முகம் மூடுவதற்கான ஆதாரங்கள்.!

                                 தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

நபி(ஸல்) அவர்களின் ஆரம்பகாலங்களில் பெண்கள் முகத்தை திறந்தே இருந்தனர் அல்லாஹ் அவர்களுக்கு முகத்தை மூடுவதை சட்டமாக்கவில்லை. பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்ற கருத்தை முதலில் முன்வைத்தவர் உமர் (ரலி) அவர்களாவார்கள்,

'நபி(ஸல்) அவர்களின் மனைவியர் கழிப்பிடம் நாடி வெட்ட வெளிப் பொட்டல்களுக்கு இரவு நேரங்களில் (வீட்டைவிட்டு) வெளியே செல்லும் வழக்கம் உடையவர்களாயிருந்தார்கள். வெட்ட வெளி பொட்டல் என்பது விசாலமான திறந்த வெளியாகும். நபி(ஸல்) அவர்களிடம், 'உங்கள் மனைவியரை (வெளியே செல்லும் போது) முக்காடிட்டு மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்' என உமர்(ரலி) சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆயினும் நபி(ஸல்) அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை. நபி(ஸல்) அவர்களின் மனைவி ஸவ்தா(ரலி) இஷா நேரமான ஓர் இரவில் (கழிப்பிடம் நாடி) வீட்டைவிட்டு வெளியே சென்றார். நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் அவர்களே உயரமான பெண்மணியாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்த உமர்(ரலி), 'ஸவ்தாவே! உங்களை யார் என்று புரிந்து கொண்டோம்' என்றார். (அப்போதாவது பெண்கள்) முக்காடிடுவது பற்றிய குர்ஆன் வசனம் அருளப்படாதா என்ற பேராசையில் உரத்து அழைத்தார். அப்போதுதான் பெண்கள் முக்காடு போடுவது பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான்' ஆயிஷா(ரலி) அறிவித்தார். ( புஹாரி-146)

கண்ணியமிக்க அல்லாஹ் ஹிஜாபை பின்வரும் தருணத்தில் சட்டமாக்குகின்றான் இது முகத்தை மூடுவதற்கு முன்வைக்கும்
முதலாவது ஆதாரம்.
********************************************************************************************************

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார்கள், பர்தா (சட்டம்) தொடர்பான இந்த இறைவசனத்தை மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மணப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுடன் வீட்டில் இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ('வலீமா'விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டுவிட்டு) பேசிக்கொண்டே அமர்ந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வெளியே வரவும் திரும்பச் செல்லவுமாக இருந்தார்கள். மக்களோ பேசிக் கொண்டே அமர்ந்திருந்தனர்.

 அப்போதுதான் அல்லாஹ்' இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். 

ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்க வேண்டு மென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள்' எனும் (திருக்குர்ஆன் 33:53 வது) வசனத்தை அருளினான். இதையடுத்துத் திரை போடப்பட்டது. மக்களும் எழுந்து விட்டார்கள்.(ஸஹீஹூல் புஹாரி- 4792)

இங்கே அல்குர்ஆனிய வசனம் அருளப்பட்டதன் பின் நபி(ஸல்) அவர்களின் மனைவிக்கும் மக்களுக்கும் திரை போடப்பட்டது என்பது தெளிவாகிறது. இதன் அர்த்தம் முஃமீன்களின் அன்னையர் அறைகுறை ஆடைகளுடன் இருப்பார்கள் என்பதல்ல மாறாக அவர்களை பார்க்க முடியாது என்பது தெட்டத் தெளிவாகிறது.
********************************************************************************************************

இரண்டாவது ஆதாரம், பெண் என்பவள் மறைக்கப்படவேண்டியவள், அந்த பெண் வெளியில் புறப்பட்டால் ஷைத்தான் அப்பெண்னை வரவேற்கிறான். ஒரு பெண் தனது வீட்டில் இருக்கும் போது தான் அல்லாஹ்விடம் நெருக்கமாக இருப்பாள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸாலிம் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(தபரானி, திர்மிதி)

மேலுள்ள ஹதீஸானது பெண்கள் தங்களை முழமையாக மறைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான இரண்டாவது ஆதாரமாகும். இங்கே முகம் கையை தவிர என்று எவ்வித விதிவிலக்குகளும் வரவில்லை மாறாக பெண் என்றாலே மறைக்கப்பட வேண்டியவள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
********************************************************************************************************

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) தங்கள் அழகை வெளிக்காட்டியது போன்று நீங்கள் வெளிக்காட்ட வேண்டாம். தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (அல்குர்ஆன் 33:33)

'தபர்ரஜ என்ற சொல்லுக்கு பொதுவாக தமிழ் மொழி பெயர்ப்புக்களில் சுற்றித்திரிதல் என்று மொழி பெயர்க்கட்டுள்ளது. அதன் சரியான மொழி பெயர்ப்பு அழகு அலங்காரத்தை வெளிக்காட்டுவது என்பதாகும்.(மௌலவிமார்களே இதனை உறுதிப்படுத்துவது உங்களது கடமை)

பெண்களின் அழகு முகம் என்பதில் அதிகமாக யாரும் கருத்து வேறுபாடு கொள்ளமாட்டார்கள். ஆழகான பெண்களை திருமண முடிக்க நாடுபவர்களும் பெண்களின் அழகை முகத்தில் தான் பார்ப்பார்கள் என்பது நடைமுறை ரீதியான உண்மை. இவ்வசனத்திலே அழகை வெளிக்காட்ட வேண்டாம் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். இது முகம் மூட வேண்டும் என்பதற்கு முன்வைக்கப்படும் மூன்றாவது ஆதாரமாகும்.
*********************************************************************************************************

அபூ ஷுஐப் (ரலி) கூறுகின்றார்கள்:- உமைமா பின்து ரகீகா (ரலி) இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்வதற்காக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்தார்கள். அப் போது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் 'அழ்ழாஹ்வுக்கு இணைவைக்கக் கூடாது எனவும், திருடக்கூடாது எனவும், விபச்சாரம் செய்யக் கூடாது எனவும், உமது குழந்தையைக் கொலை செய்யக் கூடாது எனவும், அபாண்டத்தை நீராகவே உருவாக்கி (எங்களிடம்) கொண்டுவரக் கூடாது எனவும், மையித்திற்காக ஓலமிட்டு அழக்கூடாது எனவும், ஆரம்பகால ஜாஹிலிய்யத்தில் அழகு அலங்காரத்தை வெளிப்படுத்தியது போன்று வெளிப்படுத்த வேண்டாம் எனவும் உம்மிடம் பைஅத் எடுக்கின்றேன்.' எனக் கூறினார்கள். (மு. அஹ்மத் - ஸஹீஹ் )

இங்கும் தங்களது அழகுகளை வெளிக்காட்டக்கூடாது என்று நபி(ஸல்) அப்பெண்ணிடம் பைஅத் எடுக்கின்றார்கள். அழகு முகம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது இது நான்காவது ஆதாரமாகும்.
**********************************************************************************************************
மேற்கண்டவாறு ஹிஜாபை பெண்களுக்கு கடமையாக்கிய அல்லாஹ் இஹ்ராம் அணிந்த நிலையில் மாத்திரம் அவளது முகத்தையும் கையையும் மறைத்தலுக்கு பின்வரும் நபி(ஸல்) அவர்களின் கட்டளை மூலம் விதிவிலக்களிக்கிறான்.

இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்கள், இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் அணிந்திருக்கும்போது எந்த ஆடைகளை நாங்கள் அணிய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?' என்று ஒருவர் எழுந்துகேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் சட்டைகளையும், கால் சட்டைகளையும், தலைப் பாகைகளையும், தொப்பிகளையும் அணியாதீர்கள்! ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கரண்டைக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்! குங்குமப் பூச்சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள்! இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!' என்று பதிலளித்தார்கள். (ஸஹூஹூல் புஹாரி- 1838)

இவ்விதிவலக்கானது இஹ்ராம் அல்லாத நிலையில் பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மேலும் ஆதாரங்கள் இருப்பினும் அவற்றில் சில சர்ச்சைகள் இருப்பதால் அதனை இவ்விடம் தவிர்த்துக்கொள்கிறேன். குர்ஆன் ஹதீஸை பின்பற்றும் ஒரு நபருக்கும் ஒரு ஆதாரம் போதுமானதாகும்.


இதையும் பார்க்க:-
                           * அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா?
                           * பெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)
                     * இஸ்லாமிய பார்வையில் கொலுசு அணியலாம்..?
                     * பெண்கள் பெண்களுக்கு இமாமத் செய்யலாமா..?
                     * பெண்கள் அணியும் தங்க நகைகளுக்கு ஜக்காத் உண்டா.?

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget