ரமழான் காலத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு.(ஹைளு)
ரமழானில் அந்த ஏழு நாட்களோடு எவ்வாறு தன் வாழ்க்கையை கொண்டு செல்வது என்று எண்ணித் தவிக்கும் சகோதரிகளுக்காக இந்த கட்டுரை வருகிறது. மாதம்தோறும் வரும் உதிரப்போக்கினாலோ அல்லது பிரசவத்திற்கு பின் வரும் உதிரப்போக்கினாலோ ரமலானை, அந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும், வேகத்துடனும் கடக்க இயலாமல் போகிறது. ஆனால் வருத்தப்பட்டு இந்த மாதத்தை நாம் விட்டு விடலாமா? அதன் ரஹ்மத்தை, பரக்கத்தை, அதில் கிடைக்கும் அளவிலா நன்மைகளை..?தொழ முடியாத நிலையில் என்ன இபாதத் செய்து விட முடியும் என்று நினைக்கும் சகோதரிகளுக்காகவே இந்தக் கட்டுரை. இன்ஷா அல்லாஹ் இதன் மூலம் பல சகோதரிகள் பயன் பெறக்கூடும் என்னும் நிய்யத்துடன்,