2013

                                             தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகதுஹு இன்று நாம் கிறிஸ்துவர்களின் நாட்காட்டி கணக்குப் படி வருடக் கடைசியில் இருக்கிறோம். இன்று எமது முஸ்லிம் இளைஞ்சர்கள் பலர் முகப்புத்தகத்திலும் சரி குறுஞ்செய்திகள் மூலமும் சரி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பவர்களாக இருக்கிறார்கள்.
இது எந்த அளவுக்கு சரி என நாம் சற்று நோக்கலாம் என நினைக்கிறேன். ஏனெனில் இன்றைய சமுதாயத்திடம் இவ்வாறான விடயங்கள் தொடர்பாக ஒரு தெளிவான விளக்கம்காணப்படுவதில்லை. அதன் காரணாமாக எத்தனையோ பல அனாச்சாரங்கள் இடம்பெர்கின்றன.


                                    தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

வருடந்தோரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் - இயேசுவின் பிறந்த தினம் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. எனினும், கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியன் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐ குறிக்கும் நாளான ஜனவரி 7ம் நாளில் கொண்டாடுகின்றனர். எது எப்படி இருந்தாலும் இயேசு டிசம்பர் 25ம் தேதியே பிறந்தார் என்று முடிவு செய்து அதன் அடிப்படையில் இந்த

தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

இறைவனின் மாபெரும் கிருபையினால் ஐக்கிய அரபு அமீரகமான துபாய் 
நாட்டிற்கான இந்திய தூதரரக அதிகாரி உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்த காணொளியில் ஜாகிர் நாயக்கிடம் கேள்வி கேட்கும் ஹிந்து பெண் படிக்காத பாமரர் அல்ல. துபாய் இந்திய தூதரகத்தில் பணியாற்றக் கூடிய மெத்த படித்த பெண். அந்த பெண் வைக்கும் கேள்விகளும் மிக சாதுர்யமானவை. அவர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அழகிய
முறையில் பதில் அளிக்கிறார் ஜாகிர் நாயக்.


                                                    தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

தவ்ஹீத்  என்ற வார்த்தையையும் தவ்ஹீதின் கோட்பாட்டை எத்திவைப்பவர்களுடைய பேச்சையும்  கேட்டாலே போதும் முஸ்லிம்களில் இணைவைப்பாளர்களுக்கு மத்தியில் ஒருவிதமான  கோபம் உருவாவதை தெளிவாக உணரலாம்.
பெரும்பாண்மையான  இணைவைப்பாளர்கள் தவ்ஹீதை எவ்வாறு உணர்ந்துள்ளார்கள்? தவ்ஹீத் தரும்  படிப்பினையை எத்திவைப்பவர்கள் மீது இவர்களுக்கு ஏன் கடுங்கோபம் ஏற்படுகிறது  என்பதை உணர்ந்துக் கொண்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வு  கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்)! வாருங்கள் இதுபற்றி அலசுவோம்!
தவ்ஹீத் எதை போதிக்கிறது
தவ்ஹீத் என்பதற்கு ஏகத்துவம் என்று பொருள்படும் அதாவது ஏகனாகிய அல்லாஹ்வை பற்றி இஸ்லாம் கூறும் சித்தாந்தம் இதோ:

மருத்துவ அறிவியல் என்ன என்றே அறிந்திராத 1400 ஆண்டுகளுக்கு முன்பே முஸ்லிம்கள் தங்கள் திருத்தூதர் கற்றுத்தந்த வாழ்வியல் வழி என்று தொன்று தொட்டு கத்னா எனப்படும் ஆண் உறுப்பின் முன்தோலை நீக்கும் முறையை கையாண்டு வந்தனர். இன்று வரை அதைக் கடைப்பிடித்தும் வருகின்றனர்.

இன்று மருத்துவ அறிவியல் அபரிவிதமான வளர்ச்சி கண்டபோது, உலகிலே குழந்தை மருத்துவத்தின் மிக உயர்ந்த அமைப்பான American Academy Of Pediatrics என்னும் குழந்தை மருத்துவத்திற்கான அமெரிக்கன் அகாடமி, கத்னா செய்வதால் அதிக மருத்துவ பயன்கள் உள்ளன என்று 2012 இல் தான் ஆய்வு செய்து உறுதிபடுதயுள்ளது .

                                                    தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

இவ்வுலகத்தில் நன்மை செய்தவர்களும் தீமை செய்தவர்களும் மறுமை நாளில் அவரவர்களின் நன்மை, தீமைகளை தெளிவாகக் காண்பார்கள். இவ்வுலகில் மிக மிகச் சிறியதாக நினைத்தவை கூட அவர்களின் பதிவுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும்.
அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அல்குர்ஆன் 99:7,8)

பதிவேடு வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே! எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன்எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான். (அல்குர்ஆன் 18:49)

                                                        தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!


அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! படைத்த இறைவன் (அல்லாஹ்) மனிதனுக்கு அறிவைக் கொடுத்தான் சிந்திக்கும் ஆற்றலைக் கொடுத்தான் மனவலிமை மற்றும் உடல் வலிமையையும் கொடுத்தான் ஆனால் இந்த பாக்கியங்கள் அனைத்தையும் பெற்ற மனிதன் படைத்த இறைவனை மறந்துவிட்டு அவனை வணங்குகிறோம் என்று கூறிக்கொண்டு சிலைகளையும் சிற்பங்களையும் வணங்குகிறான்.

                                                   தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

ஹிஜ்ரீ ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில் இருக்கும். மாபெரும் இஸ்லாமியப் பேரணி, முஸ்லிம் மணமக்களைப் பல்லாண்டு வாழ்த்தி, ஹஜ்ஜிலிருந்து திரும்பியவர்களுக்கு என்று வாழ்த்து அச்சிட்டு ஊர்ப்பக்கம் போஸ்டர்கள் ஒட்டியிருப்பார்கள் அதிலும் “ஹி“ புள்ளி ஆண்டு எண் என்று இருக்கும். பெரிய எழுத்திலான ஆங்கில ஆண்டு விபரங்களுடன் அதைவிடச் சிறிய அளவில் ஹிஜ்ரீ விபரங்களும் குறிப்பிட்டிருப்பார்கள்.


உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமாஉங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும்அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஒரு நாளில் நூறு தடவை سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி‘  என ஓதுகின்றாரோ,  அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும்அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரிமுஸ்லிம்)

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

முஸ்லீம்கள் என்று தம்மைத் தாமே சொல்லிக் கொள்பவர்களில் பலர் தொழுகையை கடைப்பிடிப்பதில்லை. கடைப்பிடிக்கும்       பெரும்பாலான வர்கள்  சரியாக தொழுவதில்லை   ஏனோ  தானோ  என்று  தொழுதுவிட்டசென்றுவிடுகிறார்கள்.  இப்படித் தொழக் கூடியவர்கள் முதலில் தொழுகை முறையை சரியாக தெரிந்துகொள்ள வேண்டும். பள்ளிக்கு ஒருவனை  அழைத்து  வந்தால் மாத்திரம் தங்கள் வேலை  முடிந்து விடுவதாக நினைக்கிறார்கள். அழைத்து  வரப்படுபவருக்கு  சரியான முறையில் தொழுகையை கற்றுக் கொடுக்க வேண்டும். 

தொழுவதினால் ஏற்படும் நன்மைகள்.
(முஹம்மதே!) வேதத்திருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும் தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை  நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.  (அல்குர்ஆன் 29:45)


                                    தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

தூய்மையான வணக்கங்களுக்குச் சொந்தக்காரனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: இரவு பகல் சூரியன் சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ சந்திரனுக்கோ ஸஜ்தா செய்யாதீர்கள். அவனையே நீங்கள் வணங்கு வோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள் (அல்குர்ஆன் 41:37)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீர் அதிகமாக ஸஜ்தா செய்து வருவீராக! நிச்சயமாக நீர் செய்யும் ஒவ்வொரு ஸஜ்தாவைக் கொண்டும் அல்லாஹ் உமக்கு ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். உம்மை விட்டு ஒரு பாவத்தை அழிக்கிறான்.(அபூ அப்துல்லாஹ் தவ்பான் (ரலி) முஸ்லீம்)

 நீங்கள் ருகூஉ செய்தீர்களானாலும், ஸூஜூது செய்தீர் களானாலும் ருகூஉவையும் ஸஜ்தாவையும் நிறைவாகச் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ் (ரலி) நஸயி 1009)

ஸஜ்தா என்று சொல்லப்படக் கூடிய சிரவணக்கம் இஸ்லாத்தின் பார்வையில் மிகுந்த சிறப்புக்குரியது.

எண்சாண் உடம்பையும் கூனிக்குறுகி ஏழு உறுப்புக்கள் தரையில்படுமாறு தங்களைப் படைத்த இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மட்டுமே மனிதர்கள் செய்யும் வணக்கம் தான்  ஸஜ்தா என்பது.

ஸஜ்தா என்ற சிரவணக்கம் மனிதன் காட்டக்கூடிய பணிவுகளின் இறுதி எல்லைக்கோடு அல்லது மரியாதைகளின் உச்சகட்டநிலை என்று சொன்னால் அது மிகையாகாது.

மனித உடற்கூற்றில் தலை எத்தனை பிரதான படைப்பாக இருக்கிறது என்பதை மனிதன் சிந்தித்துப் பார்ப்பானே யானால் வல்ல நாயன் அல்லாஹ்  எத்தனை நுண்ணறிவோடு அதைப் படைத்திருக்கிறான் என்ற அற்புதத்தை புரிந்து கொள்வதுடன் அந்த தலை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சாய்க்கப்பட வேண்டிய ஒன்று மற்ற யாருக்கும் எதற்கும் சாய்க்கப்பட கூடாத ஒன்று என்ற மிகமிகச் சரியான -  நியாயமான உணர்வுகளையும் அம்மனிதன் பெற்றுக் கொள்ள முடியும். இன்றைக்கு மனிதர்களைப் பார்க்கிறோம்.

மனிதர்களில் சிலர் எது எதையோ வணங்குவதை  சிரம் தாழ்த்தி வணங்குவதைப் பார்க்கிறோம். விழுந்து கும்பிடுவதைப் பார்க்கிறோம். நெடுஞ்சாண்டையாக விழுவதைப் பார்க்கிறோம். தங்களை விட கீழான கீழினும் கேவலமான படைப்புகளுக்கெல்லாம் சிரவணக்கம் செய்வதைப் பார்க்கிறோம். எந்தவொன்றையும் படைக்கவோ பாதுகாக்கவோ சக்தி இல்லாதவைகளுக்கு போய் சிந்திக்கும் ஆற்றல் பெற்ற மனிதன் போய் சிரம் சாய்த்து வணங்குகிறான்.

அப்படி அவைகளுக்கு சிரம் சாய்ப்பதற்கு அம்மனிதன் ஏதும் வேத ஆதாரத்தைப் பெற்றிருக்கிறானா? நபித்துவத்தின் ஆதாரத்தை பெற்றுள்ளானா என்று ஆராய்ந்து பார்த்தால் சுத்தமாக இல்லை. ஷைத்தானிய ஊசலாட்டம். மனோஇச்சைகளின்  தூண்டுதல் இவற்றுக்கு ஆட்பட்டுப்போய் அழிவிலும் அவமானத்திலும் போய் மனிதர்களில் சிலர் வீழ்ந்துள்ளனர். மேதை என்பார்கள். ஜீனியஸ் என்பார்கள். அரசியல் வித்தகர் என்பார்கள்.

விஞ்ஞானத்தில் மேம்பட்டவர் என்று பாராட்டுவார்கள். ஆனால் மெய்யறிவின் குறைபாட்டால் தன்னைப் படைத்த இரட்சகனுக்கு  உண்மையான இறைவனுக்கு  சிரம் சாய்க்கும் பாக்கியமில்லாமல் இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் மகத்தான இரட்சகன் அல்லாஹ்வின் கிருபையால் அவனுக்கு ஸஜ்தா செய்யும் பாக்கியம் பெற்ற நாம் எந்த அளவுக்கு அந்த விஷயத்தில்  கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறோம்?

ஸஜ்தா செய்வது நல்லடியார்களின் பண்பு: அல்லாஹ் கூறுகிறான்.

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். தம்முடன் அறிவீனர்கள் உரையாடும் போது ஸலாம் கூறி விடுவார்கள். அவர்கள் தமது இறைவனுக்காக ஸஜ்தாச் செய்தும் நின்றும் இரவைக் கழிப்பார்கள்.    அல்குர்ஆன். (25: 63 – 64)

 நம்பிக்கைக் கொண்டோரே!ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவளை வணங்குங்கள். நன்மையைச் செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 22:77)

அடிபணியாதவர்களின் நிலை: அல்லாஹ் கூறுகிறான்:

அளவற்ற அருளாளனுக்கு ஸஜ்தாச் செய்யுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும்போது அது என்ன அளவற்ற அருளாளன்? நீர் கட்டளையிடுபவருக்கு நாங்கள் ஸஜ்தாச் செய்வோமா? என்று கேட்கின்றனர். இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகமாக்கியது (அல்குர்ஆன். 25: 60)

அல்லாஹ்வின் தூதரே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஐயம் கொள்வீர்களா? என்று கெட்டார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இல்லை என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஐயம் கொள்வீர்களா?  என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் இல்லை என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதேப்போல்தான் நீங்கள் உங்கள் இறைவனைக் காண்பீர்கள் என்று கூறினார்கள்.

தொடர்ந்து கியாமத் நாளில் மக்களெல்லாம் ஒன்று திரட்டப்பட்டதும் யார் எதனை வணங்கினார்களோ அதனை பின்பற்றி செல்லட்டும் என்ற இறைவன் கூறுவான்.சிலர் சூரியனை பின்பற்றுவர்.சிலர் சந்திரனைப் பின்பற்றுவர். மற்றும் சிலர் தீயசக்திகளைப் பின்பற்றுவர் அப்போது இறைவன் அவர்களை நோக்கி நான் தான் உங்கள் இறைவன் என்பான். அதற்கு அவர்கள் எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம்.

 எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்து கொள்வோம் என்பார்கள். பின்னர் அல்லாஹ், அவர்களிடம் வந்து நான்தான் உங்கள் இறைவன  என்பான். அதற்கு அவர்கள் நீ எங்கள் இறைவன் தான்! என்பார்கள்;

பின்பு அவர்களை இறைவன் அழைப்பான். நரகத்தின் மேற்பரப்பில் பாலம் ஒன்று ஏற்படுத்தப்படும். நபிமார்கள், தத்தமது சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். அவ்வாறு கடந்து செல்பவர்களில் நானே முதல் நபராக இருப்பேன். அன்றைய தினத்தில் இறைத்தூதர்களைத் தவிர வேறு யாரும் பேச மாட்டார்கள். இறைவா! காப்பாற்று! இறைவா காப்பாற்று! என்பதே அன்றைய தினம் பேச்சாக இருக்கும். நரகத்தில் கருவேல மரத்தின் முட்கள் போன்ற இரும்பு ஆயுதங்கள் இருக்கும். என்ற நபி(ஸல்) அவர்கள் கூறி விட்டு நீங்கள் கருவேல மரத்தின் முள்ளைப் பார்த்திருக்கிறீர்களா? என்ற கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர்.  அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக அது கருவேல மரத்தின் முள் போன்றுதான் இருக்கும் என்றாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அது மனிதர்களின் செயல்களுக்கேற்ப அவர்களை இழுக்கும்.

 நல்லறங்கள் முழுவதும் அழிக்கப்பட்டவர்களும் அவர்களில் இருப்பர். கடுகளவு அமல்கள் எஞ்சியிருந்து அதனால் வெற்றி பெற்றவர்களும் அவர்களில் இருப்பர். நரகவாசிகளில் அல்லாஹ் நாடுபவர்களுக்கு அருள் செய்ய எண்ணும்போது அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்வர்களை நரகிலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு உத்தரவிடுவான். வானவர்கள் அவர்களை வெளியேற்று வார்கள் ஸஜ்தா செய்த அடையாளத்தை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம்;காண்பார்கள்.

 ஸஜ்தாச் செய்ததினால் வடுக்களை நரகம் தீண்டாது நரகத்திற்கு அல்லாஹ் ஹராமாக்கி வைத்து விட்டான். அவர்கள் நரகலிருந்து வெளியேற்றப்படுவார்கள். ஸஜ்தாவின் வடுவைத்தவிர மனிதனின் முழு உடம்பையும் நரகம் சாப்பிட்டு விடும். நரகிலிருந்த கரிந்தவர்களாக வெளியேறுவார்கள். அவர்கள் மீது உயிர்தண்ணிர் தெளிக்கப்படும். ஆற்றோரத்தில் தானியம் வளர்வது போல் அவர்கள் செழிப்பார்கள். பின்னர் அடியார்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பை முடித்து வைப்பான்.(அபூஹூரைரா(ரலி) புகாரி )

ஸஜ்தாச் செய்யும் முறை: 

நீங்கள் ருகூஉ செய்தீர்களானாலும், ஸூஜூது செய்தீர் களானாலும் ருகூஉவையும் ஸஜ்தாவையும் நிறைவாகச் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ்(ரலி) நஸயி 1009)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக்கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தா செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில்படாதவாறு) தடுக்கக்கூடாது எனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.(இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி 806)

 உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்தால் ஒட்டகம் (கால்நடை) அமருவதைப் போன்று அமராதீர்கள். அவரது இரு கைகளையும் முதலில் வைக்கவும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(அபூஹூiரா(ரலி),அபூதாவுத் அஹ்மது, நஸயி)

 நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்வார்களானால் தங்களது மூக்கையும் நெற்றியையும் தரையின் மீது அழுத்தமாக வைப்பார்கள்.இன்னும் தங்களது இரு கைகளையும் விலாப் பகுதியிலிருந்து தூரமாக்கி  தங்களது இருமுன் கைகளையும் தங்களது தோள் பட்டைகளுக்கு சமமாக ஆக்குவார்கள். அபுஹூரைரா(ரலி) அபூதாவுத்

 பூமியில் நெற்றி தொட்டதை எவரின் மூக்குத் தொட வில்லையோ அவருக்குத் தொழுகையில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.இப்னு அப்பாஸ்(ரலி) தாரகுத்னி

தொழுகையில் திருடர்கள்: 

 மனிதர்களில் திருட்டுத்தனம் செய்பவர்களில் மிகக் கெட்டவன் தொழுகையில் திருட்டுத்தனம் செய்யக்கூடியவனே! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்போது சஹாபாக்கள்) அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தொழுகையில் அவன் எவ்வாறு திருட்டுத்தனம் செய்வான்? எனக் கேட்டனர். (அதற்கு நபி(ஸல்) அவர்கள், தொழுகையில் ருகூவையும் ஸூஜூதையும் அவன் நிறைவாகச் செய்ய மாட்டான் (அவ்வாறு நிறைவாகச் செய்யாதவனே திருடர்களில் மிகக் கெட்டவன் எனக் கூறினார்கள்.அபூகதாதா(ரலி),நுஃமான் பின் முர்ரா(ரலி) இப்னு அபீ ஸைபா, தப்ரானி அஹ்மது)

ஸஜ்தாவின் துஆக்கள்:

ஸூப்ஹான ரப்பியல் அஃலா (மிக உயர்வுமிக்க என் இரட்சகன் தூயவன்) என்று நபி(ஸல்) அவர்கள் ஸூஜூதில் மூன்று முறைக் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். (ஹுதைஃபா(ரலி) நஸயீ)

நபி(ஸல்) அவர்கள் தங்களது ருகூவிலும் ஸூஜூதிலும்  ஸூப்பூஹூன் குத்தூஸூன் ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ் (துதிக்கப்படுபவனும், பரிசுத்தமாக்கப்படுபவனும் ரூஹ் என அழைக்கப்பட்ட ஜிப்ரயில் அவர்களுக்கும் இரட்சகனாகிய அல்லாஹ் தூயவன்) என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.ஆயிஷா(ரலி) நஸயி 1086)

 இப்படி ஏகத்துவ உறுதியை இறைவனிடம் பணிவை இம்மை மறுமையில் நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத எண்ணற்ற நன்மைகளை பெற்றுதரும் ஸஜ்தா என்ற செயலை அல்லாஹ்வுக்காக உறுதியுடன் செய்யும் நன்மக்களாக நாம் அனைவரும் ஆகிட வல்ல நாயன் அல்லாஹ் நற்கிருபை செய்வானாக!

இதையும் பார்க்க:-
                * நபிகள் நாயகத்தின் தீர்ப்பை நோக்கி நகருமா முஸ்லிம் ...
               * பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்
               * இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?
               * நபிமார்கள் கேட்ட துஆக்கள்...!
               * கணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா?


                                  தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

    
வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் கேட்கப்படும் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நபிமொழியில் குறிப்பிடப்படும் நேரம் எது?
ஜும்ஆவில் இரண்டு உரைகளுக்கு இடையில் இமாம் சிறிது நேரம் அமருவார். இந்த சிறிய இடைவெளியில் பிரார்த்தனை செய்தால் அந்தப் பிரார்த்தனை ஏற்கப்படும் என்ற நம்பிக்கையில் சிலர் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றார்கள். இதற்கு இவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
1409و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَا أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ عَنْ مَخْرَمَةَ بْنِ بُكَيْرٍ ح و حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ وَأَحْمَدُ بْنُ عِيسَى قَالَا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا مَخْرَمَةُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّه ُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَأْنِ سَاعَةِ الْجُمُعَةِ قَالَ قُلْتُ نَعَمْ سَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاة رواه مسلم
அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ அவர்கள் கூறுகிறார்கள் :என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?'' என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம் என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்:
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அது, இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்.முஸ்-லிம் (1546)
இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடைப்பட்ட நேரம் என்று இந்த ஹதீஸில் உள்ளது. இமாம் அமர்வது என்பது மிம்பரில் ஏறியவுடன் இமாம் அமர்வதைக் குறிக்கிறதா? அல்லது இரண்டு குத்பாக்களுக்கு இடையே அமர்வதைக் குறிக்கிறதா? அல்லது
அத்தஹிய்யாத்தில் இமாம் அமர்வதைக் குறிக்கிறதா என்பதை நாம் ஆய்வு செய்து சரியானதைத் தேர்வு செய்ய வேண்டும்.
இமாம் மிம்பரில் ஏறி அமர்ந்தவுடன் பாங்கு சொல்லப்படும். அப்போது துஆ செய்ய கூடாது; பாங்குக்குத் தான் பதில் கூற வேண்டும். அதன்பின் உரை ஆரம்பமாகும். அப்போது உரையைக் கேட்க வேண்டுமே தவிர துஆ செய்து கொண்டிருக்கக் கூடாது. அதன் பின் தொழுகை ஆரம்பமாகி விடும். இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இமாம் மிம்பரில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரை துஆ செய்யும் நேரம் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே இமாம் அமர்தல் என்பது இதைக் குறிக்காது.
இரண்டு குத்பாக்களுக்கு இடையே இமாம் அமர்வது சிறிதளவு நேரம் தான். அமர்ந்து உடனே எழுந்து விடுவதாலும் அதன் பின்னர் இரண்டாம் உரையும் அதைத் தொடர்ந்து தொழுகையும் ஆரம்பமாகி விடும். எனவே இமாம் அமர்தல் என்பது இதைக் குறிக்க முடியாது. ஏனெனில் இமாம் இடையில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரை துஆ செய்யாமல் வேறு காரியங்களில் ஈடுபடும் அவசியம் உள்ளது.
இமாம் உரையாற்றும் போது அவருடைய உரையை கவனமாக கேட்பது மக்களின் பொறுப்பாகும். உரையில் கவனம் செலுத்தாமல் வேறு விசயத்தில் கவனம் செலுத்தினால் அந்த விசயம் நல்ல விசயமாக இருந்தால் கூட ஜூம்ஆவின் நன்மையை இழக்க நேரிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
883 حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ قَالَ أَخْبَرَنِي أَبِي عَنْ ابْنِ وَدِيعَةَ عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ ثُمَّ يَخْرُجُ فَلَا يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الْإِمَامُ إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஜும்ஆ நாளில் ஒருவர் குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள் மேற்கொள்கிறார். தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார். அல்லது தம் வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக் கொள்கிறார். பிறகு புறப்பட்டு (நெரிசலை உருவாக்கும் விதமாக) இருவரை பிரித்துக் கொண்டு வராமல் (பள்ளிக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார். பிறகு இமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற்கிறார். எனில் அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்படும் பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன. அறிவிப்பவர் : சல்மான் அல்ஃபார்சீ (ர-லி), நூல் : புகாரி (883)
934 حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الْجُمُعَةِ أَنْصِتْ وَالْإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغَوْتَ رواه البخاري
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஜும்ஆ நாüல் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் நீ "மௌனமாக இரு!' என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-லி), நூல் : புகாரி (934)
இமாம் உரையாற்றத் தொடங்கிவிட்டால் வானவர்கள் வேறு காரியங்களில் ஈடுபடாமல் அந்த உரையை கேட்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.
929 حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ وَقَفَتْ الْمَلَائِكَةُ عَلَى بَابِ الْمَسْجِدِ يَكْتُبُونَ الْأَوَّلَ فَالْأَوَّلَ وَمَثَلُ الْمُهَجِّرِ كَمَثَلِ الَّذِي يُهْدِي بَدَنَةً ثُمَّ كَالَّذِي يُهْدِي بَقَرَةً ثُمَّ كَبْشًا ثُمَّ دَجَاجَةً ثُمَّ بَيْضَةً فَإِذَا خَرَجَ الْإِمَامُ طَوَوْا صُحُفَهُمْ وَيَسْتَمِعُونَ الذِّكْرَ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஜும்ஆ நாள் (வெள்ளிக்கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜும்ஆத் தொழுகை நடக்கும்) பள்ளி வாசலின் நுழைவாயில் நின்றுகொண்டு முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். நேரத்தோடு
(ஜும்ஆவுக்கு) வருபவரது நிலை ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவராவார். அதற்கடுத்து வருபவர் கொம்புள்ள ஓர் ஆட்டையும் அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும் அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றாவார்கள். இமாம் (உரையாற்றுவதற்காகப்) புறப்பட்டு வந்துவிட்டால் வானவர்கள் தங்கள் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி (வைத்து) விட்டு (அவரது உபதேச) உரையைச் செவி தாழ்த்திக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-லி), நூல் : புகாரி (929)
இமாம் உரையாற்றும் போது அதைக் கேட்பதில் தான் மக்களின் கவனம் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் பிரார்த்தனை செய்யலாம் என்றால் மேற்கண்ட நபிமொழிகளை மீறும் நிலை ஏற்படும்.இமாம் அத்தஹிய்யாத்தில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரை உள்ள நேரமே அந்த நேரம் என்ற கருத்தே சரியாக உள்ளது.
அத்தஹிய்யாத்து அமர்வில் அத்தஹிய்யாத்தும் ஸலவாத்தும் ஓதிய பிறகு நாம் விரும்பிய துஆக்களைச் செய்யலாம். இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.
"நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும் போதுஅத்தஹிய்யாத்து லில்லாஹி... கூறுங்கள். (பின்னர்) நீங்கள் விரும்பிய துஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: நஸயீ 1151
1266 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ حَدَّثَنَا حَيْوَةُ أَخْبَرَنِي أَبُو هَانِئٍ حُمَيْدُ بْنُ هَانِئٍ أَنَّ أَبَا عَلِيٍّ عَمْرَو بْنَ مَالِكٍ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي صَلَاتِهِ لَمْ يُمَجِّدْ اللَّهَ تَعَالَى وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجِلَ هَذَا ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ أَوْ لِغَيْرِهِ إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَمْجِيدِ رَبِّهِ جَلَّ وَعَزَّ وَالثَّنَاءِ عَلَيْهِ ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَدْعُو بَعْدُ بِمَا شَاءَ رواه أبو داود
ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு மனிதர் தனது தொழுகையில் அழ்ழாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவரிடம் அல்லது மற்றவரிடம் உங்களில் ஒருவர் தொழுகையில் பிரார்த்தித்தால் முதலில் மாண்பும் வலிமையும் மிக்க தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு (உங்கள்) நபியின் மீது ஸலாவத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டலாம் என்று கூறினார்கள். அபூதாவூத் (1266)

இந்தக் கருத்து தான் சரியானது என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவாக்குகிறது.
و حدثنا يحيى بن يحيى قال قرأت على مالك ح و حدثنا قتيبة بن سعيد عن مالك بن أنس عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم ذكر يوم الجمعة فقال فيه ساعة لا يوافقها عبد مسلم وهو يصلي يسأل الله شيئا إلا أعطاه إياه زاد قتيبة في روايته وأشار بيده يقللها
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில் "அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிலிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டு, அழ்ழாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அழ்ழாஹ் வழங்காமல் இருப்பதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா அவர்களது அறிவிப்பில் "அது மிகக் குறைந்த நேரம் என்பதை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்'' என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.நூல் : முஸ்லி-ம் (1543)
துஆ ஏற்கப்படும் அந்த நேரம் தொழுகைக்குள் தான் உள்ளது என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. தொழுகையில் துஆ செய்யும் நேரங்கள் இரண்டு உள்ளன. ஒன்று சஜ்தா செய்யும் போது துஆ செய்தல். மற்றொன்று அத்தஹிய்யாத்தில் துஆ செய்தல். இமாம் அமர்ந்த்து முதல் என்ற ஹதீஸுடன் இந்த ஹதீஸை இணைத்துப் பார்க்கும் போது சஜ்தாவை இது குறிக்காது என்று தெரிகிறது. இருப்புக்குப் பின் சஜ்தா இல்லை. சஜ்தாவுக்குப் பின்னர் தான் இமாம் இருப்புக்கு வருவார். எனவே அத்தஹிய்யாத்தில் அமர்வதைத் தான் இது கூறுகிறது என்பது உறுதியாகிறது. புகாரி 935, 5295, 6400 ஆகிய ஹதீஸ்களில் நின்று தொழும் போது என்ற வாசகம் உள்ளது.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ فِيهِ سَاعَةٌ لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ تَعَالَى شَيْئًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا رواه البخاري
அபூஹுரைரா (ர-லி) அவர்கள் கூறியதாவது: அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ நாள் பற்றிக் குறிப்பிடுகையில், "ஜும்ஆ நாளில் ஒரு நேரம் இருக்கின்றது; அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் சரியாக அடைந்து, அதில் தொழுதவாறு நின்று அழ்ழாஹ்விடம் எதைக் கோரினாலும், அதை அவருக்கு அழ்ழாஹ் வழங்காமல் இருப்பதில்லை. அ(ந்த நேரத்தைப் பற்றிக் கூறும்போது நபி (ஸல்) அவர்கள் அது மிகக் குறைந்த நேரம் என்பதை தம் கையால் சைகை செய்து உணர்த்தினார்கள். நூல் : புகாரி (935)
நின்று தொழும் போது என்று இதில் கூறப்படுவதால் குழப்பம் ஏற்படத் தேவை இல்லை.
இது தொழுகையில் நிற்கும் நிலையைக் குறிக்காது. ஏனெனில் நிற்கும் நிலையில் துஆ ஏதும் இல்லை. அது துஆ செய்வதற்கான நேரமும் அல்ல. நிற்குதல் என்பது வணங்குதல் என்ற கருத்திலும் ஏராளமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. தொழுது வணங்கும் போது அடியான் துஆ செய்தால் அது ஏற்கப்படும் என்று தான் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.
தொழுது வணங்கும் போது இமாம் அமர்ந்த பின்னர் துஆ செய்யும் இடம் ஒன்றே ஒன்று தான் உள்ளது. அது அத்தஹிய்யாத் அமர்வுதான். அதில் ஜும்மாவில் அத்தஹிய்யாத் அமர்வில் சிறிய நேரம் உள்ளது. அந்த நேரத்தில் நமது துஆ அமைந்து விட்டால் அது கட்டாயம் ஏற்கப்படும் என்று கருத்துக் கொள்வது தான் அனைத்து ஹதீஸ்களையும் இணைத்துப் பார்க்கும் போது கிடைக்கும் முடிவாகும்
சஹீஹ் இப்னி ஹுஸைமாவில் இதே செய்தி இடம்பெற்றுள்ளது. அதில் இமாம் மிம்பரில் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடைப்பட்ட நேரம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சரியான அறிவிப்பு இல்லை.
صحيح ابن خزيمة - (3 / 120) 1739 - أنا أبو طاهر نا أبو بكر نا أحمد بن عبد الرحمن بن وهب نا عمي أخبرني مخرمة عن أبيه عن أبي بردة بن أبي موسى الأشعري قال : قال لي عبد الله بن عمر أسمعت أباك يحدث عن رسول الله صلى الله عليه و سلم في شأن ساعة الجمعة ؟ قال : قلت نعم سمعته يقول : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول : هي ما بين أن يجلس الإمام على المنبر إلى أن تقضى الصلاة
இதில் அஹ்மது பின் அப்திர் ரஹ்மான் பின் வஹப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் இவரை ஆதாரமாக எடுக்க இயலாது என்றும் கூறியுள்ளனர். எனவே மனனத் தன்மை பாதிப்புக்குள்ளான இவர் அறிவித்த இந்த அறிவிப்பை ஏற்கக்கூடாது.
குறிப்பு : இதற்கு முன்னர் அந்த நேரம் எது என்று தெளிவுபடுத்தப்பட்டவில்லை என்று நாம் சொல்லி இருக்கிறோம்.
அந்தக் கருத்தில் இருந்து நாம் விலகிக்கொள்கிறோம் என்பதை இதன் மூலம் அறிவிக்கிறோம். (நன்றி : ஆன்லைன் பிஜே இணையதளம்)

இதையும் பார்க்க:-
                  * உடல் தானம் செய்ய அனுமதி உண்டா..?
                  * ஜமாஅத்களாகப் பிரித்துக் கொள்ளாமல் முஸ்லிம் என்று ஒ...
                  * ஜும்மா தொழுகையின் சிறப்புகள்
                  * இறுதித் தூதுவராக வருகை தந்த நபி (ஸல்) அவர்கள்
                  * சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்


                                              தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம். பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றியும் பயந்து, சிந்தித்து உலக இறுதி நாளின் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தி இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்போமாக என்று எங்களையும், உங்களையும் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கிறோம்.

இந்த உலகம் நிரந்தனமானது அல்ல. பிறந்ததெல்லாம் இறந்தே ஆகவேண்டும் என்ற நியதியுடைய இவ்வுலகத்தின் அழிவை பற்றி விஞ்ஞானிகள் கூறும் பொழுது :- உலகின் அழிவு துவங்கிவிட்டது. நாம் ஒரு மாய நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்றோம். மனித இனம் என்ற சுவடே இல்லாமல் அழிந்தொழியும். பூமியானது தூள்தூளாகி அனைத்து மூலக்கூறுகளும், அணுக்களும் தூசியாகி விண்வெளியில் பறக்கும்' என்று விஞஞானிகள் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சாணியில் இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இதனையே இறைவன் 1425 வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானம் என்றால் என்ன என்று தெரியாத காலகட்டத்திலேயே திருக்குர்ஆனில் கூறும் பொழுது...

பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது - இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது (99 : 1,2)

பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, (89:21)

இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, (56:5)
வானம் பிளந்து விடும்போது (84:1)

வானம் பிளந்து விடும்போது - நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, (82: 1-4)

சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது (81:1)


இவ்வாறு இறைவன் திருக்குர்ஆனில் உலகின் அழிவைப் பற்றி முன்னறிவிப்புகளைச் சொல்லியிருக்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உலகின் அழிவைப் பற்றிக் கூறும் பொழுது...

''நானும் இறுதி நாளும் இப்படி இணைத்து அனுப்பட்டிருக்கிறோம்'' என்று தன் இரு விரல்களையும் சேர்த்துப் பிடித்துக் காட்டினார்கள்.(புகாரி)

உலகம் அழிவை நெருங்கும் போது என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்று 1425 வருடங்களுக்கு முன்னரே இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் முன்னறிவிப்பு செய்துவிட்டான். அந்த முன்னறிவிப்புகள் ஒவ்வொன்றாக இந்த காலகட்டத்தில் அப்படியே பொருந்தி வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

இதோ அம்முன்னிவிப்புகளில் ஒருசில...

'காலம் சுருங்கி விடும்' எந்தளவுக்கென்றால் 'ஒரு வருடம் ஒரு மாதம் போல் ஆகிவிடும், ஒரு மாதம் ஒரு வாரம் போல் ஆகிவிடும், ஒரு வாரம் ஒரு நாள் போல் ஆகிவிடும், ஒரு நாள்; ஒரு மணிநேரம் போல் ஆகிவிடும், ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் போல் ஆகிவிடும்' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரபுப் பிரதேசம் வளமே இல்லாமல் வெறும் பாலைவனமாக காட்சியளித்தது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''ஒரு காலம் வரும், இந்த அரபுப் பிரதேசம் செல்வச் செழிப்பாக, சோலையாக மாறும் வரை யுக முடிவுநாள் வராது'' (முஸ்லிம் -157)

விபச்சாரம் விவசாயமாய் நடக்கும். எந்த அளவுக்கு என்றால் பெண்கள் நடுவீதிகளில் நின்று விபச்சாரம் புரிவர். விபச்சாரத்தின் பக்கம் பகிரங்கமாக மற்றவர்களை அழைப்பாள். எவரும் அதனை ஆட்சேபிக்க மாட்டார்கள். அக்காலத்தில் நல்லவன் யாரெனில், இச்செயலை கொஞ்கம் மறைத்து செய்யக் கூடாதா? என்று சொல்பவன்;தான் அப்போது நல்லவன். (புஹாரி 5577, 5580)
தகாத காரியங்களில் (விபச்சாரத்தில்) ஈடுபட்டால் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் சந்தித்திராத உயிர்க்கொல்லி நோய் வரும். (இப்னுமாஜா)

(இந்த நவீன யுகத்தில் ''எயிட்ஸ்'' என்ற உயிர்க்கொல்லி நோய் வந்துவிட்டதை பார்க்கிறோம்.)

ஒரு காலம் வரும் ''மது அருந்துவது அதிகமாகிவிடும். தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் இருக்கமாட்டார்கள்''. (புஹாரி : 5581, 5231)

என்னுடைய சமுதாயத்தில் மதுவுக்கு மாற்று பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர். (அபூதாவூத்)

அருகதையற்ற கெட்டவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள். அநியாயக்கார அரசனை மக்கள் ஏற்றிப் போற்றுவர்.(புகாரி)

(இந்த இழிவான நிலையை குக்கிராமங்கள் முதல் வல்லரசு நாடுகள் வரை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.)

ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம் : 3921)

சங்கீத உபகரணங்கள் மிகுதியாகும். இசையில் மயங்கும் மனிதர்கள் பெருகுவார்கள்.(திர்மிதி)

காலையில் ஈமானுடனும் மாலையில் குப்ருடனும் மக்கள் தீமையில் உழல்வார்கள். (திர்மிதி)

எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும்.
(முஸ்லிம்) (ஒரு கோப்பை தேநீருக்கெல்லாம் கொலைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம்)

முஸ்லிம்கள் உலக சுகங்களுக்காகப் போட்டி போடுவார்கள். (புகாரி)

பூகம்பங்கள் அதிகம் ஏற்படும். (புகாரி)

பூமி அலங்கரிக்கப்படும். (திர்மிதி)
பருவ மழைக்காலம் பொய்க்கும்.

திடீர் மரணங்கள் அதிகரிக்கும், மனித ஆயுள் குறையும்.

முஸ்லிம்கள் பெருகியிருப்பர், ஆனால் கடல் நுரைபோல் இருப்பர்.

பெருமைக்காக பள்ளிவாசல் கட்டுவார்கள். (நஸயீ, அஹ்மது, இப்னுமாஜா)


யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ''இட நெருக்கடி ஏற்படும். மக்கள் ஒரே இடத்தில் வந்து குவியும் போது கட்டிடங்கள் உயரமாகும்''. (நகரங்களின் மக்கள் தொகைப் பெருக்கத்தையும் அதனால் அடுக்குமாடி கட்டிடங்கள் அதிகமாவதையும் நாம் காண்கிறோம்.) வியாபாரமுறைகள் மாறும் (புகாரி)

(இன்டெர்நெட் மற்றும் கடன் அட்டைகள் மூலம் புதிய விதங்களில் வியாபார முறைகள் மாறியுள்ளதைக் காண்கிறோம்.)

பழங்கள் பெரிதாகும். ஒரு மாதுளையை ஒரு கூட்டம் சாப்பிடும். (முஸ்லிம்)

ஒரு தடைவை ஒரு மாட்டில் கறக்கும் பால் ஒரு கலத்திற்கே போதுமானதாக இருக்கும்.(முஸ்லிம்)

திருக்குர்ஆன் தங்க மையால் அச்சிடப்பட்டிருக்கும் ஆனால் அதனைப் பின்பற்ற மாற்றார்கள். (பைஹகி)

சத்திய விசுவாசிகள் அவமானப்படுத்தப்படுவர்.ஃபித்னா (குழப்பம்) கடலைப்போன்று அடுக்கடுக்காய் தோன்றிக் கொண்டிருக்கும். (புகாரி,
முஸ்லிம்)

சின்ன சின்ன விஷயங்களில் அலட்சியமாக இருப்பார்கள்.
பேச்சையே (அதிகம் பேசி வியாபாரம் செய்வதையே) பிழைப்பாக்கிக் கொள்வார்கள். சந்தைகள் அதிகரித்து அருகாமையில் வந்துவிடும்.பொருளாதார வள்ச்சி அதிகமாகும். (புகாரி : 7121,1036,1424)

பொய் மிகைத்து நிற்கும். (திர்மிதி)
 

உங்களிடம் ஒரு காலம் வந்தால், பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மேசமாகவே இருக்கும். (புகாரி :7068)

அமல்கள் (நன்மைகள்) குறைந்து போய்விடும். மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். (புகாரி)

முஸ்லிம்கள் மறுமையை நேசிப்பதற்குப் பதிலாக இம்மையை நேசித்து மரணத்தை வெறுப்பார்கள்.
பசியோடு இருப்பவர்கள் உணவு பாத்திரத்தின் மீது பாய்வது போல் மற்ற சமூகத்தினர் என் சமுதாயத்தின் மீது பாய்வார்கள். எதிரிகளின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றி பயம் இருக்காது. முஸ்லிம்களின் உள்ளங்களில் கோழைத்தனம் வந்துவிடும்.
(அபூதாவூத்)

 
முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் படித்து செயல்பட வேண்டிய நபிமொழி:
நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான், அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319, 3456)

(சந்தனக்கூடு, கொடிமரம், சமாதி வழிபாடு, அவ்லியாக்களுக்கு நேர்ச்சை, கப்ரை உயர்த்திக் கட்டுதல், தஸ்பீஹ் மணி, மவ்லூது பாடல்கள், இசைக்கச்சேரிகள், உரூஸ் உண்டியல், யானை குதிரை ஊர்வலங்கள், இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள், வட்டி வாங்குதல், வரதட்சணை பிடுங்குதல், ஜோதிட நம்பிக்கை, திருமணத்தில் பெண்ணுக்கு தாலி கட்டுதல் மற்றும் வாழைமரம் நடுதல், பிறந்த நாள் விழா எடுப்பது, ஆண்கள் தங்கம் அணிவது இது போன்ற பழக்கவழக்கங்களை மாற்று மதத்தவரிடமிருந்து முஸ்லிம்கள் அப்படியே காப்பியடித்து பின்பற்றுவதை நடைமுறையில் கண்டு வருகிறோம்.)

எனவே சகோதர சகோதரிகளே! நாம் செய்ய வேண்டியது என்ன?
மரணவேளை எப்போது நிகழும் என்று எந்த மனிதனும் அறிய முடியாது. அவ்வேளை நெருங்கி வரும் முன் நாம் நமது அமல்களைப் பெருக்கிக் கொள்வோம். ''இஸ்லாம்'' இறைவனின் மார்க்கம்தான் என்று சந்தேகம
ற்ற நம்பவேண்டும். இறைவன் ஒன்றைக் கட்டளையிட்டு விட்டால் இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் இறைவன் சொன்ன கட்டளைக்கு மாறு செய்யாமல் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும். நமது ஈமான் (நம்பிக்கை) அதிகமாக வேண்டும்.

விபச்சாரம் போன்ற மானக்கேடான செயல்களிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளவேண்டும்.

மது, சூதாட்டம், போதைப் பொருட்கள் போன்ற இறைவன் விரும்பாத அனைத்து செயல்களைவிட்டும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

ஏமாற்றுதல், அளவு நிலவையில் மோசடி செய்தல், அமானித மோசடி, வாக்கு மாறுதல், பொய் பேசுதல் போன்ற இழிசெயல்கள் நம்மைவிட்டு ஓடிவிட வேண்டும்.

அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவது, இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசுவது, பொறாமைப்படுதல், அவதூறு கூறுவது, குடும்ப சண்டைகள் போன்ற நாகரிகமற்ற செயல்களை விட்டும் நாம் விடுபட வேண்டும்.

இறைவனின் கட்டளைக்கு மாறான, அற்பச் செயலும், சமூகக் கொடுமையும், அக்கிரமமும், அநியாயமும், அநாகரிகமுமான வரதட்சணை போன்ற பாவங்களிலிருந்து நாமும் விலகி, நம் சமூகத்தையும் விலக்க வேண்டும். இவ்வரதட்சணைக் கொடுமைக்கு துணைபோகிறவர்கள், இக்கொடுமையை இழைப்பவர்கள், இதற்கு ஆதரவளிப்பவர்கள் அனைவரும் இறைவனின் முன்னிலையில் தண்டனைக்குரியவர்கள் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

எல்லாவற்றையும் விட மிகப்பெரிய அநியாயமும், அக்கிரமுமான இறைவன் மன்னிக்காத, இறைவன் விரும்பாத சமாதி வழிபாடு, பெரியேர்களுக்கு நேர்ச்சை செய்வது, ஜோசியம் பார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, நல்லநேரம் என நம்புவது, செய்வினைகளை நம்புவது, குத்பியத் மவ்லிது போன்ற இணை வைத்தல்கள் (ஷிர்க்) என்னும் மகா பாவங்களிலிருந்தும், மூடபழக்கவழக்கங்களிலிருந்தும் நம்மை நாம் காத்துக் கொண்டு இந்த மாய உலகத்தில், நாம் எதற்காக படைக்கப் பட்டிருக்கின்றோம்? நமது இலட்சியம் என்ன? என்று நம்மை நாமே உணர்ந்து செயல்படுவோமாக!

இன்று இஸ்லாத்தின் எதிரிகளால்; ''இஸ்லாமிய பயங்கரவாதம்'' என்ற விஷப் பிரச்சாரம் உலக அளவில் முழுவீச்சில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இக்காலச் சூழ்நிலைiயின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, திருக்குர்ஆனை அதன் மொழியாக்கத்தோடு நாம் படித்து சிந்தித்து அவைகளை நாம் பின்பற்றி நடப்பது மட்டுமல்லாது மாற்று மத நண்பர்களுக்கும் எடுத்துரைத்து, பிற சமூகமக்களுக்கும் திருக்குர்ஆனை படிக்கக் கொடுத்து ''இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டும் மார்க்கமல்ல மாறாக சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம்'' என்பதை எடுத்துக் கூறும் முக்கியக் கடமைகளும் நம்மீதுள்ளது என்பதையும் புரிந்து நடப்போமாக!
நமது வாழ்க்கை நெறி திருக்குர்ஆனாக இருக்கட்டும்!நமது வழிமுறை இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அடிச்சுவடாகவே அமையட்டும்!!

இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. மறுமை வாழ்வுதான் உண்மையான வாழ்வாகும். அவர்கள் (மனிதர்கள்) அறியக்கூடாதா? (திருக்குர்ஆன் 29:64)

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது. ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 21:1)இதையும் பார்க்க:-

                 * பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி க... 
                 * ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்
                   * இஸ்லாத்தின் பார்வையில் முட்டாள்கள் தினம் ஓர் ஆய்வு... 
                   * இறுதித் தூதுவராக வருகை தந்த நபி (ஸல்) அவர்கள்
                   * "எந்த மனிதரும் எந்த மனிதரின் காலிலும் விழக் கூடாது... 

  

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆனிலும், அண்ணல் நபியின் போதனைகளிலும் தீர்வுகளைக் காணலாம், அவற்றில் நீதித்துறை சார்ந்த சட்ட திட்டங்களும் உள்ளடங்கும். இஸ்லாமிய நீதித்துறை பற்றியும், அதன் தீர்ப்புக்கள் பற்றியும் அறியாத அரைகுறைகளால் இஸ்லாமிய சட்டங்கள் அர்த்தமற்ற முறையில் விமர்சிக்கப்படுகின்றதே தவிர புத்தி ஜீவிகளால் அவை என்றும் விமர்சிக்கப்பட்டதில்லை.

முஸ்லிம் காழிகள் நீதி மன்றங்கள்

இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்கள் தமது மார்க்க விவகாரங்களை உலமா சபைகள் மூலமாகவும், உரிமைகள், சட்டம் சார்ந்த அம்சங்கைள காதிகளின் நீதிமன்றங்கள் ஊடாகவும் அணுகுகின்றனர். உலகில் 45 வீதமான முஸ்லிம்கள் சிறுபான்மையினராகக் வாழ்கின்றனர் என ஆய்வறிக்கைள் கூறுகின்றன. இவர்கள் வாழும் ஜனநாயக நாடுகளில் ஜனநாயக சட்ட விதிமுறைகளின் படியும், இஸ்லாமிய வழிகாட்டலை அடிப்படையாகக் கொண்டும் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்கின்றனர். முஸ்லிம்கள் சிறுபான்யைமிராக வாழும் நாடுகளில் இலங்கைத் தேசமும் ஒன்றாகும். அங்கு 60 காதிகள் நீதிமன்றங்கள் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இந்த 60 காதிகள் நீதிமன்றங்களுக்கும் முறைப்பாடாக தலாக், ஜீவனாம்சம், ஓடிப்போய் மணம் முடித்தல், மாற்றுமதத்தவரை முஸ்லிம் ஆண், அல்லது பெண் மண முடிப்பது, கணவன், மனைவி பிரச்சினைகள் போன்ற வரையறுக்கப்பட்ட முறைப்பாடுகளே முக்கியமானவைகள். உண்மையில் இவ்வாறு வரையறுக்கப்பட்ட பிரச்சினைகளை மாத்திரம் சவூதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் உள்ள காதிகள் நீதி மன்றங்கள் உள்வாங்கிக் கொள்வதில்லை, மாற்றமாக கொலை, கொள்ளை, காணி விவகாரம், உரிமைகள் என அவற்றின் எல்லைகள் நீண்டும், விரிவடைந்தும் செல்வதை அவதானிக்க முடிகின்றது.


இருந்தாலும் முஸ்லிம்கள் சிறூபன்மையிராக வாழுகின்ற நாடொன்றில் இவ்வாறான முஸ்லிம் காதி நீதிமன்றங்கள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டு, அவகைள் ஊடாக வரையறுக்கப்பட்ட பிரச்சினைகளாவது பேசப்படுவது என்பது உண்மையில் ஒரு சிறப்பம்சம் என்ற கருத வேண்டி இருக்கின்றது. அவற்றையும் நபிகள் நாயகத்தின் வழி நின்று அணுகும் போது அதன் தனித்தன்மை அலாதியானது என்பதை காதிகள் மறந்துவிடக் கூடாது.

 

காதிகள் கவனத்திற்கு

காதிகள் கையில் எடுத்திருப்பது நீதித்துறையுடன் தொடர்பான பாரிய பொறுப்பாகும். வாழ்க்கைப் பிரச்சினையுடன் தொடர்பான அம்சங்களை சரியாக இனம் கண்டு தீர்க்க முற்பட வேண்டும். இல்லாத போது அல்லாஹ்விடம் பொறுப்புச் சொல்லியாக வேண்டும். எனவே, காதிகளாக வருவோர் பின்வரும் பண்புகளைக் கொண்டவர்களாக இருப்பது காதித்துறைக்கு அவர்கள் செய்கின்ற சேவையும், அல்லாஹ்விடம் தப்பித்துக் கொள்ள உதவும் வழியாகவும் அமையும்.

 

இஸ்லாமிய நீதித்துறை பற்றிய அறிவுள்ளவராக இருத்தல்

இது நம்நாட்டில் உள்ள காதிகள் அனைவரிடமும் இருக்குமா என்பது சந்தேகமே! ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர், அல்லது திருமணப்பதிவாளர், ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள் போன்றோர் இந்தத்தூய பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். இது இஸ்லாமிய நீதித்துறையில் காணப்படும் மிகப்பெரிய குறைபாடாகும். சாந்தி மார்க்கத்தையும், காலாவதியாகிப்போன சில இஸ்லாமிய நூல்களையும் படித்துக் கொண்டு பாரம்பரியமான நம்பிக்கையின் அடிப்படையிலுமே அதிகமான காதி மன்றங்கள் தீர்ப்புக்கள் வழங்குகின்றனவாம். உதாரணமாக முத்தலாக், தன்னொலி கொண்டு திருமணம் செய்யும் முறை, பொலிஸ் வலியாக இருந்து திருமணத்தை நடாத்தி வைத்தல் போன்ற நடைமுறைக்கு அங்கீகராம் போன்ற நடைமுறைகளைக் குறிப்பிடலாம்.

 

மூன்றுவகைக் காதிகள்

الْقُضَاةُ ثَلَاثَةٌ وَاحِدٌ فِي الْجَنَّةِ وَاثْنَانِ فِي النَّارِ فَأَمَّا الَّذِي فِي الْجَنَّةِ فَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَجَارَ فِي الْحُكْمِ فَهُوَ فِي النَّارِ وَرَجُلٌ قَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ فَهُوَ فِي النَّارِ (سنن أبي داود )

காதிகள்- நீதிபதிகள் மூவர். ஒருவர் சுவர்க்கவாதி, மற்ற இருவரும் நரகவாதிகளாகும். சத்தியத்தை அறிந்து அதன்படி தீர்ப்புக் கூறியவர் சுவர்க்கவாதியாகும். சத்தியத்தை அறிந்து அதில் அநீதி இழைத்தவர் நரகவாதியாகும். (மூன்றாமவரான) மற்றவர், அறியாமையில் தீர்ப்புக்கூறி நரகத்திற்கு உரியவரானவர் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத்).


அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் மறுமை எதிர்பார் என நபி (ஸல்) அவர்கள் கூறிய நேரத்தில் அல்லாஹ்வின் தூதரே! அதைப்பாழடித்தல் என்பது எப்படி என (விளக்கம் கோரினார்), ஒரு நபித்தோழர், தகுதி அற்றவர்களிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டால் (மறுமைநாளை எதிர்பார்த்துக் கொள்) என நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள் (புகாரி).

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ اللَّهَ لَا يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنْ الْعِبَادِ وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالًا فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ فَضَلُّوا وَأَضَلُّوا (رواه البخاري – كتاب العلم باب كيف يقبض العلم ) (ومسلم في صحيحيه وبوَّبه النووي (رحمه الله) ب بَاب : رَفْعِ الْعِلْمِ وَقَبْضِهِ وَظُهُورِ الْجَهْلِ وَالْفِتَنِ فِي آخِرِ الزَّمَانِ )


நிச்சயமாக அல்லாஹ் கல்வியை தனது அடியார்களிடமிருந்து ஒரேயடியாக பறித்துவிடமாட்டான். ஆயினும் அறிஞர்களை கைப்பற்றுவதன் மூலம் அவன் கல்வியை கைப்பற்றுவான். கடைசியாக ஒரு அறிஞர்கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களை தமது தலைவர்களாக்கிக் nhகள்வர். அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டும், அவர்களோ அறிவின்றி மார்க்கத்தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுப்பார்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்கள். ஆதாரம்:- (புகாரி, முஸ்லிம்)

 

தீர்ப்பின் போது கோபம் கொள்ளாதிருத்தல்.

தீர்ப்பளிக்கும் நீதிபதி ஒருவர் கோபமும், ஆத்திரமும் பொங்கிவழியும் ஒருவராக இருப்பது விசனிக்கத்தக்க அம்சமாகும். முஸ்லிம் காதிகள் இதிலிருந்து முற்றாக விலகிக் கொள்ள வேண்டும்.

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ قَالَ كَتَبَ أَبِي وَكَتَبْتُ لَهُ إِلَى عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرَةَ وَهُوَ قَاضٍ بِسِجِسْتَانَ أَنْ لَا تَحْكُمَ بَيْنَ اثْنَيْنِ وَأَنْتَ غَضْبَانُ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَحْكُمْ أَحَدٌ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ (صحيح مسلم)

அபூபக்ரா (ரழி) அவர்கள் தனது மகன் அப்துர்ரஹ்மான் என்பவருக்கு அறிவித்த செய்தியை அவர் தனது சகோதரர் உபைதுல்லாஹ் என்பவர் ஸிஜிஸ்தான் என்ற பிரதேசத்தில் காதியாக இருந்த போது பின்வருமாறு எழுதி அனுப்பினார்கள். ‘நீ கோபமுற்ற நிலையில் இருக்கின்ற போது இருவர் மத்தியில் தீர்ப்பளிக்காதே! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கோபமாக இருக்கின்ற நிலையில் நீ இருவர் மத்தியில் தீர்ப்பளிக்கூடாது என்று கூறியதைத்தான் தான் செவிமடுத்தேன் என்பதாக தந்தை கூறியதை அதில் குறிப்பிட்டிருந்தார்கள். (முஸ்லிம்).

பொறுமை இழந்தவரிடம் கோபம் வருவதுண்டு, கோபத்தால் எதையும் சாதிக்க முடியாமல் போய்விடும். சில காதி வாதிகளால், பிரதிவாதிகளால் தாக்கப்பட்டு, நையப்புடைக்கப்பட்டதற்கு அவர்களின் நீதியான தீர்ப்ப்பல்ல, மாற்றமாக காதிகளின் விசனிக்கத்தக்க பேச்சுக்கள், செயற்பாடுகள் காரமணாக இருந்தனவாம் என்று காதிகள் வட்டாரம் குறிப்பிடுகின்றது.

 

பிறமதத்தவரின் சட்டங்களை அறிந்திருத்தல்.

மனித நேயமிக்க பண்பாடுகளில் இஸ்லாமல்லாத கோட்பாடுகள் அதிகமாக உடன்படுகின்றன. ஆகவே காதிகள் அவைகள் பற்றியும் அறிந்திருப்பது தமது தீர்ப்புகளுக்கு வலுச்சேர்க்கும் ஒன்றாக அமையும். நபிகள் நாயகத்தின் காலத்தில் நடை பெற்ற பின்வரும் நிகழ்வு இதை உறுதி செய்கின்றது.

3363 – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ الْيَهُودَ جَاءُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا لَهُ أَنَّ رَجُلًا مِنْهُمْ وَامْرَأَةً زَنَيَا فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا تَجِدُونَ فِي التَّوْرَاةِ فِي شَأْنِ الرَّجْمِ فَقَالُوا نَفْضَحُهُمْ وَيُجْلَدُونَ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ كَذَبْتُمْ إِنَّ فِيهَا الرَّجْمَ فَأَتَوْا بِالتَّوْرَاةِ فَنَشَرُوهَا فَوَضَعَ أَحَدُهُمْ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ فَقَرَأَ مَا قَبْلَهَا وَمَا بَعْدَهَا فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ ارْفَعْ يَدَكَ فَرَفَعَ يَدَهُ فَإِذَا فِيهَا آيَةُ الرَّجْمِ فَقَالُوا صَدَقَ يَا مُحَمَّدُ فِيهَا آيَةُ الرَّجْمِ فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُجِمَا قَالَ عَبْدُ اللَّهِ فَرَأَيْتُ الرَّجُلَ يَجْنَأُ عَلَى الْمَرْأَةِ يَقِيهَا الْحِجَارَةَ (صحيح البخاري )

யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அவர்களில் உள்ள (திருமணமான) ஒரு ஆணும், பெண்ணும் விபச்சாரம் செய்ததாக முறையிட்டனர், கல்லெறிந்து கொல்வது பற்றி தவ்ராத்தில் என்ன இருக்கக் காண்கின்றீர்கள் என அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள், நாம் அவர்களைக் கேவலப்படுத்துவோம், (இக்குற்றத்திற்காக) அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றனர், அதற்கு அப்பதுல்லாஹ் பின் ஸலாம் (ரழி) அவர்கள் நீங்கள் பொய் சொன்னீர்கள், அதில் கல்லெறிந்து கொல்லும்படிதான் இருக்கின்றது , தவ்ராத்தை உடன் கொண்டுவாருங்கள் எனக் கூறினார்கள். (அவர்கள் கொண்டு வந்து) அதை விரித்தார்கள், அவர்களில் ஒருவன் கல்லெறிந்து கொல்வது பற்றிய வசனத்தின் மீது தனது கையை வைத்து (மறைத்தான்).

அதற்கு முன்னரும், பின்னரும் இடம் பெறும் செய்தியை வாசித்தான், அவனிடம் உனது கை எடு என்றார்கள் அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரழி) அவர்கள், அவனது கையை அவன் உயர்த்திய போது, அதில் ரஜ்ம் பற்றி வசனம் இருந்தது. உடனே யூதர்கள் அவர் உண்மை உரைத்தார் எனக் கூறிவிட்டு, அவ்விருவரையும் கல்லெறிந்து கொலை செய்யும்படி பணித்தார்கள், பின்பு, அவர்கள் இருவரும் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள். அப்போது, ஒரு மனிதன் பெண்ணின் பக்கமாக சாய்ந்து அவளைக் கல்லில் இருந்து காப்பதைப் பார்த்தேன் என அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் (புகாரி)

 

இறை சட்டத்துடன் நின்று கொள்ளுதல்.

4140 – عَنْ أَنَسٍ أَنَّ الرُّبَيِّعَ عَمَّتَهُ كَسَرَتْ ثَنِيَّةَ جَارِيَةٍ فَطَلَبُوا إِلَيْهَا الْعَفْوَ فَأَبَوْا فَعَرَضُوا الْأَرْشَ فَأَبَوْا فَأَتَوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَوْا إِلَّا الْقِصَاصَ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْقِصَاصِ فَقَالَ أَنَسُ بْنُ النَّضْرِ يَا رَسُولَ اللَّهِ أَتُكْسَرُ ثَنِيَّةُ الرُّبَيِّعِ لَا وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَا تُكْسَرُ ثَنِيَّتُهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَنَسُ كِتَابُ اللَّهِ الْقِصَاصُ فَرَضِيَ الْقَوْمُ فَعَفَوْا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ ( أخرجه البخاري ، وفي رواية له : فَرَضِيَ الْقَوْمُ وَقَبِلُوا الْأَرْشَ )

அனஸ் (ரழி) அவர்களின் தாயின் சகோதரி றுiபிய்யிஃ அவர்கள் ஒரு அடிமைப் பெண்ணின் முன் பல்லை உடைத்துவிட்டார்கள், அதற்காக அவரின் கூட்டத்தாரிடம் (இவரின் சார்பாக) மன்னிப்புக்கோரினார்கள், மன்னிப்புத் தர அவர்கள் மறுத்து விட்டனர், நஷ்டஈடு தருவதாகக் கூறப்பட்டது அதையும் அவர்கள் மறுத்து விட்டனர், பழிக்குப்பழி என்ற நிலையிலேயே நின்றனர், நபி (ஸல்) அவர்கள் கிஸாஸ் சட்டத்தை நிறைவேற்றும்படி பணித்தார்கள், அனஸ் பின் நள்ர் (ரழி) அவர்கள், றுபிய்யிஃ உடைய முன் பல் உடைக்கப்படுவதா? சத்தியத்தைக் கொண்டு உம்மை அனுப்பியவன் மீது சத்தியமாக அவரது முன்பல் உடைக்கப்படாது என்றார்கள், நபி (ஸல்) அவர்கள் அனஸே! அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளபடி அல்கிஸாஸ் சட்டமே (நிறைவேற்றப்பட வேண்டும்) என்றார்கள், அந்த சமுதயாத்தினர் (நஷ்டஈட்டைப்) பொருந்திக் கொண்டு, அவருக்கு மன்னிப்பு வழங்கினார்கள். அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர், அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவதை அல்லாஹ் (அங்கீகரித்து) நிறைவேற்றிவைப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி). புகாரியின் மற்றொரு அறிவிப்பில், அந்த சமுதாயத்தவர் அதைப் பொருந்திக் கொண்டு, நஷ்டஈட்டையும் ஏற்றுக் கொண்டனர் என இடம் பெற்றுள்ளது.

 

சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்துதல்

காதிகள் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கண்டிப்பானவர்களாக இருக்க வேண்டும். அதில் விட்டுக்கொடுப்புகள், பாரபட்சம் காட்டுவது, ஓர நீதியுடன் நடந்து கொள்வது போன்றதை விட்டொழிக்க வேண்டும். முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் என்ற வித்தியாசம் பார்க்கவே கூடாது.

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ يَهُودِيًّا رَضَّ رَأْسَ جَارِيَةٍ بَيْنَ حَجَرَيْنِ قِيلَ مَنْ فَعَلَ هَذَا بِكِ أَفُلَانٌ أَفُلَانٌ حَتَّى سُمِّيَ الْيَهُودِيُّ فَأَوْمَأَتْ بِرَأْسِهَا فَأُخِذَ الْيَهُودِيُّ فَاعْتَرَفَ فَأَمَرَ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُضَّ رَأْسُهُ بَيْنَ حَجَرَيْنِ ((صحيح البخاري /2236- بَاب مَا يُذْكَرُ فِي الْإِشْخَاصِ وَالْخُصُومَةِ بَيْنَ الْمُسْلِمِ وَالْيَهُودِ))

யூதன் ஒருவன் ஒரு அடிமைப் பெண்ணின் தலையை இரு கற்பாறைகளுக்கும் இடையில் வைத்து நசுக்கி இருந்தான். (குற்றுயிரான நிலையில் இருந்த போது) உனக்கு இவ்வாறு செய்தது யார்? இவனா? அல்லது இவனா என விசாரித்து (இறுதியாக) ஒரு யூதனைக் கூறி, இவனா என்று கேட்கப்பட்டது, அந்தப் பெண் தனது தலையால் சைனை செய்து ஆம் எனக் கூறினார். உடன் அவன் பிடிக்கப்பட்டான், அந்த யூதனும் தனது குற்றத்தை ஏற்றுக் கொண்டான், நபி (ஸல்) அவர்களின் கட்டளையின் படி அவனது தலை இரு கற்களுக்கும் இடையில் வைத்து நசுக்கப்பட்டு அவன் கொல்லப்பட்டான் (புகாரி).
மற்றொரு சம்பவம்.

عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْمُتَلَاعِنَيْنِ حِسَابُكُمَا عَلَى اللَّهِ أَحَدُكُمَا كَاذِبٌ لَا سَبِيلَ لَكَ عَلَيْهَا قَالَ يَا رَسُولَ اللَّهِ مَالِي قَالَ لَا مَالَ لَكَ إِنْ كُنْتَ صَدَقْتَ عَلَيْهَا فَهُوَ بِمَا اسْتَحْلَلْتَ مِنْ فَرْجِهَا وَإِنْ كُنْتَ كَذَبْتَ عَلَيْهَا فَذَاكَ أَبْعَدُ لَكَ مِنْهَا (مسلم)

சாபச் சத்தியம் (முலாஅனா) செய்து கொண்ட இருவரிடம் உங்கள் இருவரின் கேள்வி கணக்கும் அல்லாஹ்விடமே உள்ளது. உங்களில் ஒருவர் பொய்யர்கள் எனக் கூறிய பின் (அந்தப் பெண்ணின் கணவரிடம்) அவளுக்கும் உனக்கு எவ்வித சம்மந்தமும் இருக்கக் கூடாது எனக் கூறினார், உடனே அவர், அல்லஹ்வின் தூதரே! எனது சொத்துக்களின் நிலை என்ன? எனக் கேட்டார், உனக்கு சொத்துக்கள் தரமுடியாது. நீ அவள் பேரில் உண்மை உரைத்திருப்பின் அவளது மர்மஸ்தானத்தில் இருந்து நீ சுகம் அனுபவித்ததற்காகப் போகட்டும், நீ அவள் பேரில் பொய்யுரைத்திருப்பின் உனக்கும், அதற்கும் மிகத்தூரம் (எடுக்க உரிமையில்லை) எனக் கூறினார்கள். (முஸ்லிம்).,கணவன், மனைவி இருப்போர் சுமத்துகின்ற விபச்சாரக் குற்றச்சாட்டினை எவ்வாறு அணுக வேண்டும் என்ற பாடத்தை இந்த சம்பவத்தின் மூலம் காழிகள் பெற்றுக் கொள்ளலாம்.

 

காழி நீதிமன்றங்களின் காணப்படும் குறைபாடுகள்.

இஸ்லாமிய சட்டத்துறை தொடர்பான சட்டங்கள் அடங்கிய தொகுப்புக்கள் அரபி மொழியில் காணப்படுவதாலும், தமிழ், அல்லது சிங்கள மொழி மூலம் அவை தனித்தொகுப்பாக வெளிவராத காரணத்தாலும் அரபு மொழி அறிவு அற்ற காதிகளின் தீர்ப்பில் முரண்பாடுகள், குறைபாடுகள் நிச்சயம் ஏற்படவே செய்யும்.

இலங்கையில் காதிகளாக இருப்போரில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் பற்றிய அறிவும், ஆராய்ச்சியும் அற்றவர்கள், அல்லது குறைவான அறிவுடையவர்கள் என்பதே உண்மை. எனவே அவர்கள் இஸ்லாமிய சட்டங்கள் தொடர்பாக அதிகம் அறிந்திருப்பது அவசியமானதாகும்.

அதே போன்று நீதி மன்றத்திற்கென தனியான கட்டடங்கள் இல்லாதிருப்பது, குறித்த மதஹபைப் பின்பற்றி சட்டம் செய்வது, சாதராண விசயத்திற்கும் பல மாதங்கள் தாமதிப்பது போன்ற இன்னும் சில குறைபாடுளை அவதானிக்க முடிகின்றது. இதற்கு ஒரு சில மாவட்டங்கள் விதிவிலக்காக இருக்கலாம்.
இவ்வாறான குறைபாடுகளை நீக்கிட கல்விமான்கள், இஸ்லாமிய சட்டவியல் ஆராய்ச்சியாளர்கள் முஸ்லிம் நீதிபதிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டு காதிகளுக்கான சட்டங்களை பரிசீலினை செய்ய வழி செய்யப்படுவதன் மூலம் நிவர்த்தி செய்யலாம். இதை புதிய நீதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ரஊஃப் ஹகீம் முஸ்லிம் அமைச்சர் என்ற வகையில் இது பற்றி சிந்தித்து காத்திரமான முடிவை எடுக்கலாம் எனப்து நமது கருத்தாகும்.

இதையும் பார்க்க:-
                   *  அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும்...!!
                 * இயேசு சிலுவையில் அறையப்படவில்லை..( அதிகமாக பகிருங்...
                 *  கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்
                 *  இறுதித் தூதுவராக வருகை தந்த நபி (ஸல்) அவர்கள்
                 *  தாயத்துக்கும் சயனைடு குப்பிக்கும் உள்ள கள்ள உறவு

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

என் அன்பிற்க்கினிய சகோதர, சகோதரிகளே..

"இஸ்லாம்" இறைவனின் மார்க்கம் "திருக்குர்ஆன்" இறைவனின் வேதம் தான் என்பதற்க்கும் திருமறை முழுவதும் நற் சான்றுகள் நிரம்பி உள்ளன. "அல்லாஹ்"வின் இறுதி தூதர் முஹம்மது"நபி(ஸல்..) அவர்கள் வாழ்ந்து காட்டிய உலக வாழ்க்கையின் வரலாற்று தொகுப்புகள்(ஹதீஸ்), மற்றும் திருக்குர்ஆன் முழுவதும், இவர் இறை துாதர் தான் என்று நற் சாட்சியம் பகர்கின்றன.

இவ்விரண்டும் தான் நம் வாழ்க்கை நன் நெறியாகும். நாம் வாழும் சமூகத்தில் நம் கண் முன் நிகழும் உண்மை நிகழ்வுகள் பல... அதில் பெற்ற தாய், தந்தையரை பேணுபவரின் வாழ்க்கை தரத்தை சற்று கூர்ந்து கவனித்தால் பல பேர் மேம்பட்டவராகவே! இருப்பதை காண்கிறோம். இது "அல்லாஹ்" நமக்கு அளிக்கும் மறைவான அருள் ஆகும். இறைவனின் கூற்றையும், நபிகள் நாயகம்(ஸல்..) அவர்களின் சொல், செயல்,அங்கீகாரம், இவை அனைத்தையும் கற்று, சற்று சிந்தித்து, செயல்பட்டால் நீங்களும் இம்மை, மறுமை இவ் விரண்டிலும் மேம்பட்டவரே!

சில எடுத்துக்காட்டுகள் இதோ!...

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் பெரும் கருணையாளன் எல்லாம் வல்ல "அல்லாஹ்" ரப்புல் ஆலமீன் ! தன் திருமறையில் கூறுகிறான்.
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள். திருக்குர்ஆன் 4:36

"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!" என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி " சீ " எனக்கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!
திருக்குர்ஆன் 17:23

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! " சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!" என்று கேட்பீராக! திருக்குர்ஆன் 17:24

மனிதனுக்கு அவனுடைய பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனுடைய தாய் பலவீனத்துக்கும் மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவர் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். திருக்குர்ஆன் 31:14

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.
திருக்குர்ஆன் 46:15

எங்கள் தலைவர் முஹம்மதுநபி(ஸல்...) அவர்கள் நவின்ற பொன் மொழிகள் இதோ!...

"அல்லாஹ்வின் துாதரே! மனிதர்களிலேயே நான் தோழமை கொள்ள அதிக உரிமை படைத்தவர் யார்?" என்று நான் கேட்டேன். அதற்க்கு நபி(ஸல்) அவர்கள் "உன் தாய்" என்றார்கள். அடுத்ததாக யார் ? எனக்கேட்டேன். "உன் தாய்" என்றார்கள். அடுத்ததாக யார்? எனக்கேட்டேன். "உன் தாய் " என்றார்கள். அடுத்ததாக யார்? எனக்கேட்டேன். "உன் தந்தை " என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நுால்: புகாரி(5971)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்னையரைப் புண்படுத்துவது, (அடுத்தவருக்குத் தர வேண்டியதை) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான்.அறிவிப்பவர்: முஃகிரா பின் ஷூஅபா(ரலி) நுால்:புகாரி (5975)

நபி (ஸல்) அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றி கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்கு துன்பம் கொடுப்பதுமாகும் என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அனஸ்(ரலி)                 நுால்: புகாரி(2653)

"ஒரு மனிதர் தம் தாய் தந்தையரைச் சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்" என அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நுால்:புகாரி(5973)

நான் நபி( ஸல்) அவர்களிடம், "கண்ணியமும், மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்க்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?" என்று கேட்டேன். அவர்கள், " தொழுகையை அதற்குறிய நேரத்தில் நிறைவேற்றுவது " என்றார்கள். "பிறகு எது?" என்று கேட்டேன். "தாய்,தந்தையருக்கு நன்மை செய்வது" என்றார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)             நுால்: புகாரி(5970)

ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் துாதரே! பெரும் பாவங்கள் எவை என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் இறைவனுக்கு இணை கற்பிப்பது என்றார்கள். அவர் பிறகு எது என்றார். நபி(ஸல்) அவர்கள் பிறகு தாய் , தந்தையரைப்புண்படுத்துவது என்றார்கள். அவர் பிறகு எது எனக்கேட்க நபி(ஸல்) அவர்கள் பொய் சத்தியம் என்றார்கள். நான் பொய் சத்தியம் என்றால் என்ன? என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் பொய் சொல்லி ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைக் கைபற்றுவதற்காகச் சத்தியம் செய்வது என்றார்கள்.அறிவிப்பவர்:-அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நுால்:- ஸஹீஹுல் புகாரி:-6920

இந்த நன் நெறிகளை கற்று, சிந்தித்து , செயல் படுத்தி "தவ்ஹீத்" கொள்கையை உயிர் மூச்சாக ஏற்று தடம் புரளாமல் என்றென்றும் நிலையான "ஏகத்துவம்", எத்தி வைத்து வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல் அருள் புரிந்து இவ்விரு உலகிலும் நன் மக்களாக ஆக்கி வைப்பானாக !
அல்ஹம்துலில்லாஹ்..

 இதையும் பார்க்க:-
                    * வலீமா புறக்கணிப்பு சரியா...?
                  * பெண்களின் கண்ணியம்...!
                  * அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும்...!!
                  * மகத்துவமிக்க லைலதுல் கத்ரின் சிறப்புகள்...!!
                  * இஸ்லாத்தின் பார்வையில் முட்டாள்கள் தினம் ஓர் ஆய்வு...

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget