தூக்கம் பற்றி இஸ்லாம்

தூக்கம் என்பது வாழ்வின் எந்த அளவுக்கு இன்றியமையாத தேவை என்பதை நாம் அறிவோம்
ஒரு முஸ்லிம் தூக்கத்தை அல்லாஹ் தன் அடியாருக்கு வழங்கிய அருட்கொடையாகவே கருத வேண்டும்

அவன் உங்களுக்காக இரவையும் பகலையும் படைத்திருப்பது அவன் அருட்கொடைகளில் ஒன்று தான். இரவை நீங்கள் அமைதி பெறவேண்டும் என்பதர்க்காகவும் பகலை அவனுடைய அருட்கொடையை தேடவேண்டும் என்பதர்க்காகவும் (28:73)

எனவே இறைவன் நமக்கு அழிக்கக்கூடிய அருட்கொடைகள் ஒவ்வொன்றிர்க்கும் நாம் நன்றி செலுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும்

எனவே ஒரு முஸ்லிம் தான் தூங்கும் போது பின் வரும் ஒழுக்கங்களைப் பேணுவது இந்த அட்ருட்கொடைக்கு நன்றி செலுத்துவதாக அமையும்.

தூங்குவதின் ஒழுங்கு முறைகள்:

தூங்கும் முன் கடைப்பிடிக்க வேண்டியவைகள்:

1.படுக்கைக்கு செல்வத்ர்க்கு முன்பு தொழுகைக்கு உழு எடுப்பதைப் போன்று உழு எடுத்துக்கொள்ள வேண்டும் (புஹாரி)

2.நாம் அணிந்திருக்கக்கூடிய ஆடையின் ஓரத்தைக் கொண்டு படுக்கவிருக்கும் விரிப்பை மூன்று முறை தட்டி விட வேண்டும்(புஹாரி)

 
3.தூங்குவத்ர்க்கு முன் திருக்குர்ஆனின் 2வது அத்தியாயமான சூரத்துல் பகராவின் (ஆமன ரஸூலு) என தொடங்கும் 285,286 ஆகிய வசனங்களை ஓதிக் கொள்ள வேண்டும் (புஹாரி)
4.பின் திருக்குர் ஆனின் சூரத்துல் இஹ்லாஸ், சூரத்துல் ஃபலக், சூரத்துன் நாஸ் ஆகிய சூராக்களை ஓதி இரண்டு கைகளிலும் ஊதி உடல் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும் (புஹாரி)

5.திருகுர்ஆனின் சூரத்துல் பகராவின் 255 வது வசனமான ஆயத்துல் குர்ஸியை ஓத வேண்டும் இவ்வாறு ஆயத்துல் குர்ஸியை ஓதக்கூடியவர்களுக்கு அல்லாஹ் ஸுப்ஹானஹுவதாலா அன்றைய இரவு முழுவதும் நமது பாதுக்காப்பிற்க்காக ஓர் மலக்கை நியமிக்கின்றான் (புஹாரி)
6.பின் 33 ஸுப்ஹானல்லாஹ், 33 அல்ஹம்துலில்லாஹ், 34 அல்லாஹுஅக்பர் என்று தஸ்பிஃஹ் செய்தல் (புஹாரி)
7.படுப்பதர்க்கு முன் அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா என்று ஓதி விட்டு படுக்க வேண்டும் இதன் பொருள் “யா அல்லாஹ் உன் பெயரைக்கொண்டு மறனிக்கின்றேன் உன் பெயரைக்கொண்டு உயிர்வாழ்கின்றேன் .(திர்மிதி)

8.நீங்கள் உறங்குவதர்க்கு முன் விளக்குகளை அனைத்து விடுங்கள்,கதவுகளை தாள்பாழிட்டுவிடுங்கள் உணவையும் பாணத்தையும் மூடி வையுங்கள் (புஹாரி)

9.இவை அனைத்தும் முடித்து படுத்தப் பிறகு இறுதியாக இந்த துஆவை ஓதிக்கொள்ள வேண்டும்

அல்லாஹும்ம அஸ்லம்து நஃப்ஸீ இலைக், வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக், வ வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய இலைக், லா மல்ஜஅ

வலா மன்ஜா மின்க இல்லா இலைக், ஆமன்த்து பி கிதாபிகல்லதி அன் ஜல்த்த, வ பி நபிய்யிகல்லதீ அர்ஸல்த்த.

பொருள்: யா அல்லாஹ் நான் என் மனதை உன்பால் சரணடையுமாறு செய்துவிட்டேன் மேலும் என் காரியங்களை உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன் மேலும் எனது முகத்தை உன் பக்கம் திருப்பிவிட்டேன்

மேலும் எனது முதுகையும் உன் பக்கம் ஒதுக்கிவிட்டேன் உன்பால் ஆர்வம் கொண்டும் அச்சம் கொண்டும்..! உன்னை விட்டுத் தஞ்சம் புகும் இடமோ உன்னை விட்டு விரண்டோடும் இடமோ உன் அளவிலே தவிர வேறில்லை!

நீ இறக்கியருளிய வேதத்தின் மீதும் நீ அனுப்பிய நபியின் மீதும் நம்பிக்கை கொண்டேன். (இவ்வாறு ஓதிவிட்டு தூங்கி அதே நிலையில்) நாம் மரணம் அடைவோமேயானால் (இன்ஷாஅல்லாஹ்) தூய்மையானவர்களாகவே மரணிப்போம். (புஹாரி)

தூங்கி விழிக்கும் போழுது சொல்ல வேன்டியவை:

அல்ஹம்து லில்லாஹில்லதி அஹ்யானா பஃதமா அமாத்தனா வ இலைஹின் நுஷுர்

பொருள்:-எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே ! அவனே நம்மை மரணம் எண்ணும் தூக்கத்தில் ஆழ்த்திய பின் உயிர் பெற்றெழச்செய்தான் மேலும் (நாளை மறுமையில்) மீண்டும் எழுப்பப்பட்டு அவனிடமே செல்ல வேண்டியுள்ளது)

தூக்கத்தில் கெட்ட கனவு கண்டால்:
கவலை தரும் கனவுகளைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பிவிட்டு கீழ்கண்ட துஆவை ஓதிக்கொள்ள வேண்டும்

அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் (விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹுவிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

அல்லாஹ் கூருகின்றான்:

ஈமான் கொண்டவர்களே அல்லாஹுவை அதிகமதிகமாக
திக்ரு(தியானம்) செய்யுங்கள் இன்னும் காலையிலும் மாலையிலும் அவனைத் துதியுங்கள் 
(33: 41,42)
எனவே என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கின்றேன் எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்! (2: 152)
அல்லாஹுவை அதிகமாக நினைவுக்கூரக்கூடிய ஆண்கள்-பெண்கள் யாரோ அவர்களுக்கு மன்னிப்பபையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளான் (32: 35)

னவே அன்புச் சகோதரர்களே நம் வாழ்கையின் ஒவ்வொறு விஷயங்களையும் குர்-ஆன்,ஹதீஸின் அடிப்படையில் அமைத்துக்கொண்டு என்னேரமும் இறை நினைவோடு கூடிய ஓர் சீரான வாழ்கையை வாழ நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக.....!

இதையும் பார்க்க:-
                              * குழந்தைகளு​க்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்…
                              * விபச்சாரம் பற்றி இஸ்லாம்
                              * இஸ்லாமிய புது வருடமாகிய ஹிஜ்ரி , முஹர்ரம் 1434
                              * பெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)
                              * வரதட்சணை வன்கொடுமைக்கு யார் காரணம்?


                               

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget