அக்கரைப்பற்றில் குடிகாரர்களின் தொல்லை அதிகரித்துள்ளது

அன்மைக்காலமாக அக்கரைப்பற்றில் குடிகாரர்களின் தொல்லை  அதிகரித்துள்ளமை அவதானிக்கக்  கூடியதாக உள்ளது.குறிப்பாக முஸ்லிம் குடிகாரர்களின் என்னிக்கை அதிகரித்துள்ளதோடு அவர்களது அடாவடித்தனமும் அதிகரித்துள்ளது.இஸ்லாம் மதுவினை   ஹராம் என தடை  செய்துள்ளநிலையில் முஸ்லிம்கள் மத்தியில் மதுபாவனை அதிகரித்துள்ளமையானது.


அக்கரைப்பற்றில் இஸ்லாத்தின்  வீழ்ச்சியினையை எடுத்துக்காட்டுகின்றது "இஸ்லாத்தினை தூய வடிவில் பரப்புவோம்,பாதுகாப்போம்" என  மேடைக்கு மேடை சவால் விடும் தஹ்வா குழுக்கள் (தப்லீக் முதல் தவ்ஹீத் வரை இன்னும் பல அமைப்புக்கள்) இந்த   சமுதாயச் சீரழிவினை தடுக்க முனையாதது ஏன் ..? இது ஒரு பர்ளு கிபாயா இல்லையா ..?


அக்கரைப்பற்றின் உலமா சபையினரே! நீங்கள் இவற்றை கண்டும் கானாதது போல் இருப்பது ஏன் ? அல்லாஹ் உங்களிடம் கேட்கமாட்டான் என எண்ணிவிட்டீர்களா ? குறிப்பாக பள்ளிகளின் அண்மையில் இந்த குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பானது எமது தஹ்வா பணியின் வீழ்ச்சியினை பறை சாற்றுகின்றதே ! எமது பெரிய பள்ளியடி,பதுறுப் பள்ளியடி மற்றும் பச்சைப் பள்ளியடிகளில் இந்த குடிகாரர்களின் என்னிக்கை அதிகரிப்பை கட்டுப் படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என உடன் தீர்மானிக்க  வேண்டிய கடமைப்பாடு நம் அனைவருக்கும் உரியதே !

மது அருந்தியவனுக்கு நபி அவர்கள் கொடுத்த தண்டனை: நபி அவர்களின் காலத்தில் மது அருந்தியவனைப் பார்த்து, “அவனை அடியுங்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது எங்களில் சிலர் செருப்பாலும், ஆடைகளினாலும் கரத்தாலும் அவனை அடித்தனர்.” (ஆதாரம் : புகாரி)

அக்கரைப்பற்று பள்ளிக்கு முன்னால் இரவு 10 மணியானால் சொல்ல முடியவில்லை..  அந்த பகுதி  குடிகாரன் தொல்லை தாங்க முடியவில்லை 
என ஒருவர் ஆதங்கப்பட்டார். பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?
அல்லது அக்கரைப்பற்று பொலிசாராவது நடவடிக்கை எடுப்பார்களா.?

அக்கரைப்பற்றின் இந்த அவலத்தினை நீக்க நாம் அனைவரும் முயல வேண்டும்  என முகநூல் நண்பர்களின்  ஆலோசனைகளினையும் ஓத்துழைப்பினையும் எதிர்பார்க்கின்றோம்.! 
    
மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபி அவர்களால் சபிக்கப்பட்டவராவர்: - மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

தயவு செய்து கருத்துக்களை பரிமாறுங்கள் ! இததற்கொரு முடிவு கிடைக்க வேண்டும்  என்பதற்க்காக இத்தகவலினை இயலுமானவரை share பண்ணுங்கள். "பாவம் நடக்கும் போது அதனை கைகளினால் தடுக்கவும் இயலாதவன் நாவினால் தடுக்கட்டும்,இயலாதவன் மனதால் வெறுக்கட்டும். அதுதான் ஈமானின் கடைசிப்படி" என நபி (ஸல்) கூறினார்கள்.

அல்லாஹ் இம்முயற்சிக்கு தருவானாக ! ஆமீன் ..!   

 இதையும் பார்க்க:-   
                      * இஸ்லாம் மதுவை பற்றி என்ன சொல்லுகின்றது பார்ப்போம்
                      * மதுவை பற்றி அறிவியல் என்ன சொல்லுகிறது..!
                      * மது அருந்த இஸ்லாத்தில் ஏன் தடை.? Dr.ஜாகிர் நாயக்
                      * முஸ்லிம்களின் தலைவர் அமைச்சர் M.H.M.அஷ்ரப்f மரணத்த...
                      * காலி முகத்திடலும் காலியான முஸ்லீம் பெண்களின் முந்த...


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget