முஸ்லிம்களின் தலைவர் அமைச்சர் M.H.M.அஷ்ரப்f மரணத்தில் புதைந்து போன குளிர் மர்மங்கள்.

                                                தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

The mysteries behind the death of M.H.M.Ashraff

(உங்கள் நண்பர்களும் இதை வசிக்க SHARE பன்னுங்கள்)

... மறைவிற்கு சில நாட்களுக்கு முன்..

"அக்டோபர் 11ம் திகதியன்று எமது ஆதரவின்றி ஜனாதிபதியால் அரசாங்கம் அமைக்க முடியாது. நாங்கள் ரணிலுடன் கூட்டுசேர விரும்பவில்லை... எமது கைகளில் தான் விஷயம் இருக்கிறது..."

அஷ்ரப் இவ்வாறு கூறியது எதிர் வரும் பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி எதிர்பார்ப்புடன் சந்திரிக்காவின் தலைமையில் உள்ள "பொதுஜன ஐக்கிய முன்னணி" அரசாங்கத்தில் கூட்டு சேர்த்து தனது கட்சியை வலுவான நிலைமைக்கு இட்டுச் செல்லும் நோக்கிலேயாகும். எனினும் தமது கட்சி உறுப்பினர்களுடன் இவ்வாறு பலமாக எழுந்து நின்ற அவரால் தனது எதிர்பார்புக்களை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போனது. அரசியலில் இருந்து மற்றுமின்றி வாழ்க்கை பயனத்திலிருந்தும் அவரை ஓரம்கட்டுவதட்கு சில கொடிய சக்திகள் திட்டமிட்டிருந்தன. 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ம் திகதி வான்வெளியில் நடந்த ஓர் விபத்தில் அஷ்ரப் உயிர் துறந்தது அரசியல் உலகில் இன்னுமொரு மர்மத்தை மறைத்தவண்ணமே.

மத்திய மலைநாட்டில் அரசியல் பலம் நிறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சௌம்யமூர்த்தி தொண்டமான் இலங்கையின் அரசியல் களத்தில் அரசாங்கம் அமைக்கும் காரணகர்த்தாவாக நெடுங்காலமாக வாகை சூடிக்கொண்டிருந்தார். இவரது கட்சியே அரசாங்கத்தை அமைக்கும் பெரிய கட்சியை தீர்மானித்தது. எனினும் காலத்தின் மாற்றத்தால் எம்.எச்.எம். அஷ்ரப் தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட 'இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்' இலங்கையின் அரசாங்கம் அமைக்கும் பெரிய கட்சியை தீர்மானிக்கும்.


 பிரதான கட்சியாக உருமாறியது. 1989 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனது பலத்தை நிரூபித்ததுக் காட்டியது. 2000ஆம் ஆண்டு அக்டோபர் 10ம் திகதி நடக்கவிருந்த பொதுத் தேர்தலில் அஷ்ரபின் ஆதரவானது சந்திரிகா பண்டாரநாயகவிற்கு அரசாங்கம் அமைபதட்கு மிகவும் இன்றியமையாத காரணியாக காணப்பட்டது. காரணம் 1994இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சந்திரிக்காவின் கட்சி அரசாங்கம் அமைத்தது பாராளுமன்றத்தில் மேலதிக ஓர் ஆசனத்தினாலேயாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் இவ்வரசாங்கத்திட்கு இணைந்ததனால் அஷ்ரப் துறைமுக புனர்நிர்மான மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன் இன்னும் இரண்டு பிரதி அமைசுப் பதவிகளுக்கு மேலதிகமாக வேறு சில பதவிகளும் முஸ்லிம் காங்கிரசஸினை வந்தடைதன. இதற்கிடையில் அஷ்ரப் "ஜாதிக சமகி பெரமுன" எனும் கட்சியை உருவாக்கி அதற்கு சிங்கள, தமிழ் மக்களை உள்வங்கிக்கொண்டதனால் 2000ஆம் ஆண்டளவில் அவர் தேசிய மட்டத்தை தாண்டி தனது பலத்தை விஸ்தரித்திருந்தார். இதனால் 2000ஆம் ஆண்டு நடக்கவிருந்த பொதுத் தேர்தலில் சந்திரிகாவிற்கு அஷ்ரபின் ஆதரவு மிகவும் அத்தியவசியமனதொன்றகக் காணப்பட்டது.

நிலைமை இவ்வாறிருக்க அஷ்ரப் தனது அரசியல் வாழ்கையில் ஓர் முக்கிய சிகரத்தை எட்டுவதற்கு ஆயத்தமாக இருந்தார். அதாவது அஷ்ரபின் அடுத்த கட்ட வெற்றியானது அவரை இலங்கை வாழ் முழு முஸ்லிம் சமூகத்தின் தலைவராக மற்றுமின்றி ஓர் தேசிய அரசியல் தலைவராகவும் உருவெடுக்கவைக்கும் வெற்றியாகும். எனினும் இவர் அடையப்போகும் இம்மாபெரும் வெற்றியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த ஓர் சில முஸ்லிம் தலைமைகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.


இதற்கு முன்னர் சுமார் ஒரு தசாப்த காலமாக அஷ்ரப் எதிர்ப்பு பேரணியொன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுள்ளே காணப்பட்டது. 1988இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட அஷ்ரப் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த முஸ்லிம் தலைமைகள் எதிர்த்தன. இதன் ஓர் விளைவாக சந்திரிக்காவின் அரசாங்கத்தில் ஆதிக்கம் நிறைந்த ஓர் முஸ்லிம் அமைச்சராகிய எ.எச்.எம்.பௌஸி தனது எதிர்ப்பை பகிரங்கமாக அறிவித்திருந்தார். 'ஜாதிக சமகி பெரமுன' தலைவராக அஷ்ரப் மற்றும் ஸ்ரீ.சு.க தலைமைகளுக்கும் இடையில் புரிதுணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடும் நோக்கில் கலந்துரையாடல் நடந்த 2000ஆம் ஆகஸ்ட் மாத காலகட்டத்தில் பௌஸி மற்றும் அஷ்ரப் இடையிலான மோதல் கொடிகட்டியிருன்தது.

அமைச்சர் பதவியிலிருந்து அஷ்ரபினை நீக்குவதற்கும் அரசங்கத்தினுள்ளே சதி முயற்சிகள் இடம்பெற்றன. "முடியுமென்றால் அமைச்சர் பதவியில் இருந்து விலகி சுதந்திரக் கட்சியிலிருந்தும் விலகி தனித்துப் போட்டியிட்டு 5 ஆசனகளுக்கு மேல் வெற்றிபெற்றுக் காட்டுங்கள். இச்சவாலை வெற்றிகொண்டால் நான் அரசியலில் இருந்து முற்றாக விலகிவிடுவேன்" என ஆகஸ்ட் 31ம் திகதி பௌஸி அஷ்ரபினை நோக்கி சவால் விடுத்தார்.

பௌஸி இச்சவாலை விடுக்கும்போது அஷ்ரப் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.பி.திசாநாயகவுடன் அரசியல் கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய கலந்துரையாடலில் காணப்பட்டார்.

பௌஸியின் இக்கருத்து ஊடகங்களில் பெருமளவு பேசப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்தினால் பெரும் அசெளகரியன்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. இதற்கிடையில் பௌஸி சவால்விட்ட அன்றே அஷ்ரப் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய இரண்டு பிரதி அமைச்சர்களினதும் இராஜினாமா கடிதங்கள் விரைவாக ஜனாதிபதியை வந்தடைந்தன. எனினும் அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி அஷ்ரபிடம் மண்ணிப்பு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து இராஜினாமா கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செப்டம்பர் 3ஆம் திகதி "ஜாதிக சமகி பெரமுன" மற்றும் "பொதுஜன ஐக்கிய முன்னணி" ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் தேர்தல் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுள் அஷ்ரப் எதிர்ப்புப் பேரணி தொடர்ந்தும் காணப்பட்டது. இதில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மட்டுமின்றி மிக முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்த சில சிங்கள அமைச்சர்களும் இருந்தனர். ஜனநாயகத்திற்கு பெருமதிப்பளிக்கும் தேசியத் தலைவராக அஷ்ரப் உருவாகிக்கொண்டிருந்ததனால் அவரால் முகம்கொடுக்க வேண்டியேட்பட்ட சவால்கள் சிறிதல்ல. ஜாதிக சமகி பெரமுன மூலம் ஹம்பந்தோட்டை பிரதேசத்திட்கு நியமிக்கப்பட்ட கட்சி அணித் தலைவர் கடத்தப்பட்டார். இக்கடத்தல் சம்பவத்திற்கு அப்பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

எவ்வாறாயினும் தேர்தல் காலம் தொடங்கியதை அடுத்து அதிகரித்த வேலைப்பளுவுடன் அஷ்ரப் இச்சவால்களையெல்லாம் பின்தள்ளிவிட்டு தனது கட்சியின் வெற்றிக்காக நாடுமுழுவதும் ஓடி அலைந்தார். ஜாதிக சமகி பெரமுனவின் தேர்தல் கொள்கைகளின் வெளியீட்டு விழாவை அம்பாறையில் நடாத்த அஷ்ரப் தீர்மானித்திருந்தார்.

வான்வெளியில் விபத்து...,

அமைச்சர் அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி காலை 9:30 மணியளவில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான (ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட) Mi-17 முக்கிய ரமுகர்களுக்கான ஹெலிகொப்டரில் கொழும்பு - பம்பலப்பிட்டி போலீஸ் மைதானத்தில் இருந்து அம்பாறை நோக்கி புறப்பட்டார். கொழும்பிலிருந்து அம்பாறை நோக்கிய வான் பயணப்பாதை கண்டி, ரந்தெனிகல, மஹா ஓய, இங்கினியாகல ஊடக அம்பாறை நோக்கியதாக இருந்தது. இது சுமார் 40 நிமிட பாயனப்பதையாகும். விமானப்படையை சேர்த்த கப்டன் சிரான் பெரேரா தலைமையில் ஹெலிகாப்டர் பயணத்தை துவங்கியது. கப்டன் சிரான் பெரேரா 7000 மணி நேர வான் பயணத்தை கடந்த சிறந்த அனுபவமுள்ள விமானபடை விமானி.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 அடி உயரத்தில் ஹெலிகாப்ட்டர் சென்றுகொண்டிருக்கும் போது கப்டன் சிரான் பெரேரா இறுதியாக கட்டுநாயக இலங்கை விமானப்படை கட்டுபாட்டு கோபுரத்துடன் தொடர்பை ஏட்படுத்தியிருந்தார். தான் கண்டிக்கு 15 நிமிட தொலைவில் இருப்பதாகவும் காலநிலை சீராக இருப்பதாகவும், பயணத்தில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும் சில நிமிடங்கள் சென்று Mi-17 ஹெலிகப்டரிடம் இருந்து எந்த தொடர்பலைகளும் கிடைக்கவில்லை. கட்டுநாயக கட்டுப்பட்டு கோபுரத்துடனான தொடர்பும் முற்றாக துண்டிக்கப்பட்டு இருந்தது.

இறுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த 13 பேரின் சடலங்கள் ஊராகந்த, அரனாயக பகுதியில் உள்ள காட்டிலிருந்து கிராமவாசிகளால் மீட்கப்பட்டது.

• சீரற்ற காலநிலை,
• ஹெலிகோப்டேரில் தொழிநுட்பக்கோளறு,
• மலைகள் நிறைந்த காட்டுப்பகுதி,
• விடுதலை புலிகளின் ஏவுகணை தாக்குதல்
என பலவகையான சந்தேகங்களுக்கு மத்தியில் இம் மர்மம் தொடர்ந்தும் மர்மமாகவே புதைத்து போனது.

*எனினும் இவ் விபத்துக்கு பின்னால் மறைந்து போன சில உண்மைகளும் இருக்கின்றன.

• பம்பலப்பிட்டி போலீஸ் மைதானத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகோப்டேரில் 13 பேர்தான் பயணித்தனர் என்பதற்கு பொருத்தமான ஆதாரம் எதுவும் கிடையாது. போலீஸ் அறிக்கையிலும், இராணுவ அறிக்கையிலும் சில முரண்பாடுகள் உள்ளன. இதன் படி இதில் 15 அல்லது 17 பேர் பயனித்திருக்கலம் என நம்பப்படுகின்றது.

• கப்டன் சிரான் பெரேரா 7000 மணி நேர வான் பயணத்தை கடந்த இலங்கையின் திறமையான விமானி மற்றுமின்றி எந்த காலநிலையையும் சமாளித்து தரையிறக்கும் திறமை கொண்டவர்.

• விபத்து இடம்பெற்ற்ற பகுதியில் உள்ள கிராமவாசிகளின் கருத்துப்படி அப்பிரதேசத்தில் அவர்கள் ஹெலிகாப்டர்கள் பறப்பதை கண்டதேயில்லை. அப்பிரதேசம் ஹெலிகோப்டேர்களின் பயனப்பதயிலும் இல்லை.

• ஹெலிகாப்ட்டர் அப்பாதையை பயன்படுத்தியது இதுவே முதல் தடவை.
• ஹெலிகோப்டேரின் கருப்புப்பெட்டி விடயமும் சரிவர மேடைக்கு வரவில்லை.

• எல்லாவற்றிலும் முக்கிய விடயம் விபத்துக்குள்ளான ஹெலிகாப்ட்டர் ரஷியாவில் முக்கிய பிரமுகர்களுக்கென பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டது.

இது பற்றிய மேலும் சில உண்மைகள் விரைவில்...

 

இதையும் பார்க்க:-

        * இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் ஒரு நீங்கா தடம் பதி...-
        * கொலைவெறி புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிர ான சாதனைகள... 
        * காலி முகத்திடலும் காலியான முஸ்லீம் பெண்களின் முந்த...
        * தாயத்துக்கும் சயனைடு குப்பிக்கும் உள்ள கள்ள உறவு


     

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget