இஸ்லாமிய பார்வையில் கொலுசு அணியலாம்..?நான் கால் கொலுசு அணிந்திருக்கிறேன் அதில் நடக்கும் பொது சிறு ஓசை எழுகிறது இப்படிஅணிவது கூடுமா? நடக்கும் போது கொலுசிலிருந்து ஓசை வரும் கொலுசுகளை அணிவதுமார்க்கத்தில் தடையா இல்லை சொந்த வீட்டுக்குள் இருக்கும் போதாவது இப்படிஅணியலாமாஅதுவும் கூடாதா?
பதில் :
பெண்கள் சில ஒழுங்கு முறைகளைக் கடைபிடித்து கொலுசு அணியலாம். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் கொலுசு அணிந்துள்ளனர்.
3039 حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ فَأَنَا وَاللَّهِ رَأَيْتُ النِّسَاءَ يَشْتَدِدْنَ قَدْ بَدَتْ خَلَاخِلُهُنَّ وَأَسْوُقُهُنَّ رَافِعَاتٍ ثِيَابَهُنَّ رواه البخاري

 
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
உஹுதுப் போரின் போது பெண்கள் தங்கள் ஆடையை உயர்த்தியவர்களாகஅவர்களுடைய கால் தண்டைகளும் கால்களும் வெளியில் தெரிய ஓடிக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். புகாரி (3039)
கொலுசு அலங்காரமாக இருப்பதால் அந்நிய ஆண்களிடம் இதை வெளிப்படுத்துவதும் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சப்தம் எழுப்பும் கொலுசுகளை அணிந்து செல்வதும் கூடாது.
وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ(31)24
பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். அல்குர்ஆன் (24 : 31)
எனவே அந்நிய ஆண்கள் பார்க்காத வகையில் ஒலி எழுப்பாத கொலுசை அணிவது கூடும். நீங்கள் உங்கள் வீட்டுக்குள் இருக்கையில் எந்த வகையான கொலுசையும் அணிந்து கொள்ளலாம்.

இதையும் பார்க்க:-


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget