ஒட்டகம் அமர்வதைப் போல் அமர வேண்டாம்.

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

முஸ்லீம்கள் என்று தம்மைத் தாமே சொல்லிக் கொள்பவர்களில் பலர் தொழுகையை கடைப்பிடிப்பதில்லை. கடைப்பிடிக்கும்       பெரும்பாலான வர்கள்  சரியாக தொழுவதில்லை   ஏனோ  தானோ  என்று  தொழுதுவிட்டசென்றுவிடுகிறார்கள்.  இப்படித் தொழக் கூடியவர்கள் முதலில் தொழுகை முறையை சரியாக தெரிந்துகொள்ள வேண்டும். பள்ளிக்கு ஒருவனை  அழைத்து  வந்தால் மாத்திரம் தங்கள் வேலை  முடிந்து விடுவதாக நினைக்கிறார்கள். அழைத்து  வரப்படுபவருக்கு  சரியான முறையில் தொழுகையை கற்றுக் கொடுக்க வேண்டும். 

தொழுவதினால் ஏற்படும் நன்மைகள்.
(முஹம்மதே!) வேதத்திருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும் தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை  நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.  (அல்குர்ஆன் 29:45)உங்களில் ஒருவரது வாசல் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார். அவரது மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா? எனக் கூறுங்கள் என்று நபித்தோழர்களிடம் நபிصلى الله عليه وسلمஅவர்கள் கேட்டார்கள். அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது என நபித்தோழர்கள் கூறினர் இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் (சிறிய) பாவங்களை அகற்றுகிறான் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைராرضي الله عنه, நூல்கள் : புகாரீ (528) முஸ்லிம் (1071)

ஐவேளைத் தொழுகை ஒரு ஜுமுஆவிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையில் ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும் பெரும் பாவங்களைத் தவிர என்று நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைராرضي الله عنه நூல்கள் : முஸ்லிம் (394) திர்மிதீ (194) அஹ்மத் (8358)

தொழாததால் ஏற்படும் தீங்குகள்
கடமையான தொழுகையை ஒருவர் விடுவது அவரை நரகத்தில் கொண்டு சேர்க்கப் போதுமான காரணமாக அமைந்து விடும். குற்றவாளிகளிடம் ”உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று  விசாரிப்பார்கள். ”நாங்கள் தொழுவோராகவும் ஏழைக்கு  உணவளிப் போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள்.  (அல்குர்ஆன் 74 : 41 43)

ஒரு மனிதரின் தலை நசுக்கப்படுவதை நபிصلى الله عليه وسلم அவர்கள் கனவில் கண்டார்கள். அது பற்றி அவர்கள் விளக்கும் போது அவர் குர்ஆனைக் கற்று   அதைப் புறக்கணித்துக் கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர் என்று விளக்கமளித்தார்கள்.    அறிவிப்பவர் : ஸமுரா رضي الله عنه, நூல் : புகாரீ (1143)

இஸ்லாத்தின் மிக முக்கியக் கடமையான தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்பதைப் பெரும்பாலான முஸ்லிம்கள் அறியாமல் உள்ளனர்.
ஓர் ஊரில் ஒரு பள்ளிவாசலில் தொழக்கூடியவர்களைக் கவனித்தால் ஒருவரின் தொழுகைக்கும் மற்றவரின் தொழுகைக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம். நபிகளார் காட்டித்தந்த சரியான முறையில் எவ்வாறு தொழுவது என்பது பற்றிய அறியாமையே இந்த நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.    அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி), நூல் : புகாரீ (631)

ஒட்டகம் அமர்வதைப் போல் அமர வேண்டாம்.

தொழுகையில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் தாம் சுஜுது செய்யும் போது எப்படி செய்ய வேண்டும் என்பதை சரியாக அறியாதவர்களாக இருக்கிறார்கள்

எப்படி சுஜுது செய்வது?
ரப்பனா லக்கல் ஹம்து என்று கூறிய பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி ஸஜ்தாச் செய்ய வேண்டும். ஸஜ்தாவிற்குச் செல்லும் போது முதல் இரு உள்ளங்கைகளையும் தரையில் வைத்த பின்னர் தமது மூட்டுக்களை வைக்க வேண்டும்.

உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.” என நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா رضي الله عنه நூல்: நஸயீ (1079)

சுஜுது செய்யும் போது முதலில் கைகளை தரையில் வைக்க வேண்டும் அதன் பின்னர் கால்களை வைக்க வேண்டும் என்பது நபி மொழி ஆனால் இன்று நம்மில் பலர்  இந்த நிபந்தனையை கணக்கில் எடுப்பதில்லை.முதலில் கால்களை வைத்து விட்டுத்தான் பின்னர் கைகளை  வைக்கிறார்கள்.இப்படி செய்பவர்களுக்குத் தான் நபியவர்கள் ஒட்டகம் அமர்வதைப் போல் அமராதீர்கள் என்று சொல்கிறார்கள்.

ஒட்கம் அமரும் போது முதலில் அதனது முன்னங் கால்களைத் தான் மடக்கி அமரும்.அதன் பின்னால் பின்னங் கால்களை மடக்கும் (மிருகங்களைப் பொருத்த மட்டில் தமது பின்னங்கால்களைத் தான் கைகளாக பயன்படுத்தும்)
ஒட்டகம் முதலில் காலை வைக்கும் தொழுகையாளிகள் முதலில் கையை வைக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்த வேண்டி நபியவர்கள் இந்த உதாரணத்தை சொல்கிறார்கள். அது போல் தொழுபவர்கள் சுஜுதில் இருக்கும் போது தமது கைகளை தரையில் விரித்து வைக்கக் கூடாது மாறாக நபியவர்கள் இப்படி காட்டித் தந்துள்ளார்கள்.

”நீ ஸஜ்தாச் செய்யும் போது உனது உள்ளங்கைகளை (தரையில்) வைத்து முழங்கைகளை உயர்த்திக் கொள்” என நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.   அறிவிப்பவர்: பராرضي الله عنه, நூல்: முஸ்லிம் (763)

நாய் விரிப்பதைப் போல் கைகளை வைக்கக் கூடாது
ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைப்பிடியுங்கள். உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது என்று நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.    அறிவிப்பவர் : அனஸ்رضي الله عنه நூல்கள் : புகாரீ (822) முஸ்லிம் (850)

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget