March 2013

 
பிறர் மனம் புண்படும்படி பரிகாசம் செய்வதையோ ஏமாற்றுவதையோ எச்சரிக்கும் வகையில் எழுதப்பட்ட ஆக்கம் உலகம் முழுவதும் ஏப்ரல் 1 சர்வதேச முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது அன்றைய தினத்தில் ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவதும், மற்றவர்களைக் கிண்டலடிப்பதும், மற்றவர்களை முட்டாள்களாக ஆக்க நினைப்பதும், நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்வதும், மற்றவர்களை ஏமாற்றி அதிர்ச்சிக்குள்ளாக்குவதும், நக்கலடிப்பதும், பரிகாசம்செய்வதும், கேலி செய்வதும் வாடிக்கையாக உலகம் முழுவதும் நடந்தேறிக்கொண்டிருக்கிறது.
முட்டாள்கள் தினம் உருவானதற்கான பல கட்டுக்கதைகளும் கற்பனைக்கதைகளும் சொல்லப்படுவதுண்டு அவற்றில் சிலவற்றைப் பார்த்து விட்டு உண்மையான வரலாற்றைப் பார்ப்போம்:

                                                தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

The mysteries behind the death of M.H.M.Ashraff

(உங்கள் நண்பர்களும் இதை வசிக்க SHARE பன்னுங்கள்)

... மறைவிற்கு சில நாட்களுக்கு முன்..

"அக்டோபர் 11ம் திகதியன்று எமது ஆதரவின்றி ஜனாதிபதியால் அரசாங்கம் அமைக்க முடியாது. நாங்கள் ரணிலுடன் கூட்டுசேர விரும்பவில்லை... எமது கைகளில் தான் விஷயம் இருக்கிறது..."

அஷ்ரப் இவ்வாறு கூறியது எதிர் வரும் பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி எதிர்பார்ப்புடன் சந்திரிக்காவின் தலைமையில் உள்ள "பொதுஜன ஐக்கிய முன்னணி" அரசாங்கத்தில் கூட்டு சேர்த்து தனது கட்சியை வலுவான நிலைமைக்கு இட்டுச் செல்லும் நோக்கிலேயாகும். எனினும் தமது கட்சி உறுப்பினர்களுடன் இவ்வாறு பலமாக எழுந்து நின்ற அவரால் தனது எதிர்பார்புக்களை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போனது. அரசியலில் இருந்து மற்றுமின்றி வாழ்க்கை பயனத்திலிருந்தும் அவரை ஓரம்கட்டுவதட்கு சில கொடிய சக்திகள் திட்டமிட்டிருந்தன. 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ம் திகதி வான்வெளியில் நடந்த ஓர் விபத்தில் அஷ்ரப் உயிர் துறந்தது அரசியல் உலகில் இன்னுமொரு மர்மத்தை மறைத்தவண்ணமே.

மத்திய மலைநாட்டில் அரசியல் பலம் நிறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சௌம்யமூர்த்தி தொண்டமான் இலங்கையின் அரசியல் களத்தில் அரசாங்கம் அமைக்கும் காரணகர்த்தாவாக நெடுங்காலமாக வாகை சூடிக்கொண்டிருந்தார். இவரது கட்சியே அரசாங்கத்தை அமைக்கும் பெரிய கட்சியை தீர்மானித்தது. எனினும் காலத்தின் மாற்றத்தால் எம்.எச்.எம். அஷ்ரப் தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட 'இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்' இலங்கையின் அரசாங்கம் அமைக்கும் பெரிய கட்சியை தீர்மானிக்கும்.


 பிரதான கட்சியாக உருமாறியது. 1989 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனது பலத்தை நிரூபித்ததுக் காட்டியது. 2000ஆம் ஆண்டு அக்டோபர் 10ம் திகதி நடக்கவிருந்த பொதுத் தேர்தலில் அஷ்ரபின் ஆதரவானது சந்திரிகா பண்டாரநாயகவிற்கு அரசாங்கம் அமைபதட்கு மிகவும் இன்றியமையாத காரணியாக காணப்பட்டது. காரணம் 1994இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சந்திரிக்காவின் கட்சி அரசாங்கம் அமைத்தது பாராளுமன்றத்தில் மேலதிக ஓர் ஆசனத்தினாலேயாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் இவ்வரசாங்கத்திட்கு இணைந்ததனால் அஷ்ரப் துறைமுக புனர்நிர்மான மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன் இன்னும் இரண்டு பிரதி அமைசுப் பதவிகளுக்கு மேலதிகமாக வேறு சில பதவிகளும் முஸ்லிம் காங்கிரசஸினை வந்தடைதன. இதற்கிடையில் அஷ்ரப் "ஜாதிக சமகி பெரமுன" எனும் கட்சியை உருவாக்கி அதற்கு சிங்கள, தமிழ் மக்களை உள்வங்கிக்கொண்டதனால் 2000ஆம் ஆண்டளவில் அவர் தேசிய மட்டத்தை தாண்டி தனது பலத்தை விஸ்தரித்திருந்தார். இதனால் 2000ஆம் ஆண்டு நடக்கவிருந்த பொதுத் தேர்தலில் சந்திரிகாவிற்கு அஷ்ரபின் ஆதரவு மிகவும் அத்தியவசியமனதொன்றகக் காணப்பட்டது.

நிலைமை இவ்வாறிருக்க அஷ்ரப் தனது அரசியல் வாழ்கையில் ஓர் முக்கிய சிகரத்தை எட்டுவதற்கு ஆயத்தமாக இருந்தார். அதாவது அஷ்ரபின் அடுத்த கட்ட வெற்றியானது அவரை இலங்கை வாழ் முழு முஸ்லிம் சமூகத்தின் தலைவராக மற்றுமின்றி ஓர் தேசிய அரசியல் தலைவராகவும் உருவெடுக்கவைக்கும் வெற்றியாகும். எனினும் இவர் அடையப்போகும் இம்மாபெரும் வெற்றியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த ஓர் சில முஸ்லிம் தலைமைகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.


இதற்கு முன்னர் சுமார் ஒரு தசாப்த காலமாக அஷ்ரப் எதிர்ப்பு பேரணியொன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுள்ளே காணப்பட்டது. 1988இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட அஷ்ரப் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த முஸ்லிம் தலைமைகள் எதிர்த்தன. இதன் ஓர் விளைவாக சந்திரிக்காவின் அரசாங்கத்தில் ஆதிக்கம் நிறைந்த ஓர் முஸ்லிம் அமைச்சராகிய எ.எச்.எம்.பௌஸி தனது எதிர்ப்பை பகிரங்கமாக அறிவித்திருந்தார். 'ஜாதிக சமகி பெரமுன' தலைவராக அஷ்ரப் மற்றும் ஸ்ரீ.சு.க தலைமைகளுக்கும் இடையில் புரிதுணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடும் நோக்கில் கலந்துரையாடல் நடந்த 2000ஆம் ஆகஸ்ட் மாத காலகட்டத்தில் பௌஸி மற்றும் அஷ்ரப் இடையிலான மோதல் கொடிகட்டியிருன்தது.

அமைச்சர் பதவியிலிருந்து அஷ்ரபினை நீக்குவதற்கும் அரசங்கத்தினுள்ளே சதி முயற்சிகள் இடம்பெற்றன. "முடியுமென்றால் அமைச்சர் பதவியில் இருந்து விலகி சுதந்திரக் கட்சியிலிருந்தும் விலகி தனித்துப் போட்டியிட்டு 5 ஆசனகளுக்கு மேல் வெற்றிபெற்றுக் காட்டுங்கள். இச்சவாலை வெற்றிகொண்டால் நான் அரசியலில் இருந்து முற்றாக விலகிவிடுவேன்" என ஆகஸ்ட் 31ம் திகதி பௌஸி அஷ்ரபினை நோக்கி சவால் விடுத்தார்.

பௌஸி இச்சவாலை விடுக்கும்போது அஷ்ரப் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.பி.திசாநாயகவுடன் அரசியல் கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய கலந்துரையாடலில் காணப்பட்டார்.

பௌஸியின் இக்கருத்து ஊடகங்களில் பெருமளவு பேசப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்தினால் பெரும் அசெளகரியன்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. இதற்கிடையில் பௌஸி சவால்விட்ட அன்றே அஷ்ரப் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய இரண்டு பிரதி அமைச்சர்களினதும் இராஜினாமா கடிதங்கள் விரைவாக ஜனாதிபதியை வந்தடைந்தன. எனினும் அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி அஷ்ரபிடம் மண்ணிப்பு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து இராஜினாமா கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செப்டம்பர் 3ஆம் திகதி "ஜாதிக சமகி பெரமுன" மற்றும் "பொதுஜன ஐக்கிய முன்னணி" ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் தேர்தல் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுள் அஷ்ரப் எதிர்ப்புப் பேரணி தொடர்ந்தும் காணப்பட்டது. இதில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மட்டுமின்றி மிக முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்த சில சிங்கள அமைச்சர்களும் இருந்தனர். ஜனநாயகத்திற்கு பெருமதிப்பளிக்கும் தேசியத் தலைவராக அஷ்ரப் உருவாகிக்கொண்டிருந்ததனால் அவரால் முகம்கொடுக்க வேண்டியேட்பட்ட சவால்கள் சிறிதல்ல. ஜாதிக சமகி பெரமுன மூலம் ஹம்பந்தோட்டை பிரதேசத்திட்கு நியமிக்கப்பட்ட கட்சி அணித் தலைவர் கடத்தப்பட்டார். இக்கடத்தல் சம்பவத்திற்கு அப்பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

எவ்வாறாயினும் தேர்தல் காலம் தொடங்கியதை அடுத்து அதிகரித்த வேலைப்பளுவுடன் அஷ்ரப் இச்சவால்களையெல்லாம் பின்தள்ளிவிட்டு தனது கட்சியின் வெற்றிக்காக நாடுமுழுவதும் ஓடி அலைந்தார். ஜாதிக சமகி பெரமுனவின் தேர்தல் கொள்கைகளின் வெளியீட்டு விழாவை அம்பாறையில் நடாத்த அஷ்ரப் தீர்மானித்திருந்தார்.

வான்வெளியில் விபத்து...,

அமைச்சர் அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி காலை 9:30 மணியளவில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான (ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட) Mi-17 முக்கிய ரமுகர்களுக்கான ஹெலிகொப்டரில் கொழும்பு - பம்பலப்பிட்டி போலீஸ் மைதானத்தில் இருந்து அம்பாறை நோக்கி புறப்பட்டார். கொழும்பிலிருந்து அம்பாறை நோக்கிய வான் பயணப்பாதை கண்டி, ரந்தெனிகல, மஹா ஓய, இங்கினியாகல ஊடக அம்பாறை நோக்கியதாக இருந்தது. இது சுமார் 40 நிமிட பாயனப்பதையாகும். விமானப்படையை சேர்த்த கப்டன் சிரான் பெரேரா தலைமையில் ஹெலிகாப்டர் பயணத்தை துவங்கியது. கப்டன் சிரான் பெரேரா 7000 மணி நேர வான் பயணத்தை கடந்த சிறந்த அனுபவமுள்ள விமானபடை விமானி.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 அடி உயரத்தில் ஹெலிகாப்ட்டர் சென்றுகொண்டிருக்கும் போது கப்டன் சிரான் பெரேரா இறுதியாக கட்டுநாயக இலங்கை விமானப்படை கட்டுபாட்டு கோபுரத்துடன் தொடர்பை ஏட்படுத்தியிருந்தார். தான் கண்டிக்கு 15 நிமிட தொலைவில் இருப்பதாகவும் காலநிலை சீராக இருப்பதாகவும், பயணத்தில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும் சில நிமிடங்கள் சென்று Mi-17 ஹெலிகப்டரிடம் இருந்து எந்த தொடர்பலைகளும் கிடைக்கவில்லை. கட்டுநாயக கட்டுப்பட்டு கோபுரத்துடனான தொடர்பும் முற்றாக துண்டிக்கப்பட்டு இருந்தது.

இறுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த 13 பேரின் சடலங்கள் ஊராகந்த, அரனாயக பகுதியில் உள்ள காட்டிலிருந்து கிராமவாசிகளால் மீட்கப்பட்டது.

• சீரற்ற காலநிலை,
• ஹெலிகோப்டேரில் தொழிநுட்பக்கோளறு,
• மலைகள் நிறைந்த காட்டுப்பகுதி,
• விடுதலை புலிகளின் ஏவுகணை தாக்குதல்
என பலவகையான சந்தேகங்களுக்கு மத்தியில் இம் மர்மம் தொடர்ந்தும் மர்மமாகவே புதைத்து போனது.

*எனினும் இவ் விபத்துக்கு பின்னால் மறைந்து போன சில உண்மைகளும் இருக்கின்றன.

• பம்பலப்பிட்டி போலீஸ் மைதானத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகோப்டேரில் 13 பேர்தான் பயணித்தனர் என்பதற்கு பொருத்தமான ஆதாரம் எதுவும் கிடையாது. போலீஸ் அறிக்கையிலும், இராணுவ அறிக்கையிலும் சில முரண்பாடுகள் உள்ளன. இதன் படி இதில் 15 அல்லது 17 பேர் பயனித்திருக்கலம் என நம்பப்படுகின்றது.

• கப்டன் சிரான் பெரேரா 7000 மணி நேர வான் பயணத்தை கடந்த இலங்கையின் திறமையான விமானி மற்றுமின்றி எந்த காலநிலையையும் சமாளித்து தரையிறக்கும் திறமை கொண்டவர்.

• விபத்து இடம்பெற்ற்ற பகுதியில் உள்ள கிராமவாசிகளின் கருத்துப்படி அப்பிரதேசத்தில் அவர்கள் ஹெலிகாப்டர்கள் பறப்பதை கண்டதேயில்லை. அப்பிரதேசம் ஹெலிகோப்டேர்களின் பயனப்பதயிலும் இல்லை.

• ஹெலிகாப்ட்டர் அப்பாதையை பயன்படுத்தியது இதுவே முதல் தடவை.
• ஹெலிகோப்டேரின் கருப்புப்பெட்டி விடயமும் சரிவர மேடைக்கு வரவில்லை.

• எல்லாவற்றிலும் முக்கிய விடயம் விபத்துக்குள்ளான ஹெலிகாப்ட்டர் ரஷியாவில் முக்கிய பிரமுகர்களுக்கென பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டது.

இது பற்றிய மேலும் சில உண்மைகள் விரைவில்...

 

இதையும் பார்க்க:-

        * இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் ஒரு நீங்கா தடம் பதி...-
        * கொலைவெறி புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிர ான சாதனைகள... 
        * காலி முகத்திடலும் காலியான முஸ்லீம் பெண்களின் முந்த...
        * தாயத்துக்கும் சயனைடு குப்பிக்கும் உள்ள கள்ள உறவு


     

பின் வரும் துஆவை யார் தினமும் நூறு தடவை ஓதி வருகிறாரோ அவருக்கு பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும். அன்று மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்..


*  தினமும் ஓத வேண்டிய துஆ
* இறந்தவருக்காகச் செய்யும் துஆ இறந்தவரின் இல்லம் செ...
* நல்ல காரியம்நடக்க,மணமக்களை வாழ்த்த,இஸ்லாத்தை ஏற்றவ...
* பயணத்தின் போது,வெளியூரில் தங்கும் போது ஓதும் துஆ
* போர்கள் மற்றும் கலவரத்தின் போதுاللَّهُمَّ مُنْزِلَ...
மழை பொழியும் போது,மழை வேண்டும் போது
* கணவனை இழந்தவர்கள்,இழப்புகள்,மரண துன்பத்தின் போது
* நோயாளியை விசாரிக்க,தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்
* சாப்பிடும் போதும், பருகும் போதும் ஓதும் துஆ
* பள்ளிவாசல்,சபையை முடிக்கும் போது ஓதும் துஆ
* கழிவறையில்,வீட்டிருந்து,தினமும் ஓத வேண்டிய துஆ
* காலையிலும்,மாலையிலும் ஓதும் துஆ
* தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ
* தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ
* தூங்கும் போது ஓத வேண்டியவை


 

                                                       தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 
அன்புள்ள சகோதர, சகோதரரிகளே மேற்கண்ட தலைப்பை படித்தவுடன் ஒரு நிமிடம் நீங்கள் மிரண்டுவிட்டீர்களா? நீங்கள் மட்டுமல்ல இஸ்லாத்தை ஏற்ற ஒவ்வொருவனும் இந்த தலைப்பை கண்டு மிரளத்தான் வேண்டும் ஏனெனில் இந்த கேள்வியை கேட்பவன் நானல்ல மாறாக உங்களை படைத்து பரிபாலித்து பக்குவப்படுத்திய இறைவனாகிய அல்லாஹ்! (அல்ஹம்துலில்லாஹ்)
 
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து தனது மனைவியையும் தனது பிள்ளையையும் சுடும் பாலைவன மணலில் தவிக்க விட்டார் பின்னர் அல்லாஹ் விடமிருந்து கட்டளை வந்ததும் மீட்டுவந்தார், அடுத்ததாக அல்லாஹ்வின் மற்றொரு கட்டளைக்கு அடிபணிந்து தனது அருமை மகனை அறுத்து பலியிட துணிந்தார் இறுதியாக அல்லாஹ்வுடைய கட்டளை வந்ததும் பலி பிராணியை அறுத்து தன் மகனை மீட்டார்! இப்படிப்பட்ட மாநபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கம்தான் இஸ்லாம் அதனை பின்பற்றக் கூடியவர்கள்தான் முஸ்லிம்கள். ஆனால் இந்த மாநபியும் இவருக்கு பின்னால் வந்த அனைத்து நபிமார்களுக்கும் இறுதியாக வந்த இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் பின்பற்றும் முஸ்லிம்களாக நாம் இன்று வாழந்து வருகிறோமா?
 
உறுதியான ஈமான் கொண்ட நீங்கள் ஒரு கனம் சிந்தித்துப் பாருங்கள் இப்ராஹீமுடைய மார்க்கத்தை பின்பற்றுவதை நீங்கள் மறைமுகமாக புறக்கணித்து வாழ்கிறீர்கள் ஆம் பிறை விஷயத்தில் நீங்கள் வழிதவிறிவிட்டீர்கள் நீங்கள் உங்கள் மனோ இச்சையைத்தான் பின்பற்றி வாழ்கிறீர்கள்! இது ஒன்றே போதும் நீங்கள் இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவர் என்பதற்கு!
 
வாருங்கள் உங்கள் மனோ இச்சையை எடைபோடுவோம்
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள். (குர்ஆன் 8:20)
 
அன்புச் சகோதரர்களே அல்லாஹ் இங்கு இந்த வசனத்தை காஃபிர்களையோ இணைவைப்பாளர்களையோ விழித்து கூறாமல் மூமின்களே என்று கண்ணியமான முறையில் அறிவுறை கூறுகிறான். மூமின்கள்தானே படைத்த இறைவனுக்கு எதையும் இணை வைக்காமல் வாழ்ந்து மடிகிறார்கள் ஆனால் அவர்களில் எத்தனைபேர் இணையில்லாத அந்த இறைவனுடைய தூதருக்கு கீழ்படிகிறார்கள்! சிந்திக்கமாட்டீர்களா?
குர்ஆனை ஓழுங்காக ஓதுவோம், அதனை பொருளுணர்ந்து படிப்போம் பிறருக்கும் எத்திவைப்போம் ஆதாரங்கள் நிறைந்த ஹதீஸ்களின் முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம் என்று சத்திய முழக்கமிடும் தவ்ஹீத் கொள்கைச் சகோதரர்கள் ரமலான் மற்றும் ஈதுல்-அல்ஹா பெருநாட்கள் வந்துவிட்டால் தரம்புரண்டு விடுகிறார்களே!
பெருநாள் என்ற அந்த இனிய நாட்களில் மட்டும் தங்கள் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு குர்ஆனை ஓரம் தள்ளிவிட்டு, நபிவழியை புறக்கணித்துவிட்டு நவீன விஞ்ஞானம், ஆன்லைன் பிறை என்ற தங்கள் மனம் போன போக்கில் பெருநாள் கொண்டாடி மகிழ்கிறார்களே இவர்கள் கீழ்கண்ட நபிமொழியை புறக்கணிப் பதேனோ?
 
என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்!(நூல்கள்: புகாரி, அஹ்மத்)
 
மாநபியும் விஞ்ஞான அறிவிப்பும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்திரன் பிளந்தது என்ற உண்மையை உலகிற்கு காட்டித்தந்தவர் அல்லவா? ஆதாரம் இதோ!
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்து கொண்டிருந்தபோது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று. அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், ‘நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள்’ என்று (இரண்டு முறை) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) நூல் :                                     புகாரி 3636,4864,4865.
 
இந்த மாநபி நாடியிருந்தால் பிற்காலத்தில் விஞ்ஞானம் வளர்ந்துவிடும் அன்றைய தினம் உங்கள் இஷ்டம் போல் உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கலாமே ஏன் அவ்வாறு அறிவுறுத்தவில்லை?
 
மாநபியும் பிறை பற்றிய அறிவிப்பும்
கண்ணியமிக்க எங்கள் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பிறைகள் நோன்புகள் பற்றி என்ன கூறினார்கள்?
ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1906 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).
 
மாநபியும் மாதங்கள் பற்றிய அறிவிப்பும்
எங்கள் உம்மி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மாதங்களை எவ்வாறு தீர்மானிக்க அறிவுறுத்தினார்கள் மறந்துவிட்டதா? ஆதாரம் இதோ
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும்” என்று (இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி) முப்பது நாள் எனச் சொல்லிவிட்டு, பிறகு ‘மேலும் இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கலாம்” (என்று இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி மூன்றாம் முறை பெருவிரலை மடக்கியபடி) – இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம் என்று கூறினார்கள். அதாவது (மாதம் என்பது,) சில வேளை முப்பது நாள்களாக இருக்கும்; மற்ற சில வேளை’ இருபத்தொன்பது நாள்களாக இருக்கும் என்று கூறினார்கள். புஹாரி :5302 இப்னு உமர் (ரலி).
 
மாதங்கள் பிறைகளின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்றுதானே நபிகளார் அறிவுறுத்தியிருக்கிறார்கள் அதை மறந்து விட்டு ஆயிரம் வருடங்களுக்கு நாங்கள் காலண்டர்களை கணித்து கூறுவோம் என்று ஜோசியக்காரர்களை போன்று நம்மில் தவ்ஹீத்வாதிகள் தடம்புரண்டு போன காரணம் என்னவோ? ஏன் நபிமொழிகள் கேட்டு கேட்டு உள்ளம் புளித்து போய்விட்டதா?
 
இந்த வசனம் இந்த விஞ்ஞான காலத்திற்கு பொருந்தாதா?
கண்ணியமிக்க சகோதரர்களே படைத்த இறைவன் முற்றும் அறிந்தவன் அவன் விஞ்ஞான வளர்ச்சியையும் அறிந்தவன் அவனே அதை நமக்கு கற்றுத்தருபவன். அவன் நாடியிருந்தால் பிற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும் எனவே பிறைகளை மக்களே கணிக்கலாம் என்று சட்டம் வகுத்திருக்கலாம் அப்படி சட்டம் வகுத்து தருவது அவனுக்கு சிரமமானதல்ல ஆனால் அவன் கீழ்கண்டவாறு தான் சட்டம் வகுத்துள்ளான்!
உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் (அல்குர்ஆன் 2:185)
 
ஆனால் இன்றைய மக்கள் எங்களுக்கு எல்லாம் தெரியும் நாங்கள் அறிவியல் வல்லுனர்கள் என்று மார்தட்டிக்கொண்டு மேற்கண்ட வசனத்தை மறக்கடிக்கிறார்கள்! உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ என்று இறைவன் கூறும் இந்த செய்தி இந்த விஞ்ஞான சாட்டிலைட் காலத்திற்கு பொருந்தாத வசனமா? அப்படியானால் உங்களில் இந்த வசனம் தேவையில்லை என்று கூற முன்வருபவர் யார்? நீங்கள் உங்கள் கொள்கையில் உண்மையானவராக இருந்தால் இந்த சவாலை ஏற்று வாருங்கள் பார்ப்போம்! அல்குர்ஆனுடைய வசனமாகிய 2:185 இந்த காலத்திற்கு தேவைப்படாது, காலத்துக்கு முரண்பட்டது என்று கூற உங்களில் எவனுக்கேனும் திராணியிருக்கா? ஒருவராவது கையை உயர்த்துங்கள் பார்ப்போம்!
 
தரம்புரண்ட தவ்ஹீத் கொள்கை சகோதரர்கள்
இன்றைய நவீன விஞ்ஞான காலத்தில் ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது அவர்கள் கூறுகிறார்கள் உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட தீர்மானம் வகுத்தால் நாங்களும் அவர்களுடன் உடன்படுகிறோம் என்று! இவர்கள் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டவர்கள்தான் ஆனால் கொள்கையில் தடம் புரண்டவர்கள். தவ்ஹீதில் தடம்புரண்ட இந்த கொள்கைவாதிகள் நாளை கீழ்கண்டவாறுகூட கூற முன்வருவார்களா?
உலகம் முழுவதும் நபிவழியை புறக்கணித்தால் நாங்களும் புறக்கணிப்போம்
தவ்ஹீதில் தடம்புரண்ட இந்த தரம்கெட்ட கொள்கைவாதிகளிடம் நாம் கேட்கும் கேள்விகள் இதுதான்!
  1. பிறையை தீர்மானிப்பது நபிவழியின் அடிப்படையிலா? அல்லது உலக மக்கள் அனைவரது ஒருமித்த மனோ இச்சையின் அடிப்படையிலா?
  1. அருள்மறை குர்ஆனை பின்பற்றுவது 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) என்ற யாரோ ஒருவர் வாழ்ந்தாராமே அவருடைய வழிகாட்டுதலின் அடிப்படையிலா? அல்லது தற்போது நம்முடன் வாழந்துக் கொண்டிருக்கும், வாழப்போகும் 600 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அனைவரது ஒருமித்த மனோ இச்சையின் அடிப்படையிலா?
  1. உலகம் முழுவதும் ஒன்று கூட இனி எங்களுக்கு குர்ஆன் வேண்டாம் என்று முடிவு எடுத்தால் இவர்களும் அதற்கு ஒத்துப்போவார்களா?
  1. உலகம் முழுவதும் ஒன்று கூடி ஹராமை ஹலால் ஆக்கினால் இவர்களும் அதற்கு ஒத்துப்போவார்களா?
  1. உலகம் முழுவதும் ஒன்று கூடி ஹலாலை ஹராம் ஆக்கினால் இவர்களும் அதற்கு ஒத்துப்போவார்களா?
நபிவழிப்படி பெருநாள் கொண்டாடுவதை மறுத்து உலகப்பிறைக்கு வக்காலத்து வாங்க துடிக்கும் இவர்கள் தவ்ஹீத்வாதிகள் அல்ல மாறாக தவ்ஹீதில் தடம்புரண்ட தருதலைவாதிகள்! இவர்கள் இறைவனுக்கும் அவனது தூதர்களுக்கும் கட்டுப்படுவதை காட்டிலும் 600 கோடி மக்களின் மனோ இச்சைக்கு கட்டுப்பட துடிக்கிறார்கள். இவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது அல்லாஹ்தான் இவர்களை திடப்படுத்த வேண்டும்!
ஒருவேளை உலகில் வாழும் 600 கோடி மக்களும் அல்லாஹ்வை வணங்குவதை வெறுத்தால் அவர்களின் மனோ இச்சைக்கும் இவர்கள் கட்டுப்படுவார்களா? இதோ இவர்களி்ன செயல் கீழ்கண்ட இறைவசனத்தை நினைவுபடுத்தவில்லையோ!
(நபியே! இன்னும்) நீர் கூறும்: அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை. (குர்ஆன் 3:32)
 
கொள்கையை விட குடும்பம்தான் முக்கியமா?
அன்புச் சகோதர, சகோதரிகளே இன்று இந்த பிறை விஷயத்தில் நாம் போராடுவது உன்னதமான அந்த நபிவழியை விட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஆனால் ஒரே நாள் உலகம் முழுவதும் பிறை என்ற வாதிடுபவர்கள் எதற்காக இந்த கொள்கையை விடுகிறார்கள் தெரியுமா? காரணங்கள் இதோ!
1. சவுதி, துபாய் நாடுகளில் வாழும் மகன் தான் கொண்டாடும் பெருநாள் தினத்தில்தான் தன் தாயும் கொண்டாட வேண்டும் என்று துடிக்கிறான்!
2. தாய்நாட்டில் வசிக்கும் சகோதரனோ வெளிநாடுகளில் வாழும் தன் சகோதரன் கொண்டாடும் பெருநாள் தினத்தில்தான் தானும் கொண்டாட வேண்டும் என்று துடிக்கிறான்!
3. தாய்நாட்டில் வசிக்கும் மக்கள் சவுதி மக்களை பார்த்து இன்று அவர்கள் பெருநாள் கொண்டாடும் போது நாம் இன்று சொந்த நாட்டில் திண்டாட வேண்டுமா? என்று பதறுகிறார்கள்!
4. வெளிநாட்டுவாழ் மக்களோ இன்று நாங்கள் பெருநாள் கொண்டாடி விட்டோம் எங்களைப் போன்று மற்ற நாடுகளில் உள்ளவர்கள் ஏன் பெருநாள் கொண்டாடவில்லை என்ற புலம்புகிறார்கள்!
 
குடும்ப உறுப்பினர்களிடம் அளவுகடந்த பாசம் வைக்கும் மேற்கண்ட நபர்களிடம் நாம் கேட்கும் கேள்வி இதுதான்! உங்களை பெற்ற தாய், வளர்த்த தந்தை, உடன் பிறந்த சகோதரன், சகோதரி, கட்டிய மனைவி, பெற்றெடுத்த மகன், மகள் ஆகியோர் அல்லாஹ்வையும் அவனது நபியையும் விட சிறந்தவர்களா? உங்கள் நேசம் உங்கள் குடும்பத்தாருடன்தானா? அப்படியானல் உங்கள் குடும்பத்தாரின் மீது நேசம் காட்டுவதற்காக வேண்டி கீழ்க்ணட வசனத்தை குர்ஆனிலிருந்து நீக்கிவிடலாமா?
நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்” (திருக்குர்ஆன், 3:31)
 
வாருங்கள் உங்களில் யார் உங்கள் குடும்பத்தாரையும் விட அல்லாஹ்வை அதிகம் நேசிக்க முன்வருகிறார்கள் என்பதை நாமும் பார்க்கிறோம்!
நீங்கள் அல்லாஹ்வை உண்மையாகவே நேசித்திருந்தால் அவருடய நபியை பின்பற்றி பெருநாள் கொண்டாட வேண்டுமே ஆனால் நீங்களோ அல்லாஹ்வை நேசிப்பதை விட உங்களுடைய வெளிநாட்டுவாழ் சகோதர, சகோதரிகளையும், தாய்நாட்டுவாழ் தாய் தந்தையரும்தானே நேசமுள்ளவர்ளாக இருக்கிறார்கள்! இதனால்தானே நபிவழியை புறக்கணிக்கிறீர்கள்!
(நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராகஅவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை; இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்.(அல்குர்ஆன் 6:106)
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள். (அல்குர்அன் 8:20)
 
மத்யன் நகர மக்களும் ஷுஐப் நபியும் படிப்பினை
இந்த பிறை விஷயத்தில் விஞ்ஞானத்தை பின்பற்றும் நீங்கள் தரம்புரண்டுவிட்டீர்கள் உங்களைப் போன்றே அளவை நிறுவைகளில் தரம்புரண்ட ஒரு சமூகத்தை பற்றி அறிந்துக் கொள்வோம் வாருங்கள். மதயன் நகர மக்களை அளவை நிறுவைகளில் மோசடி செய்து வந்தார்கள் அவர்களை நேர்வழிப்படுத்த அவர்களின் சகோதரரும் நபியுமாகிய ஷுஐப் (அலை) அவர்கள் வருகிறார்கள். அவர் தன் சமூகத்தாரிடம் கூறுகிறார் இதோ
“(என்) சமூகத்தவர்களே! அளவையிலும் நிறுவையிலும், நீதியைக் கொண்டு நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். (மக்களுக்குக் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள். (அல்குர்ஆன் 11:85)
 
ஷுஐப் நபியின் வரலாற்றை நாம் கூறுவது உங்களுக்கு பொருத்தமில்லாதவையாக தென்படலாம் ஆனால் இதிலும் படிப்பினை உள்ளது! அளவை நிறுவைகளை அறியாத சமுதாயதவர்கள் அதுபற்றி அறிந்துக்கொள்கிறார்கள் பின்னர் அவைகளில் மோசடி செய்கிறார்கள் இதை கண்டிக்கும் போது கூடவே பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள்என்று நபி ஷுஐப் (அலை) அவர்கள் கூறுகிறார்கள் அதற்க அந்த மக்கள் கூறிய பதில் என்ன தெரியுமா? இதோ
(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள். (அல்குர்ஆன் 11:87)
 
இப்படிப்பட்ட ஏளனமான வார்த்தைகளைத் தான் இன்று உலகப் பிறை ஒரே பெருநாள் என்று கர்ஜிக்கக்கூடிய சகோதரர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நாம் கூற வேண்டிய பதிலையும் நபி ஷுஐப் நமக்க கற்றுத்தருகிறார் இதோ ஆதாரம்
(அதற்கு) அவர் கூறினார்: “(என்னுடைய) சமூகத்தவர்களே! நான் என்னுடைய இறைவனின் தெளிவான அத்தாட்சி மீது இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான ஆகார வசதிகளை அளித்து இருப்பதையும் நீங்கள் அறிவீர்களா? (ஆகவே) நான் எதை விட்டு உங்களை விலக்குகின்றேனோ, (அதையே நானும் செய்து உங்கள் நலனுக்கு) மாறு செய்ய நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன். (அல்குர்ஆன் 11:88)
 
உலகப் பிறை என்று வாதிடக்கூடியவர்களிடம் நாம் ஆதாரங்களை காட்டினால் அதை நிராகரித்து மத்யன் நகரவாசிகள் எவ்வாறு நபி ஷுஐப் அவர்களை இகழ்ந்தார்களோ அதைப்போன்று இவர்களும் நபிவழிப்படி பெருநாள் கொண்டாடுபவர்களையும் அதை அறிவுறுத்து பவர்களையும் இகழ்கிறார்கள் இதோ ஆதாரம்
(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லலெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்” என்று கூறினார்கள்.(அல்குர்ஆன் 11:91)
 
நபி ஷுஐப் அவர்கள் கூட குடும்பத்தாரைவிட அல்லாஹ் வைத்தான் அதிகம் நேசிக்க வேண்டும் என்று கூறுகிறார்
(அதற்கு) அவர் கூறினார்: “(என்) சமூகத்தவர்களே! அல்லாஹ்வைவிட உங்களுக்கு என்னுடைய குடும்பத்தார் அதிக மதிப்புடையவர்களாய் விட்டார்களா? நீங்கள் அவனை முதுகுக்குப் பின் தள்ளிப் (புறக்கணித்து) விட்டீர்கள். நிச்சயமாக என்னுடைய இறைவன் நீங்கள் செய்யும் செயல்களை (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுதானிருக்கின்றான்.(அல்குர்ஆன் 11:92)
 
நபிக்கு கட்டுப்படாதவர்களுக்கு கட்டுப்படுதல் இல்லை!
என் சமூகத்தவர்களே! நீங்கள் உங்களுக்கு இசைந்தவாறு செய்து கொண்டிருங்கள்! நானும் (எனக்கு இசைந்தவாறு) செய்து கொண்டிருக்கிறேன்; இழிவு தரும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும், பொய்யர் யார் என்பதையும் சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; (அந்நேரத்தை) நீங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” (என்றும் கூறினார்). (அல்குர்ஆன் 11:93)
 
எனவே சகோதரர்களே ஷுஐப் நபியின் மேற்கண்ட கருத்தையே நாமும் கூறுகிறோம் நீங்க்ள உங்களுக்கு இசைந்தாவறு செய்து கொண்டிருங்கள் நபிவழியில் பெருநாள் கொண்டாடுபவர்களான நாங்களும் நபிவழிக்கு இசைந்தவாறு பெருநாள் கொ்ணடாடு கிறோம். நம்மில் இழிவுதரம் வேதனை யாருக்கு வந்தடையும் என்பதையும், நம்மில் பொய்யர் நீங்களா, நாமா? என்பதை மஹ்ஷரில் அல்லாஹ்வின் சமூகத்தில் அறிந்துக்கொள்வோம் வாருங்கள்! ஒரு வேளை இந்த உலகமே எங்களுக்கு எதிராக அணிதிரண்டு நின்றாலும் தவ்ஹீத் என்ற ஏகத்துவக் கொள்கையிலும் நபிவழயில் தொழுகைகள், ஜகாத், ஹஜ், உம்ரா, குர்பானி, பெருநாட்கள் மற்றும் ஏவைகள் எல்லாம் எங்கள் இறைவன் எங்கள் மீது கடமையாக்கியுள்ளானோ அவைகளை குர்ஆன் மற்றும் நபிவழியில்தான் பின்பற்றுவோம்! எங்கள் இறைவனுக்கு நாங்கள் மாறு செய்யமாட்டோம் எங்கள் நபியின் வழியை கைவிடமாட்டோம்! நாங்கள் உண்மையான முஸ்லிம்களாக வாழுவோம் அதே நிலையில் மரணிக்கவும் செய்வோம் (இன்ஷா அல்லாஹ்)!
 
இதோ உங்களுக்கு இறுதியாக உபதேசம் செய்கிறோம்!
இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:92)
 
ஊசியின் காதில் ஒட்டகம் நுழையுமா? உங்கள் கொள்கை சரியா?
எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டா – மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)
 
(தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர்.(அல்குர்ஆன் 11:944)
 
அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்ட சகோதரர்களே நீங்கள் ஒரு கனம் சிந்தித்துப் பாருங்கள் நபி இப்ராஹீமுடைய மார்க்கத்தை ஒழுங்காக பின்பற்ற துடிக்கும் நீங்கள் பிறை விஷயத்தில் தரம்புரண்டுவிடாதீர்கள், சோதிடக்காரனிடம் சென்று நல்ல நாள் பற்றி குறிகேட்பதும் ஒன்றுதான் 1000 வருடங்களுக்கு ஹிஜிரா காலண்டரை தயாரித்து பெருநாள் தொழுகைகளை விஞ்ஞான கணிப்பின் அடிப்படையில் முன்கூட்டியே தீர்மானிப்பதும் ஒன்றுதான்.
எனவே இப்படிப்பட்ட பிறை சோதிடர்களை நம்பி உங்கள் ஈமானை அல்லாஹ்வின் சமூகத்தில் கேள்விக்குறியதாக ஆக்கிவிடாதீர்கள்! இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை புறக்கணித்துவிடாதீர்கள்!
 
நீங்கள் நபிவழியை புறக்கணித்து மனோ இச்சையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று தீர்மானிம் கொண்டால் அது அல்லாஹ்வை தவிர்த்து கப்ருகளையும், சிலைகளையும் வணங்கக்கூடிய காஃபிர்கள், முஷ்ரிக்குகள், முனாஃபிக்குகளின் தீர்மானங்களை ஒத்த தீர்மானமாகும்! எனவே சகோதர, சகோதரிகளே நீங்கள் மஹ்ஷரில் மூமின்களாக இப்ராஹீம் நபி போன்ற நல்ல கூட்டத்தாரோடு நிற்க ஆசைப்பட்டால் குர்ஆன் மற்றும் ஹதீஸ் (நபிவழி)யை உறுதியாக பின்பற்றித்தான் ஆகவேண்டும் இதைவிட உங்களுக்கு வேறு வழி இல்லை! THERE IS NO OPTION TO PROHIBIT QUR’AN & SUNNAH இதோ ஆதாரம்!
இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார். (அல்குர்ஆன் 2:130)
 
இந்த குர்ஆன் மற்றும் நபிவழியை புறக்கணிக்காதீர்கள்
நீங்கள் (இவ்வுபதேசத்தைப்) புறக்கணிப்பீர்களாயின் எதற்காக நான் உங்களிடம் அனுப்பப்பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டேன்; இன்னும் என்னுடைய இறைவன் நீங்கள் அல்லாத (வேறு) ஒரு சமூகத்தை உங்களுக்கு பதிலாக வைத்துவிடுவான்; அவனுக்கு எப் பொருளையும் கொண்டு நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் யாவற்றையும் பாதுகாப்பவனாக இருக்கின்றான்” (என்றும் கூறினார்). (அல்குர்ஆன் 11:57)
 
விஞ்ஞான பிறையை கணிக்கும் விஞ்ஞானிகளே நபிவழியை புறக்கணிக்காதீர்கள்! தரம்புரண்ட நீங்கள் தவ்ஹீதின் பக்கம் விரைந்து வாருங்கள்! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
 
சுப்ஹானல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹு அக்பர்

لا اله الا الله محمد رسول الله

இதையும் பார்க்க:-

                        *  ஜின்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்.

                          *  சேவல் அல்லாஹ்வை அதிஹம் (திக்ர்) செய்கிறது

                           * நபிமார்கள் கேட்ட துஆக்கள்...!

                          * ஒளுவின்றி ஸஜ்தா செய்யலாமா..?

                          * கப்ரு ஜியாரத் செய்யும் பெண்கள்!

 

 

                                                    தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

கண்ணியமிக்க தீன்குல சகோதர சகோதரிகளே!   அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...
நபி (ஸல்) அவர்கள், ”மார்க்கம் என்பது பிறர் நலம் பேணுவதுஎன்று கூறியபோது நாங்கள் கேட்டோம் யாருக்கு?” நபி (ஸல்) அவர்கள், ”அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், பொது மக்கள் அனைவருக்கும்என பதிலளித்தார்கள். (ஸஹீஹ முஸ்லிம்)
 
முஸ்லிம்களாகிய நாம் தற்போது கணிணி உலகில் வாழ்ந்து வருகிறோம் எனவே நாம் நம்முடைய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும், நம்மால் ஆன அறிவுரைகளையும், நல் அமல்களையும் முகம் தெரியாத முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத சகோதர, சகோதரிகளிடம் பகிர்ந்துக்கொள்ளவும், மார்க்கத்தை நன்முறையில் பரப்பவும் இஸ்லாமிய கூகுல் குழுமங்களை நாடுகிறோம். ஆனால் இந்த இஸ்லாமிய கூகுல் குழுமங்களில் ஒரு சில குழுமங்கள் இஸ்லாத்தின் நெறிமுறைகளை ஓரளவுக்கு கடைபிடிக்கின்றன மற்றும் சில குழுமங்களோ இஸ்லாத்தின் கண்ணியத்தை சீர்குலைத்து வருகின்றன. இந்த அநியாயத்தை முஸ்லிம்களாகிய நாம் நம்மால் முடிந்தவரை தட்டிக்கேட்க வேண்டும்!
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநியாயக்காரனிடம் நீ அநியாயக்காரன்என்று சொல்ல அஞ்சுபவர்களாக எனது உம்மத்தினரைக் கண்டால் நீர் அவர்களிடமிருந்து விலகிக்கொள்.(முஸ்னத் அஹமத்)
கூகுல் குழுமங்களில் தமிழ் பேசக்கூடிய தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் என்று மார்தட்டிக்கொண்டு வலம்வரும் கூகுல் குழுமம் இஸ்லாத்தின் கண்ணியத்தையும் சகோதரத்துவத்தையும் சீர்குலைத்துக் கொண்டு மேலும் கண்மனி நாயகம் (ஸல்) அவர்களின் கீழ்கண்ட அமுதமொழிக்கு மாற்றமாகவும் நடந்துவருகிறது.
முஸ்லிம்கள், ஒருவருக்கொருவர் சகோதரர் ஆவர். ஒருவருக்கொருவர் தீங்கு செய்ய மாட்டார்; ஒருவரை ஒருவர் கைவிட்டு விடவும் மாட்டார். தன் சகோதரனின் தேவையைக் கவனிப்பவரின் தேவையை இறைவன் நிறைவு செய்வான்; தன் சகோதரனின் கவலையைப் போக்குபவரின் கவலைகளில் ஒன்றை மறுமை நாளில் அல்லாஹ் நீக்கி விடுவான். (புகாரீ, முஸ்லிம்)
மேற்கண்ட இந்த நபிமொழியை நீங்கள் அனைவரும் நன்றாக கவனித்திருப்பீர்கள் ஆம் இன்றைய இஸ்லாமிய குழுமங்களில் குறிப்பாக தமிழ் முஸ்லிம் சகோதர குழுமம் இதற்கு மாற்றமாக நடந்து வருகிறது இந்த போக்கை கண்டிக்காமல் விட்டுவிட்டால் அக்குழுமத்தில் உள்ள நம் தீன்குல செல்வங்கள் சீரழிந்து விடுவார்களே என்ற அச்சத்தின் காரணமாக இந்த எச்சரிக்கையை ஒரு முஸ்லிம் என்ற தரப்பிலிருந்து நானே விடுக்கிறேன். முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வுக்குத்தான் அஞ்சுவோமே தவிர சகோதரத்துவத்தை சீரழிக்கும் அநியாயகார குழுமத்தாருக்கு அஞ்ச மாட்டோம். வாருங்கள் இந்த கூகுல் குழுமத்தாரினால் ஏற்படும் அவலத்தை அறிந்துக்கொள்வோம்

குழும உறுப்பினர்கள் எழுப்பும் அவதூறுகளை ஆதரித்து ஆதாரமற்றவைகளை நா கூசாமல் பரப்புவதில் குழும மாடரேட்டர் முதலிடம்!
ஈமான் கொண்டவர்களே! மூஸாவை(ப் பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஆனால் அவர்கள் கூறியதை விட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமானவராக்கி விட்டான்; மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணிய மிக்கவராகவே இருந்தார். (அல்குர்ஆன் 33-69)
அல்லாஹ் நம்மை நோக்கி ஈமான் கொண்டவர்களே என்று அழைத்து அவதூறு பரப்பி நோவினை செய்யாதீர்கள் என்று எச்சரிக்கிறான் ஆனால் தற்போது குழுமம் நடத்தும் சகோதர மாடரேட்டர்கள் அல்லாஹ்வின் இந்த அறிவுரைக்கு செவிசாய்க்காதது ஏன்?
சில குழும உறுப்பினர்கள் வதந்திகளை பரப்புகிறார்கள் என்பதை அறிந்தும் அதற்கு குழும மாடரேட்டர்கள் என்ற அந்தஸ்தில் உள்ளவர்கள் வதந்தி பரப்புபவர்களிடம் ஆதாரம் கேட்காமல் இருப்பது ஏன்?
அவ்வாறு ஆதாரம் கேட்டு அதை தர இயலாத பட்சத்தில் அந்த உறுப்பினரை பகிரங்கமாக நீக்க அறிவிப்பு வெளியிடாதது ஏன்?
இதை இவர்கள் செயல்படுத்த தவறும்பட்சத்தில் இந்த குழும மாடரேட்டர்களும் குழும நிர்வாகியும் அவதூறு பரப்புவதில்தான் குறியாக உள்ளார்கள் என்பதற்கு இவர்களின் நடத்தையே சாட்சியாக இருக்கின்றன இவர்களை அல்லாஹ் மூமின் என்ற அந்தஸ்துக்கு உயர்த்துவானா? இதை படித்தாவது சிந்திக்கட்டும்!

குழுமத்தில் உண்மையை கூறினால் அதை பிரசுரிப்பதில்லை மாறாக மார்க்க சகோதரர்களிடையே பாரபட்சம் காட்டி நேர்மைக்கும் உண்மைக்கும் மாற்றமாக நடந்துக்கொள்ளது
மார்க்கத்தில் கண்ணியமிக்கவர்களாக கருதப்படும் நபர்களோ அவர்களின் தோழர்களோ விதண்டாவதிகள் பரப்பம் அவதூறுகளை தவறு என்பதை நிருபிக்க நாடி குழுமத்தில் தங்கள் கருத்துக்களை பதித்தால் அதை இந்த குழும மாடரேட்டர்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு மட்டறுப்பது ஏன்? உண்மையை எடுத்துக்கூறுவதை தடுப்பது ஒரு மூமினுடைய பண்பாக இருக்குமா? இந்த குழுமத்தார் கீழ்கண்ட இறைவசனத்தை படித்திருக்க வேண்டாமா?
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 2:42)


முகவரியற்ற மனிதர்களுக்கு முன்னுரிமை வழங்குவதும் கண்ணியமிக்க சகோதரர்களை கிண்டலடித்தலை அனுமதிப்பதும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமை கேவலப் படுத்துகிறார்கள்; அவனுடைய கண்ணியத்தைத் தாக்குகிறார்கள்; அந்த இடத்தில் ஒருவன் அந்த முஸ்லிமைக் காப்பாற்றவில்லையென்றால் அல்லாஹ்வுடைய உதவி அவனுக்குத் தேவைப்படும் ஒரு இக்கட்டான தருணத்தில் அல்லாஹ் அவனை கைவிட்டு விடுவான். ஒரு முஸ்லிம் கேவலப்படுத்தப்படும்போது, அவனுடைய கண்ணியம் தாக்கப்படும் போது யாராவது அவனுக்கு உதவி செய்தால் அவன் அல்லாஹ்வுடைய உதவி கிடைக்காதாஎன்று ஏங்கும் தருணத்தில் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான்.(ஸுனன் அபூதாவூத்)
 
சில கூகுல் குழும மாடரேட்டர்கள் தங்கள் குழுமங்களில் ஒருசிலரது பெயர்களை முன்மொழிந்து அதுவும் குறிப்பாக தமிழகத்தில் மார்க்கத்ததை எத்திவைக்கும் தவ்ஹீத் சகோதரர்களில் ஒரு தனி இடம் பிடித்து மார்க்கப்பணியாற்றும் தாயிக்களின் பெயரை முன்மொழிந்து அவர்களுக்கு புத்தி தடுமாறிவிட்டது, நினைவு திரும்பிவிட்டது என்று வகை வகையாக வசைபாடி அவன் அவளோடு இருந்தான், இவன் இவளோடு சென்றான் என்று தங்கள் குழுமங்களின் வாயிலாக பரப்பியும் வருகிறார்கள் மேலும் தாங்கள் குழுமங்களின் ஊடே நியாயத்தை எத்திவைக்கிறோம் என்ற பெயரில் மார்க்கத்திற்கு முரணாக ஒரு சகோதரனை மற்றொரு சகோதரன் கிண்டலடித்து திட்டும் கொடுமையை வளர்க்கிறார்கள் இதுதான் இஸ்லாமிய நடைமுறையா?
சிந்தித்துப்பாருங்கள் நாம் தவறு செய்தது நமக்கு புரிந்த நிலையில் நம்மை நோக்கி ஒரு சகோதரன் மானக்கேடான வார்த்தைகளால் திட்டினால் நம் உள்ளம் பதறாதா? நாம் இதை அனுமதிப்போமா?
அதுபோலத்தானே ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனை வசைபாடி, மானக்கேடாக திட்டும்போது திட்டு வாங்கக்கூடிய சகோதரனுக்கு மன நிம்மதி சீர்குலைந்து காணப்படும் இதை நாம் ரசிக்கலாமா?
இவ்வாறு திட்டக்கூடிய சகோதரர்களை குழும மாடரேட்டர் தடுக்கக்கூடாதா? அவரை எச்சரிக்கக்கூடாதா? இந்த குழும மாடரேட்டர்கள் கீழ்கண்ட நபிமொழியை படித்திருக்க வேண்டாமா?
அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்யாதீர்கள், இழிவுபடுத்தாதீர்கள், அவர்களது குற்றங்களை தேடிச்செல்லாதீர்கள். எவன் தனது முஸ்லிம் சகோதரனின் குற்றம் குறைகளை தேடித்திரிகிறானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவிப்பார்ப்பான். இறுதியில் அவனை அவனது வீட்டுக்குள்ளேயே அவமானப்படுத்தி விடுவான்.” (முஸ்னத் அஹ்மத்)

கண்ணியமிக்க தீன்குல சகோதர சகோதரிகளுக்கு அறிவுரைகள்
ஒரு சில முஸ்லிம்கள் என்ற பெயர்தாங்கிகள் நடத்தும் கூகுல் குழுமங்களில் நாம் பங்கேற்கும்போது நம் எண்ணங்கள் தூய்மையானவையாக இருந்தாலும் அவர்களின் தவறான நடத்தைகளாலும் நடவடிக்கைகளாலும் நாம் இன்னல்பட்டு அவர்களின் சண்டை சச்சரவுகளில் சிக்கி சேற்றில் விழுந்த செந்தாமரை போல் தரம்புரண்டுவிடுகிறோம் எனவே சகோதர சகோதரிகளே சற்று சிந்தியுங்கள் நல்ல குழுமமாக தேர்ந்தெடுத்து அங்கு நாம் நம் கருத்துக்களை பதிப்போம் மேலும் இஸ்லாத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் தமிழ் முஸ்லிம் சகோதர குழுமம் போன்ற அநாகரீக குழுமங்களை விட்டும் நாம் நீங்கி நம்மை நாமே சுத்தப்படுத்திக்கொள்வோமாக! இக்குழுமங்களை நடத்துபவர்கள் தங்களைத்தாங்களே அடையாளம் காட்டிக் கொள்ளாமல் தங்கள் குழும உறுப்பினர்களின் அடையாளங்களை அறிந்தவைத்துக் கொண்டு எதை சாதிக்க முற்படுகிறார்கள் என்பது அந்த வல்ல ரஹ்மானுக்கே தெரியும் எனவே நம்முடைய நியாயமான கருத்துக்களுக்கு கண்ணியமளிக்காமல் பாரபட்சம் காட்டும் குழுமங்களிலிருந்து நாம் நீங்குவதே நமக்கு சிறந்ததாக அமையும்.

இதோ அவதூறு பரப்புவது பற்றி அல்லாஹ்வின் எச்சரிக்கைகள்
ஈமான் கொண்டவர்களே! மூஸாவை(ப் பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஆனால் அவர்கள் கூறியதை விட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமானவராக்கி விட்டான்; மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணிய மிக்கவராகவே இருந்தார். (அல்குர்ஆன் 33-69)
அவதூறு பரப்புபவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம்
இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). (அல்குர்ஆன் 4-156)

புறம்பேசி மனிதனின் மாமிசத்தை சாப்பிட வேண்டாமே!
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புதம்முடையவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்குர்ஆன் 49-12)

என் கண்ணியமிக்க மார்க்க சகோதரர்களே நபிகளார் (ஸல்) சஹாபாக்களுடன் செய்துக்கொண்ட அழகான ஒப்பந்தத்தை பாருங்களேன்!

அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை; திருடுவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை; நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை; எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களில், (அவற்றை) நிறைவேற்றுகிறவரின் நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையாவது ஒருவர் செய்து, (அதற்காக) இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாம் விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். அவன் நாடினாலஅவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றித் தோழர்களில் ஒரு குழு அமர்ந்திருக்கும்போது கூறினார்கள். (புகாரி பாகம் 1, அத்தியாயம் 2, எண் 18)

கூகுல் குழும பொறுப்பாளர்களே உங்களுக்கு மீண்டும் ஒரு எச்சரிக்கை
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள் ”அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே ! எனவே உங்களில் ஒவ்வொருவரும் தன் பொறுப்பில் உள்ளோர் குறித்து கேள்வி கேட்கப்படுவீர்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு நூல்: புகாரீ, முஸ்லிம், அபூதாவுது)
குறிப்பு
மார்க்க சகோதரர்கள் நபிவழிப்படி தொழுகை மேற்கொள்வதற்காக அல்லாஹ்வின் ஆலயம் கட்ட நிதியுதவி கேட்டு ஒரு சில இஸ்லாமிய குழுமங்களில் கருத்துக்களை பதித்தால் குழும மாடரேட்டர்கள் சம்பந்தப்பட்ட மார்க்க சகோதரர்களை மட்டறுக்கிறார்கள் இப்படிப்பட்ட குழுமத்தார் அதே சமயம் ரியல் எஸ்டேட் தொழிழுக்கு நிலம் வாங்க விற்க என்ற மார்க்கெட்டிங் விளம்பரத்தை தங்கள் குழுமங்களில் அனுமதிக்கிறார்கள். அல்லாஹ்வின் ஆலயத்தைவிட இந்த ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பானதா? சிந்தித்துப்பாருங்கள்!
அனைவரும் அல்லாஹ்வின் சாபத்திற்கு அஞ்சிச்கொள்வோமாக
இத்தகுல்லாஹ்
 
 
 
இதையும் பார்க்க:-                                                                                                                                                        
    * தும்மல் - இஸ்லாமிய ஒழுங்குமுறை..                       
               *                                               யாரகுர்ஆனைத்தொடலாம்,படிக்கலாம்தடையில்லை.     
 
 
        
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            

                                                 தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
அருமருந்து என்று கூறப்படும்போது அதற்கு எதிர்ப்பதமாக நோய் என்ற ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். இயல்பாகவே மனிதனுக்கு உண்டாகும் நோய்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் அதாவது
உள்ளத்தில் ஏற்படும் நோய்
உடலில் ஏற்படும் நோய்.

உள்ளத்தில் ஏற்படும் நோய் :
ஒரு மனிதனுக்கு இதயம், சுவாச உருப்புகள் உள்ளது போன்று உள்ளமும் இருக்கிறது. அந்த உள்ளத்தை உணரத்தான் முடியுமே தவிர யாராலும் காட்ட இயலாது.

ஒரு மனிதன் நல்ல உள்ளம் படைத்தவனாக இருந்தால் அவனுடைய உள்ளத்தில் இறைவன் இருப்பதாகவும் ஒருவன் கெட்ட எண்ணடம் படைத்தவனாக இருந்தால் அவனுடைய உள்ளத்தில் சைத்தான் குடியிருப்பதாகவும் அனைத்து மதத்தவர்களாலும் நம்பப்படுகிறது எது எப்படியோ உள்ளம் என்று ஒன்று இருப்பதாக நாம் நம்ப வேண்டும். இஸ்லாம் இந்த உள்ளத்தை பற்றி கூறும் போது அந்த உள்ளத்தில் கூட நோய் உருவாகும் என்றும் இது அப்பாவி மக்களை ஏமாற்றும் மனிதர்களிடம் அதிகமாக இருப்பதாகவும் கூறுகிறது. அதாவது ஒருவனை ஏமாற்ற நினைப்பவன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஏமாற்றுவித்தைகளில் மூழ்கி நன்மை தீமைகளை உணரக்கூடிய நிலையை இழந்துவிடுகிறான்.

உதாரணமாக பிரேமானந்தா, நித்யானந்தா போன்ற சாமியார்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கூறலாம் இப்படிப்பட்ட சாமியார்கள் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு தீட்சை அளிப்பதாக பொய் கூறுவார்கள் பின்னர் இந்த பொய்களில் மூழ்கி பித்தலாட்டம் மற்றும் விபச்சாரம் ஆகிய பாவங்களில் தங்களை சிக்கவைத்துக் கொண்டு பாவத்தில் மூழ்கி விடுகிறார்கள் இறுதியாக அவர்கள் தங்கள் கரங்களாலேயே தங்களை சந்தி சிரிக்க வைத்து விடுகிறார்கள். இது போன்ற நோய்கள்தான் உள்ளத்தில் ஏற்படக்கூடிய நோய்கள் என்று இஸ்லாம் வர்ணிக்கிறது.
 
அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 2:9,10)
 
ஒரு இறைவிசுவாசிக்கு உள்ளத்தில் இப்படிப்பட்ட நோயின் தாக்கம் ஏற்பட்டால் உடனே அந்த நோயிலிருந்து அவன் சுதாரித்தக் கொள்ள அருள்மறை குர்ஆன் மாபெரும் சாதனமாக விளங்குகிறது. அதாவது பொய் கூற முற்படும்போது இஸ்லாம் தடுப்பதை உணரலாம், திருட முற்படும்போது இஸ்லாம் தடுப்பதை உணரலாம், விபச்சாரத்தை நெருங்கும்பொது இஸ்லாம் கடுமையாக கண்டிப்பதை உணரலாம். மேலும் எந்த ஒரு செயலையாவது நாம் செய்ய முற்படும்போது இது கூடுமா? கூடாதா? மார்க்க எல்லைக்கு உட்பட்டதா? மார்க்கத்தில் வரம்பு
மீறிய செயலா? என்று யோசிப்போம். மனதில் ஆழ்ந்த குழப்பம் ஏற்படும் யாரிடம் சென்றாலும் தீர்வு கிடைக்காது தட்டுத்தடுமாறி அங்கும் இங்குமாக அலைவோம் இறுதியாக வேறு வழியின்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் என்று அல்குர்ஆனை புரட்டுவோம் அந்த அருள்மறையின் வசனங்களை பொருளுணர்ந்து படிப்போம் கூடவே நபிகளார் ஸல்லல்லாஹு


அலைஹி வஸல்லம் கூறிய அறிவுரைகளையும் அவர் வாழந்துகாட்டிய விதத்தையும் அலசிப்பார்ப்போம் பின்னர் நம் உள்ளத்தில் தோன்றிய குழப்பமான நோய்க்கு தீர்வு கிடைக்கும் இதன் மூலம் குர்ஆன் குழப்பத்தை தீர்க்கும் அருமருந்தாக அமைந்துள்ளது என்ற உண்மை நமக்கு வெளிப்படுகிறது.

உள்ளத்தின் நோயை தீர்த்து வைக்க எந்த டாக்டரும் இல்லை, அதற்காக உலகில் எந்த மருத்துவ பட்டய படிப்பும் கிடையாது மேலும் இந்த உள்ளத்தில் ஏறபடும் இந்த நோய்க்கு ஒருவனே மருத்துவனாக உள்ளான அவனே அல்லாஹ்! அவன் காட்டும் மருந்தே அருள்மறை குர்ஆன்!

உடலில் ஏற்படும் நோய்
உடல் இல்லாமல் மனிதன் இல்லை ஒவ்வொரு மனிதனுக்கும் இதயம், கண்கள், கல்லீரல், கணையம் போன்ற விலைமதிக்க இயலாத உறுப்புகளை சரியான இடத்தில் பொருத்தியவன் படைத்த இறைவனாகிய அல்லாஹ் தான். எனவே ஒரு மனிதனுக்கு உடல் ரீதியாக ஏற்படும் நோய்களுக்கு உரிய மருந்தையும் அவனே படைத்துள்ளான் மேலும் நோய்க்கான மருந்து மனிதனுடைய சிந்திக்கும் திறமை மற்றும் கண்டு பிடிக்கும் ஆற்றலை பொருத்தே அமைகிறது. ஆனால் மனிதர்களாகிய நாம்தான் இந்த மருந்துகளை தேடுவதில் ஆர்வம் காட்டுவதில்ல.
 
இதோ அல்லாஹ் அருள்மறை குர்ஆன் மூலமாக மனிதர்களாகிய நமக்கு மருந்துகளை பற்றி ஆராய்ச்சி செய்ய அழகான வழிவகைகளை போதிக்கிறான் இதை சற்று உண்ணிப்புடன் கவனித்துப் பாருங்கள்.உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். "நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (அல்குர்ஆன் 16:68) 
 
"பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்" (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)

குர்ஆன் கூறும் தேனீ மற்றும் தேன் ஆராய்ச்சி படிப்பினை :
அருள்மறை குர்ஆன் தேனீக்கள் பற்றியும் அவற்றின் மூலம் கிடைக்கும் தேன் பற்றியும் மிக அழகாக எடுத்துக்கூறுகிறது. அதாவது ஒரு மனிதனுக்கு தேனீ போன்ற சிறிய ஜீவனிடம் கூட மருந்து உள்ளதாக அருள்மறை கூறுகிறது. சற்று யோசித்துப்பாருங்கள் ஆறு அறிவு படைத்த மனிதனுக்கு ஐந்து அறிவு கொண்ட ஈக்களின் இனமான தேனீயிடம் மருத்துவம் என்ற செய்தி மகத்தான உண்மைதானே! நீங்கள் இந்த வசனத்தை படித்தவுடன் தேன் என்ன அனைத்து நோய்களையும் தீர்க்குமா? மனிதனுக்கு புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் வருகிறது இதற்கெல்லாம் இந்த தேன்தான் மருந்தா என்று சிந்திக்க தோன்றும்.
ஆனால் இந்த வசனத்தை நீங்கள் பொறுமையாகவும் வசனம் உணர்த்தும் பொருளை நன்கு உணர்ந்தும் படித்தால் இந்த வசனத்தின் மூலம் இந்த அறிவியில் உலகம் எதை நோக்கி பயனிக்க வேண்டும் என்ற அறிவுரையை நமக்கு விளக்கிக் காட்டுகிறது! வாருங்கள் சிந்தித்து ஆராய்வேமா?
 
தேனியிடம் மருந்து உள்ளது மேலும் தேனீ முதற்கொண்டு மற்ற உயிருள்ள ஜீவன்களிடமிருந்தும் நோயை குணப்படுத்தும் மருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மனிதன் முயற்சி செய்ய வேண்டும் என்ற சிந்தனையை தூண்டுகிறது. இவ்வாறு பட்சிகள், ஈக்கள் மற்றும் மிருகங்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சி படிப்பான விலங்கியல் ஆராச்சிகள் தேவை
தேனீ தானான தேன் என்ற பொருளை தருவதில்லை மாறாக அது பலவகையான கனிகள், மலர்கள் ஆகியவற்றை உட்கொண்டு அதிலிருந்து ஜீரணமாகி வெளியாவதுதான் தேன் எனவே தேனீ உட்கொள்ளும் தாவரங்களை ஆராய்ச்சி செய்ய தாவரவியல் ஆராச்சிகள் தேவை.
 
தேனீ உணவை உட்கொள்வதன் மூலம் அந்த உணவு செரிமானம் ஆகும் வயிற்றுப்பகுதியை பற்றி இந்த வசனம் சிந்திக்க தூண்டுகிறது. பொதுவாக பிராணியின் வயிற்றுக்கு உள்ளே இருக்கும் செய்திகளை படைத்த இறைவன்தான் பார்க்க இயலும் இந்த அறிவை மனிதன் பெற வேண்டும் என்ற அல்லாஹ் வலியுறுத்துகிறான் அதாவது மனிதர்களாகிய நாம் ஸ்கேன், லேசர் கருவிகள் போன்ற நவீன தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்வது எளிது என்பதை உணர வேண்டும். இப்படிப்பட்ட துள்ளியமான அறிவாற்றலுக்கு நவீன உபகரணங்கள் பற்றிய கல்வி மிக அவசியம்.
 
இறுதியாக இந்த வசனத்தில் தேன் என்பதை அல்லாஹ் கூறுகிறான் அதாவது தேன் என்ற மருத்துவ குணம் கொண்ட திரவம் அதிக காலம் கெடாமல் இருக்கும். அதே போல மனிதனை நோக்கி இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி என்று கூறுகிறான் அதாவது தேன் அல்லாத மற்ற மருந்துகளுக்கு மருந்தின் தன்மை, கெட்டுப்போகும் காலநிலை, மருந்து கெட்டுப்போனால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவற்றை சிந்திக்க வேண்டும் இந்த ஆராய்ச்சிகள் மூலமாக மருந்து தயாரிப்பு முறைகள் பற்றிய ஆராய்ச்சி கல்வி மிக அவசியம்!

உடலளவில் ஏற்படும் ஒரு நோய்க்கு கீழ்க்கண்ட ஆராய்ச்சிகள் இன்றியமையாதவை :
மனிதன் கற்க வேண்டிய ஆராய்ச்சி படிப்புகள்
உடலியல் ஆராய்ச்சி படிப்பு
விலங்கியல் ஆராய்ச்சி படிப்பு
தாவரவியல் ஆராய்ச்சி படிப்பு
நவீன உபகரணங்கள் பற்றிய ஆராய்ச்சி படிப்பு
மருந்து தயாரிப்பு ஆராய்ச்சி படிப்பு
சிந்தித்துப்பாருங்கள் அருமைச் சகோதரர்களே 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆராச்சி பற்றிய அறிவு யாருக்கேனும் இருந்ததா? ஆனால் அருள்மறை குர்ஆன் இத்தனை ஆராய்ச்சிகளையும் தேடுங்கள் அந்த தேடுதல் உங்களுடைய நோய்களுக்கு மருந்தாக அமையும் என்று அழகாக வர்ணிக்கிறது நாம் ஆராய்கிறோமா?

தேனில் உள்ள மருத்துவ குணம் பற்றி ஆராய்வோமா?
தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, கிருமிகளை வளர விடுவது இல்லை
சித்த மருத்துவம் தேன் பற்றி கூறும்போது இந்த தேன் 12 நாழிகையில் செரிந்து உடலுக்க பலத்தை கொடுக்கிறதாம்
புதிய தேனை சாப்பிட்டால் ஆயுள் விருத்தியாகுமாம்
தேனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் (Fatty Acid) பசியைத் தூண்டி விரைவாக உணவைச் செரிக்க செய்கிறதாம்.
தேன் மலமிலக்கியாக கூட செயல்படுகிறதாம்.
தேன் உதிரப் போக்கை கட்டுப்படுத்துகிறதாம்.
தேனும் பார்லி வேகவைத்த நீரும் கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், வயிறு பெறுமல், இரைப்பு இருமல், ஜலதோஷம், தொண்டைகட்டு, தொண்டைப்புண் ஆகியன குணமாகுமாம்.
இதயத்தின் தசைகள் சோர்வடைவதால் இதயச் சோர்வு ஏற்பட்டு ISCHEMIA, INFRACTION எனும் அபயாய நோய்கள் வருவதை தேன் தடுக்கிறதாம். மேலும் தேன் இதயச் சுமையை குறைக்கிறதாம்.
தேனும் கரித்தூலும் கலந்து பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடுமாம்.
முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் இந்த தேனை தடவி விட்டுவிட்டு பிறகு வெண்ணீரால் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் நீங்குகிறதாம்.
காயங்களின் மீது தேனைத்தடவுவதால் காயம் விரைவில் குணமடையும் எனக் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று ஒரு செய்தி கூட உள்ளது.
அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதற்கும் இறுதி வேதம் என்பதற்கும் இந்த தேன் மற்றும் தேனீ பற்றிய படிப்பினை ஆதாரமாக இருக்கிறது. நீங்கள் இஸ்லாத்தின் பக்கம் விரைந்து வரலாமே! தேனீக்கள் ஆராச்சிக்கு உதவிய பல்வேறு இணைய தளங்களுக்கு நன்றிகள் பல  ........................அல்ஹம்துலில்லாஹ்...


இதையும் பார்க்க:-
                       * குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்..!!
                     * தாயத்துக்கும் சயனைடு குப்பிக்கும் உள்ள கள்ள உறவு
                     * வரதட்சணை வன்கொடுமைக்கு யார் காரணம்?
                     * ஜின்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்.
                     * பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித கு...
                     * சுவர்க்கத்தை நோக்கி எமது பயணம்...!!

 

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget