ஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்தல்

                தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

ஹதீஸ்கள் :- நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் முஆத் (ரலி) அறிவிக்கிறார்கள்.யாருடைய கடைசி வார்த்தையாக ,,லாஇலாஹா இல்லல்லாஹ் ,, திருக்கலிமா ஆகிவிடுகிறதோ, அவர் சுவர்க்கத்தில் நுழைவார்.(அபூதாவூது,ஹாகிம்)

ஹஜ்ரத் அபூ ஸயீதில் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்: மாநபி (ஸல்) கூறினார்கள்,உங்களில் மரணம் நெருங்கி விட்டவர்களுக்கு ,,லாஇலாஹா இல்லல்லாஹ்,, திருக்கலிமாவைச்  சொல்லிக் கொடுங்கள்.(முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் பகர்ந்ததாக ஹஜ்ரத் உம்மு ஸலமா (ரலி) கூறினார்கள்:நீங்கள் நோயாளியிடமோ ,மரணித்தவரிடமோ சென்றால் நன்மையானவைகளைக் கூறுங்கள் .(நல்ல துஆக்களை செய்யுங்கள் )நிச்சயமாக மலக்குகள் நீங்கள் கூறுவதின் மீது ,,ஆமீன்,, சொல்கிறார்கள்.உம்மு ஸலமா (ரலி) கூறுகிறார்கள் :அபூ ஸலமா மரணம் அடைந்ததும் நான் நபியவர்களிடம் சென்று அபூசலமாவின் மரணச் செய்தியைக் கூறினேன்.அதற்க்கு நபி (ஸல்) அவர்கள்.

 அல்லாஹூம்மஃபிர்லீ  வலஹூ வஃகிப்னீ மின்ஹூ உக்பன் ஹசனதன் 

-இறைவா! எனக்கும் அவருக்கும் பிழை பொறுப்பாயாக! எனக்கும் அழகிய பகரத்தை ஏற்படுத்துவாயாக!-என நீர் துஆச் செய்வீராக எனக் கூறினார்கள்.நான் அவ்வாறு துஆச் செய்தேன் .பின்னர் அவருக்கு பகரமாக அவரைவிட சிறந்தவர்களான நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் எனக்கு கணவராக ஏற்படுத்தி தந்தான்.(முஸ்லிம்)

மாநபி (ஸல்) அவர்கள் பகர்ந்ததாக ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:யார் ஈமானுடன் அல்லாஹ்வின் நற்கூலியை ஆதரவு வைத்தவராக ஒரு முஸ்லிமின் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று ,ஜனாஸாத் தொழவைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் வரை அந்த ஜனாஸாவுடன் இருக்கிறாரோ அவர் இரண்டு ,,கீராத் ,, நன்மைகளைப் பெற்று திரும்புகிறார் .ஒவ்வொரு கீராத்தும் உஹது மலையை போன்றதாகும் .யார் அந்த ஜனாஸாவின் தொழுகையில் (மட்டும்) கலந்து கொண்டு விட்டு (நல்லடக்கத்துக்குமுன் )திரும்பி விடுகிறாரோ அவர் ஒரு கீராத் நன்மையைப் பெற்று கொண்டு திரும்புகிறார்.(புகாரி)

ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் :நீங்கள் ஜனாஸாத் தொழுகையைத் தொழுதால் அம்மய்யித்திற்கு இதயத்தூய் மையுடன் (அழகாக)துஆச் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்.(அபூதாவூது)

நபி (ஸல்) அனவின்றதாக ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: ஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்யுங்கள் .அது நல்லதாக இருப்பின் நன்மையின் பக்கம் அதனை முற்படுத்தி வைத்து விடுவீர்கள் .அது நல்லதாக இல்லையெனில் ,உங்களின் பிடரிகளை விட்டு (உங்கள் பொறுப்பைவிட்டு)அத்தீமையை இறக்கி வைத்து விடுவீர்கள்.(புகாரி,முஸ்லிம்)

முஸ்லிமின் அறிவிப்பில் (அது நல்லதாக இருப்பின் )நன்மையின் மீது அதனை நீங்கள் முற்படுத்தி வைத்து விடுவர்கள் என நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

நபி (ஸல்) அவர்கள் பகர்ந்தார்கள் ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:கடனை நிறைவேற்றப்படும் வரை ஒரு முஃமினின் ஆன்மா அவருடைய கடனுடன் பிணைக்கப்பட்டிருக்கும்.(திர்மிதி)

ஹூஸைன் பின் வஹுஹ்(ரலி) அறிவிக்கிறார்கள் :நபித்தோழர் தல்ஹா பின் பாரவு பின் ஆஜிப் (ரலி) நோய்வாய்ப்பட்டிருந்தார் .அவரின் உடல் நலத்தை விசாரிக்க அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள் .அப்பொழுது அண்ணல் நபி(ஸல்) கூறினார்கள் :தல்ஹாவுக்கு மரணம் நெருங்கி விட்டதாக கருதுகிறேன் .அவர் மரணமடைந்து விட்டால் எனக்கு அறிவியுங்கள் .அவரை விரைந்து நல்லடக்கம் செய்யுங்கள் .ஏனெனில் ஒரு முஸ்லிமின் உடலை அவர் குடும்பத்தாரிடம் தடுத்து வைத்துருப்பது (அதிகம் தாமதிப்பது) முறையல்ல.(அபூதாவூது)

ஹஜ்ரத் உஸ்மான் பின் அப்பான் (ரலி) அறிவிக்கிறார்கள் :மய்யித்தை நல்லடக்கம் செய்தபின்  அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அம்மண்ணரையின் அருகில் நிற்பார்கள் .மேலும் கூறுவார்கள்:உங்கள் சகோதரருக்காக பிழை பொறுப்பு இறைஞ்சுங்கள் .அவருக்கு (முன்கர்,நகீர் மலக்குகளின் விசாரணையின் போது )உறுதிப்பாட்டை கேளுங்கள் .நிச்சயமாக அவர் இப்பொழுது விசாரிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்.(அபூதாவூது)

அல்லாஹூ தஆலா  கூறுகிறான் : அவர்களுக்குப் பின் வந்தவர்கள் கூறுகிறார்கள் .எங்கள் இறைவா!எங்களுக்கு பிழை பொறுப்பாயாக !ஈமான் கொள்வதை கொண்டு எங்களை முந்திவிட்ட சகோதரர்களுக்கு பிழை பொறுப்பாயாக!....(அல்குர்ஆன் 59-10)

ஹதீஸ்:

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் :ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (நோயின் காரணமாக)என் தாய் பேச்சை விட்டும் தடுக்கபட்டுவிட்டார் .அவர் பேசினால் ஸதகாக் கொடுக்கும்படி பணித்திருப்பார் .நான் அந்தத் தாயின் சார்பாக ஸதகாக் கொடுத்தால் அதன் நற்கூலி அவருக்கு கிடைக்குமா? என்று கேட்டார் .அதற்க்கு நபியவர்கள் ,,ஆம்,, (கிடைக்கும்) என்று மறுமொழி பகர்ந்தார்கள் .
(புகாரி,முஸ்லிம்)

அண்ணல் நபி (ஸல்) நவின்றதாக ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: மனிதன் மரணமைடைந்துவிட்டால் மூன்று அமல்களைத் தவிர ,மீதமுள்ள அமல்கள் அனைத்தும் அவனை விட்டுத் துண்டிக்கப்பட்டு விடும் .அவை 1) ஸதகத்துல் ஜாரியா-நிரந்தரமாக நடைபெரகூடிய தர்மம் .2) பயன் பெறப்படும் கல்வி .3) அவருக்காக துஆச் செய்யும் அவரின் ஸாலிஹான பிள்ளை .(இம்மூன்றின் மூலம் மரணத்திற்கு பிறகும் அவர்க்கு நன்மைகள் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும் )(முஸ்லிம்)

நபித்தோழர் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:பருவம் எய்தாத மூன்று சிறுபிள்ளைகள் மரணித்துவிட்ட எந்தவொரு முஸ்லிமையும் அவர் அந்தப் பிள்ளைகளின் மீது காட்டி வந்த கிருபையின் காரணமாக ,அல்லாஹ் அவரை சுவர்க்கத்தில் நுழைய வைப்பானே தவிர வேறில்லை . (புகாரி,முஸ்லிம்)

மரணம் நெருங்கியவருக்கு திருகலிமா சொல்லி தரனும் என்ற ஹதீஸை பார்த்தோம்! மரணித்தவர் வீட்டுக்கு சென்றால் என்ன செய்ய வேண்டும் என்ன துஆச் செய்ய வேண்டும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்று தந்தார்கள் ! எப்படி துஆச் செய்வது ? என்ன துஆச் செய்யும்படி நமக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தார்கள் ! இதல்லாம் நாம் செய்கிறோமா ? 

நிச்சயமாக இதற்க்கு மாற்றமாக தான் நாம் இப்பொழுது செய்து கொண்டு வருகிறோம் ! ஒருவர் மரணித்தால் அவர் உடலை இரண்டு நாள் அல்லது அதற்க்கு அதிகமாக குளிர் சாதனா பெட்டியில் வைத்து நாம் தாமதித்து கொண்டு வருகிறோம் ! இன்னார் வருவார் ,அவர் வருவார் ,இவர் வருவார் என்று நாம் மற்றவர்களுக்காக மய்யத்தை நல்லடக்கம் செய்யாமல் நாம் தாமத்திது வருகிறோம் .அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை கூட நாம் சிந்திக்காமல் ,இப்படி செய்து கொண்டு இருக்கிறோம் ! 

இறந்தவருக்காக நாம் எப்படி துஆச் செய்ய வேண்டும் என்பது கூட இன்னும் சிலர்கூட தெரியாமல் இருக்கிறார்கள் ,மார்க்கத்துக்கு முரண்பாடான செயல்களை செய்து வருகிறார்கள் .ஒருவருக்கு அவரின் தாயோ அல்லது தந்தையோ இறந்து விட்டால் அவரின் தாய்க்கோ அல்லது தந்தைக்கோ எப்பிட் துஆச் செய்ய வேண்டும் என்பது கூட தெரியாத பிள்ளைகள் உண்டு ,எவ்வளவு பெரிய வேதனை !! 

மார்க்கத்துக்கு முரண்பாடான செய்யலை செய்தால் அல்லாஹ்விடம் நற்கூலி கிடைக்குமா ? அந்த அமல்கள் அங்கீகரிக்கப்படுமா? என்பதை நாம் விளங்க வேண்டும்! அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று சொல்லி கொண்டு காலத்தை கடத்தி செல்வதினால் என்ன பலன் கிடைக்க போகிறது? இவர் முறையாக மார்க்கத்தை கற்று ,நபி வழியை பின்பற்றி வந்தார் என்றால் ,அவரின் பிள்ளை அவருக்காக துஆச் செய்யும் , மார்க்கத்தில் இல்லாத சடங்கு ,சன்பிராதயம் இப்படி செய்து கொண்டு போனால் ....நம் வருங்கால பிள்ளைகள் இதுபோலதான் செய்வார்கள் என்பதில் ஐயம் இல்லை .

இன்ஷாஅல்லாஹ்  இனி வருகின்ற காலத்தில் நாம் அனைவரும் முறையாக மார்க்கத்தை விளங்கி ,அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழியை பின்பற்றி நடப்போமாக ! அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கிருபையும் ,மார்க்கத்தை விளங்கி நடபதர்க்கும் அருளும்,உதவியும் செய்வானாக ...ஆமீன்..   அஸ்ஸலாமு அழைக்கும்!  


இதையும் பார்க்க:-
                       * ஜனாஸா தொழுகை தொழும் முறை
                       * ஜனாசா குளிப்பாட்டுதல்,கபனிடும் சட்டங்கள் (V)
                       * இஸ்லாத்தில் பலருக்கும் வரக்கூடிய சந்தயங்கள்.
                       * இஸ்லாமியப் பார்வையில் தற்கொலை
                       * இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? 


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget