January 2014

                                       தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!


உலகம் உருண்டை என்று சொல்வதற்குத்தான் அல் குர்ஆனில் ஆதாரம் இருக்கிறது. விஞ்ஞான கருத்துக்களை உள்ளடக்கிய வசனங்கள் குர்ஆனில் அதிகமாக இடம்பெற்றாலும் அவ்வனைத்து வசனங்களிலும் அல்லாஹ்வுடைய வல்லமையை பறைச்சாற்றறுவதே பிரதான நோக்கமே தவிர அறிவியல் புத்தகமாக தன்னை காட்டிக்கொள்வதற்காக அல்ல.

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

கஷ்டங்களை நீக்கும், நல்லவை நடக்கும் வாழ்வில் சுபிட்சத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் எந்த ஒரு ஆடைக்கும் இஸ்லாம் முக்கியத்துவம் வழங்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் சிவப்பு (புகாரி 3551), கருப்பு (முஸ்லிம் 2418), பச்சை (நஸயீ 1554)) போன்ற பல்வேறு நிறங்களில் ஆடை அணிந்துள்ளார்கள். மஞ்சள் நிற ஆடை ஒருவருக்கு அழகாக இருந்தது. அதை நபியவர்கள் பாராட்டியுள்ளார்கள். (பார்க்க புகாரீ 3071, 5823)நான் கால் கொலுசு அணிந்திருக்கிறேன் அதில் நடக்கும் பொது சிறு ஓசை எழுகிறது இப்படிஅணிவது கூடுமா? நடக்கும் போது கொலுசிலிருந்து ஓசை வரும் கொலுசுகளை அணிவதுமார்க்கத்தில் தடையா இல்லை சொந்த வீட்டுக்குள் இருக்கும் போதாவது இப்படிஅணியலாமாஅதுவும் கூடாதா?
பதில் :
பெண்கள் சில ஒழுங்கு முறைகளைக் கடைபிடித்து கொலுசு அணியலாம். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் கொலுசு அணிந்துள்ளனர்.
3039 حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ فَأَنَا وَاللَّهِ رَأَيْتُ النِّسَاءَ يَشْتَدِدْنَ قَدْ بَدَتْ خَلَاخِلُهُنَّ وَأَسْوُقُهُنَّ رَافِعَاتٍ ثِيَابَهُنَّ رواه البخاري

                                     தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

      
கருக்கலைத்தால் இஸ்லாத்தில் என்ன தண்டனை உள்ளது. குழந்தை உருவாகி நூற்று இருபது நாட்களை கடந்து விட்ட பிறகு கருக்கலைப்புச் செய்தால் அப்போது ஒரு மனித உயிரை கொன்ற பாவம் ஏற்படும். அநியாயமாக ஒரு மனித உயிரைக் கொல்வதை பெரும்பாவம் என்று மார்க்கம் எச்சரிக்கின்றது. குழந்தையை கொலை செய்வது இறைநிராகரிப்பாளர்களின் பண்பாகும். அல்லாஹ்வும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் இதை தடைசெய்துள்ளார்கள்.


அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் கடவுள் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே கடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. அப்படிப் பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஅபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும். உலக முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டுமிடமாகவும், உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாகவும் இவ்வத்தாட்சிகள் அமைந்துள்ளன. 'கஅபா' ஆலயத்திற்கும், மக்கமா நகரத்திற்கும் மற்ற ஆலயங்களை விடவும், நகரங்களை விடவும் தனித்த சிறப்புகளும், சட்டங்களும் உள்ளன. அப்படிப்பட்ட சிறப்புகளில் சிலவற்றைக் காண்போம்.

                                           தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

ஜனாஸா தொழுகைக்கு நான்கு தக்பீர்கள் கூற வேண்டும். முதல் தக்பீர் கூறிய பிறகு ஸூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டும். இரண்டாவது தக்பீரில் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். மூன்றாவது நான்காவது தக்பீரில் மய்யித்திற்காக துஆ செய்ய வேண்டும். பிறகு இரண்டு புறமும் ஸலாம் கூற வேண்டும்.

முதல் தக்பீருக்கு பின்
ஜனாஸா தொழுகை முதல் தக்பீருக்குப் பின் ஸூரத்துல் ஃபாத்திஹாவை (அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.....) ஓத வேண்டும்.

                                          தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

பெண்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது நறுமணம் பூசுவதையும் நறுமணத்துடன் ஆண்களை கடந்து செல்வதையும் மார்க்கம் தடுக்கிறது. இப்பழக்கம் இக்காலத்தில் பல்கிப்பெருகியுள்ளது. இதனை நபி(ஸல்)அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தனரை கடந்து சென்றால் நிச்சயமாக அவள் விபச்சாரியாவாள். (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: அஹமத்)


                                        தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
15 நாள் பிரச்சாரத்தால் 35ஆயிரம் ஆப்ரிக்கர்கள் இஸ்லாத்தில் இணைந்த அதிசயம்
***************************************** 2013 ஆண்டு விடை பெற்று விட்ட நிலையில் அதில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget