அதிர்ச்சி report : ஞானசாரரைச் சந்தித்து முஸ்லிம் இளைஞர்களைப் பற்றி முறைப்பாடு கொடுத்த முஸ்லிம்கள் யார் ? இதன் உண்மைத் தன்மை என்ன? இதனை ஜம்மியத்துல் உலமா சபை தேடிப்பார்த்தா? 2012ல் இந்த நாட்டில் அறிமுகமான பொது பல சேனா, இந்த நாட்டின் முஸ்லிம்களின் நலனுக்காக செயற்படுகின்ற ஒரு இயக்கம், என்று இன்று இலங்கையில் வெளியாகும் முன்னணி தமிழ்வார ஏட்டிற்கு கருத்துச் சொல்லி இருக்கின்றார் அந்த அமைப்பின் பேச்சாளர் டாக்டர் டிலந்த விதானகே .
வாரஏட்டிற்கு மேலும் கருத்துத் தெரிவித்த அதன் பேச்சாளர் பின்வருமாறு இந்த விடயத்தை விளக்குகின்றார். முஸ்லிம்கள் மத்தியில் ஆயுதக் குழுக்கள் இருக்கின்றது என்று 2008 ஆம் ஆண்டு ஏசியன் மிரர் இணையத் தளத்திற்குக் கருத்துக் கூறிய ஆளுநர் அலவி மௌலான முஸ்லிம் சமூகத்தில் சிலர் ஆயுததாரிகளாகச் செயலாற்றுகின்றனர். இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது என்று சொல்லி இருந்தார்.
இதன் அடிப்படையில் சில இளைஞர்களை நாம் சந்தித்தோம். அத்துடன் சில சமயத்தளங்கள் குறிப்பாகப் பள்ளிவாசல்களில் இளைஞர்களின் சிந்தனையை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என ஞானசாரரிடம் முஸ்லிம்கள் முறையிட்டனர். இவ்வளவு விபரங்களும் முஸ்லிம்களிடத்திலிருந்தே பொது பல சேனாவுக்குக் கிடைத்தாலும். ஆரம்பத்தில் எதனையும் செய்யக் கூடாது என்று நாம் இருந்து விட்டோம்.
இப்போது இவற்றைத் தடுக்க நாம் முனைந்திருக்கின்றோம். எனவே அலவி மௌலானவும் அடுத்தவர்களும் பொது பல சேனா இடத்தில் கேட்டுக் கொண்டதனால்தான் இப்போது களமிறங்கி காரியம் பார்க்கின்றேம், என்று குறிப்பிடுகின்றார்கள் பொது பலக் காரர்கள். எப்படி இருக்கின்றது காரியம், கதை?
எனவே முஸ்லிம்களிடத்தில் ஆயுதக் குழுக்கள் என்ற அபாண்டக் கதையின் துவக்கத்தை அலவி மௌலன ஆரம்பித்து வைக்க, இப்போது முஸ்லிம்களின் நலனுக்காக நாம் இந்த அட்டகாசங்களை அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நாம் மேற் கொண்டு வருகின்றோம். என்று பொதுபல சேனா அமைப்பில் ஊடகப் பேச்சாளர் தெளிவாகச் சொல்லி இருக்கின்றார்.
இந்த ஊடகக் கருத்துத் தொடர்பாக முஸ்லிம் சமூகத்திற்குத் தெளிவான ஒரு பதிலை மௌலான அவர்கள் கொடுக்காவிட்டால் முஸ்லிம்கள் மீதான இந்த அட்டகாசங்களின் முக்கிய பாங்காளியாக இருந்ததற்கான பொறுப்பை அவர் இன்மையிலும் மறுமையிலும் ஏற்க வேண்டி இருக்கும்.
மேலும் பொது பல சேனா அமைப்பு முஸ்லிம்களின் நலனுக்காக இப்போது காரியம் பார்ப்பதாக சொல்லுகின்றது. அப்படியானால் முஸ்லிம்கள் மீதான நலன்கள் என்பது கொலை, சூறையாடல், தீ வைத்தால், மற்றும் கற்பனைச் சம்பவங்களைச் சோடித்து அதனை மையமாக வைத்து முஸ்லிம்களின் மீது கைவைத்தல் தானா என்றும் நாம் அவர்களைக் கேட்க விரும்புகின்றோம்.
இந்தக் கதையின் அடிப்படையில் சில இளைஞர்களை நாம் சந்தித்தோம். அத்துடன் சில சமயத்தளங்கள் குறிப்பாகப் பள்ளிவாசல்களில் இளைஞர்களின் சிந்தiனைகளை மாற்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றது என ஞானசாரரிடம் முஸ்லிம்கள் முறையிட்டனர். என்று பேச்சாளர் குறிப்பிடுகின்ற விடயத்தில் ஞானசாரரிடத்தில் முறைப்பாடு கொடுத்த முஸ்லிம்கள் தான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றார்கள் என்ற அறிவிப்பும் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படக் கூடும்.
ஞானசாரரைச் சந்தித்து முறைப்பாடு கொடுத்த முஸ்லிம்கள் யார்? இதன் உண்மைத் தன்மை என்ன? இதனை ஜம்மியத்துல் உலமா சபை தேடிப்பார்த்தா? கதை கற்பனை என்றால் அதற்கு முஸ்லிம் சமூகம் ஏன் இன்று வரை பதில் கொடுக்க வில்லை?
எனவே பொது பல சேனாவிடத்தில் முஸ்லிம்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்கத்தான் இப்போது தாக்குதல் என்று நாம் நினைத்துக் கொள்வதா?
இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்தின் தலைவிதி, தலைமைகள் தொடர்பாக இறைவனிடத்தில் முறையிடுவதா?
எல்லாவற்றிற்கும் நியாயங்கள் காரணங்கள்-சொல்லப்படுகின்றது. பிரதமர் கூட பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் கல்லெறிந்ததால் வன்முறை தாக்குதல் துவங்கியது என்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார். பொலிசும் இதனைத்தான் நிரூபிக்க முனைகின்றது. ஊடகங்கள் கூட உண்மையை சொல்ல பின்வாங்குகின்ற நிலையில்.
யா அல்லாஹ் கோடாறிக் காம்புகளிடத்திலிருந்தும் நயவஞ்சகர்களிடத்திலிருந்தும் நீ தான் முஸ்லிம் சமூகத்தைக் காப்பாற்ற வேண்டும்.
Post a Comment