மஹ்ஷரும் முஸ்லிம் இளைஞர்களும்

                                          தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

அன்புள்ள சகோதர, சகோதரிகளே தங்கள் அனைவருக்கும்  அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்தஹு (தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!) முன்னுரைஇன்றைய  காலகட்டத்தில் நம் இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது இதற்கு  இஸ்லாத்தை சேர்ந்த இளைஞர்கள் மட்டும் விதிவிலக்கா? என்றால் இல்லை  ஒவ்வொரு  குடும்பத்திலும் ஒரு இளைஞானவது சீரழிகிறான்.இந்த சீரழிவிற்கு 2 காரணங்கள்  உள்ளன.

ஒன்று தவறான நண்பர்கள் இப்படிப்பட்ட நட்பின் காரணமாக அவர்களிடம்  கட்டுக்கடங்காத வேகமும் துணிச்சலும் நிறைந்துவிடுகிறது இதனை நன்முறையில்  பயன்படுத்தினால் அவன் மிகச் சிறந்த மனிதனாக வரலாம் ஆனால் ஷைத்தான் அவனை சூழ்ந்துக்கொண்டு அவனை சிந்தனையை மறக்கடித்து விடுகிறான்.

மற்றொரு காரணம் இஸ்லாம் அவர்களை சென்றடைவதில் ஏதோ சிக்கல் உள்ளது அப்படியே சென்றடைந்தாலும் அவர்கள் புரிந்துக்கொள்ள தடுமாறுகிறார்கள்!  இத்தனைக்கும் காரணம் நம் குடும்ப உறுப்பினர்கள் இப்படிப்பட்ட இளைஞர்களை  திட்டுவதும், தரக்குறைவாக நாலுபேர் முன்னாடி அவமானமாக பேசுவதாலும்  அவர்கள் மனம் உடைந்து  போய் இதற்குமேல் என்ன உள்ளது பெயர் கெட்டுப்போக  என்று எண்ணி விடுகிறார்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களிடம்  இஸ்லாத்தை எடுத்துச்சொன்னால் உன் வேலையைப் பார்த்து விட்டுப் போங்கள் என்றும் உதாசீனப்படுத்தி தங்களைத்தாங்களே நஷ்டத்தை விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள்.

மனிதன் மஹ்ஷரில் வெற்றி பெற நபிகளாரின் அறிவுரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஹ்சரின் கேள்விக் கணக்கைப்பற்றி கூறும்போது பின்வரும் 5 கேள்விகளை முன்வைத்தார்கள் இறைவனின் நீதி மன்றத்திலிருந்து அகன்று செல்ல முடியாது என்றார்கள்
1) வாழ்நாளை எப்படி கழித்தான்,
2) வாலிபத்தை எவ்வாறு கழித்தான்,
3) எவ்வாறு செல்வத்தை ஈட்டினான்,
4) அந்த செல்வத்தை எவ்வாறு செலவழித்தான்,
5) அவன் அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டான். (திர்மிதி)

குறிப்பு-
இங்கு ”நான்” என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளதன் காரணம் ஒவ்வொருவரும் இதை உள்ளத்தால் உணரவேண்டும் என்பதற்காகவே! தவறாக எண்ணிவிடவேண்டாம். இந்தக் கட்டுரை ஒரு பிராக்டிகல் (ஒரு செயல்முறை விளக்கமாக உள்ளது)

இனி இந்த கட்டுரையின் உள்ளே செல்வோம்! நான் மரணித்துவிட்டேன், கப்ருவாழ்க்கையை அணுபவித்து விட்டேன்! இப்போது இறைவன் சந்நிதானத்தில் நிற்கிறேன்! அவன் அர்ஷிலிருந்து என்னைப்பார்த்து கேட்கிறான்!

அல்லாஹ்:-
ஆதமின் மகனே! நீ அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டாய்?

இன்றைய இளைஞன்
என் இறைவா! கடன் தொல்லை தாங்க முடியவில்லை தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டேன்.

அல்லாஹ்:-
ஆதமின் மகனே! நீ மரணித்த பின் உன் குடும்பத்தின் நிலை என்ன?
இன்றைய இளைஞன்:-
என் இறைவா! நான் மரணித்தபின் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது!

அல்லாஹ் (இவ்வாறு சொன்னால்)
ஆதமின் மகனே! நீ மரணித்த பின் உன் குடும்பத்தின் நிலை இதுதான், கேள்!
விதவையான உன் மனைவியின் நிலை பற்றி கேள் நீ மரணித்தபின் ஒரு நாள் உன் விதவையை உன் நெருங்கிய உறவினர் கையை பிடித்து இழுத்தான் அவளோ பதறித்துடித்து ஓடி அறைக்குள் தாழிட்டு தன் கற்பை காப்பாற்றிக்கொண்டாள்!  அழுதாள்! (இவள் மார்க்க நெறி பேணி தன் கணவனுக்கு நல்ல புத்தியை புகட்டியிருந்தால் இந்த நிலை வருமா? இது இவள் செய்த தீய செயலுக்கான விதி அதனால் அவதிப்படுகிறாள்)

அநாதையான உன் மகனின் நிலை பற்றி கேள் ஒருநாள் உன் மகன் பள்ளியில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு மாணவன் சொன்னான் என் தந்தை டாக்டர், ஒருவன் என் தந்தை இஞ்ஜீனியர், ஒருவன் என் தந்தை வக்கீல் என்றனர் அவர்கள் உன் மகனிடம் உன் தந்தை என்ன செய்கிறார் என்று கேட்க அவனோ மூச்சடைத்து நின்றான்! பதிலுக்கு எனக்கு அப்பா இல்ல! என்று கதறினான் பிறகு ஓடிச் சென்று பள்ளியில் உள்ள ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தேம்பி! தேம்பி அழுதான் (இவன் என்ன பாவம் செய்தான்? இந்த பச்சிளம் பிஞ்சின் அழுகைக்கு உன்னிடம் பதில் உள்ளதா? என்று அல்லாஹ் நம்மை கேட்பானே!)

அநாதையான உன் பெற்றோர் நிலை பற்றி கேள் நீ மரணித்தபின் உன் தந்தை உன்னால் சொத்தை இழந்தார், சுகத்தை இழந்தார் நோய்வாய்பட்டு மருத்துவம் செய்ய வசதியில்லாமல் ”கேடுகெட்ட மகனையா நான் பெற்றேன்”  என்று உன்னை சபித்துக்கொண்டு மரணித்தார்! நீயும் உன் தந்தையும் மரணித்த பின் உன்னை 10 மாதம் வயிற்றில் சுமந்து சிரமத்திலும் சிரமமாக பெற்றெடுத்த தாய் அநாதையாக எந்த புகழிடமும் கிடைக்காமல் கிழவியாக ஒவ்வொரு வீட்டிலும் பத்துப்பாத்திரம் தேய்த்து வாழ்கையை கழித்தாள்!  அவளுக்கு ஆறுதல் சொல்ல ஒரு நாதியும் இல்லாமல் மனம் உடைந்து ”கேடுகெட்ட மகனையா நான் 10 மாதம் சுமந்தேன்” என்று உன்னை சபித்துக் கொண்டு மரணித்தாள்!

இன்றைய இளைஞன் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால்? இந்த இன்றைய இளைஞன் அல்லாஹ்விடம் மஹ்ஷரில் மன்னிப்பு கேட்பான் அல்லாஹ் மன்னிப்பானா?  கேடுகெட்டவனே நீ மனிதர்களிளேயே மஹா கெட்ட மனிதனாகிய பிர்அவுனைவிட கேவலமான காரியத்தை செய்துவிட்டு என்னிடம் மன்னிப்பை வேண்டுகிறாயா? நீயோ பிர்அவுன்-ஐ விட முந்தி அவனுக்கு தந்தையாக உள்ளாய் போ நரகின் பாதாளத்தில் நிரந்தரமாக தங்கிக்கொள்! உனக்கு மன்னிப்பே கிடையாது என்று சொல்லிவிட்டால் ? ? ? ? (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் இந்த நிலை நம்மில் யாருக்கும் வரவேண்டாம்)

இளைஞர்களே இதோ  குர்ஆனில் உங்களுக்குள்ள கனிவான அறிவுரை
”இன்னும் நினைவு கூறுங்கள் நாம் (யாஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது! (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (களான ஏழை களுக்கும்) நன்மை செய்யுங்கள்! மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்! மேலும் தொழுகையை முறையாக கடைபிடித்து வாருங்கள்!  ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்! என்று உறுதி மொழியை வாங்கினோம் ஆனால்உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல் (அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள். இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்!  (திருக்குர்அன் 2:83)

எவர் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கிறாரோ அல்லாஹ் அவருக்குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி வகையை ஏற்படுத்துவான். அன்றி, அவர் அறிந்திராத விதத்தில் அவருக்கு வாழ்க்கை வசதிகளை வழங்குவான். (திருக் குர்ஆன் 65: 2-3)

இளைஞர்களே
“இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!  (திருக்குர்ஆன் 7:199)

“அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்”.(திருக் குர்ஆன் 17:26)

“அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கையிழந்து விட வேண்டாம்! (திருக் குர்ஆன் 39:53)

ஆதமனின் சந்ததிகளே! இவ்வாறு அல்லாஹ்விடம் துவா கேளுங்கள்!

”இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதம் புறிந்த நிஃமத்துக்காக (அருள் கொடைகளுக்காக!) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தி யருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன், அன்றியும் நான் முஸ்லிம்களில் நின்று முள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக) இருக்கிறேன்” என்று கூறுவான். (திருக்குர்அன் 46:15)

என் அருமை மூமின்களே! தந்தை இல்லாத, தாய் இல்லாத அநாதை சிறுவர்களை விரட்டாதீர்கள் அவர்கள் பாசம் வேண்டி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்!என் அருமை மூமின்களே! கணவனில்லாத ஏழை விதவைகளை தவறான கண்ணோடத்தில் பார்க்காதீர்கள் மேலும் அவர்களை விரட்டாதீர்கள் அவர்கள் தங்களது கற்புக்கு புகழிடம் தேடி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்! என் அருமை மூமின்களே! பிள்ளைகளை இழந்து தவிக்கும் அல்லது பிள்ளைகளே இல்லாமல் வயதான காலத்தில் தவிக்கும் பெற்றோர்களை விரட்டிவிடாதீர்கள்! அவர்கள் பாசம் வேண்டி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்!
மூமின்களே அல்லாஹ்வின் வார்த்தைகளை கேளுங்கள் (நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை” (அல்-குர்ஆன் 107:1-3)

“அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; ‘எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்’ என்று; நீர் கூறும்: ‘(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதை களுக்கும்,  மிஸ்கீன்(ஏழை)களுக்கும்,  வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச்
செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்” (அல்-குர்ஆன் 2:215)

குறிப்பு:-
மூமின்களே! இங்கு பதியப்பட்ட இது இளைஞர்களிடம் தாவா செய்யும் ஒரு கருவியாக இருக்கட்டும்! இக்கட்டுரையில் தவறு இருந்தால் திருத்துவதற்கு அறிவுரை கூறுங்கள் (இன்ஷா அல்லாஹ்) திருத்திக்கொள்ளலாம்! இந்தக்கட்டுரை உங்களுக்கு அர்ப்பணம்! இதை நீங்கள் வரைந்த கட்டுரையாக நினைத்துக்கொண்டு இளைஞர்களை சீர்படுத்துங்கள் எப்படியாவது நம் இளைஞர்கள் சீர்படவேண்டும் என்பதே நம் ஆசையாக இருக்கட்டும்! பேரும் புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம் நம் எல்லோருக்கும் அல்லாஹ் நிறைவான கூலி வழங்கி அருள்புரிவானாக! அமீன்!


இதையும் பார்க்க >>
                     * மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்..!
                   * கஃபா (முதல் இறையில்லம்) வரலாறு கற்போம்
                   * சுன்னத் (கத்னா) செய்வதன் நன்மைகள் மருத்துவ ஆய்வுகள...
                   * நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்ட...
                   * பிறந்த நாள் கொண்டாடலாமா..?


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget