கருக்கலைத்தால் இஸ்லாத்தில் என்ன தண்டனை..?

                                     தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

      
கருக்கலைத்தால் இஸ்லாத்தில் என்ன தண்டனை உள்ளது. குழந்தை உருவாகி நூற்று இருபது நாட்களை கடந்து விட்ட பிறகு கருக்கலைப்புச் செய்தால் அப்போது ஒரு மனித உயிரை கொன்ற பாவம் ஏற்படும். அநியாயமாக ஒரு மனித உயிரைக் கொல்வதை பெரும்பாவம் என்று மார்க்கம் எச்சரிக்கின்றது. குழந்தையை கொலை செய்வது இறைநிராகரிப்பாளர்களின் பண்பாகும். அல்லாஹ்வும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் இதை தடைசெய்துள்ளார்கள்.


மேலும் இது பெரும்பாவங்களில் ஒரு பாவமாகும். இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பிவிட்டன.  (அல்குர்ஆன்6 : 137)  

அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நஷ்டம் அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை.         (அல்குர்ஆன்6 : 140) ''வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, ''நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது'' என்பதே. 

பெற்றோருக்கு  உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். (அல்குர்ஆன்6 : 151) வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும். (அல்குர்ஆன்17 : 31) நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து ''அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்'' என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்60 : 12) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அன்னையரைப் புண்படுத்துவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, அடுத்தவருக்கு உரியதைத் தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி) நூல் : (புகாரி 5975) நபி (ஸல்) அவர்கள், ''பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், ''அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகüன் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட  அப்பாவிகளான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே அந்தப் பெரும் பாவங்கள் என்று  கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : (புகாரி 6857) எனவே நான்கு மாதங்கள் கழிந்த நிலையில் உள்ள கருவை கலைப்பது நரகத்திற்கு இழுத்துச் செல்லும் பெரும்பாவமாகும். 

நூற்று இருபது நாட்களுக்குட்பட்ட கருவை கலைத்தால் குழந்தையை கொன்ற பாவம் ஏற்படாது. மாறாக நமது உடலுக்கு நாமே அழிவை தேடிக்கொண்ட குற்றம் மட்டுமே ஏற்படும். ஏனென்றால் நமக்கு தீங்கு தரும் காரியங்களை செய்யக்கூடாது என குர்ஆன் தடுக்கின்றது. அடுத்து இப்பாவத்தை செய்து விட்டால் அதற்குரிய பரிகாரம் என்ன என்று கேட்டுள்ளீர்கள். இப்பாவத்துக்கென்று பிரத்யேகமாக எந்த பரிகாரமும் கூறப்படவில்லை. என்றாலும் பொதுவாக எந்த பாவத்தை செய்தாலும் அதற்குரிய பரிகாரம் அதற்காக மனம்வருந்தி இனி அந்த பாவத்தை செய்யமாட்டேன் என்ற உறுதியோடு இறைவனிடம் பாவமன்னிப்புக்கோருவதாகும். 4954 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ سَمِعْتُ أَبَا عُبَيْدَةَ يُحَدِّثُ عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوبَ مُسِيءُ النَّهَارِ وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو دَاوُدَ حَدَّثَنَا شُعْبَةُ بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ رواه مسلم  

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக இரவில் தனது கையை நீட்டுகிறான்; இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவ மன்னிப்புக் கோருவதற்காக பகலில் கையை நீட்டுகிறான். சூரியன் மேற்கிரிருந்து உதிக்கும் யுக முடிவு நாள் வரை ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்துகொண்டிருக்கிறான். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : (முஸ்லிம் 5324) அறியாமல் இப்பவாத்தை செய்துவிட்டால் இதன் பிறகு நன்மைகளை அதிகம் செய்தால் இந்த நன்மைகளால் அந்த பாவத்தை இறைவன் மன்னிக்கலாம். 526 حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ ابْنِ مَسْعُودٍ أَنَّ رَجُلًا أَصَابَ مِنْ امْرَأَةٍ قُبْلَةً فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَقِمْ الصَّلَاةَ طَرَفَيْ النَّهَارِ وَزُلَفًا مِنْ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ فَقَالَ الرَّجُلُ يَا رَسُولَ اللَّهِ أَلِي هَذَا قَالَ لِجَمِيعِ أُمَّتِي كُلِّهِمْ رواه البخاري 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதர் ஒரு அந்நியப் பெண்ணை முத்தமிட்டுவிட்டார். நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து பரிகாரம் கேட்டு இந்த விவரத்தைச் சொன்னார். அப்போது அல்லாஹ், ''பகலின் இரு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்துவிடுகின்றன'' எனும் (11:114ஆவது) வசனத்தை அருளினான். அந்த மனிதர், ''இது எனக்கு மட்டுமா (அல்லது அனைவருக்குமா)?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இதன்படி செயல்படும்) என் சமுதாயத்தார் அனைவருக்கும்தான்'' என்று பதிலளித்தார்கள். (புகாரி 526)


 இதையும் பார்க்க:-
                          * ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
                          * கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்
                          * நினைவில் நிலைநிறுத்த வேண்டிய நண்மைகள்.
                          * குழந்தைகளு​க்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்…
                          * குர்-ஆன் பாதுகாக்கப்பட்டதே..!


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget