அன்ஸார் தப்லீகியின் விவாத ஒப்பந்த கடிதமும் TNTJ தலைவர் பீஜேயின் அணுகுமுறையும்


அன்ஸார் தப்லீகியின் விவாத ஒப்பந்த கடிதமும்  TNTJ தலைவர் பீஜேயின் அணுகுமுறையும்..  அன்ஸார் தப்லீகி அவர்கள் பீஜெயுடனான விவாத ஒப்பந்த திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே இந்தியா போக முயற்சித்தார்.. இந்த மாதத்துக்கு முன்னெல்லாம் எப்படி விசாவை பெற்று அவர் இந்தியா சென்றாரோ அதே போல் அதற்க்கான வேலைகளை செய்தார் ஆனால் இம்முறை எம்பஸி சட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது அதை முன் கூட்டியே அவர் அறிந்திருக்க வில்லை என்பதால் அவர் எண்ணியது நடக்க வில்லை

அது என்ன மாற்றம் என்றால் ஒருவர் இந்தியா செல்ல விசாவை பெற விண்ணப்பிக்க வேண்டும் என்றால் தற்போதைய புதிய சட்டத்தின்படி
01: விசாக்கு வின்னப்பிப்பவரின் Bank statement முன்வைக்கப்பட வேண்டும்
(அன்ஸார் மௌலவி வங்கியுடன் தொடர்பாற்றவர் என்பதால் அதை அவரால் முன்வைக்க முடியவில்லை)
02: அல்லது அவர் எக்காரணத்துக்காக இந்தியா செல்கின்றாரோ அக்காரனத்துடன் தொடர்பு பட்டவர்களிடமிருந்து அவரை இந்தியாவுக்கு அனுமதிப்பதற்கான வேண்டுதல் கடிதம் முன்வைக்கப்பட வேண்டும்
(இதை அண்ணன் பீஜே நினைத்தால் இன்றும் செய்யலாம்)
இவைகளை தெளிவுபடுத்தி அன்ஸார் தப்லீகி பீஜேக்கு தெளிவாகவே ஓர் கடித்தத்தை அனுப்பி வைத்தார் நாமும் இன்றே பீஜே இரண்டாவது வழியை செய்து தந்து அவர் இந்தியா போக உதவுவார் என்று எண்ணி இருக்கும் போது பீஜேயின் பதில் கடிதம் அவரை வந்தடைந்தது அதில் பீஜே கூறப்பட்ட காரணங்களை ஏற்காது அவரை குறைகண்டு எழுதி இருந்தார்

‪#‎பீஜேயின்‬ கடிதமும் நமது கேள்விகளும்
///நீங்களே தேர்வு செய்த நாளில் விவாத ஒப்பந்தம் செய்ய வருவதைத் தவிர்ப்பதற்கு நீங்கள் கூறும் காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை.////
பீஜே அவர்களே அன்ஸார் தப்லீகி தேர்வு செய்த நாளில் விவாத ஒப்பந்தத்துக்கு வராமல் தவிர்க்கவா? அவர் காரணம் கூறி கடிதம் அனுப்பி இருந்தார்..? அவரின் உள்ளத்தை அறியும் ஆற்றல் உங்களுக்கு எப்படிங்க..? அன்ஸார் மௌலவி கூறும் காரணம் ஏற்க்க தக்கத்தில்லை என்கின்றீர்கள் அப்படியெனில் இந்தியா எம்பஸியில் இது தொடர்பில் கடிதம் எழுத முன் நீங்கள் விசாரித்தீர்களோ..? அதை தெளிவு படுத்துவதை விட்டு விட்டு எப்போதும் தன்னையும் தன் சார்ந்தோரையும் சத்தியவாதியாக காட்ட மற்றவரை தாழ்த்தி பேசுவதா ஓர் அழைப்பலரின் பண்பு..? இதை தான் நீங்கள் உங்கள் இயக்கத்தினருக்கும் போதிக்கிண்றீர்கள் போல்.?காரணம் உங்கள் வழியில் அவர்களை நாம் காண்கின்றோம்
///உங்கள் பாஸ்போர்ட்டை 15-09-2014 ஆம் தேதிக்குள் எங்கள் இலங்கைக் கிளையான எஸ் எல் டி ஜே தலைமையில் ஒப்படைத்தால் அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் எங்கள் செலவில் விசா எடுத்து தருவார்கள்.////
அண்ணே.. யார் இந்தியா போக போகின்றாரோ அவராளையே இலங்கை சட்டத்தை மீறி Bank statement இன்றி செய்ய முடியாத காரியத்தை காரியத்தை உங்கள் இலங்கை கிளையினர் எப்படி செய்ய போகின்றார்கள்..? எஸ்.எல்.டி.ஜே ஒரு கிழமைக்குள் இதை செய்து தருவார்கள் என்கின்றீர்கள் அரசு விசாக்கு வின்னப்பிப்பவரின் Bank statement முன்வைக்கப்பட வேண்டும் என்கின்றது Bank statement இல்லாது எப்படி விசாவை நீங்கள் பெற போகின்றீர்கள்..? கள்ள முறையில் Bank statement அன்ஸார் தப்லீகி பெயரில் செய்து அவரை சிக்க வைத்து இதன் பின் இந்தியா போக முடியாது செய்ய அண்ணனும் தம்பிகளும் திட்டமா..? இதை நமக்கு தெளிவு படுத்துங்கள்
///அப்படி இயலாத பட்சத்தில் நீங்கள் கேட்டுக் கொண்டபடி உங்களை இந்தியாவுக்கு அழைக்கும் கடிதத்தை தருவோம். இன்ஷா அல்லாஹ்
இப்படிக்கு
பீ.ஜைனுல் ஆபிதீன்////

சகோதரர் பீஜே அவர்களே.. இதை உங்களுக்கு இப்போதும் செய்யலாமே ஏன் ஒரு முஸ்லிம் கூறும் நியாயமான காரணத்தை நல்ல எண்ணத்துடன் ஏற்க்க மறுக்கின்றீர்கள்..? விவாத ஒப்பந்த திகதிக்கு முன்னதாகவே அவர் உங்களுக்கு அறிவித்து விட்டதை வைத்தாவது அவரின் வார்த்தையை மதித்து உங்களால் செய்ய முடியுமானதை செய்துகொடுக்கலாம் தானே..? நீங்களே இப்படி நடந்து கொண்டு மற்றவர்களை நோக்கி காழ்ப்புணர்ச்சி அது இது என்று விமர்சிப்பது கூடுமா.? சமூகம் இவைகளை கண்டுகொள்ளாது என்று என்னிவிட்டாதீர்கள் நீங்கள் கூறுவதை எல்லாம் அப்படியே சரிகானுவோருக்கு உங்கள் பிழை தென்படாது அதற்காக நம்மையும் அவ்வாறு எண்ணிவிடாதீர்கள்.


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget