இஸ்லாம் கூறும் மறுமை வாழ்வு

                                         தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

மனிதன் எல்லா நிலைகளிலும் நன்மை களை செய்து, தீமைகளை களைந்து வாழ இறைவனின் கொள்கை கோட்பாட்டுகள் வேண்டுமா ? அல்லது மனசாட்சிக்கு கட்டுபட்டாலே போதுமா  மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்(21:1) 


இவ்வுலக வாழ்வோடு அனைத்தும் முடிவடைகிறது, இறப்புக்கு பின் ஒரு வாழ்வு கிடையாது அது வெறும் மாயை என வாதிடும் சக நண்பர்களுக்காக இங்கு சில விளக்கங்கள், ஏனைய மதங்களில் இறப்பிற்கு பிறகுண்டான சொர்க்கம்,நரகம் குறித்து கூறப்பட்டாலும் அத்தகைய வாழ்வு குறித்து இஸ்லாம் மிக தெளிவாகவும், விரிவாகவும் கூறியுள்ளதுஇவ்வுலகில் வாழும் எந்த ஒரு மனிதராக இருந்தாலும் அவருக்கு வழங்கப்பட்ட நற்போதனைகளின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்து கொண்டால் அவருக்கு வெகுமதியாக

சுவர்க்கமோ,அதுவல்லாது,தனது மனோ இச்சையை பின்பற்றி கெடுதியின் பக்கம் செல்வாராயின் அதற்கு தண்டனையாக நரகமோ இறப்பிற்கு பின்னுள்ள வாழ்வில் இறைவன் புறத்திலிருந்து வழங்கப்படும் என்பதே இஸ்லாம் வரையறுக்கும் மறுமை வாழ்வு  ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்களுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர்( (நரக)நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப (இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.(3:185)


பிறகு, கியாம நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள். (23:16)

மறுமை அல்லது மறுஉலக வாழ்வை ஏற்காமல் இருப்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளை சற்று அறிவோம். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தாலே போதுமானது, கடவுள் என்பதெல்லாம் தேவையில்லாத ஒன்று என்பதே கடவுள் மறுப்பாளர்களின் பொதுவான கருத்து.

இதனடிப்படையில் அணுகும் போது ஒரளவிற்கு தனிமனித ஒழுக்கத்தை சரி காணலாமேயோழிய ஒட்டு மொத்த சமுதாய நலனையும் சீர் செய்யமுடியாது ஏனெனில் மனிதனின் மனசாட்சியானது, , எண்ணங்களின் அடிப்படையில் வீட்டு சுழலின், பெற்றோர்கள் வளர்ப்பின், வாழும் இடத்திற்கு தகுந்தார்போல் மாறுபடும். திருட்டு என்பது தவறென்று அனைவரும் அறிந்திருந்தாலும் திருடனின் மனசாட்சி அது சரி என நியாயம் கற்பிக்கிறது..


அதுபோலவே மது, புகை பழக்கம் மற்றும் விபச்சாரம் போன்ற ஏனைய தவறுகளும். பிறரால் நமக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்பின் போதும் ஒரு தவறு சரியெனபடுகிறது இவைகள் தவறென்று ஏற்று கொள்வோரின் தனிமனித வாழ்வு வேண்டுமானால் மேம்பாடு அடையலாம். (சமுகம் முழுவதும் நிலையான நன்மையே ஏற்படுத்த முடியாது) எனினும் மனசாட்சி எதாவது ஒரு நிலையில் இந்த தவறுகளை விரக்தியின் அடிப்படையிலோ,ஆசையின் அடிப்படையிலோ சரி காணும்போது தனி மனித ஒழுக்கமும் சீர் கெட்டுபோகும்.


உதரணமாக,கற்பழிப்போ,விபச்சாரமோ சமுக கொடுமை என நம் மன சாட்சி ஏற்றுக்கொள்ளும்.எனவே அதை செய்ய நாட மாட்டோம்.ஆனால் ஆணோ,பெண்ணோ விருப்பப்பட்டு சேர நினைத்தால் மன சாட்சியின் பார்வையில் அது தவறென்று கூறாது. மேலும் அத்தவறுகளை மனம் நாடும்போதேல்லாம் செய்யவே தூண்டும். அதுபோலவே ஏனைய உடன்பாட்டு தவறுகளும்.ஆக மனசாட்சியின் மூலமாக தீமையே தவிர்த்தல் என்பது முழுவதும் சாத்தியமற்றது.எனவே மனசாட்சியால் தற்காலிக நன்மையே மட்டுமே ஏற்படுத்தமுடியும்.


ஆனால் .. எந்த ஒரு சுழலிலும்,வளர்ப்பிலும் வாழும் மனிதன் இறைவனை ஏற்று அவனது போதனைகளை நம்பும்பொழுது இத்தகைய தவறுகள் செய்ய மனசாட்சி நாடும்போது இறைவன் தன்னை கண்காணிக்கிறான்,தான் செய்யும் தவறுக்காக மறுமையில் தண்டனை வழங்குவான் எனும் எண்ணம் ஏற்படும்.எனவே தவறு செய்வதற்கான மனநிலை ஏற்பட வாய்ப்புகள் மிகமிக குறைவு.உடன்பாட்டின் அடிப்படையில் தவறிழைப்பின் கூட கடவுளிடம் பாவமன்னிப்பு கேட்டு திருந்துவான். கடவுளுக்கு பயந்து மறுமுறை அது நிகழாவண்ணம் பார்த்து கொள்வான்.


மனிதர்களே! உங்கள் இறைவனையஞ்ச (நடந்து) கொள்ளுங்கள்; இன்னும் அந்த (கியாமத்) நாளைக்குறித்துப் பயந்து கொள்ளுங்கள்; (அந்நாளில்) தந்தை தன் மகனுக்கு பலனளிக்க மாட்டார்; (அதே போன்று) பிள்ளையும் தன் தந்தைக்கு எதையும் நிறைவேற்றி வைக்க இயலாது நிச்சயமாக அல்லாவின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே இவ்வுலக வாழ்க்கை உங்களை மருட்டி ஏமாற்றிவிட வேண்டாம்; மருட்டி ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை மருட்டி ஏமாற்றாதிருக்கட்டும்.(31:33)


கால சுழலுக்கு தகுந்தார் போல் செயல்படும் மனசாட்சிக்கு கட்டுபடுதல் மூலமாக எல்லா நிலையிலும் தவறிழைப்பதை முழுவதுமாக தவிர்க்க இயலாது. மாறாக-, இயல்பாகவே நம்மை ஒருவர் கண்காணிக்கிறார் எனும் போது அவரது பார்வையில் நாம் தவறிழைக்க மாட்டோம்,அதுபோலேவே எப்போதும் நம்மை கண்காணிக்க ஒருவர் இருக்கிறார் எனும் மனநிலை அடையும் போது தவறு செய்யும் எண்ணம் ஏற்படுவதே சற்று அரிதாக தான் இருக்கும்.
  
அடுத்து நன்மைகள் குறித்து தீமைகளை தவிர்த்து கொள்வதற்கு மனசாட்சி மேற்கொள்ளும் கட்டுபாடுகளை போல நன்மைகளை செய்வதற்கு ஆர்வமூட்டுவதில்லை.ஏனெனில் தீமையே போல் அல்லாது, நன்மையான காரியம் செய்வதால் பிற மக்களுக்கோ,சமுகத்திற்கோ நலம் பயக்கும் அதே வேளையில் செய்யாவிடின் தனிமனித ஒழுங்கிற்கு எந்த பாதகமும் ஏற்படுவதில்லை. ஆகவே சராசரி மனிதர்களின் மனசாட்சி ஒருவேளை நன்மை செய்ய தூண்டலாம்.அல்லது இது அவசியமன்று என ஒதுக்கலாம் ஆர்வ மிகுதியோ ,சமுக பற்றோ அல்லது புகழை விரும்பியோ தவிர மனசாட்சி சமுதாய நலனில் ஈடுபாடு செலுத்துவதில்லை .

ஆனால் இஸ்லாம் தீமையே தவிர்ப்பது போல் நன்மையான காரியத்தின் பால் செல்வதற்கும் இறைவனிடத்தில் வெகுமதி அளிக்கப்படும் என்கிறது.உதரணமாக தன் மனைவிக்கோ, பெற்றோருக்கோ, பிள்ளைகளுக்கோ, ஏனைய உறவினருக்கோ ஆதரவற்ற அனாதைகளுக்கோ உதவுவது சமுக கடமை என்பதையும் தாண்டி, அதை ஒரு மார்க்க கடமையாக இஸ்லாம் வலியுறுத்துக்கிறது.


பிறமக்கள் மற்றும் சமுக நலனில் அக்கறை காட்டுதல் குறித்து ஏராளமான வேத வரிகளும்,தூதர் மொழிகளும் உள்ளன.தனிமனித மற்றும் சமுக வாழ்வு நிலையான நலன் பெற ஓரிறை கூறும் மறுமை கோட்பாடே சிறந்தது.


அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்ததற்குக் கூலி கொடுக்கப்படும்; அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.(40:17) அல்லாஹ் மிக்க அறிந்தவன்

இதையும் பார்க்க:-
                        * திருக்குர்ஆனை தொடக் கூடாதாமே?!!
                        * இன்சூரன்ஸ்" - சுருக்கமாக ஓர் விளக்கம்!
                        * பிரார்த்தனைகள் (துவா)
                        * குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்..!!
                        * தாயத்துக்கும் சயனைடு குப்பிக்கும் உள்ள கள்ள உறவு
                        * இந்த உலக வாழ்கை பற்றி அல்லாஹ் கூறும் போது..!!Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget