இஸ்லாத்தின் பார்வையில் கோபம் ?

              தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
 
மனிதனின் இயல்பான குணங்களில் கோபம் மிகவும் ஆபத்தானதாகும்.இது ஷைத்தானின் மிகப்பெரும் ஆயுதம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  ஒரு சிறந்த அறிவாளியை கூட கோபம் குருடனாக மாற்றிவிடும். கோபத்தில் ஒருவன் தன்னிலை மறந்துவிடுவான்,ஒருவகையில் கோபக்காரனும் பைத்தியக்காரனும் ஒன்றுதான்.
சமூகத்தில் நிகழும் தீமைகளில் பெரும்பாலும் கோபத்தின் பின்னனியில் தான் நிகழ்கிறது.தன் மனைவியை விவாகரத்துச்செய்தவனை கேட்டுப்பாருங்கள்,கோபத்தில் சொல்லிவிட்டேன்.சேர வழியுண்டா?என்று மார்க்க மேதைகளை தேடி அலைபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். கோபத்தில் தலாக் சொல்லிவிட்டேன் என்ற வார்த்தையே அபத்தமானது,காரணம் கோபத்தில் தான் தலாக் சொல்வான்.நல்லா இருக்கும்போது யாராவது சொல்வானாஅதனால் தான் நீ கோபத்தில் சொன்னாலும் கேலிக்கு சொன்னாலும் தலாக் ஏற்பட்டுவிடும் என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
சிறை தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு குற்றவாளியிடமும் கேட்டுப்பாருங்கள் ,நீ ஏன் இந்த குற்றத்தை செய்தாய்எனக்கு கோபம் வந்து விட்டது அதனால் நான் அவனை கொலைசெய்தேன் என்பான்.
أقبل إلى النبي -صلى الله عليه وسلم- رجل يجر رجلاً آخر بنسعة، يعني قد ربطه بحبل من جلد فهو يجره إلى النبي -عليه الصلاة والسلام-، قال: يا رسول الله، انظر هذا، قد قتل أخي. فالتفت النبي -صلى الله عليه وسلم- إلى الرجل المربوط وقال له: "أحقا قد قتلته؟". قال: نعم يا رسول الله قد قتله، قال: "ما حمَلَكَ على ذلك؟" فقال الرجل: يا رسول الله، كنا نحتطب، يعني نحتطب الشجرة، قال: فسبني، فأغضبني، فأخذت الفأس فضربت به على قرنه حتى قتلته يا رسول الله
رواه مسلم
நபி ஸல் அவர்களிடம் ஒருவர் இன்னொருவரை கயிற்றால் கட்டி இழுத்து வந்துஅல்லாஹ்வின் தூதர் அவர்களே!இவர் என் சகோதரனை  கொலை செய்துவிட்டார்.என்று கூறினார்.
உண்மையில் நீ தான் கொலை செய்தாயா?என நபி ஸல் அவர்கள் அவரிடம் விசாரித்தார்கள்.அவரும் அல்லாஹ்வின் தூதர் அவர்களே!ஆம் நான் தான் கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார்.
ஏன் கொலை செய்தாய் என்று காரணத்தை கேட்டபோது-அம்மனிதர்,
நாங்கள் மரம் வெட்டிக்கொண்டிருந்தோம்.அப்போது அவருக்கும் எனக்கும் ஒருவிஷயத்தில் கருத்துவேறுபாடு வந்தது.உடனே அவர் என்னை திட்டினார்எனக்கோ கோபம் வந்துவிட்டது.நான் என் கையில் இருந்த கோடரியை கொண்டு அவரின் தலையில் ஒருபோடுபோட்டேன், அவர் மரணித்துவிட்டார்.  என்று கூறினார்.
இந்த ஹதீஸின் விரிவுரையில் இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள்
قال ابن القيم رحمه الله : وأما الغضب فهو غول العقل يغتاله كما يغتال الذئب الشاة وأعظم ما يفترسه الشيطان عند غضبه وشهوته.(التبيان في أقسام القرآن /265 )
ஓநாய் ஆட்டை வேட்டையாடுவதுபோல கோபம் அறிவை வேட்டையாடிவிடும் என்று கூறுகிறார்கள்.ஒரு மனிதன் அதிகமாக ஷைத்தான் வலையில் மாட்டுவது இரு தருணங்கலில் தான்,
ஒன்று: கோபத்தில் மற்றொன்று ஆசையில். மனிதன் மிகவும் சாதாரணமாக ஆட்பட்டுவிடுகிற இந்த கோபத்தின் விளைவு பல ஆண்டுகள் நம்மை சங்கடத்தில் ஆழ்த்திவிடுகிறது.
அதனால் தான் ஒரு சிறந்த அறிவாளிக்கான அடையாளத்தை குறிப்பிடும் நபி ஸல் அவர்கள் கோபத்தை கட்டுப்படுத்தும் தன்மையை கூறுகிறார்கள். பலதலைமுறையாக சேர்ந்து வாழ்ந்த குடும்பம் ஒருகோபமான வார்த்தையால் பல தலைமுறை பிரிந்து விடுகிறது.
அல்லாஹுத்தஆலா இறையச்சமுடையவர்களின் தனமைகளை திருமறையில் கூறும்போது-
الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ ۗ وَاللَّـهُ يُحِبُّ 
الْمُحْسِنِينَ

(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும்துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்கள் செய்யும் பிழை களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். என்று கூறுகிறான்.
இங்கே ஒரு விஷயத்தை அழுத்தமாக புரியவேண்டும்.அது என்னவெனில் கோபத்தை அடைக்கவேண்டும் என்பது நம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலையில் அடக்கிக்கொள்வதல்ல, மாறாக தன்னால் கோபப்பட முடியும், அதற்கான எல்லா வழிமுறைகளும் உண்டு என்ற நிலையில் கோபத்தை அடக்கிக்கொள்ளவேண்டும்.
உதாரணமாக நம்முடைய முதலாளி நம்மை கோபப்படுத்துகிறார்.ஆனால் நாம் பொருமையை கடைபிடித்தோம். அதேசமயம் நம்முடைய பணியாள் நம்மை கோபப்படுத்தும்போது நாம் சகித்துக்கொண்டு கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்,இதுவே காழிமீன் எனும் இறைவசனத்தின் பொருளாகும்.
இரு நிகழ்வுகளை இதற்கு உதாரணம் சொல்ல்லாம்.
முதலாவது நிகழ்வு:
جلس مرة علي بن الحسين -رضي الله تعالى عنه ورحمه-، جلس مرة ودعا بماء ليتوضأ، فأقبلت إليه الجارية، وكانت جارية عجلة، فلما جعلت توضئه ناداها مَن ناداها، فألقت هذا الإبريق الذي كان في يدها، وقد كان نزع عمامته ليتوضأ، فضربه الإبريق في رأسه فشجه، وجعل الدم يسيل، فنظر إليها وكأنه يقول: ما هذه العجلة؟ وكيف تلقين ما يدك إلقاءً ولا تعلمين أني اتوضأ وأنك واقفة؟.
فلما نظرت إليه وقد احمرت عينه من الغضب، قالت له: يا سيدي، والكاظمين الغيظ، قال: كظمت غيظي، قالت: والعافين عن الناس، فسكت، وقال: عفوت عنكِ، قالت: والله يحب المحسنين، قال: أعوذ بالله من الشيطان الرجيم: أنتي حرة لوجه الله
 مجمع البيان 2/505

ஹழ்ரத் ஹுஸைன் ரலி அவர்களின் மகனார் ஹழ்ரத் அலி ரஹ் அவர்கள் ஒழுச்செய்வதற்காக தண்ணீர் கொண்டுவரச்சொல்லி தன் பணிப்பெண்ணுக்கு உத்தரவிட்டார்கள். அப்பெண், தன் முதலாளியின் உத்தரவுக்கு செவிமடுத்து வேகமாக தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்தாள். ஹழ்ரத் அலி ரஹ் அவர்கள் ஒழுச்செய்வதற்காக தங்களின் தலைப்பாகையை கழட்டி விட்டு கீழே தயாராக உட்கார்ந்திருந்தார்கள்.
அவசரமாக அந்த தண்ணீர் பாத்திரத்தை கொண்டுவந்த அப்பெண் கை தவறி அவர்களின் தலையில் போட்டுவிட்டாள்.அதனால் அவர்களின் தலை உடைந்துஇரத்தம் வடிந்துகொண்டிருக்கிறது. கடும் கோபத்தால் ஹழ்ரத் அலி ரஹ் அவர்களின் கண்கள் சிவந்துவிட்டதை பார்த்த அப்பெண்- என் தலைவர் அவர்களே!  والكاظمين الغيظ நல்லடியார்கள் கோபத்தை அடக்குவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான் என்றாள்.உடனே அவர்கள் நான் கோபத்தை அடக்கிவிட்டேன் என்றார்கள்.
والعافين عن الناس  மன்னித்துவிடுவார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான் என்றாள்.  உடனே அவர்கள் நான் உன்னை மன்னித்துவிட்டேன் என்றார்கள். மூன்றாவது அப்பெண்  والله يحب المحسنين  அல்லாஹ் உபகாரிகளை நேசிக்கிறான் என்று கூறுகிறான் என்றாள்.அப்போது அவர்கள் அல்லாஹ்வின் திருப்திக்காக உன்னை உரிமை விடுகிறேன் என்றார்கள்.
இரண்டாவது நிகழ்வு:
ومَرَّ النبيّ -صلى الله عليه وسلم- كما في البخاري بأبي مسعود البدري -رضي تعالى عنه-، قال أبو مسعود: "كنت أضرب غلاما لي، أخذ الصوت وضرب، فبينما هو يضربه وهو قد ارتفع عليه الغضب حتى يكاد لا يعرِف من حوله، وإذا بصوت ورائي يقول: "اعلم أبا مسعود، اعلم أبا مسعود، اعلم أبا مسعود"، قال فلم ألتفت إليه من شدة الغضب، من شدة غضبه وهو يضرب الغلام، لم يلتفت إلى من يحدثه، ويقول: "اعلم أبا مسعود"، قال: فالتفتُّ فإذا رسول الله -صلى الله عليه وسلم-، قال: "اعلم أبا مسعود أن الله أقدر عليك منك على هذا الغلام"، يعني أن غضبت فضربت هذا الغلام المسكين الذي لا يستطيع أن ينتصر لنفسه، الله أقدر عليك منك على هذا الغلام، قال فقلت : يا رسول الله هو حُرٌّ لوجه الله.
நபித்தோழர் அபூமஸ்வூத் பத்ரி ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
ஒருநாள் கடுமையான கோபத்தில் இருந்த நான் என் அடிமையை அடித்துக்கொண்டிருந்தேன்.என்னை சுற்றியிருப்பவர்கள் யாரும் எனக்கு தெரியாத அளவுக்கு கோபம்.அப்போது எனக்கு பின்னால் இருந்து -அபூ மஸ்வூதே! எச்சரிக்கை.- அபூ மஸ்வூதே! எச்சரிக்கை. -அபூ மஸ்வூதே! எச்சரிக்கை. என்று ஒரு சப்தம் கேட்டது. கடும் கோபத்தில் இருந்ததால் நான் திரும்பிப்பார்க்கவில்லை.மீண்டும் அந்த சப்தம் ஒலித்தபோதுதான் நான் திரும்பி பார்த்தேன்,அல்லாஹ்வின் தூதர் ஸல்  அவர்கள் நிற்கிறார்கள். அபூ மஸ்வூதே! தெரிந்துகொள்! உன் அடிமையின் மீது நீ பெற்றுள்ள ஆற்றலை விடவும் அதிகமாக அல்லாஹ் உன் மீது ஆற்றல் பெற்றுள்ளான் என்று கூறினார்கள்.

அதாவது உன் ஏழையான அடிமையை ஒரு குற்றத்திற்காக நீ கோபப்பட்டுஅடிக்கிறாய்.ஆனால் நாளை மறுமையில் அல்லாஹ் உன் குற்றத்திற்காக உன்மீது கோபம் கொண்டு உன்னை தண்டித்தால்-உன் நிலை என்ன?என கேட்டார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அல்லாஹ்வுக்காக என் அடிமையை உரிமை விட்டுவிட்டேன் என்றார்கள். நம்முடைய கோபம் செல்லுபடியாகும் இடத்தில் கோபத்தை அடக்கியாள வேண்டும்.
நபிமார்களின் கோபம்
அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபிமார்கள் கோபப்பட்டிருப்பதாக திருக்குர் ஆனில் வருகிறது. நபிமார்கள் தங்களின் சுயவிஷயங்களுக்காக கோபப்படமாட்டார்கள்.  தங்களுக்காக யாரையும் பழிவாங்கவுமாட்டார்கள்.ஆனால் அல்லாஹ்வுக்காக அவர்கள் கோபம் கொண்டிருக்கிறார்கள். நபி மூஸா அலை அவர்கள் கோபம் கொண்டார்கள்.அவர்களின் கோபத்தை பற்றி திருக்குர்ஆன் இப்படி விவரிக்கிறது.நபி மூஸா அலை அவர்களை பார்த்து பிர்அவ்ன் இவ்வாறு கூறினான்
أَمْ أَنَا خَيْرٌ مِنْ هَذَا الَّذِي هُوَ مَهِينٌ وَلَا يَكَادُ يُبِينُ
அல்லதுஇழிவானவரும்தெளிவாகப் பேச இயலாதவருமாகிய இவரை விட நான் மேலானவன் இல்லையா? தன்னை பற்றி பிர்அவ்ன் இழிவாக பேசியபோது கூட கோபப்படாத மூஸா அலை அவர்கள் தன் சமுதாயம் காலைமாட்டுக்கன்றை வணங்கியதாக கேள்விப்பட்டபோது கடுமையாக கோபம் கொண்டார்கள். தன் கையில் இருந்த தவ்ராத் பலகையை தூக்கிவீசினார்கள். ஹாரூன் அலை அவர்களின் தாடியை பிடித்தார்கள்.இதுவே இறைகோபமாகும்.
وَلَمَّا رَجَعَ مُوسَىٰ إِلَىٰ قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ بِئْسَمَا خَلَفْتُمُونِي مِن بَعْدِي ۖ أَعَجِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ ۖ وَأَلْقَى الْأَلْوَاحَ وَأَخَذَ بِرَأْسِ أَخِيهِ يَجُرُّهُ إِلَيْهِ

இதனையறிந்த மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன்விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) "நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?" என்று கூறினார்பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டுதம் சதோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். நபி நூஹ் அலை அவர்கள் கப்பல் செய்து கொண்டிருக்கும்போது அவர்களின் சமுதாய மக்கள் இப்படி பரிகாசம் செய்தார்கள்
كيف يا نوح تبني فلكاً في بَرٍّ؟
நூஹே! தரையில் கப்பல் எப்படி ஓடும்?
قد صار نوح نجاراً بعد أن كان نبيا؟

இவர் நபிவேலையை விட்டுவிட்டு தச்சராக மாறிவிட்டார். என்றெல்லாம் கேலிசெய்தபோது கோபப்படாத நபி நூஹ் அலை அவர்கள் -950 ஆண்டுகால தஃவாவும் பலனின்றி, அச்சமுதாய மக்கள் இணைவைப்பில் அவர்கள் உறுதி யாக நின்றபோது கடும்கோபம் கொண்டு இப்படி துஆச்செய்தார்கள்
قَالَ نُوحٌ رَبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا
அப்பால் நூஹ் கூறினார்: "என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.
இவ்வாறே நபி ஸல் அவர்கள் குறித்து அன்னை ஆயிஷா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
قالت: ما كان يغضب لنفسه قط، وما ضرب النبي -صلى الله عليه وسلم- بيده امرأة ولا خادماً، إلا أن يجاهد في سبيل الله.

நபி ஸல் அவர்கள் தனக்காக யாரையும் கோபம் கொண்டதில்லை,தன் கையால் மனைவியையோ,வேலையாட்களையோ அடித்த்தில்லை. ஆனால் அல்லாஹ்வுக்காக கோபம் கொண்டுள்ளார்கள். இன்னொறு அறிவிப்பில் தனக்காக யாரையும் பழிவாங்கியதில்லை என்றும் கூறுகிறார்கள். தன்னை இழிவுபடுத்தி வேதனை செய்த தாயிப் மக்களை தண்டிக்கவா?என்று கேட்டபோது
"لا، بل أستأني بهم؛ لعل الله أن يخرج من أصلابهم من يعبد الله لا يشرك به شيئا"

வேண்டாம் விட்டுவிடுங்கள்.இவர்களின் சந்ததியாவது தவ்ஹீதை ஏற்கும் என்று ஜிப்ரயீலிடம் கூறினார்கள். அதேசமயம், அல்லாஹ்வின் தாயீக்களை-அழைப்பாளர்களை-ஹாபிழ்களை அழைத்துச்சென்று கருவறுத்தபோது நபி ஸல் கடுமையாக கோபம்கொண்டார்கள் மாத்திரமல்ல அவர்களுக்காக பத்துஆச்செய்தார்கள். எனவே கோபம் அல்லாஹ்வுக்காக இருக்கும்போது அதை அல்லாஹ் ரசிப்பான்.
கோபத்தை கட்டுப்படுத்த கண்மணி ஸல் அவர்கள் வழங்கிய அறிவுரைகள்.
1.ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேடுவது
جلس النبي -صلى الله عليه وسلم- في مجلسه يوما -كما عند البخاري- فإذا برجلين يتلاحيان، برجلين في المسجد يتلاحيان، ثم بدأت أصواتهم ترتفع، فغضب أحدهما حتى جعل يزبد فمه من شدة الغضب، من شدة الغضب والسباب ليس عنده وقت ليبلغ ريقه، فجعل الريق يجتمع في جوانب فمه حتى أصبح الريق زبدا يقع من فمه مثل البعير، فقال النبي -صلى الله عليه وسلم-: "إني لأعرف كلمة لو قالها"، يعني لو قالها هذا الغاضب، "إني لأعرف كلمة لو قالها ذهب عنه ما يجد"، قالوا: يا رسول الله: ما هي؟ قال: "لو قال: أعوذ بالله من الشيطان الرجيم ذهب عنه ما يجد".

النسائي
நபி ஸல் அவர்களின் சபையில் இருவர் தங்களின் சப்தம் உயர்த்தி கடுமையாக சண்டையிட்டுக்கொண்டார்கள்.அதை கண்ணுற்ற நபி ஸல் அவர்கள்- எனக்கு ஒரு கலிமா தெரியும். அதை இந்த கோபக்காரர்களில் ஒருவர் சொன்னால் அவரின் கோபம் உடனே அடங்கிவிடும் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! அந்த கலிமாவை சொல்லித்தாருங்கள் என்று அருமை தோழர்கள் சொன்னபோது-
: أعوذ بالله من الشيطان الرجيم  என்று கூறினார்கள்.
2.கோபம் வந்தால் அமைதியாகிவிடவேண்டும்.எதுவும் பேசக்கூடாது.
وقال: "إذا غضب أحدكم فليسكت".
உங்களில் ஒருவர் கோபப்பட்டால் அமைதியாக வாய்மூடிவிடட்டும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.அதனால் தான் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள். தங்களின் ஆட்சியாளருக்கும் நீதிபதிகளுக்கும் எழுதிய கடிதமொன்றில்-
قال عمر بن عبد العزيز: وقد أرسل إلى عمّاله بوصية، وعماله الذين يحكمون بين الناس وهم وزراؤه في المناطق، أرسل إليهم قائلا: لا تعاقب إذا كنت غضبان، ولا تقتضي إذا كنت غضبان... وإن أغضبك أحد فاحبسه إلى غد، ثم أقض فيه أمرك.
கோபமாக இருக்கும்போது யாருக்கும் தண்டனை வழங்க வேண்டாம்.
தீர்ப்புச்செய்யவேண்டாம்.நீங்கள் கோபத்தில் இருந்தால் வழக்கை மறுநாள் மாற்றுங்கள் என்று எழுதினார்கள்.
3.கோபம் வந்தால் ஒழுச்செய்துவிடவேண்டும்
إنَّ الغضب من الشيطان، وإن الشيطان خلق من نار، وإن النار إنما تطفأ بالماء، فإذا غضب أحدكم فليتوضأ،
கோபம் ஷைத்தான் விளையாட்டு,ஷைத்தான் நெருப்பு படைப்பு,நெருப்பை அணைக்க தண்ணீரே சரியான தீர்வு எனவே கோபப்பட்டால் ஒழுச்செய்யுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
4.இரண்டு இரக்கஅத் தொழுவது
وإلا فلْيُصَلِّ ركعتين
ஒழுச்செய்தும் கோபம் குறையாவிட்டால் இரண்டுஇரக்கஅத் தொழுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

 
இதையும் பார்க்க:-
                  *  உடல் தானம் செய்ய அனுமதி உண்டா..?
                  *  பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்
                  *  அறியாமைவாத கட்டுக்கதைகளுக்கும் ஆதாரங்களுக்கும் மத்...
                  *  சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
                  *  யாரும் குர்ஆனைத் தொடலாம், படிக்கலாம் தடையில்லை.
                  *  பெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget