மனித உணர்வுகளை நன் கறிந்த வல்லர ஹ்மானான அல்லாஹ் தவறிழைக்கும்
மனிதர்களை உடனே தண்டி க்காது, பாவ மீட்சி பெறுவ தற்கான அவகாசத்தையும்
அளிக்கின்றான். மனிதர்கள் மீது கொண்ட கருணையின் காரணமாக பாவிகளை அழைத்து “எனது அடியார்
களே, நீங்கள் இரவு, பகலாக தவறிழைத்துக் கொண்டிருக் கிரீர்கள். நான் பாவங்கள்
அனைத்தையும் மன்னிப்பவ னாக இருக்கிறேன். எனவே என்னிடத்தில் பாவ மன்னிப்
புக் கேளுங்கள். நான் உங்களை மன்னிக்கிறேன் (ஹதீஸ் குத்ஸி) எனக்
கூறுகின்றான்.மேலும், “உங்கள் இரட்சக னின் மன்னிப்பின் பக்கமும் வானம் பூமியின் அளவு
அகலமான சுவர்க்கத்தின் பக்கமும் விரையுங்கள், (ஆல இம்ரான்: 133) என
அருள்மறை அல்குர்ஆன் வலியுறுத்துகிறது.
காரணம் மனிதர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்து தீமையில் மூழ்கும் போது இறை
அருட்கொடைகள் அனைத்தும் துண்டிக்கப் படுகின்றன. இறைவனின் கோபமும்
அதிகரிக்கின்றது. பஞ்சமும், வரட்சியும் தாண்டவமாடுகின்றன. அதனால் தான்
இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் வரட்சி, பஞ்சம் ஏற்பட்டால் மழை வேண்டித்
தொழுகை நடத்துமாறும், அனைவரும் ஒன்றிணைந்து பாவ மன்னிப்புக் கோருமாறும்
கற்றுத்தந்துள்ளார்கள்.
பாவ மன்னிப்புக் கேட்ப தால் ஏற்படும் நன்மைகள்
1. தீமைகளிலிருந்து விடுபட்டு இறை அன்பைப் பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது.
‘நிச்சயமாக பாவங்களை உணர்ந்து மீளுகிறவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். (அல் பகரா : 222)
2. இறை தண்டனை தடுக்கப்படுகிறது, அவர்கள் பாவ மன்னிப்புக் கோரிக் கொண்டிருக்கும் நிலையில், அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை. (அல் அன்ஃபால் : 33)
3. செல்வமும், பிள்ளைப் பாக்கியமும் கிடைக்கிறது. மழை பொழிந்து, தோட்ட ங்கள் செழிப்படைந்து, பூமி பசுமையாகிறது. உங்கள் இரட்சகனிடம் மன்னிப்புத் தேடுங்கள், நிச்ச யமாக அவன் மிக்க
மன்னிப்பவனாக இருக்கிறான். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைப்பட்டிருக்கும்)
மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான். செல்வங்களையும் ஆண்
மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவதோடு, உங்களுக்காக செழிப்புமிக்க
தோட்டங்க ளையும் தருவான், (அவைகளின் செழிப்பிற்காக) ஆறுகளையும் உருவாக்குவான். (நூஹ் : 10, 11, 12)
4. கஷ்டங்கள், கவலைகள் நீங்கி, உணவில் விஸ்தீரம் ஏற்படுகிறது. எவர் பாவ
மன்னிப்புடன் இணைந்து இருக்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் சகல இக்கட்டான
நிலைமைகளின் போதும் அருட்கொடைகளின் வாயிலைத் திறந்து விடுகிறான். சகல
கவலைகளிலிருந்தும் விடுதலையைக் கொடுக்கிறான். அவர் எதிர்பாராவிதத்தில்
அவருக்கு உணவளிக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி)
அறிவிக்கிறார்கள். (அபூ தாவூத், அஹ்மத், இப்னுமாஜா)
5. ஏற்கனவே செய்த பாவங்கள் நன்மைகளாக மாற்றப்படுகின்றன.
“எவர் தவ்பா செய்து, விசுவாசமும் கொண்டு நற்செயலும் செய்தாரோ,
அத்தகையோருடைய தீமைகளை அல்லாஹ் நன்மை களாக மாற்றி விடுவான். (அல்புர்கான் :
70)
6. இறை மன்னிப்பும், சுவர்க்கமும் கிடைக்கின்றன. மேலும் அவர்கள் எத்தகையோர் என்றால், யாதொரு மானக்கேடான காரியத்தை
அவர்கள் செய்து விட்டால் அல்லது (ஏதும் பாவமிழைத்துத்) தங்களுக்குத்
தாங்களே அநீதமிழைத்துக் கொண்டால், (உடனே) அல் லாஹ்வை நினைவு கூர்வார்கள்.
இன்னும் அவனிடமே தங்களுடைய பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார் கள். …
அத்தகையோருடைய கூலி அவர்களுடைய இரட் சகனிடமிருந்து மன்னிப்பு மற்றும்
சுவனபதிகளாகும். (ஆல இம்ரான் : 135, 136)
பாவ மீட்சிக்கான விசேட நேரங்கள்
* இரவின் பிந்திய பகுதி (ஸஹர் நேரம்) எமது இரட்சகன் ஒவ்வொரு இரவிலும் இரவின் மூன்றில் ஒரு பகுதி எஞ்சியிருக்கும் வேளை இப்பூமியின் வானத்திற்கு இறங்கி வந்து என்னை யார் அழைக்கி
றாரோ, அவருக்கு நான் பதிலளிக்கிறேன். எவர் என்னிடம் கேட்கிறாரோ, அவருக்கு
நான் கொடுக்கிறேன். எவர் என்னிடம் பாவ மன்னிப்புக் கேட்கிறாரோ, அவருக்கு
நான் பாவ மன்னிப்புக் கொடுக்கிறேன் எனக் கூறியதாக நபி (ஸல்) நவின்றார்கள்.
(புஹாரி)
“அவர்கள் ஸஹர் நேரத்தில் பாவ மன்னிப்புக் கோருவார்கள் (அத்தாரியாத் :
18) என அல்குர்ஆன் முஃமின் களின் பண்புகளைக் கூறும் போது
தெளிவுபடுத்துகிறது.
* ரமழான் காலம் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர் களிடம் லைலதுல் கத்ர்
இரவு இது தான் என நான் அறிந்தால் எதை ஓத வேண்டும் எனக் கேட்ட போது “அல்
லாஹும்ம இன்னக அஃபுவ் வுன், துஹிப்புல் அஃபுவ்வ பஃபு அன்னீ” என்று பாவ
மன்னிப்புக் கேளுங்கள் எனக் கூறினார்கள்.
மேலும் எவர் ரமழானை அடைந்தும் அதன் மூலம் பாவ மன்னிப்புப் பெறவில் லையோ,
அவர் நாசமாகட்டும் என ஜிப்ரீல் (அலை) பிரார்த் திக்க, நபி (ஸல்) ஆமீன்
கூறியுள்ளார்கள்.
* உம்ரா, ஹஜ் கடமைக ளின் போது பின்னர், மனி தர்கள் திரும்புகின்ற
(முஸ்தலிபா எனும்) இடத்திலிருந்து நீங்களும் (மினாவுக்குச்) செல்லுங்கள்.
இன்னும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள். (அல் பகரா : 199)
மேலும், ஒருவருடைய ஹஜ் அங்கீகரிக்கப்பட்டால் அவர் அன்று பிறந்த பாலகன்
போல் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டவராகத் (தன் வீடு) திரும்புகிறார்
எனறும் நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (புஹாரீ – முஸ்லிம்)
* தொழுகை நேரம் நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் மூலம் பாவக் கறைகள் நாளாந்தம் ஐவேளையும்
அகற்றப்படுகின்றன எனக் பீறியதோடு, அதில் பாவ மன்னிப்புக் கோருமாறும்
கற்றுத் தந்துள்ளார்கள். தக்பீர் கட்டியது முதல் ஸலாம் கொடுக்கும்
வரைக்குமான தொழுகையின் பல நிலைகளில் பாவ மன்னிப்புக் கோரும் துஆக்களைக்
கற்றுத் தந்துள்ளார்கள். அத்தஹிய்யாதின் போது கேட்கும் பாவ மன்னிப்பு துஆ
மிக விசேடமானதாக இருக்கிறது.
ஒரு மனிதன் பாவங்களிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக்
கோரி, நல்லடியானாக வாழ்ந்து, சுவனத்தை அடைய வேண்டும் என்பதே
அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும் எதிர்பார்ப்பும் கட்டளையுமாகும்.
அதனால் தான் தொழுகையில் தொழுது முடிந்த பின் கூட்டம் கூடிக் கலையும்
போது, வெற்றியின் போது, கழிவறையில் இருந்து வெளியேறும் போது என ஒரு
முஸ்லிம் தனது வாழ்வின் சகல நிலைமைகளின் போதும் பாவ மன்னிப்புக் கோருமாறு
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
எனவே, பாவ மன்னிப்பின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் அறிந்து,
எமது தவறுகளை இனங்கண்டு வல்ல ரஹ்மானிடம் மனம் வருந்தி பாவ மன்னிப்புக்
கோருவோமாக. புனித ரமழான் மாதத்தை அதற் கான அரிய சந்தர்ப்பமாகப்
பயன்படுத்துவோமாக.
இதையும் பார்க்க >>
Post a Comment