ஷைத்தானிடமிருந்து பாதுகாப்போம்!

                                       தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

அல்லாஹ்வை விட்டும் ஷைத்தானின் வழியில் சென்றவர்கள் அவனின் நட்புக்குள்ளாகி சந்தோஷங்களையும் வீண் செயல்களையும் ஏற்படுத்தி தனக்கு வழிப்பட்ட கூட்டத்தாரை அழைத்துக் கொண்டு மனிதர்களிடையே குழப்பங்களை உண்டு பண்ணுவதை நாம் அறிவோம்.ஷைத்தான் என்பவனின் பாதுகாப்பில் மனிதர்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
நம்மைப் படைத்த இறைவனின் பாதுகாப்பில் இருப்பதே எமது தலையாய கடமையாகிறது. கணவன் மனைவிக்கிடையில், கட்டுக்கோப்பான நண்பர்களிடையேயும், தொழுகை போன்ற நற்காரியங்களிடையேயும், ஏன் மார்க்க விடயங்களிலும் கூட வீணான சந்தேகங்களை உண்டுபண்ணி மனிதர்களை வழி கெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டும் கூட நாம் அவனை விட்டும் விலகிக் கொள்ளவில்லை என்றால் நமது ஈமானின் நிலைப்பாடுதான் என்ன என்ற கேள்வி எழுகிறது.
“மனிதர்களிற் சிலர் எத்தகைய கல்வியறிவும் இன்றியே அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கித்து முறியாட்டம் செய்யும் ஷைத்தான்களையே பின்பற்றுகின்றனர் (22: 03).
ஷைத்தானுடைய வழிகேட்டில் இருப்பவர்கள் மக்களுக்கு நன்மை செய்வது போன்று நடித்து ஏமாற்றி மக்களை நம்பிக்கையிழக்கச் செய்கின்றனர். அல்லாஹ்வும் அவனது றசூலும் காட்டிய வழிகளில் மக்கள் செல்வதை ஷைத்தான் தடுக்கிறான். இறைவனின் பார்வையில் ஷைத்தானின் செயற்பாடுகள் கொடூரமானவைகளாகவே இருக்கின்றன.
“(நபியே) நீர் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் (அதற்கு முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டுக் காக்கும்படி அல்லாஹ்விடம் கோரிக்கொள்ளும் (16: 98)
ஷைத்தானின் அதிகாரங்கள் உண்மையான விசுவாசிகளிடத்தில் எடுபடமாட்டாது. உண்மையான விசுவாசிகள் கூட ஷைத்தானின் தொல்லைகளை விட்டும் பாதுகாப்புத் தேடாமல் இருப்பதில்லை. அப்படியானால் சாதாரண மனிதர்களின் நிலைப்பாட்டையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.ஆகுமாக்கப்பட்ட உணவுகளை உண்பதற்கு முன்னரும், உறங்குவதற்கு முன்னரும், நல்ல வேலைகளைச் செய்வதற்கு முன்னரும் ஷைத்தானை விட்டும் இறைவனிடத்தில் பாதுகாப்புத் தேடிக் கொள்ளல் அவசியமாகும். ஏனென்றால் ஷைத்தானின் ஊடுருவல் இவற்றின் மீது ஏற்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் எமது வணக்க வழிபாடுகள் இறைவனுக்குப் பொருத்தமாக அமைகிறது.
“மதுபானத்தைக் கொண்டும் சூதாட்டத்தைக் கொண்டும் உங்களுக்கிடையில் விரோதத்தையும், குரோதத்தையும் உண்டு பண்ணவும், அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான்” (ஆகவே அவைகளிலிருந்து) நீங்கள் விலகக் கொள்வீர்களா? (5:91)
ஒவ்வொரு நிமிடமும் மக்களைக் கெடுத்துவிட வேண்டும் என்ற நோக்கில் இருப்பவனிடத்தில் எவ்வித தேவைகளுக்கும் இரங்குவது பொருத்தமாக அமையமாட்டாது. ஷைத்தானின் வழிகேட்டில் சென்ற அநேகமான மக்கள் இறைவனின் தண்டனைக்கு ஆளாகிவிட்டதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இறைவனுக்கு சிரம் பணிதலையே பொறுத்துக் கொள்ள முடியாத ஷைத்தான், மனிதர்களுக்கு நன்மை செய்ய இணங்கவே மாட்டான். அப்படிப்பட்டவனின் அடிச்சுவட்டில் உயர்ந்த படைப்பாகிய மனிதன் செய்வது வெறுக்கத்தக்க விடயமாகும். அல்லாஹ்வைப் பற்றிய எண்ணத்தைக் கூட மறக்கடிக்கக் கூடிய ஆற்றல் கொண்டவனாக ஷைத்தான் இருக்கிறான்.
இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் இறைவனிடத்தில் பாதுகாப்புத்தேட வேண்டும். ஷைத்தானின் தீய செயல்களில் இருந்தும் விடுபட இறைவனைத் தவிர வேறு எவரிடத்திலும் பாதுகாப்புக்கேட்க முடியாது. “ஆதமுடைய சந்ததிகளே நீங்கள் ஷைத்தானை வணங்கக் கூடாது. நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதி” (36: 60) என்று அல்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.
இவற்றையெல்லாம் உண்மையென நம்பாதவர்கள் வழிகேட்டில் செல்லக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.எனவே ஷைத்தானை நாம் விரோதியாக ஆக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் எல்லோருக்கும் இருக்கிறது. அவனைப் பின்பற்றி எவர்கள் உண்மையை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு வேதனை உண்டு என இறைவனே சொல்லுகின்றான். நாமும் ஷைத்தானை விட்டும் இறைவனிடம் காவல் தேடுவோம்.


இதையும் பார்க்க:-Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget