சமாதி வழிபாடு

                                     தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

இறந்து போன அவ்லியாக்கள் தம் தேவைகளை நிறைவேற்றுகின்றனர், கஷ்டங்களையும், துன்பங்களையும் நீக்குகின்றனர் என்று நம்பி சிலர் அவர்களின் அடக்கஸ்தலம் சென்று அவர்களிடம் உதவி தேடுகின்றனர். பாதுகாப்புத் தேடுகின்றனர். (இவை அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களாகும்) அல்லாஹ் கூறுகிறான்:
உமது இறைவன், ‘அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள்’ என விதித்துள்ளான்” (17:23)


அதுபோல இறந்து போன நபிமார்கள் மற்றும் இதர நல்லடியார்களிடம் துன்பங்களை நீக்கவும், தங்களுக்கு இறைவனிடம் பரிந்துரை செய்யவும் வேண்டிப் பிரார்த்திக்கின்றனர். (இதுவும் இணை வைத்தல் ஆகும்)
அல்லாஹ் கூறுகிறான்:

“துன்பத்திற்குள்ளானவர் இறைஞ்சும்போது அவருக்குப் பதில் அளிப்பவன் யார்? மேலும் அவருடைய துன்பத்தை நீக்குபவன் யார்? மேலும் உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாய் ஆக்குகிறவன் யார்? (இப்பணிகளைச் செய்ய) அல்லாஹ்வுடன் வேறு கடவுள் உண்டா? நீங்கள் மிகக் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள் (27:62).

இன்னும் சிலர் நிற்கும் போதும், உட்காரும் போதும், கீழே விழும் போதும், அல்லது துன்பங்கள், துயரங்களில் மாட்டிக் கொள்ளும் போது தங்களுடைய ஷேக் அல்லது அவ்லியாக்களுடைய பெயரை திக்ராக உச்சரிக்கும் வழக்கமுடையவர்களாக உள்ளனர். யா முஹம்மத், யா அலீ, யா ஹுஸைன், யா முஹ்யுத்தீன், யா ஷாதுலி, யா ரிஃபாஈ என்றெல்லாம் கூறுகின்றனர். மேலும் ஐதுரூஸ், சைய்யதலி பாத்திமா போன்றோரையும் அழைக்கின்றனர்.
ஆனால் அல்லாஹ் கூறுகிறான்:

“அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எவர்களை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்கள் தாம்” (7:194)

சமாதிகளை வழிபடக்கூடியவர்களில் சிலர் அவற்றை வலம் வருகின்றனர். அவற்றின் மூலைகளையும், படிக்கட்டுகளையும் தொட்டு முத்தமிடுகின்றனர். மேனியில் தடவிக் கொள்கின்றனர். அங்குள்ள மணலை முகத்தில் பூசிக் கொள்கின்றனர். அவற்றுக்கு ஸஜ்தாவும் செய்கின்றனர். மேலும் அவற்றுக்கு முன் தாழ்ந்து, பணிந்து பயபக்தியுடன் நின்று நோய் குணமாகுதல், பிள்ளைப் பேறு கிடைத்தல், தங்களுடைய காரியங்கள் எளிதாகுதல் போன்ற தங்களுடைய நாட்டங்களையும் தேவைகளையும் கேட்கின்றனர்.
சிலபோது அவ்லியாவே! தலைவரே! நான் தொலை தூரத்திலிருந்து வந்திருக்கிறேன். என்னை ஏமாற்றி விடாதீர்கள் என்றும் கூறுகின்றனர்.
அல்லாஹ் கூறுகிறான்:

அல்லாஹ்வை விடுத்து கியாம நாள் வரை தனக்கு பதிலளிக்க இயலாதவர்களை அழைப்பவர்களை விட மிக வழிகெட்டவர்கள் யார் இருக்க முடியும்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றார்கள்” (46:5)

அல்லாஹ்வை விடுத்து அவனுக்கு இணையாக ஒருவரைப் பிரார்த்தித்த நிலையில் எவன் இறந்து விடுகிறானோ அவன் நரகில் நுழைவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி). நூல்: புகாரி.

சிலர் சமாதிகளுக்குச் சென்று மொட்டை அடித்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் அவ்லியாக்களின் அடக்கஸ்தலங்களை தரிசிப்பது சம்பந்தமாக ‘தர்ஹாக்களை ஹஜ் (?) செய்வது எப்படி?’ என்பது போன்ற தலைப்புகளில் புத்தகங்களே வைத்திருக்கிறார்கள். (அடக்கஸ்தலங்களை தரிசிப்பது என்னவோ அவர்களுக்கு ஹஜ் செய்வதைப் போல) மற்றும் சிலர், அவ்லியாக்கள் இவ்வுலகை நிர்வகித்து கொண்டிருக்கின்றார்கள். நன்மையோ, தீமையோ செய்ய அவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது என்று நம்புகிறார்கள். ஆனால் அல்லாஹ் கூறுகிறான்:

“அல்லாஹ் உமக்கு ஏதேனும் துன்பத்தைக் கொடுத்தால் அதனை அகற்றுபவர் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் உமக்கு ஏதேனும் நன்மை அளிக்க நாடினால் அவனது அருளைத் தடுப்பவர் யாருமில்லை” (10:107)


இதையும் பார்க்க:-
                           * கப்ரு ஜியாரத் செய்யும் பெண்கள்!                 
                           * மன்னிக்கப்படாத பாவம் – (பாகம் 1) 
                           * சாந்தி மார்க்கம் போதிக்கும் ஸலாம்…!
                           * சமாதி வழிபாடு
                           * இஸ்லாத்தில் பிரார்த்தனையின் முக்கியத்துவமும் ஒழுக்...
                                   


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget