பெண்கள் அணியும் தங்க நகைகளுக்கு ஜக்காத் உண்டா.?

                                     தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

கேள்வி:- பெண்கள் அணியும் தங்க நகைகளுக்கு ஜக்காத் உண்டா?உண்டு எனில் எந்த விகிதத்தில்?   
பதில்:தங்க நகைகளுக்கும் ஜகாத் உண்டு.சிலபேர் தங்க நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று கூறினாலும் உண்டு என்பதே சரியாகும். இதை சற்று விரிவாக பார்ப்போம்.

தங்கம் வெள்ளிகளுக்கு ஜகாத் உண்டு என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.இதற்கு ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.தங்கம் வெள்ளிகளுக்கு ஜகாத் உண்டு என்பதே தங்க நகைகளுக்கும் ஜகாத் உண்டு என்பதற்கு போதுமான சான்றாகும்.

தங்கம் என்பது ஒரு உலோகத்தின் பெயரே தவிர ஒரு வடிவத்தின் பெயர் அல்ல. பாத்திரமாக இருந்தாலும்,அலங்காரப்பொருளாக இருந்தாலும்,பாளங்களாக,கட்டிகளாக இருந்தாலும் அது தங்கத்தால் ஆனதாக இருந்தால் தங்கத்துக்கு கூறப்பட்ட எல்லா விதிகளும் அவற்றுக்கும் பொருந்தும்.

நகைகளாக மாறி விடுவதால் ஜகாத் இல்லை என்பது ஏற்கமுடியாத வாதமாகும். மிக மிகப் பெரும் பாலோர் தங்க நகைகளாகத்தான் வைத்திருப்பார்கள்.வேறுவடிவில் வைத்திருப்போர் அரிதாகவே காணப்படுவார்கள்.தங்க நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று கூறுவதன் மூலம் கணிசமான தங்கத்தை நகைகளாக வைத்திருப்போர் ஜகாத் கொடுக்காத நிலை ஏற்படுவதுடன் ஜகாதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக மற்றவர்களும் நகைகளாக மாற்றிக் கொள்ள ஆரம்பிப்பார்கள். முடிவில் தங்கத்திற்கு உலகில் எவருமே ஜகாத் கொடுக்காத நிலை ஏற்படும். தங்கத்தின் ஜகாத்தை அர்த்தமற்றதாக ஆக்குவதற்கே இந்த வாதம் பயன்படும். 

ஒரு பெண் தன் மகளுடன் நபி(ஸல்)அவர்களிடம் வந்தார்.அவரது மகளின் கைகளில் தடினமான இரண்டு தங்கக்காப்புகள் கிடந்தன.இதற்கான ஸகாத்தை கொடுத்துவிட்டீர்களா ? என்று நபி (ஸல்)கேட்டார்கள். அவ்விருவரும் இல்லை என்றனர்.மறுமை நாளில் இறைவன் உங்கள் இருவருக்கும் நரகநெருப்பிலான இரண்டு காப்புகள் அணிவிப்பதை நீங்கள் விரும்புவீர்களா? என்று நபி(ஸல்) கேட்டனர்)உடனே அப்பெண்மணி அவ்விரண்டையும் நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் போட்டுவிட்டு இவ்விரண்டும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உரியன எனக்கூறினார். அறிவிப்பாளர்:அம்ரு இப்னு சுகைப்(ரலி)  நூல்:நஸயி,திர்மிதி,அபூதாவூது

நகைகளில் ஜகாத் இல்லை என்று ஜாபிர்(ரலி) அறிவிப்பதாக ஒரு ஹதீஸை சிலபேர் ஆதாரமாகக்கொண்டு தங்கநகைகளுக்கு ஜகாத் இல்லை என்பர் இது ஜாபிர் (ரலி) அவர்களின்  சொந்தக்கூற்றாகத்தான் அறிவிக்கப்படுகிறது. நபி(ஸல்) அவர்கள்கூறியதாக எந்த அடிப்படையுமில்லை என்று பைஹகி அவர்கள் கூறியதாக ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தனது தக்லீஸில் குறிப்பிடுகிறார்கள்.

தங்கம் 20 தீனார் அல்லது அதற்கு மேலிருந்தாலும் வெள்ளி 200 திர்ஹம் அதற்கு மேலிருந்தாலும் ஜகாத் கடமையாகும்.இதை விட குறைந்த அளவில் ஜகாத் கிடையாது. ஒரு தீனார் என்பது 4.35 கிராம். 20 தீனார்கள் 87 கிராம்கள்.தங்கநகைகள் மற்றவடிவத்தில் உங்கள் தங்கப் பொருள்கள் 87 கிராமோ அதைவிட அதிகமாகவோ ஒரு ஆண்டு நம்மிடம் இருந்தால் ஜகாத் கொடுக்கவேண்டும்.வழங்க வேண்டிய அளவு இரண்டரை சதவீதமாகும்.

இதையும் பார்க்க >>
                       * பெண்களுக்கு ஸகாத் கடமையா? 
                       * பெண்களுக்குரிய ஆடைகள் 
                       *  மன அமைதிக்கு மனைவி அவசியம் 
                       * பெண்களின் கண்ணியம்...! 
                       * பெண்களின் இத்தா என்பது இருட்டறையா..? 


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget