போர்கள் மற்றும் கலவரத்தின் போதுاللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اللَّهُمَّ اهْزِمْ الْأَحْزَابَ اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(B), ஸரீஅல் ஹிஸாபி(B), அல்லாஹும்மஹ்ஸிமில் அஹ்ஸாப்(B), அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும்.

இதன் பொருள் : இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக! ஆதாரம்: புகாரி 2933, 4115

அல்லது
اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الْأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ

அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(B) வமுஜ்ரியஸ் ஸஹாபி(B) வஹாஸிமல் அஹ்ஸாபி(B) இஹ்ஸிம்ஹும் வன்ஸுர்னா அலைஹிம்.

இதன் பொருள் : இறைவா! வேதத்தை அருளியவனே! மேகத்தை நடத்திச் செல்பவனே! எதிரிகளைத் தோல்வியுறச் செய்பவனே! இவர்களைத் தோல்வியுறச் செய்! எங்களுக்கு உதவி செய்! ..ஆதாரம்: புகாரி 2966, 3024

புயல் வீசும் போதுاللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ(F)ஹா வகைர மா உர்ஸிலத் பி(B)ஹி. வஅவூது பி(B)(க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ(F)ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(B)ஹி

இதன் பொருள் : இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக
இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.  ஆதாரம்: முஸ்ம் 1496


இதையும் பார்க்க:-
                              * பயணத்தின் போது,வெளியூரில் தங்கும் போது ஓதும் துஆ
                              * தஹஜ்ஜுத் தொழுகைக்காக,இரவில் விழிப்பு வந்தால் ஓத வே...
                              * தூங்கும் போது ஓத வேண்டியவை
                              * மழை பொழியும் போது,மழை வேண்டும் போது
                              * பயணத்தின் போது,வெளியூரில் தங்கும் போது ஓதும் துஆ

 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget