சிலை வணக்கம் தூய வழியின் ஒரு கண்ணோட்டம்..!

                                                        தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!


அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! படைத்த இறைவன் (அல்லாஹ்) மனிதனுக்கு அறிவைக் கொடுத்தான் சிந்திக்கும் ஆற்றலைக் கொடுத்தான் மனவலிமை மற்றும் உடல் வலிமையையும் கொடுத்தான் ஆனால் இந்த பாக்கியங்கள் அனைத்தையும் பெற்ற மனிதன் படைத்த இறைவனை மறந்துவிட்டு அவனை வணங்குகிறோம் என்று கூறிக்கொண்டு சிலைகளையும் சிற்பங்களையும் வணங்குகிறான்.

சிந்தித்துப்பாருங்கள் நீங்கள் தெய்வீகமாக எண்ணி வணங்கக் கூடிய அந்த கற்சிலைகள் மலையிலிருந்து பெயர்ந் தெடுக்கப்படுகின்றன ஒருகாலத்தில் அவைகளில் சிலர் சிறுநீர் கழித்திருக்கலாம், ஆடுமாடுகள் மலஜலம் கழித்து கால் வைத்து நின்றிருக்கலாம், காக்கையும் குருவியும் கூடுகட்டி வாழந்திருக்கலாம் அப்படிப்பட்ட கற்களைத்தான் சிலைகளாக வடிக்கின்றனர். அந்த கற்களில் அழகான சிற்பம் வடிக்கப்பட்டவுடன் அதற்கு தெய்வீக தன்மை வருவதாக எண்ணிக்கொள்கிறீர்கள்.  உண்மையில் அந்த கற்சிலைகளுக்கு தெய்வீக தன்மை இருந்திருக்குமேயானால் ஏன் தானாகவே உருவாகவில்லை? மனிதன் ஏன் அந்த கல்லை செதுக்க வேண்டும்?
கற்சிலைகள் பற்றி சிந்தித்துப்பாருங்கள்
சிலைகளுக்கு கண், காது, மூக்கு, வாய், கால்கள், கைகள் ஆகியன கொடுக்கிறீர்கள் மேலும் மர்மஸ்தான உறுப்புகளையும் அதிலேயே செதுக்குகிறீர்கள் இப்படிப்பட்ட அந்த சிலைகள் எதையாவது படைக்குமா? இதோ உங்களை படைத்த அல்லாஹ்வின் வார்த்தைகளை கேளுங்கள்!
அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டாஅல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள்உண்டாஅல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டாஅல்லது அவர்களுக்குக்கேட்கக் கூடிய காதுகள் உண்டா(நபியே!) நீர் கூறும்; ”நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்துஎனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்துபாருங்கள் – (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்”” என்று(அல்குர்ஆன் 7:195)
கிரோக்க ரோமானிய சிலைகளும் ஆபாசமும்
கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்ற பாடலுக்கேற்ப மனிதன் கற்கைளைக் கொண்டு பலவகையான வேலைப்பாடுகள் மிக்க சிலைகளை செதுக்கினான். அதிலும் குறிப்பாக ரோமானிய சிலைகளை செதுக்கிய சிற்பிகள் அந்த சிலைகளில் பெரும்பாலும் ஆபாசத்தை தூண்டும் விதத்தில் வடிவங்களை கொடுத்தன. ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக நிற்பதைப் போலவும் அவர்களை சுற்றி பல நிர்வாண மக்கள் மகிழ்ச்சி ஆராவராம் செய்வதைப் போலவும் வடிப்பார்கள் அப்படிப்பட்ட சிலைகளை இன்றும் ரோம் நகரில் காணலாம். அப்படிப்பட்ட சிலைகளை ஆதாரத்துடன் இந்த கட்டுரையில் காட்ட இயலும் ஆனால் ஆபாசத்தை நாமாக வலியவந்து பரப்பக்கூடாது என்ற கொள்கையில் முஸ்லிம்களாகிய நாம் இருப்பதால் அதை இங்கு தவிர்த்துள்ளோம். இந்தக் கற்சிலை கலைநுணுக்கம் மக்களுக்கு ஆபாசத்தைத் தவிர எதைக் கொடுக்கிறது.
இலங்கை சிலைகளும் ஆபாசமும்
கற்சிலைகளை வடிப்பதில் தமிழர்களுக்கு ஈடு இணை கிடையாது அந்த அளவுக்கு கலை நுணுக்கமாக சிலைகளையும் சிற்பங் களையும் தமிழர்கள் செதுக்கி வந்தனர், வருகின்றனர்.
மன்னர்கள் காலத்தில் சிலைகளை வடித்தவுடன் அதை மக்களுக்கு வெளிக்காட்டும் விதமாக விழாக்கள் நடத்தி மகிழ்வர்கள் அவைகள் ஆண்டாண்டுகாலமாக நடைபெற்று காலப்போக்கில் கோவில் திருவிழாக்களாக மறுவி தற்போது தெய்வீக சிலைகளாக மாறி நிற்கின்றன. சிந்தித்துப்பாருங்கள் சிலைகளை செதுக்குகின்ற சிற்பியின் வியர்வை, சலி ஆகியன இந்த தெய்வீகமாக கருதப்படும் சிலைகள் மீது படாமலா இருந்திருக்கும் இதையெல்லாம் சிந்திக்காமல் இன்றுவரை சிலைகளில் தெய்வீக கடாட்ஷம் வெளிப்படுவதாக எண்ணிக்கொண்டு அதை வழிபட்டும் வருகின்றனர் உண்மையை உணரமாட்டார்களா? எந்த மதமாக இருந்தாலும் மார்க்கமாக இருந்தாலும் அவரவர் முறைப்படி வழிபாடு நடத்தப்படக்கூடிய இடங்கள் புனிதமாக கருதப்படுவது தொன்றுதொட்டு நிகழும் நிகழ்ச்சியாகும் அப்படிப்பட்ட வழிபாட்டுத்தளங்களில் ஆபாச சிலைகள் கூடுமா? இதோ கீழ்கண்ட சிலைகளை காணுங்கள்!
சிந்தித்துப்பாருங்கள் தமிழர் பண்பாடு என்று வாணுயற பேசுகிறீர்கள் ஆனால் ஆபாசம் நிறைந்த நிர்வாண பெண் சிலைகளையும், நிர்வாண ஆண் சிலைகளையும்தானே வழிபாட்டுத்தளங்களில் வைத்து வழிபட்டும் பார்த்தும் மகிழுகிறீர்கள் இது என்ன பண்பாடு?
இதோ இறை தூதர் இப்ராஹீம்  (அலை) வார்த்தைகளை கேளுங்கள்
(என்) இறைவனே! நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழி கெடுத்து விட்டன்எனவேஎவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார். எவர் எனக்கு மாறுசெய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லைஎன்றாலும்) நிச்சயமாக நீமன்னிப்பவனாகவும்மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்.” (அல்குர்ஆன் 14-36)
சிலைகளை கடுமையாக எதிர்க்கும் பைபிள் வசனங்கள்!
பைபிள் வேதத்தில் சிலை வணக்கத்தை எதிர்த்து கடுமையான வசனங்கள் இருக்கின்றன ஆனால் கிருத்தவ சகோதரர்கள் அதை மதிப்பதில்லை மாறாக பைபிள் வசனங்களுக்கு நேர்மாறாக நடந்துக்கொண்டு தங்கள் வேதமான பைபிளை இகழ்ந்தும் வருகின்றனர். இறைவன் எந்த செயல்களை கிருத்தவர்கள் செய்யக்கூடாது என்று பைபிளில் கட்டளையிடுகிறானோ அதைத் தானே பின்பற்றுகிறார்கள். கடவுளை விரும்புகிறோம் என்று கூறி கடவுளின் வார்த்தைகளை நிராகரிப்பது கூடுமா?
சிலை வணக்கம் கூடாது என்று தன் வேதாகமத்தில் குறிப்பிடும் இறைவனுக்கு மாற்றமாக ஏசுநாதரையும், மரியாளையும், சிலுவையையும், இன்னும் மனிதர்களில் சிலர் சிலரையும் கல்லாக வழிபடுகிறார்கள் இது நியாயமா?
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள்.4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. ஏசாயா 44:9 (44:6,9-20)
அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)
அன்புள்ள என் கிருஸ்தவ சகோதரர்களே நீங்கள் முதலில் சிலை வணக்கங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் உங்களால் உங்கள் ஜீவனை நஷ்டப்படுத்தாதீர்கள் இதை நாம் சொல்லவில்லை பைபிள் சொல்கிறது. இதோ பைபிளுக்கு பின்னர் இறுதி வேதமாக அருளப்பட்ட அல்குர்ஆனில் உள்ள அல்லாஹ்வின் வார்த்தைகளை கேளுங்கள்!
கற்சிலைகளை வழிபடுதல் கூடாது
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதல் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்’ (அல்குர்ஆன் 5-90)
சிலைகள் எவ்வாறு உருவாகின்றன?
சிலைகளை அரசர்களும், செல்வந்தர்களும், சமுதாய மக்களும் தங்கள் சுயநலனுக்காகத்தான் வடித்தார்கள் பிறகு ஷைத்தான் அவர்களை வழிகெடுத்து அந்த சிலைகளிடமே மக்களின் தேவைகளை நாட வைத்தான் இதன் மூலம் அவன் மனித சமுதாயத்தின் பெரும்பகுதியினரை வழிகெடுத்துவிட்டான் இறுதியாக படைத்த இறைவனை மறுக்க வைத்துவிட்டான். இதை அல்லாஹ் தன் திருமறையில் தெளிவுபட கூறுகிறான்!
மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின்சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்அதற்கு (மாட்டின்சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாதுஇன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்கவேண்டாமாஅவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் – இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள் (அல்குர்ஆன் 7-148)
இதோ கீழ்கண்ட சிலைகள் இதற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்றன. மாயாவதி என்ற அரசியல் பெண்மணி தான் உயிருடன் இருக்கும்போதே தனக்காக பல இலட்சங்களை செலவழித்து தன் சிலையை வடித்து தாமாகவே சிலை திறப்பு விழா நடத்தி மகிழ்ந்தார். இன்று இது சாதாரண சிலைதான் ஆனால் 100 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றக்கூடிய இளைய சமுதாயத்தை ஷைத்தான் வழிகெடுத்து வழிபடவைத்துவிடுவான். இதோ அந்த மாயாவதியின் சிலைகள். கையில் அழகான பேக் உள்ளது!
பிரபலங்களும் தன்னுடைய சிலை ஆசையும்
சமுதாயத்தில் கண்ணியமாக கருதப்படக்கூடிய பிரபலங்கள் கூட இதற்கு விதிவிலக்கா என்ன! தன்னுடைய சிலைகளை வடித்து தாங்களே பார்த்து மகிழ்கின்றனர். அதன் வரிசையில் முன்னால் ஈராக் நாட்டு அதிபர் சதாம் உசேன் அவர் குறிப்பிடத்தக்கவர்.  ஒரு முஸ்லிமாக இருந்து சிலையை வடித்து இஸ்லாத்தை அவமானப்படுத்திய கவுரவம் இவரைச் சாரும். இவர் வாழும்போது ஒரு நாட்டின் அதிபர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார் அந்த பதவி ஆசையை காட்டி ஷைத்தான் அவரை மயக்கி கையில் துப்பாக்கி ஏந்திய வடிவில் சிலை வடிக்க தூண்டியிருக்கிறான் இறுதியில் உயிருடன் இருக்கும்போதே அந்த சிலை உடைக்கப்படுவதை கண்டுகளித்துள்ளார்.
சதாம் உசேன் மட்டும்தான் சிலையை வடிப்பானா! என்று எண்ணிய அமெரிக்க அரசு முன்னால் அதிபர் ஜார்ஜ் புஸ் (அதாவது கிருத்தவ தீவிரவாதி)-க்கும் சிலையை வடித்து மகிழ்ந்தது. இவர்கள்தான் சிலையை வடிப்பார்களா என்று எண்ணிய கிரிக்கெட் வீரர்கள் தமக்காகவும் சிலைகளை வடித்தனர் அதில் கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் முதல் இடம் பிடித்தார். ஷைத்தானின் ஊசலாட்டத்தை பாருங்கள் உயிருடன் வாழும்போது சிலைகள் வடித்து அதை கண்டு பிரபலங்களும் ரசிகர்களும் ரசிக்கின்றனர் இதை சிந்திக் கிறார்களா? பிரபலங்கள் தங்கள் சிலைகளை நோக்கி
  • பேசு என்றால் அது பேசுமா?
  • அழு என்றால் அழுதிடுமா?
  • ஓடிவா என்றால் ஓடி வருமா?
  • பேசினால் கேட்குமா?
  • பார்த்தால் சிரிக்குமா?
  • உணவு ஊட்டினால் உண்ணுமா?
கர்நாடகத்தில் வள்ளுவருக்கு சிலை வைத்தால் இடிக்கின்றான் வள்ளுவர் சிலை வடிக்க சொன்னாரா? இது வள்ளுவனுக்கு அவமானம் இல்லையா?
அம்பேத்காருக்கு சிலை வைத்தால் செருப்பு மாலை போடுகிறான் இவர் தமக்காக சிலை வடிக்க சொன்னாரா? இது அம்பேத்காருக்கு அவமானம் இல்லையா?
பெரியார் சிலைகளை வணங்காதே என்று கூறினார் அவர் மரணித்தவுடன் பெரியார் சிலை வடித்து மாலை சூட்டி மகிழ்கின்றனர் பிறந்தநாளில் வணங்குகின்றனர். இவர்கள் தந்தை பெரியாரின் பேச்சை மதிக்கிறார்களா?
மேற்கண்ட இவைகளால் என்ன விளங்குகிறது சிலைகளால் சிலை வடிக்கப்படுபவர்களுக்கு அவமானம் மாறாக சிலை வடிப்பவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கொண்டாட்டம்!
இதோ அல்குர்ஆனில் உள்ள வசனங்களை சிந்தித்துப் பாருங்கள்
அல்லாஹ்வையன்றிசிலைகளை வணங்குகிறீர்கள் – மேலும்நீங்கள் பொய்யைச்சிருஷ்டித்துக் கொண்டீர்கள்நிச்சயமாகஅல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவைஉங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவைஆதலால்நீங்கள் அல்லாஹ்விடமே ஆகாரவசதிகளைத் தேடுங்கள்அவனையே வணங்குங்கள்அவனுக்கே நன்றி செலுத்துங்கள்அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.(அல்குர்ஆன் 29:17)
நினைவு கூறுங்கள்! என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்)அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும்என் மக்களையும் சிலைகளை நாங்கள்வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர்அவர்களுக்கு நினைவு கூறும்) (அல்குர்ஆன் 14:35)
அன்புச் சமுதாயமே இனிமேலும் சிலை வணக்கத்தை பின்பற்றுவதை தவிர்த்துக்கொண்டு சத்தியப்பாதையில் கவனம் செலுத்துங்கள்.
உலகில் பிறந்துவிட்டோம், ஷைத்தானால் வழிகெடுக்கப் பட்டுவிட்டோம், வாழ்க்கையின் ஒருபகுதி வாழ்ந்துவிட்டோம் இனி மரணத்தை எதிர்பார்த்து நிற்கிறோம் இனியாவது திருந்த முற்படுங்கள்!
முதல் மனிதரும் இறைவனின் தூதருமான ஆதிபிதா ஆதம் (அலை) நபியின் மார்க்கமான இஸ்லாத்தை இறுதித் தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகளைக் கொண்டு வாழ்ந்து மடிவோம்! மஹ்ஷர் எனும் கேள்விக் கணக்கு நாளில் வெற்றி பெற்று இழந்த சுவனத்தை மீண்டும் அடைவோமாக!

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget