கணவனை இழந்தவர்கள்,இழப்புகள்,மரண துன்பத்தின் போது

மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது

اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتْ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتْ الْوَفَاةُ خَيْرًا لِي       
அல்லாஹும்ம அஹ்யினீ மா கான(த்)தில் ஹயா(த்)து கைரன்லீ வதவப்ப(F)னீ இதா கான(த்)தில் வபா(F)(த்)து கைரன் லீ

இதன் பொருள் : -இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்! எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி 5671, 6351இழப்புகள் ஏற்படும் போது
இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 1525

اللَّهُ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا

இன்னா ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ(F) முஸீப(B)(த்)தி வ அக்ப்(F) லீ கைரன் மின்ஹா

இதன் பொருள் :- நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூ தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக. 
ஆதாரம்: முஸ்லிம் 1525கணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது

اللَّهُمَّ اغْفِرْ لِي وَلَهُ وَأَعْقِبْنِي مِنْهُ عُقْبَى حَسَنَةً
அல்லாஹும்மக்பி(F)ர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்ப(B)ன் ஹஸனதன்

இதன் பொருள் :- இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவரை விடச் சிறந்தவரை எனக்கு அளிப்பாயாக! 
ஆதாரம்: முஸ்லிம் 1527

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget