February 2014

                  தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!


திருமணம் என்பது நபி (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். இறைவன் தன் திருமறையில் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதைத் தன்னுடைய சான்றாகக் கூறுகிறான். நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும்இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல் குர்ஆன் 30:21)

                                தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
     
அல்லாஹ் கூறுகிறான் ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 21:35)

மரணம் என்பது நிச்சயமானது. அதிலிருந்து எந்த உயிரினத்தாலும் மீளமுடியாது. நாம் வாழும் காலம் குறுகியது என்று உணர்ந்த பிறகும் மரணிக்கும் போதும் அதன் பிறகு நடப்பவை பற்றியும் கவனக்குறைவாக, அல்லது மரணத்தையே மறந்தவர்களாக நாம் இருக்கின்றோம்.

                  தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து மாய்த்துக்கொள்வது தற்கொலை எனப்படும். உலகத்தில் சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும், புகழோடும் வாழும் மனிதர்கள் அல்லது துன்பமும் இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என புரிந்து கொண்டு நடப்பவர்கள் யாரும்தற்கொலை செய்வதில்லை.

                                       தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

ஏக இறைவனின் திருப்பெயரால்... உண்மையான முஃமின் தனது வாழ்வின் அனைத்து செயல்களிலும் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவே இருப்பான். எந்நேரமும் அல்லாஹ் என்னை கண்காணித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு அவனுள் மேலோங்கி இருப்பதே இதற்குக் காரணம். உள்ளச்சத்தின் அவசியத்தை பொதுவாகவே முஃமினின் வாழ்க்கையில் வழியுறுத்துகின்ற இஸ்லாம் தொழுகையில் அதைவிட பல மடங்கு வழியுறுத்துவதைக் காணலாம்.இந்த உயரிய பண்பை பற்றி அல்குர்ஆன் என்ன கூறுகின்றது என்பதை முதலில் பார்ப்போம்:

                                              தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

ஆஹா! இதோ பார்! சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி!
தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும்  வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும்.

                                          தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)


                                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்!(காதலர்கள் கொண்டாடும் காம இச்சை தினம்) அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம் (சபிக்கப்பட்ட ஷைத்தானின் எல்லா தீமைகளிலிருந்தும் அல்லாஹுவிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்).ஆதமின் சந்ததிகளே! ஷைத்தான் சபிக்கப்பட்டவனாக இருக்கிறான் அவன் நம் ஆதி பெற்றோரான ஆதம் மற்றும் ஹவ்வா(அலை) ஆகியோரை அல்லாஹ்விடமிருந்து பிரித்து சுவனத்திலிருந்து வெளியேற்றி சுகம் கண்டவன் இப்படிப்பட்ட ஷைத்தான்தான் மீண்டும் காதல் என்னும் காம மாயவலையில் நம் இளம்பிள்ளைகளை சிக்கவைத்து அவர்களின பெற்றோர்களை விட்டும் பிரித்து சுகம் காண துடித்துக் கொண்டிருக்கிறான்.

                                          தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
      
             
இயற்கை அன்னையால் படைக்கப்பட்ட மனிதன் பிறந்து வளர்ந்து தீய பழக்கங்களைக் கையாண்டு அற்புதமான வாழ்க்கையைச் சீரழித்து மாண்டும் போகிறான். இயற்கை மனிதனை ஆறறிவு கொண்ட மனிதனாகவும், பகுத்தறியும் உள்ள மனிதனாகவும் படைத்துள்ளது. புலன்களின் ஈடுபாட்டால் தன்னை இழந்து நோயின் பிடிக்கு ஆளாகி தவிக்கின்றான். இந்த புலன்களை அடக்கியாண்டால்தான் அவன் மனிதனாக முடியும். இந்த புலன்கள் அனைத்தையும் உடைந்த காட்டாற்று வெள்ளம் போல் ஓடச் செய்வதற்கு முழுமுதற் காரணமாக அமைவது மதுப்பழக்கம்தான்.

                                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:
கேள்வி எண்: 12 மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?
பதில்: மனிதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் – சமுதாயத்தின் கொள்ளைநோயாக இருந்து வருவது போதை தரும் இந்த மது பானங்கள். உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயத்தின் அழிவு என்னும் பெருந்துயருக்கு காரணமாக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். இன்று மனித சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒட்டு மொத்த பிரச்னைகளுக்கும் ஆணிவேராக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். உலகில் பல்கிப் பெருகி வரும் குற்றங்களுக்கு காரணமாகவும் மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வருவதும் மக்களின் உளச்சோர்வுக்கு காரணியாகவும் அமைந்திருப்பது இந்த மதுபானங்களின் அழிக்கும் சக்திதான்.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget