மதுவை பற்றி அறிவியல் என்ன சொல்லுகிறது..!

                                          தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
      
             
இயற்கை அன்னையால் படைக்கப்பட்ட மனிதன் பிறந்து வளர்ந்து தீய பழக்கங்களைக் கையாண்டு அற்புதமான வாழ்க்கையைச் சீரழித்து மாண்டும் போகிறான். இயற்கை மனிதனை ஆறறிவு கொண்ட மனிதனாகவும், பகுத்தறியும் உள்ள மனிதனாகவும் படைத்துள்ளது. புலன்களின் ஈடுபாட்டால் தன்னை இழந்து நோயின் பிடிக்கு ஆளாகி தவிக்கின்றான். இந்த புலன்களை அடக்கியாண்டால்தான் அவன் மனிதனாக முடியும். இந்த புலன்கள் அனைத்தையும் உடைந்த காட்டாற்று வெள்ளம் போல் ஓடச் செய்வதற்கு முழுமுதற் காரணமாக அமைவது மதுப்பழக்கம்தான்.
மனிதனின் உடல், மனம், உள்ளம் இவற்றை பாதிக்கச் செய்து அவனது வாழ்க்கையையும், அவனது குடும்பத்தினர் வாழ்க்கையையும், சீரழித்து சின்னாபின்னமாக்கக் கூடிய தீய பழக்கம் தான் குடிப்பழக்கம்.சண்டை சச்சரவுகள், களவு, கொலை, கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச் செயல்களும், குற்றங்களும் மது எனும் அரக்கனின் தூண்டுதலாலேயே நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.மகாயுத்தம், பஞ்சம், இயற்கை பேரழிவு, கொள்ளை நோய் ஆகிய இம்மூன்றும் சேர்த்து அழித்ததை விட மதுபானம் அதிகமான மக்களை கொள்ளை கொண்டுள்ளது.

பழங்காலத்தில் மன்னர்கள் சோமபானம் என பழச்சாறுகள் கொண்டு தயாரித்து விருந்து உபசரிப்புகளில் பயன்படுத்தி வந்தனர். தீய குணங்கள் அனைத்திற்கும் மதுப்பழக்கம் தான் வழிகாட்டி என்று எடுத்துரைப்பதுடன் மதுபானம் அருந்தக்கூடாது எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவமன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால் உண்டாவதாகும். கோதுமை, சோளம், ஓட்ஸ், பார்லி, அரிசி, திராட்சை போன்றவற்றிலிருந்து தயாரிக்கப் படுகிறது. திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் (நொதி) பழத்திலும், தானியங்களிலுள்ள மாவையும், சர்க்கரையையும் மதுவாக மாற்றி விடுகிறது.

அதுபோல் தற்போது தயாரிக்கப்படும் மதுவில் மூலக்கூறாக ஈதைல் ஆல்கஹால் (Ethyl Alcohol) உள்ளது.

மதுக்களில் உள்ள ஈதைல் ஆல்கஹாலின் அளவு.

ரம் 50 - 60%

விஸ்கி, பராந்தி, ஜின் 40 - 45%

ஒயின் 10 - 15%

சாராயம் 40 - 50%

பீர் 4 - 8%

இதில் உள்ள ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடு பரவல் மூலம் இரத்தத்தில் வெகு விரைவில் கலக்கிறது. இதனால் உடனே போதை உண்டாகிறது.இரத்தத்தில் ஆல்கஹால் அளவு அதிகரிக்க அதிகரிக்க மனிதன் தன்னை இழக்க ஆரம்பிக்கிறான். முதலில் தசை கட்டுப்பாடு இழக்கும். தொடு உணர்வு குறையும். சிந்தனை மாறும், வாய் வார்த்தை குளறும். நடையில் தள்ளாட்டம், அதிக மயக்கம், ஞாபகமறதி, குழப்பம் போன்றவை உண்டாகும்.

ஒரு மனிதன் குடிப்பதைப் பொறுத்து குடிக்கப்படும் மதுவில் 20 சதவிகிதம் ரத்தத்தில் நேரடியாக கலக்கிறது. மீதமுள்ள மது முழுவதையும் கல்லீரல் அரிக்கும் வரை அது மூளை முதலான உடல் உறுப்புகளில் பரவி பல வகையான மாற்றங்களை உண்டுபண்ணுகிறது.பின்பு உடல் நரம்புகள் பாதிப்படைந்து, பார்வை நரம்புகளும் பாதிக்கப்படும். பித்தம் அதிகம் சுரந்து குடலில் அழற்சி உண்டாகி கல்லீரல் செல்கள் சேதப்படுகின்றன. இவை ஆரம்பத்தில் தெரிவதில்லை.பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்படும் இந்த மதுப்பழக்கம் நாள் ஆக ஆக, எந்த நேரமும் அதைப் பற்றிய சிந்தனையையே உண்டாக்கும். தினமும் அருந்தும் எண்ணம் உண்டாகும். அருந்தும் அளவும் அதிகரிக்கும்.

இப்படி அளவுக்கு அதிகமாக மது குடிப்பவர்களின் நரம்புகள் தளர்ச்சியடைந்து, கை, கால்கள் நடுக்கம் உண்டாகும். இந்த நடுக்கத்தைப் போக்க மேலும் மேலும் மது அருந்த ஆரம்பிப்பார்கள். சுயக் கட்டுப்பாட்டை இழந்துவிடுவார்கள்.குடிப்பதற்காக பலவிதமான போலிக் காரணங்களைக் கூறி நியாயப்படுத்துவார்கள். மனைவி, மக்கள் உறவுகளுடன் இனிமேல் குடிக்க மாட்டேன் என சத்தியங்களை அள்ளி விடுவார்கள்.காதல் தோல்வி, விரக்தி, குழந்தை இல்லையென பல ஆண்கள் மது அருந்துகிறார்கள்.

இது மேலும் பாதிப்பை ஏற்படுத்துமே ஒழிய மாற்றத்தை உண்டு பண்ணாது என்பதை புரிந்து கொள்வதில்லை.பொதுவாக மது அருந்துவது உடல்நலத்தை மட்டுமின்றி மனநலத்தையும் அதிக அளவில் பாதிக்கும். மது குடிப்பது பற்றிய சிந்தனை இருந்து கொண்டேயிருக்கும். உடல் அளவிலும் மனதளவிலும் பதற்றத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தும்.மெல்ல மெல்ல காரணமற்ற பயத்தால் தன் குடும்பம் பற்றிய அவநம்பிக்கையான எண்ணங்கள், தாம்பத்திய உறவில் விரிசல், சந்தேக எண்ணெங்கள் போன்றவை ஏற்படும். இதுபோல் உடலிலும், மனதிலும் பல பாதிப்புகள் உண்டாகும்.

மதுவினால் உண்டாகும் பாதிப்புகள்:

நாம் சாப்பிடுகின்ற எத்தகைய உணவும் சீரமணடைந்த பிறகு குடலில் உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்தோடு கலந்துவிடும். இச்சத்துக்கள் கல்லீரலுக்குச் சென்று அங்கு பலவகையான மாற்றங்களைப் பெற்று, உடலின் தேவைக்கு ஏற்ப பல பாகங்களுக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள சத்துக்கள், கல்லீரல் சேமித்து வைக்கப்படுகிறது. அதுபோல அருந்தும் மதுவானது சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு இரத்தத்தில் கலந்து கல்லீரலுக்கு சென்றடைகிறது. கல்லீரலில் சேமித்து வைக்கப்படும் சத்துக்கள் போல் மதுவும் வளர்சிதை மாற்றங்களுக்கு உட்படுகிறது. 
 அதாவது கல்லீரலில் உள்ள செல்களின் மைட்டோகான்டிரியாவிலுள்ள நொதியிலிருக்கும் ஆல்கஹால் டீஹைடிரோஜனேஸ் என்ற நொதியினால் மாற்றமடைந்து அசிட்டால்டீஹைடு என்ற பொருளாக மாற்றப்படும். மீண்டும் அசிட்டால்டீஹைடானது டீஹைடிரோஜினஸ் என்ற நொதியில் அசிட்டால் டீஹைடு, ஆயிடேட் என்ற பொருளாக மாற்றப்படும். இதுபோன்ற பல்வேறு நச்சுப்பொருட்களும், மதுவும் கல்லீரலைப் பெரிதும் பாதிப்படைய வைக்கிறது.மதுவை தொடர்ந்து அதிகமாக அருந்தும்போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும். தினமும் முப்பது கிராமுக்கு அதிகமாக மது அருந்தும் ஆண்களுக்கும், 20 கிராமுக்கு அதிகமாக மது அருந்தும் பெண்களுக்கும் கல்லீரல் பாதிப்படைகிறது.

மது அதிகமாக அருந்தும்போது ஏற்படும் மாற்றங்களால் கல்லீரலில் கொழுப்புப் பொருட்கள் சேர்கின்றன. அதிகமான கொழுப்பு அமிலங்கள் உற்பத்தியாக்கப்படுகின்றன. அதேநேரம் கொழுப்பு அமிலங்கள் குறைவாக செலவழிக்கப்படுகிறது. இதனால் இவை கல்லீரலில் படிந்து கல்லீரைப் பாதிப்படைய செய்கிறது.கல்லீரலில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகத் தங்குவதால் கல்லீரல் செல்கள் பாதிக்கப்பட்டு நலிந்துபோகின்றன. ஹையலின் என்ற பொருட்கள் கல்லீரலை இறுக்கி நோயாக மாற்றுகிறது. மது அருந்துவோருக்கு கல்லீரலில் இரும்புச்சத்து அதிகமாகப்படிகிறது.துவக்கத்தில் அறிகுறிகள் ஏதும் தெரியவராது. ஆனால் கல்லீரல் பாதிக்கப்பட்டு காமாலை, மூளை பாதிப்பு, நரம்பு பாதிப்பு, வைட்டமின் குறைபாடு, வயிற்றுவலி, வயிற்றுப்புண், கை கால் நடுக்கும் உண்டாகும்.

இதையும் பார்க்க:-
                        * நறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா?
                      * சுன்னத் (கத்னா) செய்வதன் நன்மைகள் மருத்துவ ஆய்வுகள...
                      * மகத்துவமிக்க லைலதுல் கத்ரின் சிறப்புகள்...!!
                      * அன்றாட வாழ்க்கையில் தினமும் ஓத வேண்டிய துஆக்கள்
                      * யாரும் குர்ஆனைத் தொடலாம், படிக்கலாம் தடையில்லை.


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget