February 2013

                                                         தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார். இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார்.


உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது. இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது. இவ்வாறு குடல்களுக்குச் சென்ற உணவு பொருட்களின் சத்துக்கள் குடல்களின் இரத்த நாளங்கள் மற்றும் இரத்த ஓட்டங்களின் வழியாக பால் சுரப்பிக்கும் (Mammary Gland) சென்று அவைகள் பால் சுரப்பதற்கு ஏற்ற சக்தியை அளிக்கின்றது.
இது இன்றைய தினம் நாம் பெற்றிருக்கும்பால் எங்கிருந்து எப்படி சுரக்கிறதுஎன்பதைப் பற்றிய அறிவியலாகும். இந்த நவீன விஞ்ஞான அறிவை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அல்லாஹ்வின் அருள்மறை கூறியிருக்கிறது என்றால் அது ஆச்சரியமளிப்பதாக இருக்காதா? ஆம் இது விஞ்ஞானிகளுக்கு பேராச்சரியமாகத் தான் இருக்கிறது. இந்தப் பேருண்மையை சத்திய திருமறை ஸூரத்துல் நஹ்ல்-ன் 66-வது வசனத்தில் கூறுகிறது.
நிச்சயமாக (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது. அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம் (அல்குர்ஆன்: 16:66)
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கிறது. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள் (அல்குர்ஆன்: 23:21)
வயிற்றில் உள்ளவற்றுக்கும் (சத்துக்கள் உறிஞ்சி எடுக்கப்பட்ட உணவு பொருட்களுக்கும்) இரத்தத்திற்கும் இடையிலிருந்து பால் உற்பத்தியாகின்றது என்று நவீன விஞ்ஞானம் கூறும்
உண்மைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்தியம்பிய திருமறை வசனங்களை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவது நமது கடமையன்றோ?
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
 
இதையும் பார்க்க:-
                           *  ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..
 
                        


                       தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

பிரித்தானியாவில் மாத்திரம் வருடாந்தம் 5000 பேர் இஸ்லாத்தை தமது மார்க்கமாக ஏற்றுக் கொள்வதாக அந்நாட்டிலிருந்து வெளியாகும் 'த சன்' பத்திரிகை தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக இவர்களில் அரைவாசிப் பேர் வெள்ளையர்கள் எனவும், அவர்களில் 75 வீதமானோர் பெண்கள் எனவும் அப் பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது. இவ்வாறு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நான்கு பெண்களுடன் 'த சன்' பத்திரிகை மேற்கொண்ட நேர்காணலின் முக்கிய பகுதிகளை வாசகர்களுக்காக தமிழில் தருகிறோம்.

 அலானா புளொக்லீ (21)
பிரித்தானியாவின் க்ளஸ்கோ நகரில் வசிக்கும் ஊடகவியல் கற்கை மாணவியான இவர் 2010 ஜூன் மாதம் முஸ்லிம் இளைஞர் ஒருவரைச் சந்தித்ததன் மூலம் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டõர். தான் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டமை பற்றி அவர் இப்படிக் கூறுகிறார்.
"நான் ஒரு கிறிஸ்தவ பெண் என்ற போதிலும் மதமோ, தேவாலயமோ எனது வாழ்வில் பெரும் பங்கு வகித்ததில்லை.
18 வயதாக இருந்த போது ஹோட்டல் ஒன்றில் நிர்வாகியாகப் பணியாற்றும் மொரோக்கோவைச் சேர்ந்த அப்துல் எனும் முஸ்லிம் இளைஞரைச் சந்தித்தேன்.
ஹோட்டல் ஒன்றில் தேநீர் விருந்துக்காக செல்ல வருமாறு அவர் அழைத்தார். அந்த முதல் சந்திப்பு முடிந்ததும் மீண்டும் ஒரு முறை சந்திக்கலாம் என்று அவர் அழைப்பு விடுத்தார். இவ்வாறு சுமார் 3 தடவைகள் சந்தித்த பின்னர் நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ வேண்டும் என விரும்பினோம்.
இருப்பினும் அப்துலின் வாழ்க்கை முறைபற்றி நான் அறிந்து கொள்ள விரும்பினேன். அதனால் இஸ்லாம் பற்றி அதிகமாகத் தேடிப் படித்தேன். அப்போதுதான் நான் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் என விரும்பினேன்.
கடந்த வருடம் முதல் நான் ஹிஜாப் அணியத் தொடங்கியுள்ளேன். இந்த வருட ஆரம்பத்தில்தான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
நான் இப்போது இஸ்லாமிய பெருநாள்களை கொண்டாடுகிறேன். அதேபோன்று கிறிஸ்மஸின் போது எனது பெற்றோருடன் இணைந்து ஹலாலான இரவு உணவையும் அருந்துகிறேன்.
நான் இஸ்லாத்தின் வரையறைகளை விரும்புகிறேன். நான் சுவர்க்கம் செல்வேன் என்றும் எதிர்பார்க்கிறேன்.

 ஜெய்ன் செம்ப் (28)
கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இஸ்லாத்தைத் தழுவி தனது பெயரை "ஆமினா'வாக மாற்றிக்கொண்ட ஜெய்ன் செம்ப் பிரித்தானியாவின் மென்செஸ்டர் நகரில் சமூக ஒத்துழைப்பு பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றுகிறார்.
கடமையின்போது கூட ஹிஜாப் அணிந்து வீதியில் வலம்வரும் இவர், வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காகச் செல்ல வேண்டும் என்பதற்காக மேலதிக நேரங்களிலும் பணியாற்றுகிறார். "டுவிட்டர்' இணையத்தளம் மூலமõக முஸ்லிம்களோடு கருத்துப் பரிமாறல்களில் ஈடுபட்ட போதே தனக்கு இஸ்லாம் அறிமுகமானதாகக் குறிப்பிடும் ஜெய்ன் செம்ப் உள்ளூர் பள்ளிவாசல் ஒன்றின் "டுவிட்டர்' கணக்கை நிர்வகிக்கும் முஹம்மது மன்சூர் என்பவரே இஸ்லாம் பற்றி தனக்கு அதிகம் தெரிந்துகொள்ள உதவியவர் என்றும் குறிப்பிடுகிறார்.
இனி இஸ்லாம் பற்றி ஜெய்ன் சொல்வதைக் கேளுங்கள்.
இஸ்லாம் பெண்களை "சமையலறை அடிமைகளாகவே' வைத்திருக்கிறது என்றே நான் முன்பு எண்ணியிருந்தேன். ஆனால் இப்போதுதான் இஸ்லாம் எந்தளவு தூரம் சகிப்புத் தன்மை உடையது, மற்றவர்களுக்கு மதிப்பளிக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.
எனது கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடிய வேறு எந்தவொரு சமயத்தையும் என்னால் அந்தத் தருணத்தில் காண முடியவில்லை. இஸ்லாத்தைத் தவிர அதனால்தான் இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பினால் நான் காதலில் வீழ்ந்துவிட்டேன். நான் இஸ்லாத்தை எனது வாழ்க்கைநெறியாக ஏற்றுக் கெண்டுள்ள போதிலும் எனது குடும்பத்தினரும் சக பணியாளர்களும் என்னை விட்டும் பிரிந்து சென்று விடவில்லை. எனது கணவரும் இரு பிள்ளைகளும் கத்தோலிக்கர்களாகவே இருக்கிறார்கள். அவர்களும் இஸ்லாத்தைத் தழுவவேண்டும் என்று நான் ஒருபோதும் நிர்ப்பந்திக்கப்போவதில்லை.
நான் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து எனது குடும்பத்தினர், உறவினர்கள் சந்தோஷமடைகிறார்கள். நான் ஹிஜாப் அணிந்தே பொலிஸ் கடமையை ஆற்றுகிறேன். இது எனக்கும் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஒரு புது அனுபவம். பொலிஸில் கடமையாற்றும் முஸ்லிம் பெண்கள் கடமையின் போது "ஹிஜாப்' அணிவது குறித்த ஒழுங்கு விதிகள் சிலவற்றை நான் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.நான் என்னைப் பற்றி வெளிப்படையாகக் கூறிக்கொள்வதன் மூலமாக முஸ்லிம் பெண்கள் பொலிஸில் பணியாற்ற முடியும் என்பதை வெளிப்படுத்த விரும்புகிறேன். இதன் மூலம் இஸ்லாம் தொடர்பான தவறான அபிப்பிராயங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என எண்ணுகிறேன்.

 க்ளையர் ஈவன்ஸ் (24)
சிலருக்கு காதல்தான் இஸ்லாத்தைத் தெரியப்படுத்துகிறது. ஆனால் இவரது வாழ்வில் ஏற்பட்ட "காதல் முறிவு' தான் இவருக்கு இஸ்லாத்தை பற்றி அறியும் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் நகரில் வசிக்கும் க்ளைமர் ஈவன்ஸ், கடந்த வருடம் ஜூலை மாதம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
நான் காதலித்த முஸ்லிம் நபர் என்னைக் கைவிட்டுச் சென்ற போது இஸ்லாம் மிக மோசமானதும் இரக்கமற்றதுமான மார்க்கம் என்றே நான் கருதினேன்.ஆனால் எனது தாயார்தான் அது தப்பான எண்ணம் என்பதை எனக்குப் புரிய வைத்தார். நான் காதலித்த நபர் இஸ்லாத்தின் அடிப்படைகள் எதனையும் தனது வாழ்வில் கடைப்பிடிக்கவில்லை என்பதை தாய் தான் எனக்கு விளக்கிக் கூறினார்.
அதன் பிற்பாடுதான் இஸ்லாம் அமைதியும் சமாதானத்தையும் ஊக்குவிக்கும் மார்க்கம் என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.
இஸ்லாத்தைத் தழுவும் வரைக்கும் எந்தவொரு மதத்தையும் நான் வாழ்வில் பின்பற்றியிருக்கவில்லை. நான் கடவுள் மீது நம்பிக்கை கொள்ளவுமில்லை. நான் இப்போது எனது தலையை மறைத்துக்கொள்கிறேன். ஹிஜாப் அணிகிறேன். இது எனது வாழ்வில் நான் எடுத்த மிகப்பெரும் தீர்மானம். எனது தந்தை நான் ஹிஜாப் அணிவதை விரும்பவில்லை. அதனால் அவரோடு இருக்கும் காலங்களில் மாத்திரம் நான் ஹிஜாப் அணிவதை தவிர்த்துக்கொள்கிறேன்.
நான் இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்ப காலங்களில் பல்வேறு விதமான தேவையற்ற விமர்சனங்களை எதிர்கொண்டேன். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக எனக்குள் மிகுந்த நம்பிக்கை வளர்ந்து வருகிறது. இப்போது நான் தினமும் தொழுகிறேன். வாரத்தில் ஒரு தடவை பள்ளிவாசலுக்கும் செல்கிறேன்.
நான் எனது பெயரை சாபிர் என மாற்றிக்கொண்டுள்ளேன். இருப்பினும் "க்ளையர்' எனும் எனது பழைய பெயரையும் பயன்படுத்துகிறேன்.எனது வாழ்க்கைத் துணையையும் நான் இப்போது தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவரும் முஸ்லிம்தான். ஆனால் நாங்கள் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இஸ்லாம் என்னை ஒரு சாந்தமான பெண்ணாக மாற்றியிருக்கிறது. இப்போதுதான் எனது வாழ்வில் முதன்முறையாக ஒரு பூரண திருப்தியைக் காணுகிறேன்.
நான் இஸ்லாத்தைத் தழுவியதால் முன்பிருந்த வாழ்க்கையில் அனுபவித்த எவற்றையும் இழந்துவிடவில்லை. ஆனால் இப்போது பன்றி இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்துவிட்டேன்.

 ஆயிஷா ஒலுமைட் (24)
2009இல் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த சமயம் இஸ்லாத்தைத் தழுவிய இவரது இயற்பெயர் இயூனிஸ். பிரட்டனின் எடின்பேர்க் நகரைச் சேர்ந்த இவர் தான் இஸ்லாத்தைத் தழுவிய கதையை இப்படிச் சொல்கிறார்.
"இஸ்லாத்தைத் தழுவ முன்பு நான் ஒரு கிறிஸ்தவ பெண்ணாகவே இருந்தேன். எனது குடும்பம் மேற்கு ஆபிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. அங்கு இஸ்லாமும் கிறிஸ்தவமும் பின்பற்றப்படுகின்ற போதிலும் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் பாடத்தைக் கற்ற போதுதான் இஸ்லாம் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் இஸ்லாம் மிகவும் தீவிரப்போக்கு கொண்ட மார்க்கம் என்றே நான் எண்ணியிருந்தேன். ஆனால் நான் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்த போது என்னையறியாமலேயே அதில் வீழ்ந்து விட்டேன்.
இயற்கை மற்றும் விஞ்ஞானம் தொடர்பில் குர்ஆன் கூறும் விளக்கங்களால் நான் ஆகர்ஷிக்கப்பட்டேன். விஞ்ஞானம் தொடர்பில் உங்களால் விளக்க முடியாத பல்வேறு கேள்விகளுக்கும் குர்ஆனும் இஸ்லாமும் எனக்கு விடை தந்தன.
15 வயதாக இருக்கும் போதே நான் மொடலிங் துறைக்குள் நுழைந்தேன். உதைபந்தாட்டம், மெய்வல்லுனர் துறைகளில் ஈடுபõடு காட்டிய போதிலும் "நவநாகரீக மொடலிங்' துறையிலேயே கூடுதலாக எனது கவனத்தைச் செலுத்தினேன். ஆனால், நான் இஸ்லாத்தைத் தழுவிய பின்புதான் அழகு என்பதன் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து கொண்டேன்.
ஆரம்பத்தில் நான் ஒரு நவநாகரீக பெண்ணாக இருந்துவிட்டு பின்னர் முஸ்லிம்களோடு எவ்வாறு இணைந்துகொள்வது என்பது பற்றி சற்று சங்கடப்பட்டேன். ஆனால் எனது முஸ்லிம் சகோதரி ஒருவர்தான் எனக்கு வழிகாட்டினார். இஸ்லாம் ஒரு போதும் தீவிரப் போக்குடைய மார்க்கம் அல்ல எனவும் இஸ்லாத்தை தீவிரப் போக்குடைய மார்க்கமாக பார்ப்பது தவறு என்றும் அவர் சொன்னார்.
நான் இப்போது எனது வாழ்வில் 99 வீதமான நேரத்திலும் தலையை மறைத்துக்கொள்கிறேன். நான் இப்போது அரை நிர்வாண ஆடைகளை அணிவதை தவிர்த்துவிட்டேன்.
நான் தினமும் தொழுகிறேன். அவ்வப்போது பள்ளிவாசலுக்கும் செல்கிறேன். விரைவில் குடும்ப வாழ்வை ஆரம்பிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் நான் ஒருபோதும் முஸ்லிமல்லாத ஒருவரை திருமணம் முடிக்கப்போவதில்லை.

 
இதையும் பார்க்க:-


 
சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்! (காதலர்கள் கொண்டாடும் காம இச்சை தினம்) அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம் (சபிக்கப்பட்ட ஷைத்தானின் எல்லா தீமைகளிலிருந்தும் அல்லாஹுவிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்). ஆதமின் சந்ததிகளே! ஷைத்தான் சபிக்கப்பட்டவனாக இருக்கிறான் அவன் நம் ஆதி பெற்றோரான ஆதம் மற்றும் ஹவ்வா(அலை) ஆகியோரை அல்லாஹ்விடமிருந்து பிரித்து சுவனத்திலிருந்து வெளியேற்றி சுகம் கண்டவன் இப்படிப்பட்ட ஷைத்தான்தான் மீண்டும் காதல் என்னும் காம மாயவலையில் நம் இளம்பிள்ளைகளை சிக்கவைத்து அவர்களின பெற்றோர்களை விட்டும் பிரித்து சுகம் காண துடித்துக் கொண்டிருக்கிறான்.

                                   தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
சேவலை நீங்கள் ஏசாதீர்கள். நிச்சயமாக அது தொழுகைக்காக (மக்களை) எழுப்புகின்றது.சேவலானது புத்தி கதிப்புடையதாகும். அல்லாஹ்வை அதிகம் “திக்ர்”செய்யும். அதன் கண்கள் உறங்கும் ஆனால் அதன் கல்பு உறங்காது.மேலும் அது தொழுகையின் வக்துக்களை அறியும்.

“வெள்ளைச் சேவலாகிறது எனக்குதோழனாய் இருக்குமென்றும், அது தனது வீட்டையும் சூழலிலுள்ள 16 வீடுகளையும் பாதுகாத்துக்கொள்ளுமென்றும், நீங்கள் சேவலுடைய சத்தத்தைக் கேட்டீர்க...ளென்றால் அல்லாஹுத்தஆலாவிடம் அவனுடைய வருசையில் நின்றும் கேட்டுக்கொள்ளுங்கள் ஏனென்றால் அது ஒரு மலக்கைக் காணுகின்றது.


பின் வரும் துஆவை யார் தினமும் நூறு தடவை ஓதி வருகிறாரோ அவருக்கு பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும். அன்று மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ 
ஆதாரம்: புகாரி 3293
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹு அலா குல் ஷையின் கதீர்.

இதன் பொருள்:

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும் அவனுக்குரியதே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

கழிவறையில் நுழையும் போது

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(B)(க்)க மினல் குபு(B)ஸி வல் கபா(B)யிஸி.

ஆதாரம்: புகாரி 6322
இதன் பொருள் :
இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

இதையும் பார்க்க:-
                             * இறந்தவருக்காகச் செய்யும் துஆ இறந்தவரின் இல்லம் செ...
                             * நல்ல காரியம்நடக்க,மணமக்களை வாழ்த்த,இஸ்லாத்தை ஏற்றவ...
                             * பயணத்தின் போது,வெளியூரில் தங்கும் போது ஓதும் துஆ
                             * போர்கள் மற்றும் கலவரத்தின் போது اللَّهُمَّ مُنْزِل...
                             * மழை பொழியும் போது,மழை வேண்டும் போது
                             * கணவனை இழந்தவர்கள்,இழப்புகள்,மரண துன்பத்தின் போது

 

இறந்தவருக்காகச் செய்யும் துஆ

இறந்தவரின் இல்லம் சென்றால் பின்வரும் துஆவை செய்ய வேண்டும். ................ இட்ட இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

اللَّهُمَّ اغْفِرْ لِ ---- وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيهِ

அல்லாஹும்மக்பி(F)ர் ................... வர்ப(F)ஃ தரஜ(த்)தஹு பி(F)ல் மஹ்திய்யீன வஃக்லுப்(F) ஹு பீ(F) அகிபி(B)ஹி பி(F)ல் காபிரீன் வக்பி(F)ர் லனா வலஹு யாரப்ப(B)ல் ஆலமீன் வப்(F)ஸஹ் லஹு பீ(F) கப்(B)ரிஹி வநவ்விர் லஹு பீ(F)ஹி.

இதன் பொருள் : இறைவா! ..................... மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
ஆதாரம்: முஸ்லிம் 1528


ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنْ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ مِنْ عَذَابِ النَّارِ

அல்லாஹும்மபி(F)ர் லஹு வர்ஹம்ஹு வஆபி(F)ஹி வபு(F) அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பி(B)ல்மாயி வஸ்ஸல்ஜி வல்ப(B)ரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்ப(B)ல் அப்(B)யள மினத் தனஸி வ அப்(B)தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்ஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபி(B)ல் கப்(B)ரி

இதன் பொருள் : இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிருந்து காப்பாயாக!  ஆதாரம்: முஸ்லிம் 1600


கப்ருகளை ஸியாரத் செய்யும் போது

السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ
அஸ்ஸலாமு அலை(க்)கும் தாரகவ்மின் மூமினீன் வஇன்னா இன்ஷா அல்லாஹு பி(B)கும் லாஹி(க்)கூன்.

இதன் பொருள் : 
இறை  நம்பிக்கையுள்ள சமுதாயமே! உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே. ஆதாரம்: முஸ்லிம் 367

அல்லது

السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَدًا مُؤَجَّلُونَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ
அஸ்ஸலாமு அலை(க்)கும் தார கவ்மின் மூமினீன் வஅதா(க்)கும் மா தூஅதூன கதன் முஅஜ்ஜலூன வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(B)கும் லாஹி(க்)கூன்.
                                          ஆதாரம்: முஸ்லிம் 1618

அல்லது  


السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ
அஸ்ஸலாமு அலா அஹ்த் தியாரி மினல் மூமினீன் வல் முஸ்மீன் வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல்முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(B)(க்)கும் லலாஹி(க்)கூன்.


இதன் பொருள் :-முஸ்லிம்களான மூமின்களான உங்கள் மீது சாந்தி நிலவட்டும். நம்மில் முந்திச் சென்றவர்களுக்கும், பிந்தி வருவோருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே.  ஆதாரம்: முஸ்லிம் 1619

அல்லது

السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلَاحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمْ الْعَافِيَةَ
அஸ்ஸலாமு அலை(க்)கும் அஹ்லத் தியாரி மினல் மூமினீன வல் முஸ்மீன வ இன்னா இன்ஷா அல்லாஹு லலாஹி(க்)கூன். அஸ்அலுல்லாஹ லனா வல(க்)குமுல் ஆபி(F)ய(த்)த

இதன் பொருள் :- முஸ்லிம்களான, மூமின்களான உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே. எங்களுக்கும் உங்களுக்கும் நல்லதை அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்.
  ஆதாரம்: முஸ்லிம் 1620

இதையும் பார்க்க:-
                            * தினமும் ஓத வேண்டிய துஆ
                            * நோயாளியை விசாரிக்க,தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்
                            * சாப்பிடும் போதும், பருகும் போதும் ஓதும் துஆ
                            * பள்ளிவாசல்,சபையை முடிக்கும் போது ஓதும் துஆ
                            * கழிவறையில்,வீட்டிருந்து,தினமும் ஓத வேண்டிய துஆ
 

பயணத்தின் போது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை

அல்லாஹு அக்ப(B)ர் - அல்லாஹு அக்ப(B)ர் -
அல்லாஹு அக்ப(B)ர் எனக் கூறுவார்கள். பின்னர்.

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

ஸுப்(B)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(B)னா லமுன்கபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(F) ஸப(F)ரினா ஹாதா அல்பி(B)ர்ர வத்தக்வா வமினல் அம மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(F)ரனா ஹாதா வத்வி அன்னா பு(B)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(B) பி(F)ஸ்ஸப(F)ரி வல் கலீப(F)(த்)து பி(F)ல் அஹ் அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(F)ரி வகாப (B)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(B) பி(F)ல் மா வல் அஹ் எனக் கூறுவார்கள்.

இதன் பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திருந்தும், மோசமான தோற்றத்திருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்ம் 2392

பயணத்திருந்து திரும்பும் போது

மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து
آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ 
ஆயிபூ(B)ன தாயிபூ(B)ன ஆபி(B)தூன ரப்பி(B)னா ஹாமிதூன்.

இதன் பொருள் : எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392


வெளியூரில் தங்கும் போது

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
அவூது பி(B) (க்)கமாதில்லாஹித் தம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்

இதன் பொருள் : முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்தின் தீங்கை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.                                           
ஆதாரம்: முஸ்லிம் 4881, 4882இதையும் பார்க்க:-
                             * தூங்கும் போது ஓத வேண்டியவை
                             * இவ்வுலக வாழ்க்கை அறிவோம் !
                             * பயணத்தின் போது,வெளியூரில் தங்கும் போது ஓதும் துஆ
                             * தினமும் ஓத வேண்டிய துஆ
                             * பள்ளிவாசல்,சபையை முடிக்கும் போது ஓதும் துஆ

 
போர்கள் மற்றும் கலவரத்தின் போதுاللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اللَّهُمَّ اهْزِمْ الْأَحْزَابَ اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(B), ஸரீஅல் ஹிஸாபி(B), அல்லாஹும்மஹ்ஸிமில் அஹ்ஸாப்(B), அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும்.

இதன் பொருள் : இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக! ஆதாரம்: புகாரி 2933, 4115

அல்லது
اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الْأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ

அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(B) வமுஜ்ரியஸ் ஸஹாபி(B) வஹாஸிமல் அஹ்ஸாபி(B) இஹ்ஸிம்ஹும் வன்ஸுர்னா அலைஹிம்.

இதன் பொருள் : இறைவா! வேதத்தை அருளியவனே! மேகத்தை நடத்திச் செல்பவனே! எதிரிகளைத் தோல்வியுறச் செய்பவனே! இவர்களைத் தோல்வியுறச் செய்! எங்களுக்கு உதவி செய்! ..ஆதாரம்: புகாரி 2966, 3024

புயல் வீசும் போதுاللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ(F)ஹா வகைர மா உர்ஸிலத் பி(B)ஹி. வஅவூது பி(B)(க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ(F)ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(B)ஹி

இதன் பொருள் : இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக
இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.  ஆதாரம்: முஸ்ம் 1496


இதையும் பார்க்க:-
                              * பயணத்தின் போது,வெளியூரில் தங்கும் போது ஓதும் துஆ
                              * தஹஜ்ஜுத் தொழுகைக்காக,இரவில் விழிப்பு வந்தால் ஓத வே...
                              * தூங்கும் போது ஓத வேண்டியவை
                              * மழை பொழியும் போது,மழை வேண்டும் போது
                              * பயணத்தின் போது,வெளியூரில் தங்கும் போது ஓதும் துஆ

 

மழை வேண்டும் போது
இரு கைகளையும் உயர்த்தி

اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا
அல்லாஹும்மஸ்கினா
அல்லாஹும்மஸ்கினா
அல்லாஹும்மஸ்கினா                                     எனக் கூற வேண்டும்.

இதன் பொருள் :- இறைவா! எங்களுக்கு மழையைத் தா. ஆதாரம்: புகாரி 1013
அல்லது

اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا
அல்லாஹும்ம அகிஸ்னா
அல்லாஹும்ம அகிஸ்னா
அல்லாஹும்ம அகிஸ்னா
எனக் கூற வேண்டும்.

பொருள்: இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு!   ஆதாரம்: புகாரி 1014


அளவுக்கு மேல் மழை பெய்தால்
اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா
என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.

இதன் பொருள் :- இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே! ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342
அல்லது
اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ وَالْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(B) வல் ஆஜாமி வள்ளிராபி(B) வல் அவ்திய(த்)தி வ மனாபி(B)திஷ் ஷஜரி

இதன் பொருள் :- இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக.ஆதாரம்: புகாரி 1013, 1016
அல்லது
اللَّهُمَّ عَلَى رُءُوسِ الْجِبَالِ وَالْآكَامِ وَبُطُونِ الْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(B) வல் ஆகாமி வபு(B)தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(B)திஷ் ஷஜரி.... ஆதாரம்: புகாரி 1017

மழை பொழியும் போது

اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا
அல்லாஹும்ம ஸய்யிப(B)ன் நாபி(F)அன்

இதன் பொருள் : இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு!
ஆதாரம்: புகாரி 1032இதையும் பார்க்க:-
                           * நோயாளியை விசாரிக்க,தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்
                           * தூங்கும் போது ஓத வேண்டியவை
                           * இவ்வுலக வாழ்க்கை அறிவோம் !
                           * கழிவறையில்,வீட்டிருந்து,தினமும் ஓத வேண்டிய துஆ
                           * தஹஜ்ஜுத் தொழுகைக்காக,இரவில் விழிப்பு வந்தால் ஓத வே...

 

மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது

اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتْ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتْ الْوَفَاةُ خَيْرًا لِي       
அல்லாஹும்ம அஹ்யினீ மா கான(த்)தில் ஹயா(த்)து கைரன்லீ வதவப்ப(F)னீ இதா கான(த்)தில் வபா(F)(த்)து கைரன் லீ

இதன் பொருள் : -இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்! எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி 5671, 6351இழப்புகள் ஏற்படும் போது
இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 1525

اللَّهُ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا

இன்னா ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ(F) முஸீப(B)(த்)தி வ அக்ப்(F) லீ கைரன் மின்ஹா

இதன் பொருள் :- நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூ தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக. 
ஆதாரம்: முஸ்லிம் 1525கணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது

اللَّهُمَّ اغْفِرْ لِي وَلَهُ وَأَعْقِبْنِي مِنْهُ عُقْبَى حَسَنَةً
அல்லாஹும்மக்பி(F)ர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்ப(B)ன் ஹஸனதன்

இதன் பொருள் :- இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவரை விடச் சிறந்தவரை எனக்கு அளிப்பாயாக! 
ஆதாரம்: முஸ்லிம் 1527

தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்
بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

பி(B)ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B)னா வஜன்னிபி(B)ஷ் ஷைத்தான மா ரஸக்தனா

இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.
ஆதாரம்: புகாரி 141, 3271, 6388, 7396

அல்லது
بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنِي الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

பி(B)ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B)னியஷ் ஷை(த்)தான வஜன்னிபிஷ் ஷை(த்)தான மாரஸக்(த்)தனா

இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து என்னைக் காப்பாயாக. எனக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.
ஆதாரம்: புகாரி 5165, 3283

நோயாளியை விசாரிக்கச் சென்றால்

اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لَا شَافِيَ إِلَّا أَنْتَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
அல்லாஹும்ம ரப்ப(B)ன்னாஸி முத்ஹிபல் ப(B)ஃஸி இஷ்பி(F) அன்தஷ் ஷாபீ(F) லா ஷாபி(F)ய இல்லா அன்(த்)த ஷிபா(F)அன் லா யுகாதிரு ஸகமா.

இதன் பொருள் : இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து! எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5742

அல்லது

اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
அல்லாஹும்ம ரப்ப(B)ன்னாஸி அத்ஹிபில் ப(B)ஃஸ இஷ்பி(F)ஹி வஅன்தஷ் ஷாபீ(F) லாஷிபா(F)அ இல்லா ஷிபா(F)வு(க்)க ஷிபா(F)அன் லா யுகாதிரு ஸகமா.

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து! ஆதாரம்: புகாரி 5743

அல்லது நோயாளியின் உடல் கையை வைத்து

بِسْمِ اللَّه
பி(B)ஸ்மில்லாஹ்

என்று மூன்று தடவை கூறி விட்டு
أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِر
அவூது பி(B)ல்லாஹி வகுத்ர(த்)திஹி மின் ஷர்ரி மாஅஜிது வஉஹாதிரு
என்று ஏழு தடவையும் கூற வேண்டும்.

இதன் பொருள் : நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்ம் 4082

அல்லது

لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ  ..லா ப(B)ஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்
இதன் பொருள் : கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும்
எனக் கூறலாம்.
ஆதாரம்: புகாரி 3616


 

சாப்பிடும் போதும், பருகும் போதும்

بِسْمِ اللَّه
பி(B)ஸ்மில்லாஹ்
அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5376, 5378

பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்

சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்
بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ
பிஸ்மில்லாஹி பீ(F) அவ்வஹி வ ஆகிரிஹி
எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: திர்மிதீ 1781


சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்
الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا  
அல்ஹம்து ல்லாஹி கஸீரன் தய்யிப(இ)ன் முபா(B)ர(க்)கன் பீ(F)ஹி ஃகைர மக்பி(F)ய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்ப(B)னா

இதன் பொருள் :- தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனது அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமன்று. அது தேவையற்றதுமல்ல.
ஆதாரம்: புகாரி 5458


அல்லது

الْحَمْدُ لِلَّهِ  அல்ஹம்து ல்லாஹ் என்று கூறலாம். ஆதாரம்: முஸ்லிம் 4915


உணவளித்தவருக்காக

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ 
அல்லாஹும்ம பா(B)ரிக் லஹும் பீ(F)மா ரஸக்தஹும் வஃக்பி(F)ர் லஹும் வர்ஹம்ஹும்.

இதன் பொருள் :இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 3805இதையும் பார்க்க:-
                        * தூங்கும் போது ஓத வேண்டியவை
                        * காலையிலும்,மாலையிலும் ஓதும் துஆ
                        * நோயாளியை விசாரிக்க,தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்
                        * நல்ல காரியம்நடக்க,மணமக்களை வாழ்த்த,இஸ்லாத்தை ஏற்றவ...
                        * இறந்தவருக்காகச் செய்யும் துஆ இறந்தவரின் இல்லம் செ... 

 
சபையை முடிக்கும் போது
ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்: திர்மிதீ 3355

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(B) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பி(F)ரு(க்)க வஅதூபு(B) இலை(க்)க.

இதன் பொருள் :- இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.

அல்லது கீழ்க்கண்ட துஆவையும் ஓதலாம்.

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

ஸுப்(B)ஹான(க்)கல்லாஹும்ம வபி(B)ஹம்தி(க்)க அஸ்தக்பி(F)ரு(க்)க வ அதூபு(B) இலை(க்)க.

இதன் பொருள் வருமாறு:- இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.  ஆதாரம்: நஸயீ 1327

பள்ளிவாசலுக்குள் நுழையும் போது
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
அல்லாஹும்மப்(F)தஹ் லீ அப்(B)வாப(B) ரஹ்ம(த்)தி(க்)க

இதன் பொருள் :- இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.                 
ஆதாரம்: முஸ்லிம் 1165

பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(F)ழ்ளி(க்)க

இதன் பொருள் :- இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். 
ஆதாரம்: முஸ்லிம் 1165


 

தினமும் ஓத வேண்டிய துஆ

பின் வரும் துஆவை யார் தினமும் நூறு தடவை ஓதி வருகிறாரோ அவருக்கு பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும். அன்று மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ 
ஆதாரம்: புகாரி 3293
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹு அலா குல் ஷையின் கதீர்.

இதன் பொருள்:- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும் அவனுக்குரியதே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

கழிவறையில் நுழையும் போது

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(B)(க்)க மினல் குபு(B)ஸி வல் கபா(B)யிஸி.                      ஆதாரம்: புகாரி 6322

இதன் பொருள் :- இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

கழிவறையிருந்து வெளியேறும் போது

غُفْرَانَكَ
ஃகுப்(F)ரான(க்)க .......ஆதாரம்: திர்மிதீ 7
இதன் பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்.

வீட்டிருந்து வெளியே செல்லும் போது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள்.
ஆதாரம்: நஸயீ 5391, 5444
بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ  

பி(B)ஸ்மில்லாஹி ரப்பி(B) அவூது பி(B)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய

இதன் பொருள்:- அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


இதையும் பார்க்க:-
                             * மழை பொழியும் போது,மழை வேண்டும் போது
                             * பள்ளிவாசல்,சபையை முடிக்கும் போது ஓதும் துஆ
                             * தஹஜ்ஜுத் தொழுகைக்காக,இரவில் விழிப்பு வந்தால் ஓத வே...
                             * தூங்கும் போது ஓத வேண்டியவை
                             * இவ்வுலக வாழ்க்கை அறிவோம் ! 

                                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்ததும் ஓத வேண்டிய துஆ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தஹஜ்ஜுத் தொழுகைக்கு எழுந்தவுடன் கீழ்க்காணும் துஆவை ஓதுவார்கள்.

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ حَقٌّ وَقَوْلُكَ حَقٌّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ وَالنَّبِيُّونَ حَقٌّ وَمُحَمَّدٌ حَقٌّ اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَبِكَ آمَنْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
ஆதாரம்: புகாரி 6317, 7429, 7442, 7499 நஸாயி 1601
அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து அன்(த்)த நூருஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி வமன் பீ(F)ஹின்ன, வல(க்)கல் ஹம்து அன்(த்)த கையிமுஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி, வல(க்)கல் ஹம்து அன்தல் ஹக்கு, வ வஃது(க்)க ஹக்குன், வ கவ்லு(க்)க ஹக்குன், வ (க்)காவு(க்)க ஹக்குன், வல் ஜன்ன(த்)து ஹக்குன், வன்னாரு ஹக்குன், வஸ்ஸாஅ(த்)து ஹக்குன், வன்னபி(B)ய்யூன ஹக்குன், வ முஹம்மதுன் ஹக்குன், அல்லாஹும்ம ல(க்)க அஸ்லம்(த்)து, வ அலை(க்)க தவக்கல்(த்)து, வபி(B)(க்)க ஆமன்(த்)து, வஇலை(க்)க அனப்(B)(த்)து, வபி(B)(க்)க காஸம்(த்)து, வஇலை(க்)க ஹாகம்(த்)து ப(F)க்பி(F)ர் லீ மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து அன்(த்)தல் முகத்திமு வஅன்(த்)தல் முஅக்கிரு லாயிலாஹ இல்லா அன்(த்)த வலா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பி(B)ல்லாஹி.

இதன் பொருள்:- இறைவா! உனக்கே புகழனைத்தும். வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு இடைப்பட்டவைகளுக்கும் நீயே ஒளியாவாய். உனக்கே புகழனைத்தும். வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப் பட்டவைகளையும் நிர்வகிப்பவன் நீயே. உனக்கே புகழனைத்தும். நீயே மெய்யானவன். உனது வாக்குறுதி மெய்யானது. உன் சொல் மெய்யானது. உன்னை (நாங்கள்) சந்திப்பது மெய்யானது. சொர்க்கம் மெய்யானது. நரகமும் மெய்யானது. யுக முடிவு நாளும் மெய்யானது. நபிமார்கள் மெய்யானவர்கள். முஹம்மதும் மெய்யானவர். இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன் மீது நம்பிக்கை வைத்தேன். உன்னையே நம்பினேன். உன்னிடமே மீள்கிறேன். உன்னைக் கொண்டே வழக்குரைக்கிறேன். உன்னிடமே தீர்ப்புக் கோருகிறேன். எனவே நான் முன் செய்தவைகளையும், பின்னால் செய்யவிருப்பதையும், நான் இரகசிய மாகச் செய்ததையும், நான் வெளிப்படையாகச் செய்ததையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
 
 
இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியவை

ஒருவருக்கு இரவில் விழிப்பு வந்து கீழ்க்காணும் துஆவை ஓதி மன்னிப்புக் கேட்டால் அதை இறைவன் ஏற்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

َ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ ثُمَّ قَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي  
ஆதாரம்: புகாரி 1154

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல் ஷையின் கதீர். அல்ஹம்து ல்லாஹி வஸுப்(இ)ஹானல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்ப(இ)ர். வலா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பி(இ)ல்லாஹி, அல்லாஹும்மஃக்பி(எ)ர்லீ.

இதன் பொருள்:- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். அல்லாஹ் தூயவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். நன்மைகள் செய்வதும், தீமைகளிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் உதவியால் தான். இறைவா என்னை மன்னித்து விடு.


இதையும் பார்க்க:-
                            * பயணத்தின் போது,வெளியூரில் தங்கும் போது ஓதும் துஆ
                            * மழை பொழியும் போது,மழை வேண்டும் போது
                            * பள்ளிவாசல்,சபையை முடிக்கும் போது ஓதும் துஆ
                            * நோயாளியை விசாரிக்க,தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்
                            * கழிவறையில்,வீட்டிருந்து,தினமும் ஓத வேண்டிய துஆ

 
 
 

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget