இஸ்லாமிய தாடியின் புதிய விஞ்ஞான ஆய்வு...!


தாடி வைத்தால் கேன்சர் வருவதை தடுக்கும் புதிய விஞ்ஞான ஆய்வு. வ. - இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய ஒவ்வொரு வார்த்தையும் இன்று விஞ்ஞான உலகத்தினரால் நிரூபிக்கப்பட்டு வருவதால் விஞ்ஞான உலகம் அதிர்ச்சி அடைந்து வருவதை காண முடிகிறது.
 யூப்ரடிஸ் நதி வற்றியதை கண்டோம், இரண்டு கடல்களுக்கும் மத்தியில் உள்ள தடுப்பை கண்டோம் இப்படி ஒவ்வொரு சான்றுகளையும் தொடர்ச்சியாக கண்டு வரும் வேளையில்....முகத்தில் ஆண்கள் வைக்கும் தாடியை பற்றி சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையில்....

சூரியனிலிருந்த 95 சதவீத புற ஊதாக்கதிர்கள் நம் சருமத்தை நேரடியாக தாக்காதவாறு நம் தாடி பாதுகாக்கிறது என்றும், இதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரு புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாடி வைத்திருப்பவர்களுக்கு சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், அவர்கள் பல ஆண்டுகளுக்கு இளமையோடு காட்சியளிப்பர்.

இளைஞர்கள் முகத்தில் தாடி இல்லாமல் இருந்தால் இளமை போன்றும், தாடி இருந்தால் முதியவர்கள் போன்றும் பார்ப்பதற்கு தோன்றும். ஆனால் தாடி இல்லாதவர்கள் முகத்தில் சூரியனின் தாக்கம் ஏற்பட்டு விரைவிலேயே அவர்களின் முகம் முதுமையை அடைந்து விடுவதாகவும், தாடி வைத்திருப்பவர்களின் முகத்தில் சூரியனின் தாக்கம் குறைந்து காணப்படு வதால் நீண்ட காலத்திற்கு இளமையாகவே இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தாடி வைத்திருப்போர் உலர்ந்த சருமம் என்ற பேச்சுக்கே இடமில்லை அது குளிர்ந்த காற்றையே எப்போதும் தக்க வைத்துக் கொண்டிருப்பதால், சருமம் பாதுகாக்கப்படுகிறது. இதனால் தாடி இருந்தால் எப்போதும் முகம் ஜிலுஜிலுவென்ற இருக்கும். தாடி வைத்திருப்போர் குளிரை அதிகம் தாங்கிக் கொள்ள முடியும் என்றும், எந்த அளவிற்கு தாடி அதிகம் உள்ளதோ அந்த அளவிற்கு தாடி குளிரை கட்டுப்படுத்தும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சுத்தமாக ஷேவ் செய்வதினால் ஏற்படும் தீமைகள் :ஷேவ் செய்யும் போது பிளேடினால் ஏற்படும் கீறல்கள், சருமக்கோளாருகள் ஏற்படுகிறது.முமையாக ஷேவ் செய்த முகத்தில் பாக்டீரியா உள்ளிட்ட நோய்கள் உடனடியாக தொற்றிக் கொள்கிறது. ஆஸ்துமா, அலர்ஜி, தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் அல்லது ஃபில்ட்டர் செய்வதில் தாடியின் பங்கு முக்கியமா உள்ளது. இதனால் ஆஸ்துமாவையு தவிர்க்க முடிகிறது.

இப்படி பல்வேறு காரணங்களால் தாடி வைப்பது அவசியமாகிறது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு மனிதனுக்கு எதையெல்லாம் செய்ய கூறியுள்ளதோ அவையனைத்தும் 14 நூற்றாண்டுகள் கழித்து இன்று விஞ்ஞானிகளால் கூறப்பட்டு வருகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: حدثني أبو بكر بن إسحق أخبرنا ابن أبي مريم أخبرنا محمد بن جعفر أخبرني العلاء بن عبد الرحمن بن يعقوب مولى الحرقة عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم جزوا الشوارب وأرخوا اللحى خالفوا المجوس மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 435


இதையும் பார்க்க :-


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget