பெண்களின் கண்ணியம்...!

"இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை

மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்,

அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்." (திருக்குர்ஆன் 24;31)
அழகு முழுமையாக வெளிப்படும் இடம் முகம்
பித்னாவுடைய இடம் முகம்

"கால்களின் அழகை வெளிபடுத்த வேண்டாம்" என கட்டளை இட்ட அல்லாஹு முகத்தை வெளிக்காட்ட அனுமதி அளிப்பானா??
உலகில் தான் படைத்தவற்றிலே மிகவும் கவர்ச்சியான படைப்பாக அல்லாஹு கூறுவது பெண்களைத்தான்

"இவ்வுலகில் ஆண்களுக்கு நான் விட்டு செல்லும் முதல் பித்னா பெண்கள்தான்" என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்..( புகாரி சரீபிலே பதிவாகி உள்ள ஹதீத் )

ஆண்களுக்கு மிகப் பெரிய சோதனை பெண்கள்தான்...

நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (திருக்குர்ஆன் 24:30)
பெண்களை படைத்து அவளுக்கு அழகை கொடுத்து அதை வெளிப்படுத்தும் ஆசையை கொடுத்து அதை மறைக்கும் படி கட்டளை இடுபவனும் அல்லாஹு தான். இது பெண்களுக்கு உரிய சோதனை....

எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ, (திருக்குர்ஆன் 79:40)நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும். (திருக்குர்ஆன் 79:41)

சோதனைகளில் வெற்றிபெறும் பொருட்டு நாம் பல தியாகங்களை செய்ய வேண்டும் அவற்றுக்குரிய மேன்மையான கூலி அல்லாஹுவிடம் இருக்கிறது

நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (திருக்குர்ஆன் 33:32)
நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (திருக்குர்ஆன் 33:33)

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (திருக்குர்ஆன் 33:59)
பெண்கள் வெட்கத்தை பேணுபவர்களாக இருக்க வேண்டும், பெண்களின் கண்ணியம் நாணத்தில்தான் உள்ளது!

அல்லாஹு நம் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்....


இதையும் பார்க்க:-
                                  * குழந்தைகளு​க்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்…
                                  * முஹர்ரம் 10ம் நாள் மகிழ்ச்சியா..? துயரமா...?
                                  * இஸ்லாத்தில் பிரார்த்தனையின் முக்கியத்துவமும் ஒழுக்...
                                  * 'ரப்’ சொற்பொருள்( رَب ) ஆய்வு...
                                  * ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது!


 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget