறக்கி கொள்ளட்டும் என்று சொன்னவுடன் உம்மு ஸல்மா அவர்கள் பாதங்கள் தெரியுமே என்கிறார்கள் அதற்காகத்தான் ஒரு முழம் இறக்கி கொள்ளட்டும் என்று நபியவர்கள் கூறுகிறார்கள் இவர்கள் என்ன விளங்கி கொண்டனர் என்றால் கெண்டைகா­ல் பாதியி­ருந்து தான் ஒரு முழம் இறக்கச் சொன்னார்கள் என்று விளங்கி கொண்டனர் நபி (ஸல்) அவர்கள் சொன்னது கெண்டைக்கா­ல் பாதி­ருந்து இல்லை முட்டி­ருந்து ஒரு முழம் இறக்கச்சொன்னார்கள் இவர்கள் விளங்கி கொண்டது போல் கெண்டைக்கா­ருந்து ஒரு முழத்தை பெண்கள் இறக்கினால் என்னவாகும் பாதத்தி­ந்து ஆடை ஒரு ஜான் கீழே இறங்கியிருக்கும் இந்த மாதிரி பெண்கள் ஆடையை இழுத்துச் செல்ல முடியுமா? பெண்களால் நடக்க முடியுமா? இவர்கள் இந்த மாதிரி சிந்திப்பதில்லை சிந்திக்காத காரனத்தினால்தான் இந்த மாதிரி தவறான போக்கை கையாள்கின்றனர்.

பெண்கள் முட்டிக்கா­ருந்து ஒரு முழம் இறக்ககுவது கூட கட்டாயம் அன்று ஏனென்று சொன்னால் அஹ்மத் என்ற ஹதீஸ் கிரந்தத்தில் பெண்களுக்கு அனுமதி கொடுத்தார்கள் என்று இடம் பெற்றுள்ளது. அஹ்மத் (4543)
பெண்கள் பாதத்;தை மறைக்க வேண்டும் என்று கூறவோர் மற்றொரு செய்தியையும் ஆதாரமாக காட்டுகின்றனர்.

உம்மு ஸல்மா (ர­) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் கீழங்கி இல்லாத போது நீளமான சட்டை யுடனும் ஒரு முக்காடு உடனும் தொழலாமா என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீளமான சட்டை (பென்னுடைய) பாதங்களை மறைக்ககூடிய அளவிற்கு இருந்தால் தொழுது கொள்ளலாம் என்று பதிள­த்தார்கள்.நூல்: அபூதாவூத் (ர­)

இதில் அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் (தீனார்) என்பவர் இடப் பெருகிறார் இவர் பலவீமானவர் இவரை அறிஞர்களான இப்னு மயீன் அவர்கள் இவருடைய செய்தியில் பலவீனம் இருக்கிறது என்றும் அபூஹாதம் அவர்கள் இவர் பலவீனமானவர் இவருடைய செய்திகளை எழுதிக்கொள்ளலாம் ஆனால் ஆதாரத்திற்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் இப்னு அதீ அவாகள் இவர் அறிவிக்கூடிய செய்திகளில் சிலது நிராகரிக்கப்பட வேண்டியது (பெரும்பாலும்) இவருடைய செய்தியை யாரும் வழிமொழிந்து அறிவிப்பதில்லை மொத்தத்தில் இவர் பலவீமானவர்களின் பட்டிய­ல் எழுதப்பட வேண்டியவர் என்றும் கூறுகின்றனர்.
நூல்: தஹ்தீபுல் கமால் (பாகம் 17 பக்கம் 208)

அது மட்டுமில்லாமல் இந்த செய்தியின் அடிகுறிப்பில் இன்ôம் அபூதாவூத் அவர்கள் இந்த செய்தியை மா­க் பின் அனஸ். பக்ர் பின் முளர். ஹப்ஸ் பின் இயாஸ். இஸ்மாயீல் பின் ஜஃபர். இப்னு அபீ திஃப். இப்னு இஸ்ஹாக். முஹம்மத் பின் ஸைத். இவர்கள் அனைவரும் உம்மு ஸல்மா வின் சொந்தக் கூற்றாகத்தான் அறிவிப்பு செய்துள்ளார்கள் ஆனால் இந்த இப்னு தீனார் மட்டும் தான் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்ககள் என்று அறிவித்துள்ளார் என்று கூறுகிறார்கள்.

எனவே இது ஷாத் வகையை சார்ந்த பலவீனமான ஹதீஸாகும் ஆகும் எனவே இவர்கள் காட்டுகின்ற இந்த பலவீனமான செய்தியை ஆதாரத்திற்கு எடுத்துக்கொளள்ள முடியயாது.

பெண்கள் பாதங்களை மறைக்க வேண்டியதில்லை என்று நாமாக கூறவில்லை மாறாக இப்படித்தான் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் உள்ள பெண்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு நேரடி சான்றுகளும் இருக்கின்றன.
பாத்திமா பின்த் கைஸ் (ர­) அவர்கள் கூறுகிறார்கள் நான் முகீரா உடைய மகனை திருமணம் செய்து கொண்டேன் அவர் அனறைய நாளில் குரைஷி வா­பர்களிலே சிறந்தவராக இருந்தார் நபி (ஸல்) அவர்கள் செய்த முதல் போரில் காயப்படுத்தப்பட்டார் (அவர் என்னை தலாக் செய்து) நான் விதவையான போது அல்லாஹ்வின் தூதரின் ஒரு குழுவினர் என்னை பெண் பேசினர் அவர்களில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ர­) அவர்கள் பெண் பேசினார்கள் நபி (ஸல்) அவர்களும் தன்னால் விடுதலை செய்யப்பட்ட அடிமையின் புதல்வரான உஸாமா பின் ஸைத் (ர­) அவர்களுக்காக பெண் பேசினார்கள் யார் என்னை விரும்புகிறாரோ அவர் உஸாமாவை விரும்பட்டும் என்று நான் ஏற்கனவே நபி (ஸல்) அவர்களின் சொல்லை அறிந்து இருந்தேன்

 ஆகையால் நபி (ஸல்) அவர்கன் என்னிடம் பேசிய போது என்னுடைய விஷயத்தை உங்களிடத்தில் விட்டு விடுகிறேன் நீங்கள் நாடியவருக்கு என்னை மண முடித்து வையுங்கள் என்று கூறினேன் நபி (ஸல்) அவர்கள் என்னை உம்மு ஷரீக் வீட்டில் இத்தா இருக்க சொன்னார்கள் பிறகு அவர் உம்மு ஷரீக் அன்ஸாரிகளில் பணமுள்ள பெண்ணாக இருக்கிறாô அதிகமாக அல்லாஹ்வின் பாதைளில் செலவிடுபவறாக இருக்கிறார் விருந்தாளிகள் அவரிடத்தில் தங்குபவர்களாக இருக்கிறார் நான் அவ்வாறே செய்கிறேன் என்றேன் பிறகு நபி (ஸல்) அவர்கள் நீ அவ்வாறே செய்யதே ஏனென்றால் உம்மு ஷரீக் இடத்தில விருந்தாளிகள் வருபவர்களாக இருக்கிறார் நான் உன்முடைய முகத்திரையோ உன் கணைக்கா­ருந்து ஆடையோ விலகியிருக்க நீ விரும்பாத சிலவற்றை மக்கள் பார்ப்தை நான் வெறுக்கிறேன் என்று கூறி நீ உன்னுடைய சித்தப்பா மகனாகிய (அம்ர் உம்மு மக்தூம் தம்பதியரான புதல்வரான) உம்மி மக்தூம் வீட்டிற்கு செல் என்று கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம்)  நூல்: முஸ்­ம் (5235)

நாம் கு றிப்பிட்ட இந்த பாத்திமா பின்த் கைஸ் (ர­) அவர்களின் செய்தியில் நபியவர்கள் கூறும் போது உன் கெண்டைக்கா­ருந்து ஆடை விலகி விடுமோ என்று பயப்படுகிறேன் என்று கூறுகிறார்கள் உன் பாதங்களி­ருந்து ஆடை விலகி விடும் என்று சொல்ல வில்லை இதி­ருந்து அன்றைய பெண்கள் கெண்டைக்கால் வரைதான் ஆடை அணிந்துள்ளார்கள் என்று தெரிகிறது.
பெண்கள் ஆடை அணிவதின் ஒழுக்கங்கள்.
ஆண்களுக்கு ஆடை வடிஷய்தில் பெண்களுக்கும் ஆடை விஷயத்தில் சில ஒழுக்கங்கள் இருக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர் அவ்விரு பிரிவினரை நான் பார்த்ததில்லை (முதலாம் பிரிவினர் யாùனில்) பசுமாட்டின் வாலைப்போன்று நீண்ட சாடடைகளை தம்மிடம் வைத்துக் கொண்டு மக்களை அடிக்கும் கூட்டத்தினர் (இரண்டாம் பிரிவினர் யாரெனில்) மெல்­ய உடை அணிந்து தம் தோள்களைன சாய்த்த படி (குலுக்கி குலுக்கி கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தம் பக்கம் ஈர்க்ககூடிய பெண்கள் ஆவர் அவர்களின் தலை (முடி) சரிந்து நடக்ககூடிய கழுத்து நீண்ட ஒட்டகத்தைப்போன்று இருக்கும் இவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்ôர்கள் (ஏன்) அதன் வாதையை கூட நுகர மாட்டார்கள் சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு தொலைவி­ருந்து வீசிக்கொண்டிருக்கும்.நூல்: முஸ்­ம் (5098)

இந்த செய்தியி­ருந்து பல்வேறு கருத்துக்களை பெறுகிறோம் முதலாவது முழுமையான ஆடையைத்தான் அணிய வேண்டும் என்று முழுமையற்ற ஆடைகளை அணியக்கூடாது என்று தெரிகிறது இன்று பெண்களில் சிலர் முழுமையற்ற ஆடைகளை அணிவதினால்தான் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இரண்டாவதாக கண்ணாடி போன்ற மென்மையான ஆடைகளை அணியக்கூடாது இதுவும் தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்கும் இதை விட்டும் பெண்கள் தவிர்நது கொள்ள வேண்டும் சில பெண்கள் புர்கா அணிகிறார்கள் அதுவும கூட உள்ளே அணிந்திருக்கிற ஆடை முதல் அனைத்தையும் வெளிகாட்டும் விதமாக அமைந்திருக்கிறது புர்கா என்பது உடைலையும் அலங்காரத்தையும் மற்ற ஆண்களை விட்டும் மறைப்பதற்காத்தான் ஆனால் இன்று இந்த மாதிரி புர்காக்கள் அணிவது மூலம் அந்த நோக்கம் நிறைவேறாமல் போய் விடுகிறது.

ஸீன்றாவதாக இறுகலான ஆடைகளை அணியக்கடாது இறுகலான ஆடைகளை அணிவது நமது உடம்பின் பருமண்களை எடுத்துக்காட்டும் இந்த மாதிரியான ஆடைகளாக இல்லாமல் ஒரு விசாலமான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

ஆண்களுக்கு ஒப்பாக பெண்கள் பாவனைகள் கூடாது.
பெண்களைப் போன்று ஆண்கள் ஒப்பாக நடப்பதையும் ஆண்களைப்போன்று பெண்கள் ஒப்பாக நடப்பதையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
நூல்: புகாரி (5885)

நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களைும் சபித்தார்கள் அ­களை உங்கள் வீடுகளி­ருந்து வெளியேற்றுங்கள் என்றும் சொன்னார்கள் அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இன்னாறை வெளியேற்றினார்கள்.நூல் : புகாரி (5886)

இன்று மாற்று மதத்தில் உள்ள பெண்கள் ஆண்கள் அணிவதைப்போன்ற பேன்ட்டுகளை அணிகிறார்கள் இவர்களைப்பாôத்து மார்க்கத்தை சரியாக தெரியாத முஸ்­ம் பெண்களும் பேன்ட்டுகளை அணிகிறார்கள் மாற்று மதத்தில் உள்ள பெண்கள் இறுகலான சட்டைகள் டைட் சட்டைகள் கட் சர்ட் அணிவதைப்போன்று இன்று மார்க்கத்தை அறியாத நமது பெண்களும் மாற்று மத ஆண்கள் அணிவதைப்போன்று அணிகிறார்கள் இதை விட்டும் நமது பெண்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் அல்லாஹ்வின் சாபத்தை சுமக்க நேரிடும் அல்லாஹ் இதை விட்டும் நம்மை காப்பானாக.
பெண்கள் மற்ற பெண்களோடு இருக்கும் போது.

பொதுவாக பெண்கள் மற்ற பெண்களோடு தனியாக இருக்கும் போது மஹ்ரமான (திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்டவர்கள்) ஆண்கள் முன்னால் எந்த உடையில் இருக்கலாம் இதற்கு எந்த தடையும் இல்லை என்றாலும் சில ஒழுக்கங்களை கடைபிடித்தாக வேண்டும்.
எங்கள் மறை உறுப்புகளில் எதை மறைக்க வேண்டும் எவற்றை மறைக்காமல் இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன் அதற்கு நபி (ஸல்) அவர்கள் உன் மனைவி உன் அடிமை பெண்களிடம் தவிர மற்றவர்களிடம் உன் மறை உறுப்பிகளை பாதுகாத்து கொள் என்று விடையளித்தார்கள் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் இருக்கும் போது மறை உறுப்பை காத்து கொள்ள வேண்டுமா? என்று கேட்டேன் அதற்கு நபி (ஸல்) அவர்கள் வெட்கப்படுவதற்கு அல்லாஹ் மிகத்தகுதியானவன் என்று விடையளித்தார்கள் இதை மூவியா பின் ஹைதா (ர­) அவர்கள் அறிவிக்கிறார்கள்.நூல்: திர்மிதி (2693) (3718)

ஒரு பெண் தன் கணவன் முன்னால் எப்படியும் இருந்து கொள்ளலாம் ஆனால் தனியாக இருக்கும் போது கணவன் முன்னால் அமருவதைப்போன்று அமரக்கூடாது ஏனென்றால் ஆண்களுக்கு தனியாக இருக்கும் போது என்ன தடை போட்டார்களோ அதை தடை பெண்களுக்கும் பொருந்தும் எனவே பெண்களும் தனியாக இருக்கும் போது மறும உறுப்பை காத்துக்கொள்ள வேண்டும்.

2. ஒரு ஆடையில் இருவர் அமரவோ படுக்கவோ கூடாது.
ஒரு ஆண் மற்றொரு ஆணுடைய மறை உறுப்பை பார்க்க வேண்டாம் ஒரு பெண் மற்றொரு பெண்ணுடைய மறும உறுப்பை பார்க்க வேண்டாம் ஒரு ஆன் மற்றொரு ஆணுடன் ஒரு ஆடைக்குள் படுக்க வேண்டாம் ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு ஒரு ஆடைக்குள் படுக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல் குத்ரி (ரழி­) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்­ம் 512திர்மிதி (2717) அபூதாவூத் (3502)
மேலே சொன்ன நடைமுறைகளை பெண்களும் பேணி பாதுகொள்ள வேண்டும்.

பெண்கள் வெளியே செல்லுதல்.பெண்கள் தேவையில்லாமல் வெளியே செல்லக்கூடாது அவசியம் இருந்தால் வெளியே செல்லாம் தேவையில்லாமல் வெளியே செல்வது தேவையில்லாத பிரச்சனைகளை கொண்டு வரும்.

மேலே சொன்ன மாதிரி பெண்கள் ஆடைகளை ஒழுக்கங்களை கடைபிடித்தார்கள் என்று சொன்னால் அவர்கள் வெளியே செல்லலாம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் உள்ள பெண்கள் போர்களத்திற்கும் பெருநாள் தொழும் இடத்திற்கும் வந்துள்ளார்கள் என்பதை பார்க்கமுடிகிறது.
ஹப்ஸா (ர­) அவர்கள் கூறியதாவது நாங்கள் இரு பெருநாளிலும் தொழும் இடத்திற்கு செல்வதை விட்டும் குமரிப்பெண்களை தடுத்துக்கொண்டு இருந்தோம் அந்த சமயத்தில் ஒரு பெண் வந்து பனீ கலப் வம்சத்தில் தங்கி இருந்தனர் அவர் தமது சகோதரி உம்மு அதிய்யா (ர­) அவர்களின் வழியாக வந்த செய்தியை அறிவித்தார் அவரது சகோதரி உம்மு அதிய்யா (ர­) நபி (ஸல்) அவர்களோடு தம் கணவர் கலந்து கொண்ட பன்னிரெண்டு போர்களில் ஆறு போர்களில் கணவரோடு இருந்தார் உம்மு அதிய்யா (ர­) அவர்கள் கூறியதாவது நாங்கள் போர்களத்தில் காயமுற்றவர்களுக்காக சிகிச்சையளிப்போம் நோயாளிகளை கவனிப்போம் நான் நபி (ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லா விட்டால் பெருநாள் தொழுகைக்கு செல்லாது இருப்பது குற்றமா எனக்கேட்டேன் அதற்கு அவளது தோழி தனது உபரியான மேலங்கியை அவளுக்கு அணிவிக்க கொடுக்கட்டும் அவள் நண்மையான காரியங்களிலும் முஸ்­ம்களிடைய பிரச்சாரங்களிலும்

பங்கெடுத்துக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உம்மு அதிய்யா (ர­) அவர்கள் என்னிடம் வந்த போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா என நான் கேட்டேன் அவர் அதற்கு அவர் தனது தந்தை அர்பணமாகட்டும் ஆம் நான் கேட்டேன் எனக்கூறினார்கள் அவர் நபி (ஸல்) அவர்களுடைய பெயரைக் கூறும்போதெல்லாம் தனது தந்தை அர்பணமாகட்டும் என்பதையும் சேர்த்துக்கொள்வார்கள்.

கன்னிப் பெண்களும் மாத விடாய் பெண்களும் பெருநாள் அன்று வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்­ம்களிடத்தில் பிராச்சாரத்தலும் பங்கு கொள்ளட்டும் பெருநாள் தொழுகை நடக்கும் இல்த்திற்கு செல்லும் மாதவிடாய் பெண்கள் தொழும் இடத்தை விட்டும் ஒதுங்கியிருப்பார்கள் எனவும் உம்மு அதிய்யா (ர­) அவர்கள் கூறுவார்கள் இதைக்கேட்ட நான் மாத விடாய் பெண்களுமா எனக்கேட்ட போது மாதவிடாய் பெண் அரபாவிலும் மற்ற இல்ங்களுக்கும் செல்வதில்லையா என உம்மு அதிய்யா (ர­) அவர்கள் கேட்டார்கள்.நூல்: புகாரி (324)

மஹ்ரமாணவர்களிடத்தில் இருக்கும் போது...
திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட ஆண்களிடம் பெண்கள் அண்ணிய ஆண்களிடம் முழுமையாக மறைக்க வேண்டிய போன்று அவசியம் இல்லை இதை பின் வரும் நபி மொழி­ருந்து விலங்கி கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் பாத்திமா (ர­) அவர்களுக்ôக ஒரு அடிமையை அன்பளிப்பாக கொடுத்தார்கள் அப்போது பாத்திமா (ர­) அவர்கள் மீது (சிறிய) ஆடை ஒன்று இருந்தது அந்த ஆடை மூலம் அவர்களது தலையை மூடினால் கால் மூடாமல் இருந்தது காலை மூடினால் தலை தெரிந்தது இதை நபி (ஸல்) அவர்கள் கவனித்த போது ? உன்னிடத்தில் உனது தந்தையும் அடிமையும் தான் இருக்கிறார்கள் அதனால் உன் மீது குறற்ம் இல்லை என்று கூறினார்கள்.
நூல்: அபூதாவூத் (3582)

அல்லாஹ் அவனது தூதர் ஸல் அவர்களும் எதைச் சொன்னார்களோ அதை எற்று நடக்க கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவனாக. (முற்றும்) 

இதையும் பார்க்க:-
                                   * பெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)
                                   * மன அமைதிக்கு மனைவி அவசியம்
                                   * திருக்குர்ஆனை தொடக் கூடாதாமே?!!
                                   * பெண்களுக்கு ஸகாத் கடமையா?

*. "என்னுடைய இரட்கனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு செய்தியை ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது என்னுடைய சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் மரணிக்கிறவர் சொர்க்கத்தில நுழைவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, நான் 'அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?' எனக் கேட்டேன். 'அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும்தான் என அவர்கள் கூறினார்கள்" என அபூ தர்(ரலி) அறிவித்தார். 

*.அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
இணைவைத்தவராக மரித்தவர் நிச்சயமாக நரகத்தில் நுழைந்துவிட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். '(அப்படியாயின்) அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறவர் நிச்சயமாகச் சொர்க்கத்தில் நுழைவார்" என நான் கூறுகிறேன். 

*. பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
அவர்கள் எங்களக்கு ஏழு விஷயங்களை(ச் செய்யும்படி) கட்டளையிட்டு ஏழு விஷயங்களை தடை செய்தார்கள். ஜனாஸாவை பின் தொடரும் படியும், நோயாளியை நலம் விசாரிக்கும் படியும், விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளும் படியும். அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், செய்த சத்தியத்தையும் பூரணமாக நிறைவேற்றும் படியும். ஸலாமுக்கு பதில் கூறும்படியும். தும்முபவருக்கு அவர்
அல்ஹம்துலில்லாஹ்.. எல்லாப் புகழும் இறைவனுக்கே! என கூறினால் அருகிலிருப்பவர் யர்ஹமுகல்லாஹ்.. இறைவன் உங்களுக்கு கருணை காட்டுவானாக' என மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள். வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், ஆண்கள் தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் கலப்படமில்லாத பட்டையும், அலங்காரப் பட்டையும் எம்ப்திய பட்டையும், தடித்த பட்டையும் அணிவதிலிருந்தும் எங்களை தடைசெய்தார்கள். 

*. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

*. ஆயிஷா(ரலி)கூறினார்கள்" நபி(ஸல்)அவர்களின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட) அபூ பக்ர்(ரலி) ஸுன்ஹ் என்னும் இடத்திலுள்ள தம் வீட்டிலிருந்து குதிரையில் மஸ்ஜிது(ன்னபவீ)க்கு வந்திறங்கி, யாரிடமும் பேசாமல் நேரடியாக என் அறைக்குள் நுழைந்தார். அங்கு நபி(ஸல்) அவர்களை அடையாளமிடப்பட்ட போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில் கண்டார். உடனே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த துணியை அகற்றிவிட்டு, அவர்களின் மேல் விழுந்து முத்தமிட்டுவிட்டு, அழுதார். பின்பு, 'இறைத்தூதர் அவர்களே! என்னுடைய தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணங்களை ஏற்படுத்தவில்லை. உங்களின் மீது விதிக்கப்பட்ட அந்த மரணத்தை தாங்கள் அடைவது விட்டீர்கள்' என்று கூறினார். 

*. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்)அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரலி) வெளியில் வந்தார். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) மீண்டும் மறுக்கவே அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே, மக்கள் உமர்(ரலி) பக்கமிருந்து அபூ பக்ர்(ரலி) பக்கம் திரும்பிவிட்டனர்.
அப்போது அபூ பக்ர்(ரலி) 'உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். மேலும், அல்லாஹ் கூறினான்: முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்:
அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்" (திருக்குர்ஆன் 3:144) என்றார்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போன்றும் அபூ பக்ர்(ரலி) மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்ததைப் போன்றும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள். 

*. நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா(ரலி) அறிவித்தார்.
வந்த) முஹாஜிர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார்.
 அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கஃபனிடப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), 'ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறினேன். உடனே, நபி(ஸல்) அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின்தூதர் அவர்களே! என்னுடைய தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?' என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர் மரணமடைந்துவிட்டார். எனவே, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே விரும்புகிறேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை."

*. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
தந்தை கொல்லப்பட்டுக் கிடந்தபோது நான் அவரின் முகத்தின மீதிருந்த துணியை அகற்றிவிட்டு அழுதேன். அப்போது (அங்கிருந்தவர்கள்) என்னைத் தடுத்தார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை. பிறகு என்னுடைய மாமி ஃபாத்திமா(ரலி)வும் அழ ஆரம்பித்துவிட்டார். அப்போது, 'நீங்கள் அழுதாலும் அழாவிட்டாலும் நீங்கள் அவரைத் தூக்கும் வரை வானவர்கள் அவருக்குத் தங்களின் இறக்கைகளால் தொடர்ந்து நிழல கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்." என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

*. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அவர்கள் நஜ்ஜாஷி(மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள். 

*. அனஸ்(ரலி) அறிவித்தார்.
(மூத்தா போரில்) ஸைத்(ரலி) கொடியைப் பற்றியிருந்தார். அவர் கொல்லப்பட்டதும் அதை ஜஅஃபர்(ரலி) பற்றினார். அவர் கொல்லப்பட்டதும் அதை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) பற்றினார். பிறகு அவரும் கொல்லப்பட்டார்" என்று நபி(ஸல்) கூறிக்கொண்டிருந்தபோது அவர்களின் இரண்டு கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. பிறகு, '(ஏற்கெனவே) நியமிக்கப்பட்டாதிருந்த காலித் இப்னு வலீத்(ரலி) அக்கொடியைப் பற்றினார். அவருக்கே வெற்றி கிடைத்துவிட்டது என்றும் கூறினார்கள். 

*. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருவரை நபி(ஸல்) அவர்கள் வழக்கமாக விசாரிப்பவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் இரவு அவர் இறந்துவிட்டார். அவரை மக்கள் இரவிலேயே அடக்கம் செய்துவிட்டனர். மறுநாள் காலையில் நபி(ஸல்) அவர்களுக்கு இச்செய்தியை மக்கள் தெரிவித்ததும் 'இதை அப்போதே எனக்கு நீங்கள் அறிவிக்காததன் காரணமென்ன?' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், 'கடுமையான இருள் சூழ்ந்த இரவு நேரமாக இருந்ததால் உங்களுக்குச் சிரமம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை" என்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள், அவரின் கப்ருக்கு வந்து ஜனாஸாத் தொழுகை தொழுகை நடத்தினார்கள்.

*. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) மரணித்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்."
அனஸ்(ரலி) அறிவித்தார். 

*. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் பெண்கள்(வந்து) 'எங்களுக்கும் ஒரு நாள் (உபதேசத்திற்காக) ஒதுக்குங்களேன் எனக் கேட்டார்கள். நபி(ஸல்) பெண்களுக்கு (ஒருநாள்) உபதேசம் செய்தார்கள். அதில் 'ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதால் அவர்கள் அப்பெண்ணை நரகத்திலிருந்து காக்கும் திரையாக ஆகிவிடுவார்கள்" எனக் கூறியதும் ஒரு பெண் 'இரண்டு குழந்தைகள் இறந்தால்?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இரண்டு குழந்தை இறந்தாலும் தான்" என்றார்கள். 

*. மேற்கூறிய ஹதீஸில் அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் அறிவிப்பில், 'பருவமடையாத (குழந்தைகள்)" என்ற வாசகம் அதிகப்படியாக உள்ளது. 

*. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிமுடைய மூன்று குழந்தைகள் இறந்துவிட்டால் எல்லோருமே நரகைக் கடந்து சென்றாக வேண்டும் என்ற அடிப்படையில், அந்த நேரம் மட்டுமே தவிர அவர் நரகின் பக்கம் செல்லவே மாட்டார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நரகத்தைக் கடந்து சென்றதாக வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.) 'அதனை (நரகை)க் கடக்காமல் செல்பவர் உங்களில் யாரும் இல்லை" என்ற (திருக்குர்ஆன் 19:71) இறைவசனத்தின் அடிப்படையில்தான் என்று புகாரி ஆகிய நான் கூறுகிறேன். 

*. அனஸ்(ரலி) அறிவித்தார்.
அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், 'அல்லாஹ்வைப் பயந்து கொள்! பொறுமையாயிரு!" எனக் கூறினார்கள். 

*. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் மரணித்துவிட்டபோது எங்களிடம் வந்து, 'அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்; குளிப்பாட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தம் கீழாடையைத் தந்து, 'இதை அவரின் உடலில் சுற்றுங்கள்" எனக் கூறினார்கள். 

*. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்)அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள், 'அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கும் அதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்' எனக் கூறினார்கள். முடிந்ததும் நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். அப்போது அவர்கள் தங்களின் கீழாடையைத் தந்து, 'இதை அவரின் உடலில் சுற்றுங்கள்' எனக் கூறினார்கள்.

அறிவிப்பில், 'ஒற்றைப் படையாக (த் தண்ணீர் ஊற்றி)க் குறிப்பாட்டுங்கள்; மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு முறை (தண்ணீர் ஊற்றுங்கள்); அவரின் வலப்புறத்திலிருந்தும் உளூச் செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் துவங்குங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் 'நாங்கள் அவர்களுக்கு தலைவாரி மூன்று சடைகள் பின்னினோம்" என உம்மு அதிய்யா(ரலி) கூறினார் என்றும் உள்ளது என அய்யூப் குறிப்பிடுகிறார். 

*. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்)அவர்களின் மகளைக் குளிப்பாட்டும்போது, 'அவரின் வலப்புறத்திலிருந்தும் உளூச் செய்யவேண்டிய பகுதியிலிருந்தும் ஆரம்பியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

*. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்)அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது, 'மய்யித்தின் வலப்புறத்திலிருந்தும் அதன் உளூச் செய்யவேண்டிய பகுதிகளிலிருந்தும் ஆரம்பியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
                                               

                                           தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
இலங்கைவாழ் முஸ்லிம்களை பொறுத்தவரையில் செப்டம்பர் 16ஆம் நாள் மறக்க முடியாத தினமாகும். 1980களிற்கு முன்னர் பேரினவாத அரசியல் கட்சிகளை நம்பியிருந்த இலங்கைவாழ் முஸ்லிம்களின் தனித்துவத்தை பேணுவதற்காக உருவாக்ககப்ட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் இவ்வுலகினை விட்டு பிரிந்த தினமாகும்.

மிகவும் நீண்ட காலமாக இலங்கையில் புரையோடிப்போயுள்ள இன முரண்பாட்டினை தீர்த்து வைத்து அதனூடாக சமாதான பூமியாக இலங்கையை காண வேண்டும் இதுவே காலத்தின் தேவை என்ற எண்ணத்திலும் செயலிலும் ஈடுபட்டுவந்த ஓர் சமாதான பிரியர் மர்ஹும் அஷ்ரப் இவ்வுலகினை விட்டு பிரிந்து 12 வருடங்களாகின்றன. விதானையான தகப்பனார் முகம்மது உசைன், தாய் மதீனா உம்மா அவர்களுக்கு மகனாக 1949ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி கிழக்கிழங்கையில் உள்ள சம்மாந்துறையில் மூன்று சகோதரிகளுடன் பிறந்தார் அஷ்ரப். தனது வாழ்விடமாக கல்முனைக்குடியினை கொண்டிருந்து தனது ஆரம்ப கல்வியை கல்முனைக்குடி அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் ஆரம்பித்து இடைநிலை கல்வியை கல்முனை பத்திமா கல்லூரியிலும் உயர்கல்வியை கல்முனை வெஸ்லி கல்லூரியிலும் தொடர்ந்தார்.

தனது பாடசாலை வாழ்வில் இன, மத மற்றும் குல போதமின்றி அனைத்து மாணவ மாணவியர்களுடன் பழகிய இவர் பாடசாலையில் நடைபெறுகின்ற சகலவிதமான நிகழ்வுகளிலும் பங்குபற்றி தனது ஆற்றலை வெளிக்காட்டி வளர்த்தும் கொண்டதுடன் அவரின் பாடசாலை பருவ அனுபவங்கள் அவரின் அரசியல் மூலோட்டத்திற்கு பெரிதும் துணைபுரிந்தது.
தனது எண்ணம்போல் சட்டத்தரணியான அஷ்ரப் பேரியல் இஸ்மாயிலை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவ்விருவருக்கும் இடையில் ஓர் ஆண்மகனும் பிறந்தார்.

அஷ்ரபின் வரலாற்றினை எடுத்து பார்க்கும் போது இன்றுள்ள அரசியல்வாதிகளைப் போன்று வெறுமனே ஒரு துறையில் மட்டும் வைத்து அவரை பார்க்க முடியாது ஏனெனில் சிறந்த குடும்ப தலைவனாக, சிறந்த பேச்சாற்றல் வன்மையுள்ள சட்டத்தரணியாக, கவிஞனாக மற்றும் சிறந்த அரசியல்வாதி என பலதுறைகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தமையினால் அவை ஒவ்வொன்றையும் பார்ப்பதே சாலச் சிறந்தது.
தனது 12ஆம் வயதிலிந்து கவிதைகள், கதைகள் என இலக்கிய துறையில் நுழைந்த அஷ்ரப் தனது வாழ்வில் இரவு வேளைகளில் கவிதைகளை வடிப்பதிலேயே தனது பெரும் பகுதியை செலவிட்டார். அவர் வடித்த முதலாவது கவிதை தாயை பற்றியதாகும்.

என்னைப் பெற்ற தாய்
ஏந்தலான தாய்
பத்து மாதம் சுமந்து
பாங்காய் வளர்க்கும் தாய்
காய்ச்சல் வரும் போதும்
கதறி அழும் தாய்
இக்கவிதை அவர் மரணித்த அதே தினத்தில் தேசிய முரசில் பிரசுரமானது. இவ்வாறு தனது கவிதைகளை காலத்திற்கு காலம் தேவைக்கேற்ப வெளியிட்ட அஷ்ரப், தனது சட்டக் கல்லூரி நண்பனான சிவபாலன் என்பவர் கேஸ்வெடித்து அகால மரணமான போது கல்முனை சவக்காளையில் அவர் பாடிய இரங்கற்பா அனைவரது மனங்களையும் குமுறவைத்தது.அஷ்ரப் தனது வாழ்வில் எழுதிய கவிதைகள் எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து 600 பக்கங்களை கொண்ட “நான் எனும் நீ” கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இலங்கையில் மாத்திரமன்றி உலகில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உன்னத வரவேற்பினைப் பெற்ற நூலாக இன்றும் இக்கவிதைத் தொகுப்பு விளங்குகின்றது.

தனது எழுத்தாற்றலால் பல நூல்களை வெளியிட்டார். குறிப்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய வெளிச்சங்கள் எனும் பாடல் தொகுப்பு அவரால் இயற்றப்பட்டவையாகும். சிறந்த கவிஞனாக வாழ்ந்து காட்டிய அஷ்ரப் அதனை தனது வாழ்நாளின் இறுதிவரை முன்னெடுத்துச் சென்றார்.
மர்ஹும் அஷ்ரபின் சட்டத்தரணி வரலாற்றை எடுத்து நோக்கும் போது பல பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தனது சட்டத்துறை கல்வியை நிறைவு செய்தார். இளம் சட்டத்தரணியாக வளர்ந்து ஜனாதிபதி சட்டத்தரணியாக வளர்ச்சி பெற்று தனது கணீரென்ற பேச்சாற்றலாலும், வாதத் திறமையாலும் அத்தொழிலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இவரது அரசியல் பிரவேசத்திற்கான உந்து சக்தியை சட்டக்கல்லூரி வாழ்க்கையே கொடுத்தது அத்துடன் அவர் இளம் வயதில் அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளியிடவும் சட்டக்கல்லூரி வாழ்க்கையே பெரிதும் உதவியது. இன்றும் கூட அவரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட சட்டத்துறை சமமந்தமான நூல் காணப்படுகின்றமை அவர் சிறந்த அரசியல்வாதி கவிஞன் என்பதைப் போன்று அவர் சிறந்த சட்ட வல்லுனர் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

அஷ்ரபின் இலக்கிய சட்டத்துறை வரலாறு அவரது சிறப்பை தெளிவாக விளக்கினும் அவரது வரலாற்றுப் பயணத்தில் இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களுக்காக குறிப்பாக முஸ்லிம் மக்களின் அரசியல் விடிவிற்காக போராடிய தன்மை இன்னும் மறக்க முடியாத வரலாறாகவே உள்ளது. சுரமும் சுரமும் ஒன்று சேர்ந்தால் கின்னரம் பாடும் என்பார்கள் அது போன்று தன்னிடமுள்ள பேச்சாற்றல், வாதத்திறன், இலக்கிய கலை ரசனை மற்றும் சட்டத்துறை வல்லுநர் என்பவற்றை இணைத்து இலங்கைவாழ் முஸ்லிம்களுக்காக அரசியலை மேற்கொண்டதனால் இலங்கையின் அரசியலில் தடம் பதித்தார். இவரது அரசியல் பிரவேசமும், அரசியல் நடாத்துகையும் இலங்கைவாழ் அனைத்து மக்கள் மத்தியிலும் அவரை பிரபல்யப்படுத்தியது.

இலங்கையின் அரசியல் வரலாற்றை ஆராய முற்படும் போது அல்லது முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை ஆராய முற்படும் போது நிச்சயமாக அஷ்ரபின் வரலாறு ஒரு தெளிவான வரலாறாக காணப்படுகின்றது. இலங்கைவாழ் முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கும் போது அவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளாக எவ்வித தனித்துவமுமின்றி இலங்கை சுதந்திரமடைந்தது முதல் நான்கு தசாப்தங்களாக பேரினவாத அரசுகளின் பின்னால் வாழ்ந்தும் சங்கமித்தும் இருந்தனர். இதனால் முஸ்லிம்களுக்கென எவ்வித தனித்துவமான அரசியல் இயக்கம் இலங்கையில் தடம் பதிக்கவில்லை. இந்நிலையில் 1976ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாகும்.

1976ஆம் ஆண்டு புத்தளம் பள்ளிவாயலுக்குள் நுழைந்த காவல் படையினர் காட்டு மிராண்டித் தனமாக சுட்டதனால்; பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வு பற்றி நாடாளுமன்றத்தில் கதிரைகளில் ஒட்டியிருந்த எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் வாய்திறந்து பேசாது மௌனம் காத்தனர். இவ்வேளையில் அது பற்றி பேசிய ஒரே ஒருவர் தந்தை செல்வா மட்டுமே. இந்நிகழ்வு மர்ஹும் அஷ்ரபின் அரசியல் உணர்வில் மேலும் ஒரு உந்து சக்தியை கொடுத்தது.

பேரினவாதிகளின் கைகளை பிடித்துக் கொண்டு அரசியல் மேற்கொண்டால் முஸ்லிம்களின் அரசியல், எதிர்காலம் மழுங்கடிக்கப்பட்டுவிடும் என்பதினை தெளிவாக உணர்ந்த அஷ்ரப் தமிழ் பேசும் மக்களுக்காக அதிலும் குறிப்பாக முஸ்லிம் மக்களுக்காக அம்மக்களின் அரசியல் தனித்துவத்தை நிலைநிறுத்துவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தினை பல புத்திஜீவிகளுடன் ஒன்றிணைந்து 1981ல் தம்மை ஏக தலைவராக கொண்டு உருவாக்கினார். அன்றிலிருந்து இன்றுவரை பல பிரிவுகளும், பிரிவினைகளும் இக்கட்சிக்குள் வந்திடினும் மக்கள் மத்தியில் இது வேரோடியிருக்கின்றமை இக்கட்சியின் தேர்தல் முடிவுகள் தெளிவாக புடம் போட்டு காட்டுகின்றன.

அஷ்ரப் ஒரு குறுகிய மனித வர்க்கத்தை வைத்துக் கொண்டு தனது அரசியலை மேற்கொண்டார் முஸ்லிம் மக்களின் அரசியல் உணர்வினை கிள்ளி விட்டார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு விருட்சமாக வளர ஆரம்பித்தது. நள்ளிரவை தாண்டியும் மக்கள் மத்தியில் பிரசாரங்களை மேற்கொண்டதுடன் ஈற்றில் வெற்றியும் கண்டதுடன் முஸ்லிம்களின் அரசியல் பயணத்தில் ஒரு தனித்துவ அரசியலையும் அடையாளப்படுத்தினார். 1981-85வரை அம்பாறை, மட்டகளப்பு மாவட்ட கிராமங்கள் தோறும் முஸ்லிம் மக்களின் அரசியல் தனித்துவத்தை வலியுறுத்தியும் பேரினவாத கட்சிகளையும் அதன் முகவர்களையும் அம்பலப்படுத்தியும் தமிழ் மக்களுக்கெதிரான போக்குகளை விமர்சித்தும் பிரசாரங்கள் மெற்கொண்டார். அஷ்ரபின் அரசியல் வரலாற்றில் கல்முனையில் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் இனமுரண்பாடு அவரை கொழும்பு நோக்கி குடிபெயரச் செய்தது.

காலங்கள் கடந்தன கொழும்பில் இருந்து கொண்டு முஸ்லிம்களின் அரசியல் தொடர்பில் பல்வேறுவிதமாக சிந்தித்தார். சவூதியில் இருந்து வந்த எம்.ரி.ஹசன்அலி மற்றும் எம்.ஐ.எம். இஸ்மாயில் ஆகியோர் அஷ்ரபை சந்தித்து முஸ்லிம்களின் அரசியல் தொடர்பில் கலந்துரையாடினர். பின்னர் இதில் மருதூர்கனியும் இணைந்து கொண்டார்.
முடிவாக 1986.11.29ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இயக்கமாக உருவாக்கப்பட்டு 1988.02.11ஆம் திகதி மரச்சின்னதுடன் தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரையும் இவ்வியக்கம் முஸ்லிம்களின் அரசியல் குரலாக மிளிர்கின்றது.

1988ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாணசபை தேர்தலில் பல இயக்கங்களின் கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் போட்டியிட்டு முழுமையான வெற்றியினை தட்டிக் கொண்டது. அது மட்டுமன்று 1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 202,016 வாக்குகளை இலங்கை முழுவதிலும் பெற்ற இக்கட்சி நான்கு ஆசனங்களுடன் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தது. இலங்கையின் வரலாற்றில் ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தில் முன்வரிசை ஆசனத்தில்; அமர்ந்து கொண்டு தனது மும்மொழி பேச்சாற்றலால் அனைவரினது கவனத்தையும் ஈர்த்தார். 1989ல் நாடாளுமன்றம் நுழைந்த அஷ்ரப் பேச்சாற்றலாலும் கனீரென்ற குரலினாலும் நாடாளுமன்றத்தையே அதிரவைத்தார்.; தமிழ் பேசும் மக்களின் சுய கௌரவத்திற்காக அன்றைய நாடாளுமன்ற ஆசனத்தை அஷ்ரப் பயன்படுத்திக் கொண்டார்.

இவரது அரசியல் சொல், செயல் வடிவம் கொண்டது 1994.03.01இல் கிழக்கில் பிரதேச சபை தேர்தல் இடம்பெற்றது. திகாமடுல்லை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஏதேனும் ஒரு பிரதேச சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியை தழுவுமானானல் தான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சபதம் கொண்டார். முடிவோ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில பிரதேச சபைகளில் தோற்றது. அதனை அடுத்து அஷ்ரப் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

மர்ஹும் அஷ்ரப் அரசியலில் சாணக்கியம் மிக்கவர் 1994.07.01ல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாக்க குமாரத்துங்கவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து அதற்கமைய அன்று நடைபெற்ற 16வது நாடாளுமன்ற தேர்தலில் 09 ஆசனங்களைப் பெற்று இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிறுபான்மையின கட்சிகளின் ஆதரவின்றி பெரும்பான்மை ஆட்சியாளர்களால் ஆட்சி அமைக்க முடியாது என்பதினை நிரூபித்தார்.

இலங்கையின் அரசியலில் சேவையின் சிகரமாக திகழ்ந்தார்.; இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி இலங்கையர் என்ற அடிப்படையில் பொதுஜன ஐக்கிய முன்னணியினால் கிடைக்கப்பெற்ற சிறந்த அமைச்சு பதவியினூடாக சேவைகளை செய்தார். ஏழைகளின் இல்லங்களை நோக்கிச் சென்ற அஷ்ரப் அவர்களின் தேவைகளை பல வழிகளிலும் பூர்தி செய்தார். இலங்கைவாழ் முஸ்லிம்களின் கல்வி நிலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் 23.10.1995 தனது முழு முயற்சியினால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை உருவாக்கினார். இது போன்றே ஒலுவில் துறைமுகம் என்பதும் அவரது கனவாக இருந்தது.

தமிழ் முஸ்லிம் மக்களின் உறவு தொடர்பில் மிகவும் உன்னிப்பாக செயற்பட்டவர். அண்ணன் அமிர்தலிங்கம் ஈழம் பெற்றுத் தராவிட்டால் தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவார் என்று கூறியிருந்தமை அக்காலத்தின் தேவையாக காணப்பட்டது. அதுபோன்றே தமிழ் இயக்கங்களை அனுசரிக்காத எந்தவொரு தீர்வும் தீர்வாகாது எனக் கூறியிருந்தமை அவர் ஒரு சமாதான பிரியர் என்பதை சுட்டுகிறது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இனவாத கட்சி என பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் கருத்துக்கள் தெரிவித்தனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் இருந்தே தேசிய ஐக்கிய முன்னணி எனும் கட்சியை ஆரம்பித்தார் அது மட்டுமன்றி சிங்கள இனத்தவரான அசித்த பெரேரா என்பவருக்கு நாடாளுமன்ற ஆசனத்தை வழங்கி தான் ஒரு இனவாதியல்ல என்பதை நிரூபித்தும் காட்டினார். அஷ்ரபின் மரணத்தை தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்ட பிளவுகளும், சர்ச்சைகளும் அஷ்ரபின் இலட்சிய பயணத்தை தெடர்வதற்கு தடைக்கற்கற்களாக அமைந்தது.

அஷ்ரப் சிறந்ததொரு மனிதராக அனைத்து விடயங்களிலும் விளங்கி புரட்சியை ஏற்படுத்தியுள்ளர். இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் வரலாற்றை கற்பதற்கு அஷ்ரபின் வரலாறு காலத்தின் தேவையாகும்.
அஷ்ரபினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இழந்ததினைத் தொடர்ந்து பிரதேசவாரியாகவும், தனிப்பட்ட விறுப்பு வெறுப்புக்களுடனும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் பல சிதறல்களாக சிதறியும், சுகபோக அரசியலின் பின்னாலும் சென்று கொண்டிருப்பதைக் காணலாம். கொட்டும் மழையிலும் வாட்டும் வெயிலிலும் கடற்கரை வீதிகளில் மக்களை ஒன்று சேர்ந்து ஊர் ஊராக சென்றும் தாய்மார்களின் குழவை வாழ்த்துக்களாலும் வளர்த்தெடுக்டகப்பட்ட இக்கட்சி இன்றும் குழந்தை வடிவத்திலேயே தவழ்ந்து செல்வதனை காணலாம்.

இருந்தபோதிலும் மக்கள் மனதில் மாறாத நினைவாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கின்றது இதற்கு அஷ்ரப் போட்ட அடித்தளமே காரணம் என்றால் மிகையாகாது. இன்று அஷ்ரப் உலகை விட்டு பிரிந்து 12வருடங்கள் ஆனாலும் மக்கள் உள்ளங்களில் அஷ்ரப் என்ற ஒரு தலைவனுக்கு என்றுமே சந்ததி சந்ததியாக நீங்கா நினைவலைகள் நிலைத்திருக்கும்.
இலங்கையில் வாழ்கின்ற குறிப்பாக வட கிழக்கில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் பல பிரிவுகளாக பிரிந்து நின்று அரசியல் செய்வதை விடுத்து அனைவரும் ஒரு அணியில் ஒன்று சேர்நது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை வளர்த்தெடுப்பதே மர்ஹும் அஷ்ரபிற்கு செய்யும் மாபெரும் கைமாறாகும் இல்லையெனில் அன்று அஷரப் சொன்னதைப் பொன்று கிளிக்குஞ்சுகளாக அரசாங்கங்களின் பின்னால் இருக்க வேண்டிவரும் என்பதே யதார்த்தமாகும்.

 யா அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை வழங்குவாயாக...! ஆமீன்..ஆமீன்..ஆமீன்..
                           
     

வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் வெறிபிடித்த அலைந்த பாசிச விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள் பல.
சர்வதேச சமூகமும்இ மேகத்திய ஊடகங்களும் விடுதலைப் புலிகளின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இந்த அக்கிரமங்களை இதுவரை கண்டுகொள்வில்லை. முஸ்லிம் சமூகமும் புலிகள் மேற்கொண்ட அந்த அராஜக நிகழ்வுகளை உலகிற்கு உரியவகையில் எடுத்துக்கூற தவறியுள்ளது.
 
இந்நிலையில்தான் இன்று புதன்கிழமை பிரிட்டனில் இருந்து செயற்படும் சனல் 4 தொலைக்காட்சி இலங்கை அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர்க்குற்றம் புரிந்ததாககூறி சில ஆவணப்படங்களை காண்பிக்கவுள்ளது.
 
முஸ்லிம்களாகிய நாமும் சனல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களுக்கு பயங்கரவாதப் புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களையும்இ போர்க் குற்றங்களையும் அம்பலப்படுத்தும் செயற்பாட்டில் குதிக்கவேண்டும். புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களை உங்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட ஏனைய இணையத் தளங்களிலும் பதிவுசெய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்..!!

இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன.
'யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்'
இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்.ஒஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14இ844.
யாழ்ப்பாணம்இ முல்லைத்தீவுஇ வவுனியாஇ மன்னார்இ கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள்இ முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றினார்கள்.

முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சிஇ மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர்.
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள்
 
இக் கொடூரம் இடம்பெற்றுச் சரியாக ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள். ஏறாவூர்இ பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள்இ 36 பேர் பெண்கள்இ 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது.
1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அந்த வருடம் ஜூலை மாதம் முப்பதாம் திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி அம்பாறைஇ முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர்.
 
மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறைஇ அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் ஒன்பது முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
வடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர்.
இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.
வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம்இ அநுராதபுரம்இ குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். இருபது வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது.
 

1990/10/30 வடக்கில் பல ஆயிரக்கனக்கான முஸ்லிம் வெளியேற்றம்

கிழக்கு முஸ்லிம் இனசுத்திகரிப்பு
2006
ஆகஸ்ட் -01-மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம்
1990
ஆகஸ்ட்- 01 அக்கரைபற்று 8 முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 03 காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 05 அம்பாறை முல்லியன்காடு, 17 முஸ்லிம் விவசாய்கள் படுகொலை
ஆகஸ்ட்- 06 அம்பாற 33முஸ்லிம் விவசாய்கள் படுகொலை
ஆகஸ்ட் -12 சமாந்துரை 4 முஸ்லிம் விவசாய்கள் படுகொலை
ஆகஸ்ட்- 12 ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படுகொலை
ஆகஸ்ட்- 13 வவுனியா 9 முஸ்லிம்கள் படுகொலை
By:FARIS FANA

இஸ்லாத்தின் ஆரம்பக்காலக் கட்டங்களில் கப்ருகளுக்கு ஜியாரத் செய்வதை நபி (ஸல்) அவர்கள் முழுமையாகத் தடுத்திருந்தார்கள். பின்னர் ஸஹாபாக்கள் இஸ்லாத்தை ஓரளவு விளங்கிக் கொண்டதும் அவர்களை கப்ருகளை ஜியாரத் செய்யுமாறு கூறினார்கள். அதுவும் ஆண்களுக்குத் தான். பெண்கள் ஜியாரத் செய்வது குறித்து எச்சரித்து, அவ்வாறு செய்யும் பெண்களை சபிக்கவும் செய்தார்கள்.
“கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் : திமிதி, இப்னுமாஜா, அஹ்மத் மற்றும் இப்னு ஹிப்பான்.
 
ஜியாரத் செய்வதின் நோக்கம்:-
கப்ருகளில் ஜியாரத் செய்யக்கூடிய ஆண்களின் நோக்கம் மறுமையைப் பற்றிய சிந்தனையை வளர்த்துக் கொள்வதற்காக மட்டுமே இருக்கவேண்டும்.
“கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள், நிச்சயமாக அது உலகப் பற்றை நீக்கும், மறுமையை நினைவு படுத்தும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரி, நூல் : அஹ்மது.
 
கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் செய்யவேண்டிய துஆ:-
“முஃமினான மண்ணறைவாசிகளே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். நிச்சயமாக நாங்களும் அல்லாஹ் நாடினால் உங்களை மரணம் மூலம் சந்திப்பவர்களே!” அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : முஸ்லிம், அஹ்மது, நஸயீ.
“முஃமினான, முஸ்லிமான மண்ணறை வாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! நிச்சயமாக, இன்ஷா அல்லாஹ், நாங்களும் உங்களை அடுத்து வருபவர்களே! உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்விடம் சுகவாழ்வைக் கேட்கிறோம்” அறிவிப்பவர் : புரைதா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அஹ்மது, இப்னு மாஜா.
 
ஜியாரத் செய்யும் போது கவனிக்க வேண்டிய மற்றும் கடைபிடிக்கப்பட வேண்டியவைகள்: -
  • கப்ரு தரைக்கு மேல் உயர்த்தப்பட்டதாக இருக்கக்கூடாது
  • பூசி, மெழுகிய கட்டடமாக இருக்கக்கூடாது
  • கப்ரில் அழுது புலம்புவது கூடாது
  • கப்ரில் உள்ளவர்களிடம் நமது தேவைகளைக் கூறி பிரார்த்திக்கக் கூடாது
  • கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த துஆவைச் செய்யவேண்டும்
  • இஸ்லாத்திற்கு மாற்றமான எந்தக்காரியங்களையும் செய்யக்கூடாது
தர்ஹாக்களுக்கு ஜியாரத் செய்யச் செல்லலாமா?
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு ஜியாரத் செய்ய அனுமதி வழங்கியபோது இறந்தவர்களை அடக்கம் செய்யப்படும் இடங்களுக்குச் சென்று அங்கு தான் ஜியாரத் செய்ய அனுமதித்தார்களே தவிர கப்ருகளில் கட்டங்கள் கட்டி, பூசி, மெழுகி இஸ்லாத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்லச் சொல்லவில்லை. இது போன்ற இடங்களுக்குச் சென்று வருவது நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீறுபவர்களுக்குத் துணைபோவது போலாகும் என்பதை பின்வருபவைகள் விளக்குகின்றது.
 
கப்ருகளை வணங்குவதும், அதனிடம் கையேந்தி நிற்பதும் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே இருந்துவரும் பழக்கமாகும். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்களுக்கு முன்னால் வாழ்ந்த நபிமார்கள் மற்றும் நல்லடியார்களின் கப்ருகளில் கட்டடம் எழுப்பி, இன்று நம்மவர்கள் தர்ஹாக்களில் செய்வதைப் போல அதில் விளக்கு ஏற்றி, அதை பூசி, மெழுகி பூஜை போன்ற சடங்குகள் செய்து அவர்களின் நினைவு நாட்களில் திருவிழாக்கள் (கந்தூரிகள்) நடத்தி வந்தனர்.
கற்களையும், சிலைகளையும், கப்ருகளையும், இறந்தவர்களையும் வழிபடும் மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றி சத்தியத்தின் அறிவு என்னும் ஒளியை பரப்ப வந்த நபி (ஸல்) அவர்கள், கப்ருகளின் மேல் கட்டடங்கள் (தர்ஹா, மஸ்ஜிதுகள்) எழுப்பி, அதில் விளக்கு ஏற்றி, பூசி, மெழுகி, கந்தூரி நடத்துபவர்களைக் கடுமையாக சபித்ததோடல்லாமல் அந்த உயர்த்தப்பட்ட கப்ருகளை அலி (ரலி) அவர்கள் மூலமாக இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். இதுபற்றி நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் அடங்கிய ஹதீஸ்கள் சிலவற்றைக் காண்போம்.
 
அவ்லியாக்களின் கப்ருகளில் மஸ்ஜிதைக் கட்டுபவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவர்கள்:-
ஹதீஸ் ஆதாரம்:- “யஹுதிகளையும், நஸாரக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக்கொண்டனர்” (நூல் : புகாரி)
 
அவ்லியாக்களின் கப்ருகளில் தர்ஹாக்களை எழுப்புபவர்கள் அல்லாஹ்வின் படைப்பினங்களிலேயே மிகவும் கெட்டவர்கள் ஆவார்கள்:-
ஹதீஸ் ஆதாரம்:- “அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும் போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இவாகளின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்வர்கள்” அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் புகாரி மற்றும் முஸ்லிம்.
 
அவ்லியாக்களின் கப்ருகளில் சந்தனம் போன்றவற்றைப் பூசக்கூடாது:-
ஹதீஸ் ஆதாரம்-1:- “கப்ருகள் பூசப்படுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தனர்” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதார நூல்கள் : அஹ்மத், முஸ்லிம், நஸயீ மற்றும் அபூதாவுத்.
ஹதீஸ் ஆதாரம்-2:- “கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படுவதையும் அவற்றின் மீது கட்டடம் (தர்ஹா) எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தனர்” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதார நூல் : திமிதி.
 
அவ்லியாக்களின் கப்ருகளில் கந்தூரி விழாக்கள் நடத்தக்கூடாது:-
ஹதீஸ் ஆதாரம்:- “எனது கப்ரை (கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்து சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத்.
 
அவ்லியாக்களின் கப்ருகளை வணங்கும் இடமாக ஆக்கக்கூடாது:-
ஹதீஸ் ஆதாரம்-1 :- “யஹுதிகளும், நஸராக்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக்கொண்டனர். அல்லாஹ் அவர்களைச் சபிப்பானாக” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.
ஹதீஸ் ஆதாரம்-2 :- “உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளையும், நல்லடியார்களின் கப்ருகளையும் வணங்குமிடமாக ஆக்கிவிட்டனர். அறிந்து கொள்க! கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிவிடாதீர்கள்! அதை நான் தடுக்கிறேன்” அறிவிப்பவர் : அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி), நூல் : முஸ்லிம்.
தர்ஹாக்களைக் கட்டுபவர்கள் வேண்டுமானால் நாங்கள் அவ்லியாக்களை வணங்குவதற்காக கட்டவில்லை என்று கூறலாம். ஆனால் இவைகள் எல்லாம் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய .....

இதையும் பார்க்க:-
                                     * மன்னிக்கப்படாத பாவம் – (பாகம் 1)
                                     * சமாதி வழிபாடு
                                     * http://thuuyavali.blogspot.com/2012/10/blog-post.html
                                     * சமாதி வழிபாடு
                             * இஸ்லாத்தில் பிரார்த்தனையின் முக்கியத்துவமும் ஒழுக்... 

By:faris fana

 

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget