பொது பல சேனாவில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அராஜகம்

                                    தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...! 

ஆசியாவின் ஆச்சர்யமாக இலங்கையை மாற்ற வேண்டும் என்பதுதான் இலங்கை அரசாங்கத்தின் இலக்கு என்பது யுத்தத்தின் பின்னரான இலங்கையின் தாரக மந்திரமாக இருக்கின்றது. ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றும் வேலைத் திட்டத்திற்கு அமைய நாட்டின் பல பாகங்களிலும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இதே நேரம் ஆசியாவில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் முஸ்லிம்களின் வணக்கத்தளங்கள் மற்றும் வணிகத் தளங்கள் மீதான தாக்குதல்கள் மூலமாகவும் ஆசியாவின் ஆச்சர்யமாக இலங்கை பரிணமித்து வருவதை யாரும் மறுக்கவும் முடியாது.  

விடுதலைப் புலிகளுடனான பயங்கரவாத யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு சுதந்திரக் காற்றை மக்கள் சுதந்திரமாக சுவாசித்து வரும் இவ் வேலையில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த கடும் போக்காளர்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளும் நடவடிக்கைகளும் இலங்கையில் இனவாதத் தீ மூட்டப்படுவதற்கான சாத்தியக் கூறுகளை இனம் காட்டுகின்றன. அண்மைக் காலமாக மியன்மார் (பர்மா) நாட்டில் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த மத குருக்களினால் முன்னெடுக்கப்படும் கொடூர தாக்குதல்களின் வழியில் இலங்கை முஸ்லிம்களும் உள்ளடக்கப்படுவார்களோ என்ற சந்தேக பயம் முஸ்லிம்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ளது.

 2011 செப்டம்பர் 10 தேதி இலங்கையின் வடமத்திய மாகாணம் அனுராதபுரம், ஓட்டுப்பள்ளம் தர்கா உடைப்பில் ஆரம்பித்த இனத்துவேஷ நடவடிக்கைகள் பள்ளிகளின் மீது கைவைக்கும் நிலைக்கு சென்று இன்று வரை அது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கடந்த கால இலங்கை வரலாற்றில் ஏற்பட்டிருந்த பயங்கர யுத்தம் காரணமாக பலவிதமான கஷ்டங்களை அனுபவித்த, பல ஆயிரக்கணக்கான உயிர்களை யுத்தத்தின் மூலம் பலி கொடுத்த ஒரு சமுதாயத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் தந்திரோபாய அரசியல் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றதை அவதானிக்க முடிகின்றது. அனுராதபுரம் தர்கா உடைப்பில் ஆரம்பித்து பள்ளிகளை உடைக்கும் முயற்சியில் மும்முரமாக நகர்ந்து கொண்டிருக்கும் பெரும்பான்மை பௌத்த கடும்போக்கு வாதிகளை தட்டிக் கேட்பதற்கோ, அல்லது தடுத்து நிறுத்துவற்கோ யாரும் தயாரில்லை என்ற நிலை தற்போது உருவாகிவிட்டது. 

இலங்கை சுதந்திர நாடு இந்நாட்டில் யாரும், எதையும் செய்யலாம். மக்கள் சுதந்திரத்திலும் மத சுதந்திரத்திலும் அரசு தலையிடாது என்ற சாக்குப் போக்கு பதிலைச் சொல்லி காலம் கடத்துகின்றது இலங்கையின் ஆளும் சுதந்திர முன்னனி அரசு. இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பாராளுமன்றம் சென்ற முஸ்லிம் அமைச்சர்களோ அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளுக்கும், ஆரம்பரத்திற்கும் ஆசைப்பட்டு அரசாங்கத்தின் ஊதுகுழல்களாக மாறிப் போன காரணத்தினாலும், அரசாங்கத்தில் நிரந்தரமாக நிலைக்க வேண்டும் என்பதினாலும் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகள் விஷயத்தில் எவ்வித மறுப்பையும் கூறாமல் வாய் மூடி மௌனமாகவே இருக்கின்றார்கள். 

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு எதிராக முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கமால் இருந்தால் கூட பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் நா கூசாமல் “ இலங்கையில் எந்தப் பள்ளியும் உடைக்கப்படவில்லை“ என்று பச்சையாக பொய் சொல்வதுதான் வேதனைக்குறியதாகும். இது வரைக்கும் இலங்கையில் பல பாகங்களிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பலவிதமான செயல்பாடுகள் கடுமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதை நாம் அன்றாடம் அறியக் கூடியதாகவுள்ளது. அந்த வகையில் இதுவரைக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக சுமார் 50 க்கும் மேற்பட்ட துவேஷ செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் விபரத்தை இங்கே உங்கள் பார்வைக்கு தந்துள்ளோம். 

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட அராஜகங்களின் பட்டியல் தேதி வாரியாக.

 2010 ம் ஆண்டில். 20.05.2010 – குருநாகல், கொகரெல்ல, ஹம்பன் பொல நூரானியா ஜும்மா மஸ்ஜித் தாக்கப்பட்டது. 

2011 ம் ஆண்டில் செப்டம்பர். 01.09.2011 – அநுராதபுரம் ஓட்டுப்பள்ளம் தர்கா போலிசாரின் உதவியுடன் இனவாதிகளினால் உடைக்கப்பட்டது. 

அக்டோபர். 31.10.2011 – பலபிட்டிய முஸ்லிம் சகோதரர் ஒருவரின் கடையில் திருடச் சென்றவர்களை பிடித்து போலிசில் ஒப்படைத்த முஸ்லிம்களுக்கு போலிசார் திட்டி தீர்த்து, எச்சரித்து அனுப்பினர். 

31.10.2011 – மேற்சொன்ன சம்பவத்தில் தொடர்புடைய முஸ்லிம் சகோதரர் ஒருவரின் வீடு தீ வைத்து எறிக்கப்பட்டது. 

31.10.2011 முதல் 04.11.2011 க்குல் பலப்பிட்டிய முஸ்லிம்கள் தங்கள் கடைகளை மூடிவிட்டு வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. 

நவம்பர். 04.11.2011 பலபிட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய முஸ்லிம் சகோதரர்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்று பிக்குமார் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக 04 குடுப்பத்தினர் ஊரை விட்டு வெளியேறினர். 

2012 ம் ஆண்டில். ஜனவரி. 06.01.2012 தலவாக்கலை ஜாமிவுல் அன்வார் மத்ரஸா தீயில் கருகியது. மின்சாரக் கோளாறு தான் இதற்குக் காரணம் என்று போலிசினால் காரணம் சொல்லப்பட்டது. 

பெப்ரவரி. 17.02.2012 – பொது பல சேனாவின் மஹரகம கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற நவமணி பத்திரிக்கை நிருபர் அஹமத் ரூமி மற்றும் பீ.பீ.சி உலக சேவையின் நிருபர் ஷால்ஸ் ஹெக்லன்ட் மற்றும் அவருடைய உதவியாளர் அஸாம் அமீன் ஆகியோர் அச்சுறுத்தப்பட்டார்கள். 

17.02.2012 -  ஹழால் சான்றிதழுக்கு எதிராக மஹரகமயில் பொது பல சேனாவின் பொதுக் கூட்டம் நடை பெற்றது. 

மார்ச். 22.03.2012 – இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டவுடன் மடவல தெல்தெனிய பாதை சுற்று வட்டத்தில் வைத்து மாற்று மதத்தவர் ஒருவரின் மூலம் பட்டாசு வெடிக்கப்பட்டு, ஜெனிவாவில் இலங்கை தோற்றதற்காக முஸ்லிம்கள் பட்டாசு கொழுத்துகின்றார்கள் என்ற வதந்தியும் பரப்பப்பட்டது. 

ஏப்ரல். 19.04.2012 – தம்புள்ளை கைரிய்யா பள்ளி வாயல் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டு, கற்களாலும் தாக்கப்பட்டது.

 20.04.2012 – தம்புள்ள நகரில் அமைந்துள்ள ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் தாக்குதலுக்கு உள்ளானது. தம்புள்ள ரங்கிரி ரஜமகா விகாரையின் தலைமை மதகுரு இனாமலுவ சுமங்கள தேரரின் தலைமையிலான குழுவொன்று பேரணியாக வந்து இத்தாக்குதலை நடத்தியது. 

மே. 13.05.2012 ம் தேதியிலிருந்து 15.05.2012 க்குள் தம்புள்ளையில் வாழும் முஸ்லிம்கள் தம்புள்ளையை விட்டும் வெளியேறும் படி எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பப்பட்டது. 

25.05.2012 – கொழும்பு, தெஹிவளை கல்விஹாரை வீதியில் உள்ள தாருர் ரஹ்மான் பள்ளிவாசலை அகற்றுமாறு கோரி பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு பள்ளிவாசலை தாக்கும் முயற்சியும் மேற் கொள்ளப்பட்டது. 

28.05.2012 – குருநாகல் மாவட்டம், ஆரிய சிங்களவத்தையில் அமைந்துள்ள உமர் இப்னு கத்தாப் குர்ஆன் மதரஸாவில் தொழுகை நடத்துவதை நிறுத்துமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு அங்கு தொழுகை நடத்துவது உடனடியாக நிறுத்தப்பட்டது. 

ஜுன். 21.06.2012 – காலி, அனுலா தேவி பாடசாலைக்கு முஸ்லிம் ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என்று கூறி பெற்றோர் போராட்டம் நடத்தினர். 

ஜுலை. 24.07.2012 – குருநாகல் மாவட்டம், தெதுரு ஓயாகம தாருல் அக்ரம் தக்கியாவில் இரவு நேரத் தொழுகையை நிறுத்துமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு தொழுகை நடத்தவது நிறுத்தப்பட்டது.

 26.07.2012 – கொழும்பு மாவட்டம், தெஹிவளை பீரிஸ் மாவத்தையிலுள்ள தாருல் அக்ரம் குர்ஆன் மத்ரஸாவில் தொழுகை நடாத்தவதை அரசாங்கம் உத்தியோக ப+ர்வமாக நிறுத்தியது. 

29.07.2012 – கொழும்பு, ராஜகரிய ஒபே சேகரபுரயிலுள்ள ஜாமிஉத் தாருல் ஈமான் பள்ளிவாசலில் இரவு நேரத் தொழுகை நடாத்துவதற்கு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு அங்கு தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டது. 

ஆகஸ்ட். 30.08.2012 – கொழும்பு, வெல்லம்பிட்டி, கொஹிலவத்தை பள்ளிவாசலினுள் நுழைந்த சில பௌத்தர்கள் பள்ளிவாசலை தாக்கப் போவதாக எச்சரித்தனர். 

அக்டோபர். 27.10.2012 – அநுராதபுரம் மாவட்டம், மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசலுக்கு பௌத்த தீவிர வாதிகளினால் தீவைக்கப்பட்டது. நவம்பர். 

22.11.2012 – பதுல்ல தீன் பென்சி என்ற முஸ்லிம் சகோதரருக்கு சொந்தமான கடையில் புத்தரின் படம் பொறித்த கையுறை இருந்ததாக கூறி கடை உரிமையாளரை பேரினவாதிகளின் கோரிக்கைக்கு இனங்க போலிசார் கைது செய்தார்கள். 

23.11.2012 – கடை உரிமையாளர் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து இனவாதிகளினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

24.11.2012 – பதுல்ல, பதுலுபிட்டியவை சேர்ந்த முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான 06 ஆடுகள் திருடப்பட்டு அதில் ஒரு ஆடு கண்ட துண்டமாக வெட்டி வீசப்பட்டது. இது தொடர்பாக சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 

30.11.2012 – கொழும்பு, மஹரகம நாவின்ன ரஜமகா விகாரையில் முஸ்லிம்களுக்கு எதிரான பேரணியொன்று இடம்பெற்றது. கிழக்கில் முஸ்லிம் தீவிரவாதிகளினால் பௌத்த மரபுச் சின்னங்கள் அழிக்கப்படுவதாகக் கூறியே இப்பேரணி இடம்பெற்றது. 

டிசம்பர். 03.12.2012 – கண்டி மாவட்டம், குண்டகசாலை விவசாய கல்லூரியில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு பன்றி இறைச்சி கறி பரிமாறப்பட்டது.

 08.12.2012 – கண்டி மாநகரத்தில் முஸ்லிம் வியாபாரிகளுக்கெதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு கைபேசிகள் வழியாக குறுங்செய்திகளும் அனுப்பப்பட்டன. 

19.12.2012 – பதுல்ல பள்ளி நிர்வாகியின் வீட்டில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வந்த சில போலிசார் வீட்டிலிருந்த நகைகளை எடுத்துச் சென்றுவிட்டு, அடுத்த நாள் போலிசுக்கு வரும்படி அழைப்பானை விடுத்துச் சென்றார்கள். அடுத்த நாள் போலிசில் போய் விசாரிக்கும் போது அது போன்று யாரும் போலிஸ் நிலையத்தில் இருந்து விசாரனைக்கு வரவில்லை என்று போலிஸ் தரப்பு மறுத்துவிட்டது. 

20.12.2012 – ஜெமீல் என்ன முஸ்லிம் வியாபாரியின் வீட்டிற்குள் ஒரு கும்பல் புகுந்து நகை மற்றும் கையடக்க தொலை பேசி போன்றவை அபகரித்து சென்றது. 

23,24.12.2012 – இரத்தினபுரி மாவட்டம், எம்பிலிபிட்டியவில் இரு முஸ்லிம் வர்த்தகர்கள் பௌத்த இனவாதிகளினால் தாக்கப்பட்டனர். அதே இடத்தில் 24ஆம் திகதி முஸ்லிம்களுக்கெதிராக ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது. 

24.12.2012 – பதுளை மாவட்டம், மஹியங்கனையில் அமைந்துள்ள பள்ளிவாசலை மீள் நிர்மாணம் செய்ய வேண்டாம் என்று பௌத்த மதவாதிகளினால் சுவரொட்டி ஒட்டப்பட்டதோடு துண்டுப் பிரசுரமும் வெளியீடு செய்யப்பட்டது. 

26.12.2012 – உடு நுவர, புவெலிக்கட பள்ளிக்கு அருகாமையில் இருந்த வீட்டிற்கு பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வேன் உரிமையாளருக்கும் அங்கிருந்த சிங்கள மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையில் கைகலப்பு ஏற்பட்டது.

 29.12.2012 – உடு நுவர, புவெலிக்கட முஸ்லிம் கடையொன்றில் சிகரட் வாங்கிய சிங்கள இளைஞர்கள் சிகரட் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தகராரு செய்தனர். 

30.12.2012 – அதே ஊரில் முஸ்லிம் ஒருவரின் கட்டிடத்தில் பலவந்தமாக ஒலி பெருக்கி கட்டப்பட்டு பிரி்த் போடப்பட்டது. 

2013 ம் ஆண்டு. ஜனவரி. 05.01.2013 – அநுராதபுர மல்வது லேன் பள்ளிக்கு எதிராக பிக்குமார் போராட்டம்.

 07.01.2013 – அநுராதபுரம் மாவட்டம், மல்வத்து ஓயா லேனில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் முஸ்லிம்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்பாட்டம் செய்யப்பட்டது. 

07.01.2013 – சட்டக் கல்லூரிக்கு தெரிவான முஸ்லிம் மாணவர்களை குறைக்குமாறு கோரி கொழும்பு சட்டக்கல்லூரிக்கு முன்னாள் ஆர்பாட்டம் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் இடம்பெற்றது. 

07.01.2013 – ஹழால் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய கலண்டர் ஒன்றை பொது பல சேனா வெளியிட்டது. 

08.01.2013 – முஸ்லிம்களின் திருமண பதிவுக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என தேசிய சங்க சம்மேளனம் அறிவித்தது. 

08.01.2013 – சட்டக் கல்லூரிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் என்று நினைத்து ஒரு சிங்கள சகோதரர் சிஹல ராவய அமைப்பினால் தாக்கப்பட்டார். 

09.01.2013 – அதிகாலை 2 மணிக்கு இளைஞர்கள் கூட்டம் ஒன்று அநுராதபுரம் மல்வது லேன் பள்ளியை மூன்றாவது முறையும் தாக்கியது.

 09.01.2013 – சட்டக் கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர்கள் தெரிவானதைக் கண்டித்து பரீட்சைகள் திணைக்களம் முன்பாக பொது பல சேனா ஆர்ப்பாட்டம் நடத்தியது. 

15.01.2013 – அல்லாஹ்வுக்குப் படைத்த ஹழால் உணவு பௌத்தர்களான எமக்கு வேண்டாம். என்ற தலைப்பில் கொழும்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 

19.01.2013 – கொழும்பு, மஹரகம நகரில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான நோலிமிட் வர்த்தக நிலையத்தை மூடுமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. அதனை தாக்கி அழிப்பதற்கும் முயற்சி மேற் கொள்ளப்பட்டது. 

20.01.2013 – குளியாப்பிட்டிய பிரதேசத்தில் ஹழாலைக் கண்டித்து துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டது. 

20.01.2013 – அநுராதபுர மாவட்டம், புதிய நகரத்தில் முஸ்லிம்களுக்கெதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு, துண்டுப்பிசுரமும் வெளியிடப்பட்டது. முஸ்லிம் ஹோட்டல்களில் சிங்களவர்களக்கென தயாரிக்கப்படுகின்ற உணவுகளில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் இரசாயனம் சேர்க்கப்படுவதாகவும் ஆதலினால் முஸ்லிம் ஹோட்டல்களில் உணவருந்துவதை அவசியம் நிறுத்துமாறும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

22.01.2013 – புதிதாக நிர்மாணிக்கப்படும் அனைத்துப் பள்ளிவாசல்களும் ஜிஹாதின் பாசறைகளென பொது பலசேனா அமைப்பினால் அறிக்கை விடப்பட்டது. 

22.01.2013 – கொழும்பில் பொது பல சேனாவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. இதில் 10 இஸ்லாமிய பிரச்சார அமைப்புகளை தீவிரவாத அமைப்புகள் என்று பொய் குற்றச்சாட்டு சுமத்தியதுடன், 07 நாட்களுக்குள் பள்ளிகளின் விபரத்தை பாதுகாப்பு அமைச்சு தமக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் பொது பல சேனா அறிக்கை விட்டது. 

23.01.2013 – இலங்கையில் முஸ்லிம் அடிப்படை வாதம் இருப்பதாகவும் அதனை இல்லாமலாக்க வேண்டும் எனவும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அறிவித்தது. 

23.01.2013 – இலங்கையில் வஹாபிய, ஸலபிய தீவிரவாதம் பரவுகின்றது என்று நெத் எப்.எம் கலந்துரையாடலில் பொது பல சேனா அறிவித்தது. 

23.01.2013 – களுத்துறை மாவட்டம், பேருவளையில் அமைந்துள்ள முஸ்லிம் ஹோட்டலில் பௌத்த குருமார் தாக்குதலை மேற்கொண்டு சேதப்படுத்தினர். 

24.01.2013 – குருநாகல் மாவட்டம், குளியாபிட்டியில் முஸ்லிம்களுக்கெதிரான ஆர்பாட்டம் ஒன்று ஹெல சிஹல ஹிரு என்ற அமைப்பினால் நடத்தப்பட்டது. இதன் போது நபிகளாரை கேவலமாக சித்தரித்து எழுதப்பட்ட சுலோகங்கள் எடுத்துச் செல்லப்பட்டதுடன், அல்லாஹ்வை பொம்மையாக செய்து தீ மூட்டிக் கொழுத்தினர். 

29.01.2013 – ஷரீஆ சட்டத்துக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா சவுதிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய எல்லாவல மேதானந்த தேரர் அறிவித்தார். 

30.01.2013 – ஹிதாயத் குரூப் ஒப் கம்பணி LOLC  கம்பணியின் விளம்பரப் பதாதை ஒன்றை வைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிஹல ராவய அமைப்பு அச்சுறுத்தல் விடுத்தது.

 31.01.2013 – பதுலையில் இனவாதத்திற்கு எதிராக சமவுரிமை அமைப்பினால் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டதற்கு அந்த அமைப்பினர் கடுமையாக தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டனர். 

பெப்ரவரி. 01.02.2013 – கண்டி, சித்தி லெப்பை மாவத்தை ( பெயர் பலகை அழிக்கப்பட்டு) வித்தியார்த்த மாவத்தை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

01.02.2013 – இன, மத, பாலியல் ரீதியாக இதன் பிறகு பாடசாலைகள் பிரிக்கப்படமாட்டாது என நுகேவல மத்திய கல்லூரியில் வைத்து கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்தார். 

04.02.2013 – பொது பல சேனா அமைப்பினால் காலி, சமகிவத்த முஸ்லிம்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. 

06.02.2013 – முஸ்லிம் பெண்கள் அணிவதைப் போல் முகத்தை மூடி ஆடை அணிந்து கண்டியிலுள்ள வங்கி ஒன்றில் திருட வந்த இரானுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

07.02.2013 – 10.02.2013 வரை இனந்தெரியாத ஒரு கும்பல் நாரம்மல முஸ்லிம் கடைகளுக்கு 2013 மார்ச் மாதத்துடன் உங்களுக்கு அழிவு என்ற கருத்தில் ஒரு கடிதத்தை அனுப்பினார்கள். 

07.02.2013 – 2013ஆம் ஆண்டை ஹலால் ஒழிப்பு ஆண்டாக பிரகடனப் படுத்தியுள்ளதாக பொது பலசேனா அமைப்பு அறிவித்தது. தமது செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுவதற்கு இலங்கை ஜனாதிபதி ஆசிர்வாதம் வழங்கியதாகவும் தெரிவித்தது. 

09.02.2013 – மாத்தரை, கந்தரை என்ற ஊரில் முஸ்லிம் பள்ளிவாயல் சிங்கள இளைஞர்களினால் தாக்கப்பட்டு அங்குள்ளவர்கள் மிரட்டப்பட்டார்கள்.

 09.02.2013 – குருநாகல் மாவட்டம், வரக்காபொலயில் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் முஸ்லிம்களுக்கெதிராக ஆர்பாட்டம் செய்யப்பட்டது. 

10.02.2013 – குருநாகல் மாவட்டம், நாரம்மல, ஹொரம்பாவ பகுதியில் சுபஹ் தொழுகைக்காகச் சென்ற ஒருவர் தாக்கப்பட்டார். 

11.02.2013 – குருநாகல் மாவட்டம், இரம்புக்கனை பிரதேசத்தில் ஹலால் எதிர்ப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 

11.02.2013 – குருநாகல் மாவட்டம், நாரம்மல நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்கு – பர தம்பியாவுக்கு மார்ச் மாதத்திற்குள் மரணம் – என்னும் தலைப்பில் அச்சுறுத்தல் கடிதம் கிடைக்கப்பெற்றது. இக்கடிதம் பௌத்த அமைப்புக்களின் ஒன்றியம் என்னும் பெயரில் அனுப்பப்பட்டிருந்தது.

12.02.2013 – சிங்கள பௌத்தர்களை – இறப்பர் தோட்டத்திலுள்ள இறப்பர் மரங்களுக்கும் சிறுபான்மை முஸ்லிம்களை அத்தோட்டத்தில் வளர்க்கப்படும் சிறிய செடிகளுக்கு ஒப்பிட்டு பொது பல சேனா அறிக்கை விடுத்தது. 13.02.2013 – குருநாகல் மாவட்டம், நாரம்மல பொலிஸ் பரிவில் சியம்பலாகஸ் கொடுவ, கிளின்பொலயில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள் உடைக்கப்பட்டன. 

14.02.2013 –  சிங்கள புத்தாண்டிற்கு முன்பு – ஹலால்| அங்கீகாரம் ஒழிக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பௌத்த புரட்சி வெடிக்கும் என அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக்க ரணவக்கயினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

14.02.2013 – கண்டி மாவட்டம், திகனப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கெதிரான துண்டுப் பிரசுரம் பொது பலசேனா அமைப்பினால் விநியோகிக்கப்பட்டது. 

14.02.2013 – கொழும்பு, சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முஸ்லிம்கள் சம்பந்தமான முக்கியமான சந்தேகங்களை ஜனாதிபதி வெளியிட்டார். 

14.02.2013 – கண்டியில் “கெப்படிபொல பரபுர“ என்ற இயக்கத்தினால் முஸ்லிம்களுக்கும், ஹழாலுக்கும் எதிரான துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. 

16.02.2013 – காலியில் முஸ்லிம்களுக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

16.02.2013 – முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டாம் என்று காலியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. 

17.02.2013 – வாரியபொலவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படவிருந்த போராட்டம் போலிசாரினால் தடை செய்யப்பட்டது.

 20.02.2013 – குருநாகல், பரகஹதெனிய ரக்அந்தராஜ பன்சலைக்கு முன்பாக முஸ்லிம்களுக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. 

21.02.2013 – அம்பலந்தொட முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ஹாட்வயாருக்கு 3 பேர் வந்து அச்சுறுத்தல் விடுத்துச் சென்றார்கள். 

21.02.2013 – காலி, ஹிரும்புற ஜும்மா பள்ளிவாயலுக்கு கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. 

22.02.2013 – காலி, ஹிரும்புரை, கல்கெடிய ஜும்மா பள்ளிக்கு இரவு 2 மணிக்கு கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 

27.02.2013 – ஹழால், ஷரீஆ, இஸ்லாமிய வங்கி முறைகளை நீக்குமாறு கோரி ஊடக சந்திப்பை மேற்கொண்டது பொது பல சேனா.

 மார்ச். 01.03.2013 – கொழும்பு, தெமடகொடயில் முஸ்லிம்களால் நடத்தப்படும் மாடறுப்புத் தொழுவம் பொது பல சேனாவினால் முற்றுகையிடப்பட்டது. 

02.03.2013 – அளுத்கமயில் உள்ள மாடறுக்கும் நிலையத்தினை இரண்டு பஸ்களில் வந்த பொது பல சேனாவினர் முற்றுகையிட்டனர். 

03.03.2013 – குருநாகல், மெல்சிரிபுரவில் முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனாவினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

03.03.2013 – கண்டி, மீ வதுரே பிரதேசத்தில் முஸ்லிம்கள் இருவரினால் நடத்தப்பட்ட விடுதி பொது பல சேனாவினால் முற்றுகையிடப்பட்டு உரிமையாளர்கள் மீது வழக்குத் தாக்களும் செய்யப்பட்டது.

 03.03.2013 – இரத்தினபுரி, ஓப்பநாயக்க முஹியத்தீன் ஜும்மா பள்ளி வாசலின் கண்ணாடிகள் கல்லெரிந்து சேதப்படுத்தப்பட்டன.

 03.03.2013 – ஹம்பாந்தோட்டையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள ராவய ஜாதிக சங்விதானயவினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 04.03.2013 – காதி நீதி மன்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என பொது பல சேனாவினால் அறிக்கை விடப்பட்டது. 

05.03.2013 – மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள பள்ளியை இம்மாதம் 30ம் தேதிக்குள் மூடிவிடுமாறு சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திர ஸ்ரீ கஜதீரவின் பணிப்புறைக்கு அமைய மஹர சிறைச்சாலை ஆணையாளர் மஹர பள்ளி நிர்வாகத்தினருக்கு கடிதம் மூலம் அறிவித்தார். 

05.03.2013 – பாணந்துரை, எலுவில வேகட பௌத்தாலோக வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவியர் பா்தா அணியக் கூடாது என்றும், ஆசிரியர்களின் காலில் வீழ்ந்து வணங்க வேண்டும் எனவும் அதிபர் உத்தரவிட்டார். 

06.03.2013 – ஹழால் உண்மையும் பொய்யும் என்ற தலைப்பில் இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் கெட்ட எண்ணத்தை தூண்டும் விதமான ஒரு புத்தகத்தை ஜாதிக ஹெல உறுமய வெளியிட்டது. 

11.03.2013 – ஜம்இய்யதுல் உலமா ஹலால் சின்னத்தை நிறுத்துவதாக அறிவித்தது. 

17.03.2013 – ஹிஜாபை கண்டித்து கண்டியில் பொது பல சேனா ஆர்ப்பாட்டம் நடத்தியது. 1

8.03.2013 – பொலன்னறுவை மன்னம்பி்ட்டியில் வைத்து ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்மணி தாக்கப்பட்டார். 

19.03.2013 – தமிழ்நாட்டில் பௌத்த பிக்குமார்கள் தாக்கப்பட்டமைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தும் (TNTJ) , ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தும் (SLTJ) தான் காரணம் என்ற ஒரு கற்பனைக் கதையை சொல்லி இலங்கையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தை (SLTJ) தடை செய்ய வேண்டும் என்று பொது பல சேனா பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தது. 

22.03.2013 – கண்டி, கல்ஹின்ன பிரதேச மத்ரஸா மவ்லவி ஒருவரின் தொப்பியை சிங்கள ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் காலில் போட்டு மிதித்தார். 

24.03.2013 – பாணந்துரையில் ஹிஜாபைக் கண்டித்து பொது பல சேனாவின் பொதுக் கூட்டம் நடை பெற்றது. 

26.03.2013 – களுத்துரையில் சிங்கள பாடசாலை ஒன்றில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியையின் ஹிஜாபை கழற்றுமாறு ஆசிரிய ஆலோசகரான பௌத்த பிக்கு எச்சரிக்கை விடுத்தார். 

27.03.2013 – அகில இலங்கை சிற்றுண்டிச் சாலை சங்கம் எந்தவொரு ஹழால் இலட்சினை பதித்த உணவுப் பொருட்களையும் விற்பனை செய்வதில்லை என முடிவெடுத்து. அனைத்து அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலை, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. 

28.03.2013 – கெக்கிராவையில் வஹாபிஸம் தீவிரவாதத்தை உருவாக்குகின்றது என்ற பொய்ப்பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கான பொது பல சேனாவின் பொதுக் கூட்டம் நடை பெற்றது. 

30.03.2013 – பெபிலியான பெஷன் பக் வர்த்தக நிலையம் பிக்குமார்கள் உள்ளடங்கிய குழுவினால் தாக்கப்பட்டது. 

31.03.2013 – கொழும்பு, (வைட் பார்க் மைதானம்) களனி, பண்ணல ஆகிய இடங்களில் ஹிஜாபுக்கு எதிராக பொது பல சேனாவினால் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. 

ஏப்ரல். 01.04.2013 – எல்பிட்டியவில் வாடகை செலுத்தி கடை நடாத்தும் முஸ்லிம் வியாபாரிகளின் ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு பொது பல சேனா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து 13 முஸ்லிம் வியாபாரிகளின் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது. 

01.04.2013 – ஏப்ரல் 01ம் தேதி முதல் ஹழால் இலட்சினை பொறிக்கப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என அகில இலங்கை சிற்றுண்டிச் சாலை சங்கம் முடிவெடித்து ஹழால் இலட்சினை பொறிக்கப்பட்ட சகல உணவுப் பண்டங்களையும் புறக்கணித்தது. 

01.04.2013 – மொனராகலை மற்றும் பதுள்ளை மாவட்டங்களில் இனவாதத்தை தூண்டும் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. 

01.04.2013 – மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு ‘விழித்தெழுவீர் தமிழ் சிங்கள சமூகம்! எனும் தலைப்பில் ஆதி திராவிட சேனன் படையினால் துண்டுப் பிரசுரம் ஒன்று  மட்டக்களப்பு நகர தமிழ் வார்த்தகர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

03.04.2013 – வெளிகமையில் முஸ்லிம்களுக்கு எதிரான பொது பல சேனாவின் மாநாடு நடைபெற்றது. 

03.04.2013 – ஜெய்லானிக்குள் அத்துமீறி நுழைந்து பலத்த சேதங்களை ஏற்படுத்தியது சிங்கள ராவய அமைப்பு. 

03.04.2013 – அநுராதபுரம் மல்வத்து ஓய டிக்ஸன் ஒழுங்கையில் செயற்படும் குர்ஆன் மத்ரஸாவை அகற்றாவிட்டால் பலவந்தமாக அகற்றப்போவதாக பொது பலசேனா எச்சரிக்கை செய்தது. 

07.04.2013 – கொடிகாவத்த மகாபுத்துகமுவ பகுதியில் ஐங்காலத் தொழுகை நடைபெற்று வரும் இஸ்லாமிய நிலையத்தை சிங்கள கூட்டமொன்று ளுஹர் தொழுகை நேரத்தில் வீடியோ எடுத்ததோடு, இந்நிலையத்தை இங்கிருந்து அகற்றிவிடுமாறும் எச்சரித்தனர், தவறினால் அடித்து நொருக்குவோம் எனவும் மிரட்டினர். 

07.04.2013 – தமிழர் தாயக பூமியை ஆக்கிரமிக்கும் நோக்கோடு எமது தாயக மண்ணில் வர்த்தகம் செய்யும் இஸ்லாமிய வர்த்தகர்களை வெயியேறுமாறு எச்சரித்தும் அதனை அலட்சியம் செய்த இஸ்லாமிய வர்த்தகர்களே எதிர்வரும் சித்திரை 08ம் திகதிக்கு முன்னதாக எமது மண்ணை விட்டு வெளியேறுமாறு இறுதியாக எச்சரிக்கிறோம் என்று கூறியும் துண்டுப்பிரசுரம் ஒன்று வாழைச் சேனையில் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனை திராவிடன் சேனையின் தமிழர்களை காக்கும் போர் வாள்’ என்ற அமைப்பு செய்துள்ளது. 

09.04.2013 – யாழ் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்ட தொழுகை அறை ஒயில் வீச்சுக்கு உள்ளானது. 

என்னால் இவளவுதான் எடுக்க முடிந்தது இன்னும் சில இருக்கின்றது இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் பதிய படும் இன்றுவரைக்கும் பல இடங்களில் உயிர்கள் பல சொத்துக்கள் இந்த காபீர்களால் அளிக்க படுகின்றது இறைவனின் புனித மிக்க பள்ளிகளையும் உடைக்கின்ற அளவுக்கு இருக்கின்றது இன்ஷா அல்லாஹ் இஸ்லாத்தின் பக்கம் ஒரு முடிவு வரும் .      

இந்த செயல்பாடுகள் அனைத்தும் இலங்கையை ஒரு மியன்மாராக மாற்றும் முயற்சி திரை மறைவில் மேற்கொள்ளப்படுகின்றதா? என்ற சந்தேகத்தை முஸ்லிம்கள் மத்தியில் விதைத்துள்ளது. காலா காலமாக தாய் நாட்டிற்கு எவ்வகையிலும் துரோகமிலைக்காத, பல வகைகளிலும் தியாகங்கள் செய்த இலங்கை முஸ்லிம்களை குறிவைத்து தற்போது நிகழ்ந்து வரும் சம்பவங்கள் குறித்த சந்தேகத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. இறைவனின் அருளால் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமியர்களுக்கு எதிரான இனவாத செயல்பாடுகளுக்கு எதிராக போராடும் நிலைக்கு இன்றைய இஸ்லாமிய சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது. 

போராட்டத்தின் மூலம் தான் நாம் நமது உரிமைகளை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆதலினால் இன்ஷா அல்லாஹ் நமது ஜமாத் சார்பாக நாடளாவிய ரீதியில் இனத் துவேஷிகளுக்கும், இனத் துவேஷ செயல்பாடுகளுக்கும் எதிரான சாத்வீக போராட்டத்தை எழுத்திலும், பேச்சிலும் நாம் முன்னெடுப்பதற்கு உறுதி எடுத்துள்ளோம் என்பதை இவ்வாக்கத்தின் மூலம் தெரியப்படுத்துகின்றோம். - 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget