சேவல் அல்லாஹ்வை அதிஹம் (திக்ர்) செய்கிறது

                                   தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
சேவலை நீங்கள் ஏசாதீர்கள். நிச்சயமாக அது தொழுகைக்காக (மக்களை) எழுப்புகின்றது.சேவலானது புத்தி கதிப்புடையதாகும். அல்லாஹ்வை அதிகம் “திக்ர்”செய்யும். அதன் கண்கள் உறங்கும் ஆனால் அதன் கல்பு உறங்காது.மேலும் அது தொழுகையின் வக்துக்களை அறியும்.

“வெள்ளைச் சேவலாகிறது எனக்குதோழனாய் இருக்குமென்றும், அது தனது வீட்டையும் சூழலிலுள்ள 16 வீடுகளையும் பாதுகாத்துக்கொள்ளுமென்றும், நீங்கள் சேவலுடைய சத்தத்தைக் கேட்டீர்க...ளென்றால் அல்லாஹுத்தஆலாவிடம் அவனுடைய வருசையில் நின்றும் கேட்டுக்கொள்ளுங்கள் ஏனென்றால் அது ஒரு மலக்கைக் காணுகின்றது.கழுதை ஓலமிடுவதை கேட்டீர்களென்றால் ஷைத்தானைவிட்டும் அல்லாஹ்வைக்கொண்டு பாதுகாவல்தேடிக்கொள்ளுங்கள் ஏனெனில் கழுதை ஷைதானைக்கானுகின்றது”. நபிகள் நாயகம் முஹம்மத் ஸல் அவர்கள், கூறினார்கள்.

சேவலின் மருத்துவக்குணங்கள்

அதன் இரத்தம் அல்லது மூலையை பூச்சி ,விசஜந்துக்கள் தீண்டிய இடத்தில் பூசினால் சுகமுண்டாகும்.

அதன் இரத்தத்தை கண்ணில் அஞ்சனமிட்டால் கண்ணிலுள்ள வெள்ளையை போக்கிவைக்கும்.

அதன் பூவை கரித்து படுக்கையில் மோலுகின்ற(சிறு நீர் கழிக்கின்ற) சிரார்களுக்கு குடிப்பாட்டினால் பயன்கிடைக்கும்.

அதன் வலது இறக்கையினுடைய எலும்பை விடாத ஜுரத்திற்கும், இடது இறக்கையினுடைய எலும்பை நான்காமுறைக் காய்ச்சலுக்கும் கட்டிக்கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.

கர்ப்பம் தரிக்காத பெண் சேவலின் விதையைச் சுட்டு மாதவிடாய் நிகழ்ந்து துப்பரவாகுவதற்கு மூன்று நாட்களின் முன் சாப்பிட்டு கணவனுடன் சேர்ந்தால் அல்லாஹ்வின் நாட்டத்துடன் கர்ப்பமாவாள்.

பைத்தியக்காரனுக்கு வெள்ளை நிறம் அல்லது சிவப்பு நிறமுடைய சாவலின் பூவை புகைப்போட்டால் புதுமையான முறையில் அவனது பைத்தியம் நீங்கப்பெறுவான்.

அதன் பித்தைசெம்மறி ஆட்டின் கறியுடன் வெறும் வயிற்றில் குடித்தால் மறதி ஏற்படாது.

கனவில் சேவலைக் காண்டால்.

கனவில் சேவலைக்கண்டால் கத்தீப், முஅத்தின், காரீ போன்றோரைக்குறிக்கும்.நல்லவர்கள் பேரிலும் செய்தி அறிவிக்கின்றதாயிருக்கும்.சிலவேளைகளில் அதிகம் திருமணம் முடிக்கின்றவன் பேரிலும் சுட்டிக்காட்டும்.

இப்னு சீரீன் (றஹ்) அவர்களிடம் ஒரு மனிதன் வந்து “என் வீட்டில் ஒரு சாவல் வந்து புகுந்து கோதுமை வித்துகளை பொறிக்கித்திண்ணக் கன்டேன் என்று கூறினார்.

அப்போது அவர்கள் “உனக்கு களவுபோகும்” உன்பொருள் களவு போனால் எனக்கு அறிவி என்றார்கள். சில நாட்கள் கழித்து அம்மனிதன் வந்து நாயகமே! என் வீட்டில் இருந்த எனது விருப்பைக்காணவில்லை என்றான். அதை முஅத்தின் திருடியிருக்கின்றான். என்று இப்னு சீரீன் றஹ் அவர்கள் கூற முஅத்தினிடம் சென்று விரிப்பைக்கேட்டுப்பெற்றான்.

அல்லாஹ் ஒவ்வொரு படைப்பிலும் ஒவ்வொரு வகையான தனிச்சிறப்பை வைத்துள்ளான். அதிலும் விஷேடமாக சேவலில் பல சிறப்புத்தன்மைகளை இயற்கையாய் வைத்திருக்கின்றான்.சேவலை அறுத்து எமது நாவுக்கு ருசியாக்கும் ஒவ்வொருவரும் அதைப்பற்றிய நாயகத்தின் நன்மொழிகளை உற்றாய்வு செய்தால் சிலவேளைகளில் ஏன் நாம் அறுத்துச்சாப்பிடுகின்றோம்?? என்றும் எண்ணக்கூடும்.

அதன் விஷேட தன்மைகளை புரிந்துகொள்ள இந்த நபிமொழி மட்டுமே போதுமானதாகும்.

அர்சுக்கு கீழ் இரத்தினங்களால் இரகுள்ள ஒரு சேவல் இருக்கின்றது. அது எல்லா “சஹருடைய” நேரத்திலும் பாங்குசொல்லுகின்றது. அதன் சப்தத்தை இன்ஸ் ஜின்னினத்தை தவிர வானத்திலுள்ளவர்களும், பூமியிலுள்ளவையும் கேட்பார்கள். பூமியிலுள்ள சேவல்களும் அதன் சப்தம் கேட்டு சப்தமிடுகின்றன. என நபி மணி (ஸல்) அவர்கள் திருவுளமானார்கள்.

அறபிமொழியில் “தீக்” என்று சேவலுக்கும், “தஜாஜஹ்” என்று கோழிக்கும் சொல்லப்படும்.
இதையும் பார்க்க:-
(By:farisfana)

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget