May 2014

                                     தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

01.கேள்வி: வெள்ளிக்கிழமைகளில் நஃபிலான நோன்பு வைக்க தடை உண்டா?. ஆம் எனில் பிறகு எந்த நாட்களில் வைக்க வேண்டும்? 

வெள்ளிக்கிழமைகளில் நஃபிலான நோன்பு வைக்க ஹதீஸ்களில் தடை இருப்பது உண்மைதான். நான் வெள்ளிக்கிழமை நோன்பு வைத்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். 'நேற்று நோன்பு வைத்தாயா? என்றார்கள். 'இல்லை' என்றேன். 'நாளை நோன்பு வைக்கப்போகிறாயா?. என்றார்கள். 'இல்லை' என்றேன். 'அப்படியானால் நோன்பை முறித்துவிடு' என்றார்கள். நான் நோன்பை முறித்து விட்டேன் என ஜூவைரியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

* கேள்வி: மாதவிடாய் உள்ள பெண்கள் குர்ஆனை தொடுவதற்கும், ஓதுவதற்கும், பிறருக்கு கற்றுக் கொடுப்பதற்கும் தடையுண்டா? பிரான்ஸிலிருந்து முஹம்மது இஸ்மாயில்.

ஓரு சகோதரர் குர்ஆன் பற்றிக் கூறும்போது - அது எல்லா புத்தகங்களை போன்ற ஒரு புத்தகம்தான். அதனை கீழே வைப்பதற்கோ, கால்களில் வைத்துக் கொண்டு ஓதுவதற்கோ தடையில்லை. குளிப்பு கடமையான நிலையிலும், ஒளு இல்லாமலும் குர்ஆனை ஓதலாம் என்கிறார். இது பற்றி விளக்கவும். ஷஃபிகுர் ரஹ்மான்.


இந்த உலகத்தில் நன்றாக உழைக்கவேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும், சொத்து சேர்க்கவேண்டும், ஆடம்பரமான வீடு கட்டவேண்டும், இப்படி இன்பமாக வாழவேண்டும் என்பதற்காகவேண்டி நமது முஸ்லிம் சகோதர, சகோதரிகள் வைத்தியராகவோ, பொறியியளாலராகவோ, சட்டத்தரணியாகவோ, ஆசிரியராகவோ, கனணித்துறையிலோ இது போன்ற கல்வித்துறையிலோ, பாடகராகவோ, இசையமைப்பாளராகவோ, நடனமாடுபவராகவோ வேறு ஏதாவது வியாபாரத்தையோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

                                  தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

ஸ்லாம் ஒரு சம்பூரண வாழ்க்கைத் திட்டம். அதில் மனிதர்கள் எவ்வாறு வாழவேண்டும், அதற்கு மாற்றமாக வாழும் பட்சத்தில் எவ்வாறான தண்டனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்ற சட்ட வரையறை சகல அம்சங்களிலும் பொதிந்து காணப்படுவ தால்தான் இஸ்லாம் ஒரு சம்பூரண வாழ்க்கைத்திட்டம் என்பதை சகலரும் புரிந்து, ஏற்றுக் கொள்ளத்தக்க தாக அமைந்துள்ளது.  இந்த வகையில் சகோதரத்துவம் ஐக்கியம் பற்றிக்குறிப்பிடும் பொழுது, “நீங்கள் ஒவ்வொரு வரும் உடன் பிறப்புக்களே” உங்களுக் கிடையில் குரோரத்தை வளர்த்து ஒரு வருக்கு ஒருவர் பிரிந்து விடாதீர்கள். ஒற்றுமையின் கயிற்றைப் பலமாகப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்.


                                 தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

 நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103) 

ஆனால், இவர்களுக்குப் பின் வழி கெட்ட சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்;  இழிவான மன இச்சைகளைப் பின்பற்றினார்கள்; மறுமையில் அவர்கள் நரகத்தின் கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)


மனித உணர்வுகளை நன் கறிந்த வல்லர ஹ்மானான அல்லாஹ் தவறிழைக்கும் மனிதர்களை உடனே தண்டி க்காது, பாவ மீட்சி பெறுவ தற்கான அவகாசத்தையும் அளிக்கின்றான். மனிதர்கள் மீது கொண்ட கருணையின் காரணமாக பாவிகளை அழைத்து “எனது அடியார் களே, நீங்கள் இரவு, பகலாக தவறிழைத்துக் கொண்டிருக் கிரீர்கள். நான் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பவ னாக இருக்கிறேன். எனவே என்னிடத்தில் பாவ மன்னிப் புக் கேளுங்கள். நான் உங்களை மன்னிக்கிறேன் (ஹதீஸ் குத்ஸி) எனக் கூறுகின்றான்.மேலும், “உங்கள் இரட்சக னின் மன்னிப்பின் பக்கமும் வானம் பூமியின் அளவு அகலமான சுவர்க்கத்தின் பக்கமும் விரையுங்கள், (ஆல இம்ரான்: 133) என அருள்மறை அல்குர்ஆன் வலியுறுத்துகிறது.

                                தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
சூரியன் மேற்குத் திசையில் உதிக்கும் வரைதான் பாவமன்னிப்பு
கியாமத் நாளின் பத்து அடையாளங்களில் மூன்று அடையாளங்கள் நிகழ்வதற்கு முன்னால் ஒருவர் இஸ்லாத்தை ஏற்கவில்லையானால் அதன் பிறகு ஏற்பாரானால் அவரது ஈமான் ஏற்றுக் கொள்ளப்படாது என்று எச்சரித்தார்கள். அந்த மூன்றிலும் மிக முக்கியமான முதலாவது அடையாளம் சூரியன் மேற்குத் திசையில் உதிப்பது. அதாவது கிழக்கில் உதிக்கிற சூரியன் மேற்குத் திசையில் உதித்த பிறகு ஒருவர் இறை மறுப்பிலிருந்தும் இணை வைப்பிலிருந்தும் தான் செய்கிற மற்ற சிறு பாவம் பெரும் பாவங்களிலிருந்தும் மன்னிப்புத் தேடி திருந்தினால் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget