இறுதித் தூதுவராக வருகை தந்த நபி (ஸல்) அவர்கள்

1400 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய அரபுலகத்தில் அறியாமை இருள் நிறைந்திருந்த காலகட்டத்தில் இறுதி இறைத்தூதராக நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள்.

அவர்களின் அழகிய போதனைகளும் அவர்களின் நடவடிக்கைகளும் அறியாமை இருளை நீக்கி அழகிய வாழ்க்கை முறையை மக்களுக்குத் தந்தது. இன்றும் அந்த அழகிய வாழ்க்கை முறையைப் பின்பற்றி நடக்கும் அரிய வாய்ப்பை நபிகளார் மூலம் அல


்லாஹ் நமக்குத் தந்திருக்கின்றான்.

இறுதித் தூதுவராக வருகை தந்த நபிகளார் அவர்கள் இறைத்தூதுப் பணிக்கு வருவதற்கு முன்னரும் பின்னரும் அழகிய நற்குணங்கள் நிறைந்தவர்களாக இருந்தார்கள். அவர்களைப் பற்றி திருக்குர்ஆனின் பின்வரும் கருத்து அவர்களின் அழகிய நற்குணத்திற்குச் சிறந்த சான்றிதழாகும்.


நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர். அல்குர்ஆன் 74:4

அழகிய குணங்கள் நிறைந்த நபிகளார் நமக்கு சிறந்த முன்மாதிரி. அவர்களைப் பின்பற்றி நடப்பது முஃமின்களின் கடமையாகும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. அல்குர்ஆன் 33:21

எனவே அவர்களின் குணாதிசயங்களைப் பற்றி நபிமொழிகளில் கூறப்பட்டிருப்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

நபித்துவத்திற்கு முன்னால்…

நபிகளார் இறைத்தூதராவதற்கு முன்னால் இருந்த மக்களிடம் நல்லறங்களை விட தீமையான காரியங்கள் தான் அதிகம் இருந்தது.
மது, மாது என்று எல்லா கெட்டப் பழக்கங்களும் இருந்த கால கட்டத்தில் பிறந்த நபிகளார் அவர்களிடம் மிகச் சிறந்த நல்லறங்கள் நிறைந்திருந்தன.

(இறைச் செய்தி அருளப்பட்டவுடன் தமக்கு ஏதோ ஆகி விட்டது என்று பயந்த நபியவர்களிடம்) கதீஜா (ரலி) அவர்கள், “அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை)” என்று (ஆறுதல்) சொன்னார்கள்.
நூல்: புகாரி 3

பொய் பேசியதில்லைஉண்மை, நேர்மையின் பிறப்பிடமாக நபிகளார் திகழ்ந்தார்கள். அவர்களிடம் பொய் பேசும் பழக்கம் இருந்ததில்லை என்று அன்றைய கால மக்களே சான்று பகர்ந்துள்ளனர்.

“(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்” எனும் (26:214 - ஆவது) இறை வசனம் அருளப் பெற்ற போது நபி (ஸல்) அவர்கள் ஸஃபா’ மலைக் குன்றின் மீது ஏறிக் கொண்டு, “பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்) அழைக்கலானார்கள்.


அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வர முடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ட்ட குறைஷியர் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்க, மக்கள் “ஆம். (நம்புவோம்); உங்கடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை” என்று பதிலத்தனர்.


நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்” என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், “நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?” என்று கூறினான்.
அப்போது தான் “அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்……” என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 4770
ஹெராக்ளியஸ் மன்னர் நபிகளாரைப் பற்றி அபூஸுஃப்யான் அவர்களிடம் விசாரித்த போது அவர்களின் நேர்மைக்கு சான்று பகர்ந்தார்கள். அப்போது அபூஸுஃப்யான் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன் அவர் (மக்களிடம்) பொய் சொன்னார் என்று (எப்போதேனும்) நீங்கள் அவரைச் சந்தேகித்திருக்கின்றீர்களா?” என்று கேட்டார். நான் இல்லை’ என்றேன்…
“நான் உம்மிடம் அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன்பு (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என்று எப்போதேனும் நீங்கள் சந்தேகித்ததுண்டா’ என்று கேட்டேன்.
அதற்கு நீர் இல்லை’ என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேச(த் துணிய)த அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்ல மாட்டார் என்று நான் புரிந்துகொண்டேன்” என்று ஹெராக்ளியஸ் மன்னர் கூறினார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 7
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது, நபி (ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள், நபி (ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள்’ என்று சொல்லப்பட்டது. அப்போது மக்களெல்லாம் அவர்களை நோக்கி விரைந்தார்கள். நானும் மக்களுடன் அவர்களைப் பார்க்கச் சென்றேன். அவர்களை அடையாளம் கண்டு கொண்டேன்.
அவர்களின் முகம் பொய் சொல்லும் முகமாகத் தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். ஸலாத்தை பரப்புக்குங்கள், (பசித்தவருக்கு) உணவளியுங்கள், மக்கள் உறங்கும் வேளையில் தொழுங்கள், மன அமைதியுடன் சொர்க்கம் செல்வீர்கள்’ என்பது தான் அவர்களின் பேசிய முதல் பேச்சாகும். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)                                   நூல்: திர்மிதீ 2409, இப்னுமாஜா 1323, தாரமீ 1424
அன்பின் பிறப்பிடம்“அவர்கள் (அறியாமைக் காலத்தில்) முரண் பிடித்துப் பேசியதும் இல்லை, சண்டையிட்டதும் இல்லை” என்று அவர்களின் அறியாமைக் கால நண்பர் ஸாயிப் பின் அபீ ஸாயிப் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: அஹ்மத் 14956, அபூதாவூத் 4196, இப்னுமாஜா 2278
குர்ஆனே அவர்களின் குணம்இறைத் தூதரான பிறகு திருக்குர்ஆன் எந்த குணங்கள் இருக்க வேண்டுமென கட்டளையிட்டுள்ளதோ அந்த குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்களாக அவர்கள் திகழ்ந்துள்ளாகள் என்பதற்கு அவர்களின் துணைவியார் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் சான்றளிக்கிறார்கள்.
நான், “இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றிக் கூறுங்கள்!” எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நீர் குர்ஆனை ஓதவில்லையா?” என்று கேட்டார்கள். நான் ஆம் (ஓதியிருக்கிறேன்)’ என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று கூறினார்கள். இதைச் செவியேற்ற நான் எழுந்து விடலாம் எனவும், இனிமேல் நான் இறக்கும் வரை எவரிடமும் எது குறித்தும் கேட்க வேண்டியதில்லை என்றும் எண்ணினேன். அறிவிப்பவர்: ஸஅத் (ரலி)  நூல்: முஸ்லிம் 1357
திருக்குர்ஆன் என்ன கட்டளையிட்டாலும் அதை உடன் செயல் படுத்துபவர்களாக அவர்கள் இருந்துள்ளார்கள். 110ஆவது அத்தியாயம், இறைவனைப் புகழவும், பாவமன்னிப்புக் கோரவும் கட்டளையிடுகிறது. அதை உடன் அவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110ஆவது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் முகமாக, தமது (தொழுகையின்) ருகூஉவிலும் சுஜுதிலும் அதிகமாக சுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்பிர்லீ’ (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பப்பாயாக!) என்று கூறி வந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 4968
கொடை வள்ளல்
எத்தனை சொத்துக்கள் இருந்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று பேராசைப்படும் மக்கள் வாழும் இவ்வுலகத்தில் இருப்பதையெல்லாம் நற்காரியங்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக நபிகளார் திகழ்ந்தார்கள். இதனால் வறுமை ஏற்பட்டு விடுமோ என்று அவர்கள் அஞ்சியதில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில் நபியவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றை விட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 6, 1902
சஹ்ல் (ரலி) அவர்கள் “ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் புர்தா – குஞ்சங் கட்டப்பட்ட சால்வை – ஒன்றைக் கொண்டு வந்தார்” என்று கூறி விட்டு, “புர்தா என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்ட போது (அங்கிருந்தோர்) “ஆம்! புர்தா என்பது சால்வை தானே!” என்றனர். சஹ்ல் (ரலி) அவர்கள், “ஆம்” எனக் கூறி விட்டு, மேலும், அப்பெண்மணி “நான் எனது கையாலேயே இதை நெய்திருக்கிறேன்.

இதனை உங்களுக்கு அணிவிக்கவே நான் கொண்டு வந்தேன்” என்றதும் அது தேவையாயிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள். பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தபோது ஒருவர் “இது எவ்வளவு அழகாக இருக்கின்றது! எனக்கு இதை நீங்கள் அணியக் கொடுத்து விடுங்கள்” என்று கேட்டார்.

உடனே அங்கிருந்தோர் “நீர் செய்வது முறையன்று; நபி (ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால் அதை அணிந்திருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்காமலிருக்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அதை அவர்களிடம் கேட்டு விட்டீரே!” எனக் கூறினார்கள். அதற்கவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை (சாதாரணமாக) அணிந்து கொள்வதற்காகக் கேட்கவில்லை; அது எனக்கு பிரேத உடை (கஃபன்) ஆகி விட வேண்டும் என்றே கேட்டேன்” என்றார். பின்பு அது அவருக்குக் கஃபனாகவே ஆகிவிட்டது” என்று சஹ்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 1277
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹுனைன்’ போரிருந்து திரும்பி வந்த போது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து கொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்; சமுரா’ என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள் விட்டார்கள். நபியவர்கன் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது. ஆகவே நபி (ஸல்) அவர்கள் சற்று நின்று, “என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள் மரங்கன் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்கடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காண மாட்டீர்கள்; பொய்யனாகவும் காண மாட்டீர்கள்; கோழையாகவும் காண மாட்டீர்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)
நூல்: புகாரி 2821

தன்னை எதிர்ப்பதில் கடுமை காட்டிய கடும் எதிரிகளுக்குக் கூட கருணை காட்டியவர்கள் நபிகளார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிப் போருக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடனிருந்த முஸ்லிம்களும் புறப்பட்டுச் சென்று ஹுனைன் எனுமிடத்தில் (ஹவாஸின்’ குலத்தாருடன்) போரிட்டனர். அப்போது அல்லாஹ் தனது மார்க்கத்திற்கும் முஸ்லிம்களுக்கும் வெற்றியளித்தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றைய தினத்தில் ஸஃப்வான் பின் உமய்யாவுக்கு (முதலில்) நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். பிறகு இன்னும் நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். பிறகு மேலும் நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள்.

(முந்நூறு ஒட்டகங்களைப் பெற்றுக் கொண்ட) ஸஃப்வான் பின் உமய்யா, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அன்று தாராளமாக) எனக்கு வழங்கினார்கள். அப்போது அவர்கள் எனக்கு மக்களிலேயே மிகவும் வெறுப்பானவர்களாய் இருந்தார்கள். அவர்கள் எனக்கு நன்கொடைகள் வழங்கிக் கொண்டே வந்து மக்களிலேயே எனக்கு மிகவும் உவப்பானவர்களாய் ஆகி விட்டார்கள்” என்று கூறியதாக சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.நூல்: முஸ்லிம் 4631
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை முன்வைத்து எது கேட்கப்பட்டாலும் அவர்கள் அதைக் கொடுக்காமல் இருந்ததில்லை.
இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து (கேட்டபோது), இரு மலைகளுக்கு இடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை அவருக்கு வழங்கினார்கள். அந்த மனிதர் தம் சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று, “என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், முஹம்மத் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்” என்று சொன்னார். அறிவிப்பவர்: அனஸ் (ரலி),                                நூல்: முஸ்லிம் 4629

 

 

இதையும் பார்க்க:-

                               * மதம் மாறினால் மரண தண்டனையா?

                             * ஒளுவின்றி ஸஜ்தா செய்யலாமா..?

                             * விபச்சாரத்தின் மறு பெயர் “காதல்"

                             * பிறந்த நாள் கொண்டாடலாமா..?


 

 


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget