கழிவறை ஒழுங்குகள் பற்றி இஸ்லாம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த கழிப்பறை ஒழுக்கங்கள் பல உள்ளன.

* கழிவரையில் நுழையும்போது முதலில் இடது காலை வைத்து நுழைய வேண்டும். கழிவரையில் இரு பாதங்கள் வைக்குமிடத்தில் முதலில் வலது காலை வைத்து உட்கார வேண்டும். எழுந்திருக்கும்போது இடது காலை எடுத்து வைத்து வர வேண்டும். (நூல்:இப்னு மாஜா)

* முடிந்தவரை குனிந்து ஆடைகளைத் திறக்க வேண்டும்.
(நூல்: அபூதாவூது)

* இறைவசனம் அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருநாமம் கண்ணுக்குத் தென்படுகிற அளவு எழுதப்பட்டுள்ள மோதிரம் போன்ற வஸ்துக்களை கழிவரையில் நுழையும் முன்பு களைந்து விட்டுச் செல்ல வேண்டும்.  (நூல்: மிஷ்காத்)

* கழிவறையில் கிப்லாவை முன்னோக்கவும் கூடாது. பின்னோக்கவும் கூடாது. (நூல்: மிஷ்காத்)

* மலஜலம் கழிக்கும்போது அந்தரங்க உறுப்பை வலது கையால் தொடாமல் இருக்க வேண்டும். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
* மலஜலத் துளிகள் உடலில் படாது பார்த்துக் கொள்ள வேண்டும். கப்ருடைய (மண்ணறையுடைய) வேதனை பெரும்பாலும் சிறுநீர்த்துளிகளில் கவனக்குறைவாக இருப்பதினால் ஏற்படுகிறது. (நூல்: திர்மிதீ)

* கழிவறை இல்லாத இடங்களில் காடு, கரைகளுக்குச் செல்லும்போது பிறர் பார்வை படாது பார்த்துக் கொள்ள வேண்டும். (நூல்: திர்மிதீ)
* சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யுங்கள். கப்ருடைய வேதனைகளில் பெரும்பாலானவை இதில் அலட்சியம் செய்வதாலேயே ஏற்படுகிறது. (நூல்கள்: இப்னு மாஜா, தார குத்னி, ஹாக்கிம்)
* சிறுநீர் கழிப்பதற்காகச் செல்லும்போது சிறுநீர்த்துளிகள் தெறிக்காத, நீர்களை உறிஞ்சி விடும்படியான மண்பகுதியைத் தேடிச் செல்ல வேண்டும்.               (நூல்: திர்மிதீ)
* சிறுநீர், மலம் கழிக்கும்போது பேசக்கூடாது. அதனால் அல்லாஹ் கோபப்படுகிறான். (நூல்: புகாரி)

* பொது இடங்களில், நடைபாதைகளில், நிழல் தரும் மரத்தடியில் அசுத்தம் செய்யக் கூடாது. (நூல்: புகாரி)
* வலது கரத்தைக் கொண்டு பிறவி உறுப்பைத் தொடக்கூடாது. (நூல்: புகாரி)
* தகுந்த காரணமின்றி நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக் கூடாது.                     (நூல்: அபூதாவூது)
* பொந்தில், தேங்கி நிற்கும் தண்ணீரில், குடிநீரில் சிறுநீர் கழிக்கலாகாது.       (நூல்: அபூதாவூது)
* ஆற்றோரங்களில் சிறுநீர் கழிக்காதீர்கள். அதுபோல் சாலையின் உயர்ந்த பகுதிகளிலும், நிழல் நிறைந்த இடங்களிலும் சிறுநீர் கழிக்காதீர்கள்.             (நூல்: அபூதாவூது)
* கழிவறைக்குச் செல்லும்போது தலைப்பாகை அணிவதும், காலணி அணிவதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை.

தலையில் அணியும் சிறு தலைப்பாகை அளவிலான கனம் (பாரம்) எவ்வகையில் மலஜல வெளியேற்றத்திற்குத் துணை புரிகிறது என்பது ஆராய்ச்சிக்கு உரியது.

காலணி அணிவது குறித்து இன்றைக்கு மருத்துவர்கள் ‘கழிப்பறைக்கு செல்லும்போது காலணி அணிவது உகந்தது என்றும், பெரும்பாலான கிருமிகள் கால்களின் வழியே மலஜலத் துவாரம் மூலம் உடலில் ஊடுருவுகின்றன’ என்றும் குறிப்பிடுகிறார்கள்.

கழிவரையில் நுழைகின்றபோது
بِسْمِ الله ) اللّهُـمَّ إِنِّـي أَعـوذُ بِـكَ مِـنَ الْخُـبْثِ وَالْخَبائِث )

''யா அல்லாஹ்! ஆண் ஷைத்தான் பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.'' (நூல்: புகாரி, முஸ்லிம்)


 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget