இஸ்லாத்தில் பலருக்கும் வரக்கூடிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும்.

                                     தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

01.கேள்வி: வெள்ளிக்கிழமைகளில் நஃபிலான நோன்பு வைக்க தடை உண்டா?. ஆம் எனில் பிறகு எந்த நாட்களில் வைக்க வேண்டும்? 

வெள்ளிக்கிழமைகளில் நஃபிலான நோன்பு வைக்க ஹதீஸ்களில் தடை இருப்பது உண்மைதான். நான் வெள்ளிக்கிழமை நோன்பு வைத்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். 'நேற்று நோன்பு வைத்தாயா? என்றார்கள். 'இல்லை' என்றேன். 'நாளை நோன்பு வைக்கப்போகிறாயா?. என்றார்கள். 'இல்லை' என்றேன். 'அப்படியானால் நோன்பை முறித்துவிடு' என்றார்கள். நான் நோன்பை முறித்து விட்டேன் என ஜூவைரியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அலி(ரலி), ஜாபிர்(ரலி), ஜூனாதா(ரலி), அனஸ்(ரலி), அபூஹூரைரா(ரலி) ஆகிய நபித்தோழர்கள் மூலமாகவும் 'வெள்ளிக் கிழமைகளில் நோன்பு தடை செய்யப்பட்ட செய்தி வந்துள்ளது. (புஹாரி  : 1984, 1986, 1986, - திர்மிதி - 740)

வெள்ளிக்கிழமையை எப்படி சிறப்பிக்க வேண்டுமோ, அப்படி சிறப்பித்து விட்டான். அந்த சிறப்பின் காரணமாக அன்றைய தினம் நோன்பு வைத்தால் நன்மை அதிகம் என்ற நாமாக அதை தனிமைப் படுத்தக் கூடாது என்பதால் இந்த தடை வந்திருக்கலாம். வியாழன் - வெள்ளி, அல்லது வெள்ளி - சனி, என இரண்டு நாட்கள் சேர்ந்தார்போல் நோன்பு வைக்க ஹதீஸ்களில் ஆதாரம் உண்டு.

ஒவ்வொரு மாதமும் 13,14,15 ஆகிய பிறை நாட்களில் நோன்பு வைப்பதற்கும், வார நாட்களில் திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் நோன்பு வைப்பதற்கும் புஹாரி, முஸ்லிம், திர்மிதி ஆகிய ஹதீஸ் நூல்களில் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.

02.கேள்வி: பெண்கள் மேக்கப் செய்து கொள்ளலாமா?. ஆம் எனில் அல்லது கூடாது எனில் ஆதாரத்துடன் விளக்கவும்.

பெண்களைப் பெருத்தவரை புருவங்களின் முடிகளை முழுமையாக மழித்து அழகுபடுத்தவதையும், பச்சைகுத்தி அழகுபடுத்திக் கொள்வதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது. தங்க நகை, பட்டாடை உட்பட அழகு சாதனங்களால் தம்மை அழகு படுத்திக் கொள்வதற்கு தடையில்லை. அதுபோல அழகு சாதன நிலையங்களுக்குச் சென்று மேக்கப் சாதனங்களால் தம்மை அழகு படுத்திக் கொள்ள தடை இருப்பதாக பார்க்க முடிவதில்லை.

பொதுவாக இன்றைக்கு வரும் மேக்-அப் சாதனங்கள் அனைத்தும் உடலுக்கும், உடல் அழகுக்கும் பாதிப்பை உண்டாக்கும் இரசாயனப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது. மேக்-அப் சாதனங்கள் அனைத்தும் ஒரு காலத்தில் சினிமா கூத்தாடிகள் மாத்திரம் உபயோகிப்பதாக இருந்தது. மற்றபடி சாதாரண குடும்பப் பெண்கள், மற்றும் கல்லூரிp பெண்கள் போன்றவர்கள் சாதாரண பவுடர் மற்றும் ஃபேர் அண்;ட் லவ்லி போன்ற க்ரீம்களை மாத்திரமே பயன் படுத்தி வந்தனர்.

 ஆனால் இன்றைக்கு நிலைமை மாறி சினமா பூச்சுக்கள் நாகரீக மேக்-அப்செட்கள் என்ற பெயரில் வீடுகளில் நுழைந்து விட்டன. சாதாரண பெண்கள்  அதனை பயன்படுத்தத்து வங்கி விட்டனர். மேற்படி மேக்-அப் செட்களில் இருக்கும் இரசாயணப் பொருட்களினால் உடலுக்கும், உடல் அழகுக்கும் ஏற்படும் கெடுதிகள் பற்றி அவர்கள் அறிவதில்லை. ஆரம்ப காலங்களில் இவை முகத்திற்கு பொலிவையும் அழகையும் கொடுப்பது போல் தோன்றினாலும், பிறகு வரும் நாட்களில் அதுவும் இளமையின் மத்தியிலேயே முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தி விடுகிறது. கடைசியில் மேக்-அப் இல்லாமல் இருக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளிவிடுகிறது.

எனவேதான் மேக்-அப் இல்லாத சினிமா கூத்தாடிகளை பார்க்க சகிப்பதில்லை. தொலைகாட்சிகளில் இப்போது வரும் தொடர் சீரியல்களிலும் சரி, சாதாரண நிகழ்ச்சிகளிலும் சரி மேக்-அப் போட்டுக் கொண்டு போலி அழகிகளை கண்டு - இதர குடும்ப பெண்களும், கல்லூரி பெண்களும் தாமும் அதுபோல் அழகாக தோன்ற வேண்டும் என்று உடலுக்கும், உடல் அழகுக்கும், பணத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மேக்-அப் சாதனங்களை நாடுகிறார்கள். இந்த செயற்கை கவர்ச்சியில் பெண்களின் இயற்கையான எழிலை பாழ்படுத்தும் சக்தி உள்ளது என்பதை அறிந்து இது போன்ற மே-அப் சாதானங்களை உபயோகிக்காமல் இருப்பதே சிறந்தது.

முக்கியமாக பெண்கள் தங்களை எப்படி அழகு படுத்திக் கொண்டாலும், அந்த அழகை தம்போன்ற பெண்களிடமும், உரிமையுள்ள ஆண்களிடமும்(கணவன், சகோதரர்கள், தந்தை போன்றவர்கள்) மட்டும்தான் வெளிப்படுத்த வேண்டும். பிற ஆண்களிடம், பெண்கள் தம் அழகை வெளிக்காட்டுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. மேக்-அப் போட்டுக் கொண்டால்தான் இந்த தடை என்றில்லை. பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள் என்பதால் இந்த கட்டளை எல்லா வேளைகளிலும் பொதுவானதுதான்.  குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸூரத்துந் நூரின் 31வது வசனம் குறிப்பிடுகிறது:

03.கேள்வி: அல்ட்ரா சவுண்ட் மூலம் தாயின் வயிற்றில் வளரும் கருவைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா? 

தாயின் வயிற்றில் உள்ள கருவின் வளர்ச்சி, எடை, இயக்கம், தன்மை இவைகளைக் காண, கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் அக்கரை கருதி ஸ்கேன் மூலமாகவோ, அல்ட்ரா சவுண்ட மூலமாகவோ கருவை காண்பதில் அல்லது அணுகுவதில் இஸ்லாத்தில் தடையில்லை.

'நாம் மனிதனை மண்ணிலிருந்தும், பின்னர் அவனை உயிரணுவாக்கியும், பின்னர் அலக் என்ற நிலையிலாக்கியும், பின்னர் தசை பிண்டமாக்கியும் பின்னர் எலும்களை உருவாக்கியும், பின்னர் அந்த எலும்புகளுக்கு இறைச்சியை போர்த்தியும், பின்னர் அதை வேறொரு படைப்பாக (மனிதனாக)ச் செய்தோம்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 23 ஸூரத்துல் முஃமினூனின் 12, 13, 14வது வசனங்கள்)

கருவில் உருவாகும் குழந்தை ஒரு நிலையிலிருந்து மறுநிலை, அதிலிருந்து அடுத்த நிலை என்று மாறியே வளர்கிறது. ..பின்னர் என்ற வார்த்தைகளின் மூலம் கருவானது ஆறுநிலைளை கடந்து ஏழாவது நிiயிலேயே மனித உருவமாக மாறுவதாக குர்ஆன் கூறுகிறது. குர்ஆன் குறிப்பிடும் குழந்தை வளர்ச்சியின் நிலைகளை அறிய வேண்டுமானால் ஸ்கேன் மூலம், அல்ட்ரா சவுண்ட் மூலம் இன்னும் அதிநவீன கருவிகள் மூலம் கருவியலை அணுக வேண்டும். மேற்படி அணுகு முறைகளை அனுமதிக்கும் இஸ்லாம் கருவில் உள்ள உயிரை கொல்வதற்கு தடைவிதிக்கிறது.அருள்மறை குர்ஆனின் 06வது அத்தியாயம் ஸூரத்துல் அன்-ஆம் - ன் 151வது வசனத்தின் ஒரு பகுதி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

'வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்..'அருள்மறை குர்ஆனின் 17வது அத்தியாயம் ஸூரத்துல் பனீ-இஸ்ராயீல் - ன் 31 வது வசனமும் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

'நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளை கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளை) அளிக்கிறோம். - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாக பெரும் பிழையாகும்.'

வளர்ந்துள்ள அறிவியல் அறிவின் மூலம் லட்சக் கணக்காக உயிர்கள் குறிப்பாக அவைகள் பெண் சிசுக்கள் என்று கண்டறியப்பட்டபின் கருவிலேயே அழிக்கப்படுவது இன்றைய உலகில் சர்வ சாதாரணமாகி விட்டது. (இது பற்றிய அதிகமான புள்ளி விபரம் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கேள்வி பதிலில் உள்ளது) கருவில் ஒரு உயிர் உருவான பின் அதனை அழிக்கும் உரிமை எவருக்கும் இல்லை. தன் குழந்தைக்கு சமாதி கட்டும் எண்ணத்தில் மனிதன் இத்தகைய அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்தவதற்கு இஸ்லாம் தடை விதித்துள்ளது. அல்ட்ரா சவுண்ட் மூலம் கருவின் வளர்ச்சிக்கு எந்தவித இன்னலோ அல்லது தடையோ ஏற்படாது என்றால் மேற்படி செயலுக்கு தடை இல்லை.

04.கேள்வி: இன்று நம்மில் பலர் அரசிடம் முறையற்ற தகவலை வழங்கி லட்சகணக்கில்; பணத்தைப் பெறுகிறார்கள். இந்தப் பணத்தால் ஹஜ் செய்தால் அந்த ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படுமா..? 

பொதுவாகவே உலகில் உள்ள இறை நிராகரிப்பு அரசுகள் முஸ்லிம்களை ஒடுக்கவே முயற்சிக்கின்றன.உண்மை இப்படி இருக்கும்போது முஸ்லிம்கள் அரசிடமிருந்து லட்சக்கணக்கில் பணத்தைப் பெறுகிறார்கள் என்பது நம்பும் படியாக இல்லை. அரசுகளிடமிருந்து ஈட்டுத்தொகை பெறுவதாக இருந்தால் அதற்கு போதிய சான்றுகள் இருக்க வேண்டும். போதிய சான்றுகள் இருந்தாலும் ஈட்டுத்தொகை குறைவாகவே கிடைக்கும் இதையெல்லாம் கவணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முறையான வழியில் அல்லாமல் வரும் பணத்தில் ஹஜ் செய்யலாமா..? என்று கேள்வியை கொஞ்சம் திருத்திக் கொள்ளலாம்.

ஹஜ் என்பது செய்தே தீர வேண்டும் என்று விதிக்கப்பட்ட கடமையல்ல இறைவனின் அந்த ஆலயம் சென்று வர சக்திப் பெற்றவர்கள் மீது ஹஜ் கடமையாகும் என்கிறது குர்ஆன் (3:79) சக்தி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து ஹஜ்ஜூக்கா செலவிடப்படும் தொகை அதை செய்பவருக்கு முறையான-ஹலாலான-வழியில் வந்திருக்க வேண்டும் என்hதை விளங்கலாம்.

எப்படி வேண்டுமானாலும் பணத்தை சம்பாதித்துக் கொள் கடவுளுக்குறிய தொகையை மட்டும் முறையாக உண்டியலில் காணிக்கையாக்கி விடு என்று சொல்லும் மார்க்கமல்ல இஸ்லாம்.பணம் வரும் வழியும் அது செலவிடப்படும் முறையும் இறைவனால் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை எல்லா அமல்களுக்கும் இஸ்லாம் முன் வைக்கிறது.

நன்மையை நாடி செலவு செய்யப்படும் எதுவும் நல்லப் பொருள்களிலிருந்தே செலவு செய்யப்பட வேண்டும் என்று இறைவன் கூறுகிறான். (குர்ஆன் 2:215)

மெய்யாகவே அல்லாஹ் இறையச்சமுடையவர்களின் அமல்களைத்தான் ஏற்றுக் கொள்கிறான் (குர்ஆன் 5:27)

ஹஜ் என்ற பெரும் கடமையை செய்ய நாடுபவர்கள் குறுக்கு வழியில் பணம் திரட்ட எண்ண மாட்டார்கள்-எண்ணக் கூடாது ஏனெனில் அவை அல்லாஹ்வால் ஒப்புக் கொள்ளப்படாது.

05.கேள்வி: விபச்சாரம் செய்பவன் விபச்சாரியையன்றி திருமணம் முடிக்க மாட்டான் என்று குர்ஆன் கூறுகிறது, இந்நிலையில் விபச்சாரம் செய்யும் ஒருவன் இஸ்லாமிய பண்பாட்டை ஒழுகி நடக்கும் ஒரு பெண்ணை திருமனம் செய்கிறான் இந்நிலையில் மேற்கண்ட வசனத்தின் நிலை என்ன..? 

ஒழுக்கமான பெண்களுக்கு கெட்ட கணவர்கள் அமைய மாட்டார்கள் என்பதோ விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு விபச்சாரிகள் தான் மனைவியாக அமைவார்கள் என்பதோ இந்த வசனத்தின் பொருளல்ல.விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்கள் தங்கள் மனைவியை சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டும் என்பதோ அவள் கெட்டுப் போய் இருப்பாளோ என்று மன உளைச்சலுக்கு ஆளாகி அவள் வாழ்வை பாழ்படுத்த வேண்டும் என்பதோ இந்த வசனத்தின் பொருளல்ல.

வேறு என்ன கூறுகிறது அந்த வசனம்!

ஒரு ஆண் எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும் தனக்கு வரும் மனைவி நல்லவளாக - ஒழுக்கமுள்ளவளாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். விபச்சார தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் திருமண வாழ்க்கையில் இணைகிறாள் என்றால் அவளும் கூட தன் கணவன் தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் பிற பெண்களை மனதால் கூட தீண்டாதவனாக இருக்க வேண்டும் என்று விரும்புவாள்.

அவர்கள் அவ்வாறு விரும்பினாலும், அப்படி விரும்புவதற்கு அவர்களுக்கு தார்மீக உரிமையில்லை என்றே அந்த வசனம் கூறுகிறது. ஒருவன் விபச்சாரம் செய்பவனாகவோ கெட்டவனாகவோ இருக்கும் போது அவன் தன்னைப் போன்றுள்ள ஒரு விபச்சாரியையோ அல்லது கெட்டவளையோ தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் அது தான் சரியான அளவுகோல் மனைவி ஒழுக்கமானவளாக அமைய வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் முதலில் அவன் எல்லா ஒழுங்கீனங்களையும் விட்டு தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளட்டும் என்பதே நீங்கள் எடுத்துக் காட்டிய வசனம் சொல்லும் அறிவுரையாகும்.

06.பெண்ணுறுப்பில் உடலுறவு கொள்வது ,மாதவிடாயுடன் உள்ள பெண்ணை அனுபவிப்பது  இஸ்லாத்தில் தடை செய்யப் பட்டுள்ளது  

மாதவிடாயுடன் உள்ள பெண்ணை அனுபவிப்பது அவளது கணவனுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் அவளது பெண் உறுப்பில் உறவு கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஒரு தொல்லை. எனவே, மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும்வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்!’ (2:222)

‘யார் மாதவிடாயிலுள்ள பெண்ணுடன் உடலுறவு கொள்கிறானோ அல்லது பெண்ணை அவளது பின் துவாரத்தில் புணர்கிறானோ அல்லது ஒரு ஜோஷியனிடம் சென்று அவன் சொல்வதை உண்மைப் படுத்துகின்றானோ அவன் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அருளப்பட்டதை நிராகரித்தவனாவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அபூதாவுத், திர்மிதீ, இப்னு மாஜா)

‘பெண்ணுறுப்பில் உறவு கொள்வதைத் தவிர மற்ற அனைத்தையும் (மாதவிடாயுள்ள பெண்களுடன்) நீங்கள் செய்யுங்கள்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்)

மாதவிடாயுள்ள பெண்ணுடன் உடலுறவு கொள்வதாக இருந்தால் அவள் அதிலிருந்து சுத்தமாகி குளித்த பின்னரே அனுமதிக்கப்படும்.


இதையும் பார்க்க:-


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget