இயேசு சிலுவையில் அறையப்படவில்லை..( அதிகமாக பகிருங்கள் )

                                       தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
கல்லறைக்கு முதலில் வந்தவர் யார் ?.
 

சிலுவையில் இருந்து இறக்கப்பட்ட இயேசுவின் உடல் கல்லறைக்குள் வைக்கப்பட்டது. கல்லறைக்குள் வைக்கப்பட்ட உடல் காணாமல் போனது பற்றி நான்கு சுவிஷேசக்காரர்களும் முரண்பட்டுக் கூறுகிறார்கள்.

ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.
மத் 28:1

வாரத்தின் முதல் நாளில் மகதலேனா மரியாளும் மற்றொரு மரியாளும் வந்து கல்லறையில் இயேசுவின் உடல் காணாமல் போனதைப் பார்த்ததாக மத்தேயு குறிப்பிடுகிறார்.

ஓய்வு நாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக் கொண்டு. மாற்கு 16:1

மகதலேனா மரியாளும் மற்றொரு மரியாளும் சலாமே என்பவளும் கல்லறையில் இருந்து இயேசுவின் உடல் காணாமல் போனதைப் பார்த்ததாக மாற்கு குறிப்பிடுகிறார்.

கலிலேயாவிலிருந்து அவருடனே கூட வந்திருந்த ஸ்திரிகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, திரும்பிப் போய், கந்தவர்க்கங்களையும் பரிமள தைலங்களையும் ஆயத்தம் பண்ணி, கற்பனையின்படியே ஓய்வு நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
லூக்கா 23:55,56

வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம் பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு வேறு சில ஸ்திரிகளோடுங் கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள். லூக்கா 24:1

கலிலேயோவில் இருந்து வந்திருந்த பெண்களும் இன்னும் அநேக பெண்களும் வாரத்தின் முதல் நாளில் கல்லறைக்கு வந்து இயேசுவின் உடல் காணாமல் போனதைப் பார்த்ததாக லூக்கா கூறுகிறார்.

வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக் கண்டாள். உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள். யோவான் 20:1,2

இருட்டோடு இருட்டாக மகதலேனா மரியாள் மட்டும் வந்து கல்லறையில் இயேசுவின் உடல் காணாமல் போனதைப் பார்த்ததாக யோவான் கூறுகிறார்.

கல்லறையில் இயேசு காணாமல் போனதைக் கண்டவர் மகதலேனா மரியாள் மட்டுமா? அல்லது இரண்டு மரியாள்களா? அல்லது இரண்டு மரியாள்களுடன் சலாமே என்னும் பெண்ணும் ஆக மூவரா? அல்லது அநேக பெண்கள் கூட்டமா? இவற்றுள் எது சரி? தக்க ஆதாரம் இல்லாமல் ஆளாளுக்கு கற்பனை செய்து கூறியதால் தான் இப்படி முரண்படுகின்றனர்.

சிலுவையில் அறையப்பட்ட நேரம் எது?

எந்த ஒரு நிகழ்ச்சியை நம்புவதற்கும், நிரூபிப்பதற்கும் அது நிகழ்ந்த நேரம் பற்றிய தகவல் முக்கியமானதாகும். அதில் முரண்பாடு ஏற்பட்டால் அந்தச் சம்பவம் நிரூபணமாகாது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நேரம் என்ன என்ற முக்கியமான விஷயம் குறித்து பைபிளில் காணப்படும் முரண்பாடு அதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது அவரைச் சிலுவையில் அறைந்த போது மூன்றாம் மணி வேளையாயிருந்தது. மாற்கு 15:26

இயேசு மூன்றாம் மணி நேரத்தில் சிலுவையில் அறையப்பட்டார் என்று மாற்கு கூறுகிறார்.

மாற்கு கூறுவதைப் பொய்யாக்கும் வகையில் யோவான் கூறுவதைக் கேளுங்கள்!

அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான். அவர்;கள்: இவனை அகற்றும் அகற்றும் சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர்; பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள். அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக் கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக் கொண்டு போனார்கள்.
யோவான் 19:14,15,16

மூன்று மணிக்கு இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்றால் அவரது விசாரணை அதற்கு முன்பு நடந்திருக்க வேண்டும். ஆனால் இயேசு ஆறு மணிக்கு பிலாத்துவின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆறு மணிக்கு விசாரிக்கப்பட்டவர் அதற்கு முன்பு எப்படிச் சிலுவையில் அறையப்பட முடியும். சிலுவையில் அறையப்பட்டவரை எழுப்பி பிலாத்து விசாரித்தாரா?

ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மத்தேயு 27:45,46

ஆறாம் மணி நேர முதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. ஒன்பதாம் மணி நேரத்திலே இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்; என்று அர்த்தமாம்.
மாற்கு 15:33,34

அப்பொழுது ஏறக்குறைய ஆறாம் மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டடார். லூக்கா 23:44-46

ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை இருள் ஏற்பட்டதாகவும் ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு உயிரை விட்டதாகவும் மத்தேயுவும் மாற்குவும், லூக்காவும் கூறுகிறார்கள்.

அதாவது எந்த நேரத்தில் இயேசு பிலாத்துவின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டுக் கொண்டு இருந்தாரோ அந்த நேரத்தில் இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார் என்று இம்மூவரும் கூறுகிறார்கள்.

சிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் காணப்படும் முரண்பாடு இந்த நிகழ்ச்சியில் ஏற்படும் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.

கல்லைப் புரட்டியதில் முரண்பாடு.

ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின் மேல் உட்கார்ந்தான்.  மத் 28:1,2

வாரத்தின் முதல் நாளில் மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் வந்த போது அவர்கள் பார்க்கும் விதத்தில் அவர்கள் முன்னிலையில் வானத்தில் இருந்து தேவ தூதன் இறங்கி கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்ததாக மத்தேயு கூறுகிறார். மாற்குவும் இந்தக் கருத்தை கூறுகிறார்.

கல்லறையை அடைத்திருந்த கல்புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு,
லூக்கா 24:2

ஆனால் மூன்று பெண்களும் வந்த போது முன்னரே கல் புரட்டப்பட்டதைக் கண்டதாக லூக்கா கூறிகிறார்.

வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக் கண்டாள்.  யோவான் 20:1

மகதலேனா மரியாள் இருட்டோடு வந்த போது கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்து போட்டிருக்கக் கண்டதாக யோவான் கூறுகிறார்.

இந்தப் பெண்கள் வரும் போது கல்லறையின் மீது கல் வைக்கப்பட்டு அவர்கள் வந்த பிறகு புரட்டப்பட்டதா? முன்னரே புரட்டப்பட்டிருந்ததா? எது உண்மை? ஏன் இதத் தடுமாற்றம்?

கல்லறைக்கு பெண்கள் வந்த நேரம் எது?

ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.
மத் 28:1

வாரத்தின் முதலாம் நாளில் விடிந்து வரும்போது இரண்டு மரியாள்களும் கல்லறைக்கு வந்ததாக மத்தேயு கூறுகிறார்.

வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம் பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு வேறு சில ஸ்திரிகளோடுங் கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள். லூக்கா 24:1

அதிகாலையில் என லூக்கா கூறுகிறார்.

வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிற போது கல்லறையினிடத்தில் வந்து, மாற்கு 16:2

சூரியன் உதயமாகிற போது என்று மாற்கு கூறுகிறார்.
சூரியன் உதிக்கும் போது என்பதும் அதிகாலை என்பது ஒன்று தான் என்று இதற்கு விளக்கம் கூற முடியும்.
ஆனால் யோவான் அதிக இருட்டோட என்று கூறுகிறார்.

வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக் கண்டாள். யோவான் 20:1

அதிக இருட்டான நேரத்தை சூரியன் உதயமாகும் போது என்று யாரும் கூற மாட்டார்கள்.  சுகந்தவர்க்கம் இடுவதிலும் முரண்பாடு
ஒரு உடலை அடக்கம் செய்யும் போது அதற்கு வாசனைத் திரவியங்கள் பூசி அடக்கம் செய்ய வேண்டும் என்பது யூத மதத்தின் படி செய்ய வேண்டிய சடங்காகும்.

இந்தச் சடங்கைச் செய்யாமல் இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதால் அந்த உடலுக்கு பூச வேண்டிய நறுமனத்தை வாங்கிக் கொண்டு அதைப் பூசுவதற்காகவே மூன்று பெண்களும் வந்ததாக மாற்கு கூறுகிறார்.

ஓய்வு நாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக் கொண்டு. மாற்கு 16:1

கல்லறையையும் அது வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து விட்டு நறுமணம் பூசப்படவில்லை எனபதைக் கண்டு நறுமணப் பொருளை வாங்கிக் கொண்டு அநேகம் பெண்கள் வந்ததாக லூக்கா கூறுகிறார்.

கலிலேயாவிலிருந்து அவருடனே கூட வந்திருந்த ஸ்திரிகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, திரும்பிப் போய், கந்தவர்க்கங்களையும் பரிமள தைலங்களையும் ஆயத்தம் பண்ணி, கற்பனையின்படியே ஓய்வு நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
லூக்கா 23:55,56

மத்தேயு நறுமணம் பற்றிப் பேசவில்லை.
ஆனால் யோவான் கூறும் போது இயேசுவை அடக்கம் செய்யும் போதே நூறு ராத்தல் நறுமணப் பொருள் பூசி யூதமதச் சடங்குகள் செய்து அடக்கம் செய்யப்பட்டார் எனக் கூறுகிறார்.

ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டு வந்தான். அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகர்ந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.
யோவான் 19:39,40

இயேசு அடக்கம் செய்யப்படும் போது அவருக்கு உரிய மதச் சடங்குகள் செய்யப்பட்டனவா? இல்லையா? அந்தப் பெண்கள் அந்தச் சடங்குகலைச் செய்ய வந்தார்களா? வெறும் பார்வையாளராக வந்தார்களா? ஏன் இந்த முரண்பாடு? இதில் எது உண்மை?

இயேசுவின் உடலுக்கு நறுமணம் பூசவில்லை என்பதை அப்பெண்கள் கண்டு நறுமணப் பொருள்களைப் பூச நினைத்தால் இரண்டு நாள் கழித்துத் தான் அதைச் செய்வார்களா? உடனடியாக அதைச் செய்திருக்க மாட்டார்களா? என்ற கேள்வியும் இதில் மேலதிகமாக எழுகின்றது.
இதையும் பார்க்க:-
                          *  மதம் மாறினால் மரண தண்டனையா?
                          *  பெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)
                          *  அல்குர்ஆன் கூறும் தேனீ + தேன் ஆராய்ச்சி படிப்பினை....
                          *  சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து (காதலர் தினம்)
                          *  பெர்முடா முக்கோணம் (சைத்தானின்முக்கோணம்)

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget