புது வருடக் கொண்டாட்டமும் இஸ்லாமும்......!

                                             தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகதுஹு இன்று நாம் கிறிஸ்துவர்களின் நாட்காட்டி கணக்குப் படி வருடக் கடைசியில் இருக்கிறோம். இன்று எமது முஸ்லிம் இளைஞ்சர்கள் பலர் முகப்புத்தகத்திலும் சரி குறுஞ்செய்திகள் மூலமும் சரி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பவர்களாக இருக்கிறார்கள்.
இது எந்த அளவுக்கு சரி என நாம் சற்று நோக்கலாம் என நினைக்கிறேன். ஏனெனில் இன்றைய சமுதாயத்திடம் இவ்வாறான விடயங்கள் தொடர்பாக ஒரு தெளிவான விளக்கம்காணப்படுவதில்லை. அதன் காரணாமாக எத்தனையோ பல அனாச்சாரங்கள் இடம்பெர்கின்றன.


இதில் வேதனை தரும் விடயம் மார்க்க உலமாக்கள் என்று சொல்லக் கூடியவர்களும் இவ்வாறான புத்தாண்டு களியாட்டங்களில் கலந்து கொள்வது வேதனை.!சரி புது வருடத்தை பற்றி சற்று பாப்போம். நாம் முஸ்லிம்கள் என்ற ரீதியில் எமக்கு என்று ஒரு தனியான நாட்காட்டி முறை காணப்படுகிறது. அதுதான் நிலவை மையமாக வைத்து கணக்கில் எடுக்கப்படும் ஹிஜ்ரி நாட்காட்டி. அந்த வகையில் பார்க்கும் போது இந்த ஜனவரி என்பது எம்மைப் பொறுத்த வரை புது வருடமே இல்லை. எனவே புது வருடமே இல்லை எனும் போது அதற்கு வாழ்த்து தெரிவிப்பதும் அதை கொண்டாடுவதும் எந்த வகையில் நியாயமாகும்.

சரி நீங்கள் கேட்கலாம் ஜனவரியை தான் புது வருடம் என்று கொண்டாட முடியாது என்று சொல்கிறீர்கள் அப்படியானால் முஹர்ரம் மாதத்தை கொண்டாடலாம என கேட்கலாம். இஸ்லாத்தை பொறுத்த வரை நாம் எந்த விடயத்தை செய்வதாக இருந்தாலும் அதில் இரண்டு விடயங்களைதான் நாம் கவனிக்க வேண்டும். 
1.ஆகுமானது.
2.தடுக்கப்பட்டது.
இந்த புது வருடக் கொண்டாட்டங்களை பொறுத்த வரை அதை எந்த இடத்திலும் இஸ்லாம் ஆகுமாக்கவில்லை. இதில் யாருக்கும் சந்தேகமோ குழப்பமோ கிடையாது. ஆனால் இதை கொண்டாடுபவர்கள் இதைதான் இஸ்லாம் தடுக்கவில்லையே பின்னர் நாம் செய்வது எந்த விதத்தில் பாவமாகும் என கேட்கின்றனர். அவர்கள் சொல்வதை ஒரு வாதத்துக்கு ஏற்றுக் கொள்வோம். இஸ்லாமிய மூலாதார்ந்கலான குர்ஆன் ஹதீஸில் எந்த ஒரு வசனமும் இதை நேரடியாக தடை செயவில்லை. 

அப்படியானால் ஏன் இதை தவறு பாவம் என்று கூற வேண்டும். அதற்குதான் நாம் சில விடயங்களை தேடித் படிக்க வேண்டும். முதலில் இந்த புதுவருட கொண்டாட்டங்கள் யாரால் அறிமுகப் படுத்தப் பட்டது என்றால் அது நிச்சயமாக கிருஸ்துவர்களால்தான். ஏனெனில் நபியவர்கள் காலத்திலோ அல்லது அதற்குப் பின்வந்த காலத்திலோ முஸ்லிம்கள் இப்படி ஒரு நாளை கொண்டாடினார்களா என தேடிப்பார்த்தால் வரலாற்றில் எங்கும் அதற்கு ஆதாரம் கிடையாது. 
இனி விடயத்துக்கு வருவோம் கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பண்டிகையை தான் நாம் இன்று புதுவருடம் எனும் பெயரில் நள்ளிரவு 12 மணிக்கு ALARM வைத்து வாழ்த்துக்கள் சொல்கிறோம். இதைதான் நபியவர்கள் குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(மாற்று) சமுகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மை சார்ந்தவர் இல்லை. அறிவிப்பவர் இப்னு உமர் (ரழி), நூல் அபூதாவூத் (3512)"

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: "உங்களுக்கு முன்னிருந்த யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கüன் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், "அல்லாஹ் வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர் களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேறெவரை?'' என்று பதிலலித் தார்கள்(புஹாரி 3456)

எந்த ஒரு முஸ்லிம் மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மை சார்ந்தவர் அல்ல என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.இன்று நீங்கள் புதுவருடம் கொண்டாடுகிறீர்கள் என்று சொன்னால் நீங்களும் கிருஸ்துவர்களுக்கு ஒப்பாகத்தான் நடக்கிறீர்கள் அவர்கள் சொவதை ஏற்றுக் கொள்கிறீர்கள். என்பதே இந்த ஹதீஸ்களில் இருந்து விளங்கிக் கொள்ள முடியும். 

எனவே முஸ்லிம்களாகிய நாம் எம்மால் இயன்றவரை அல்லாஹ்வும் ரஷூலும் ஏவிய விடயங்களை எடுத்து நடந்தும் அவர்கள்தடுத்த விடயங்களை முற்றாக தவிர்ந்தும் நடந்து எமது மறுமைக்காக இன்சாஅல்லாஹ் உழைப்போம்... 

இதையும் பார்க்க:-
                    இஸ்லாத்தின் பார்வையில் கோபம் ?
                     * இஸ்லாத்தில் நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது..?
                     * சீதனம் எனும் பேரில் மார்க்கத்தை சீரழிக்காதே..!
                     * யாரும் குர்ஆனைத் தொடலாம், படிக்கலாம் தடையில்லை.
                     * புறம் பேசுதல் என்றால் என்ன?


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget