இமாம் சமுத்ரா எதற்காக மரணித்தார்?

                                        தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

12 ஒக்டோபர் 2002. ஒரு பலத்த வெடியோசையுடன் எல்லாம் அடங்கி போய் விட்டது. வெள்ளையர்களின் சொர்க்கம் சில வினாடிகள் கரும்புகை மண்டலமாக மாறி அவர்களிற்கு நரகத்தை கொஞ்சம் சுவைக்க வைத்தது. உலக ஊடகங்கள் இந்த சம்பவம் பற்றி நிறையவே பேசின. “பாலி குண்டு வெடிப்பு” அவர்களிற்கு மறக்க முடியாத நினைவுகளை பரிசாக கொடுத்தன. குறிப்பாக அவுஸ்திரேலியர்களிற்கு.

இந்தோனேஷியா முஸ்லிம் நாடு. வறிய நாடு. ஹிஸ்புத் தஹ்ரீர் முதல் கிறிஸ்தவ கத்தோலிக்க மிஷனரிகள் வரை கைகளை விரித்து கடை போட்டுள்ள நாடு. அவுஸ்திரேலியர்களிற்கு  தங்கள் விபச்சார கலையை அரங்கேற்றும் நாடு. அரை நிர்வாண உடைகளுடன் மது வருந்த விருப்பமான நாடு. தன்னினச் சேர்க்கையை கடற்கரைகளில் வெளிப்படையாக நிகழ்த்த பிடித்தமான நாடு. ஆம். இந்தோனேஷியாவின் தீவுகளில் இவர்கள் நிகழ்த்தும் மனித கலாச்சாரங்களிற்கு முரணான கேளிக்கைகள் நிறையவே உண்டு.


மெல்ல மெல்ல இந்தோனேஷிய முஸ்லிம்களை அவர்களது மேற்கின் கேடுகெட்ட கலாச்சாரத்திற்குள் கொண்டு செல்லும் நச்சு சக்கரம் சுழற்றப்பட்ட போதுதான் பாலியில் நடக்கும் அனாச்சாரங்களிற்கு எதிராக எச்சரிக்கைகள் வெளியாக ஆரம்பித்தன. அதன் இறுதி விளைவாக பாலியில் குண்டுத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பரிதாபகரமாக பலர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயங்களிற்கு உள்ளாகினர். அவுஸ்திரேலிய கலங்கியது. நாளை அவுஸ்திரேலியா கண்டத்தின் ஒரு பகுதி இந்தோனேஷியர்களால் கைப்பற்றப்படலாமோ என அச்சம் கொண்டது. இதை செய்தது யார்...........,?

மேற்கு ஜாவாவின் அருகில் உள்ள ஒரு தீவு. மின்சார வசதிகள் கூட பெரிதாக இல்லை. பழங்கள், மான், ஆடு, மாடு முதலியவற்றின் பால் இவற்றை மட்டும் உண்டு வாழும் மனிதர்கள். அமைதியான தீவு. அதன் ஒரு மூலையில் எரியும் ஹரிகேன் இலாந்தர் வெளிச்சத்தில் உலக வரைபடம் விரிந்து கிடக்கிறது.  ஆடும் காற்றில் இலாந்தரின் தீ மெல்ல அங்கும் இங்கும் அலைகிறது. இதனால் வரைபடம் ஒரு சில கணங்கள் வெளிச்சமாகவும் ஒரு சில கணங்கள் இருட்டாகவும் மாறி மாறி சினிமா காட்டுவது போல் விளையாடுகிறது.

ஐந்து அடி உயரத்தில் ஒரு மெல்லிய மனிதன் எந்த சலனமும் இல்லாமல் அந்த வரைபடத்தையே உற்று நோக்கியவாறு நிற்கின்றான். ஹோ சீ மின் வியட்நாமிய வரைபடத்தை பார்ததை நினைவூட்டுகிறது அவனது பாவனை.  பாவனை மட்டுமல்ல அவனது தாடியும் கூட அவரையே ஞாபகம் செய்கிறது. ஒரே ஒரு வித்தியாசம். ஹோ... தனது அபகரிக்கப்ட்ட தேசத்தை கவலையுடன் பார்த்தார். இந்த மனிதனோ கொஞ்சம் கொஞ்சமாக அபகரிக்கபடும் தனது தேசத்தை கவலையுடன் பார்த்தவாறுிருந்தான்.

அப்துல் அசீஸ் ஹுதாமா. இந்த பெயர் நம்மில் பலரிற்கு தெரியாது. “இமாம் சமுத்ரா” என்றால் தெரியும். நன்றாகவே தெரியும். “இந்தோனேஷியாவின் இஸ்லாமிய பயங்கரவாதி”. “பாலி குண்டு வெடிப்பின் சூத்திரதாரி”. மேற்கின் ஊடகங்கள் எமக்கு அழகாக சொல்லித்தந்த வசனங்கள் இவை. ஆனால் இந்த மனிதனை இந்தோனேஷியாவின் இஸ்லாமியவாதிகளிற்கு தெரியும். “அபூ உமர்” என்று. “ஷேஹ் இமாம் சுமுத்ரா” என்று. அவர்கள் உள்ளத்தில் நீங்காத இடம் பிடித்த மனிதனின் பெயர் இது. இவை மிகையான வார்த்தைகள் அல்ல.

பாலி குண்டு வெடிப்பின் பின்புலத்தில் திட்டமிடல் மற்றும் கட்டளை பிறப்பித்தல் போன்றவை இவராலேயே நிகழ்த்தப்பட்டன என இந்தோனேஷிய பொலிஸார் குற்றப்பத்திரம் தாக்கல் செய்தனர். மேற்கின் உளவமைப்புக்கள் இதனை உண்மை என்று ஒப்புக்கொண்டன. நீதிபதிகள் இலகுவாக தீர்ப்பளித்தனர். “சாகும் வரை இவரையும் இவரது இரண்டு சாகக்களையும் துாக்கில் தொங்கவிடும்படி”. ஆகஸ்ட் 2003ல் இந்த தீர்ப்பு வெளியானது.


09 நவம்பர் 2008. ஜாவாவின் நுஸாகம்பன்கான் தீவில் மூவரும் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். டச்சுக்காரர்களினால் சிறைவதைசாலையாக பயன்படுத்தப்பட்ட இந்த தீவில் உள்ள சிறைச்சாலையில் வைத்தது இவர்கள் மரணிக்க வைக்கப்பட்டார்கள்.


Imam Samudra, Amrozi NurhasyimAli Ghufron. இந்த மூவரும் நீதிபதிகளை பார்த்து சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?... “நீதிபதிகளே!! எங்களிற்கு மரணதண்டனையை தீர்ப்பாக தந்துள்ளீர்கள். இதற்காக நாங்கள் உங்களிற்கு நன்றி கூறுகிறோம். எம்மை படைத்தவனிடம் எங்களை அனுப்பி வைப்பதற்காக. மேலும் எங்களை கொல்வதானால் எங்கள் தலைகளை வாளினால் வெட்டி கொலை செய்யுங்கள். அது தான் ஒரு இஸ்லாத்தின் தண்டனை முறைமை”.ஆனால் அவர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள். இமாம் சமுத்திரா தனது சிறைகூண்டினுள் இருந்தவாறு ஒரு புத்தகம் எழுதினார். “யார் பயங்கரவாதி” என்பதே அதன் தலைப்பின் விவரம். அதில் உலக நடப்புக்களையும் முஸ்லிம் உம்மாவின் நிலைமைகளையும் விளக்கி விட்டு இறுதியாக அவர் சொல்கிறார் உண்மையைான பயங்கரவாதி யார் தெரியுமா? அமெரிக்கா.”

இந்தோனேஷியா எனும் முஸ்லிலம் தேசம் கிறிஸ்தவ தேசமாக மாறும் நிகழ்வுகள் பற்றி அடிக்கடி கவலையுடன் பேசுபவர் இமாம் சமுத்ரா. மேற்கின் வஞ்சகத்தால் பிரிக்கப்பட்ட கிழக்கு திமோரை உதாரணம் காட்டி இந்த தேசத்தின் எத்தனை தீவுகளை காபிர்கள் விழுங்கப்போகிறார்களோ என அங்கலாய்ப்பார். 

இவர் பற்றிய இரண்டு பார்வைகள். ஒன்று அப்பாவிகளை கொன்று குவித்த பயங்கரவாதி.இரண்டாவது, இந்தோனேஷியா்களை கிறிஸ்தவர்களிடம் இருந்து காக்க வந்த கர்த்த்தர். இதில் எது சரி எது பிழை என்பதை நாம் எம் உள்ளங்களினாலும் அறிவினாலும் முடிவு செய்வோம்...

 
இதையும் பார்க்க:-
 
 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget