மிஸ்வாக் செய்வது தொடர்பாக சில நபிமொழிகள்.

                                தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

மிஸ்வாக் செய்வது தொடர்பாக வந்துள்ள சில நபிமொழிகள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
وعن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: (لقد أكثرت عليكم في السواك).
رواه البخاري
மிஸ்வாக் செய்யும் விடயத்தில் உங்கள் மீது அதிகப்படுத்தி இருக்கிறேன். நூல்:- புகாரீ
-------------------------------------------------------------------------------------
وعن ابن عباس رضي الله عنهما قال: (كان رسول الله صلى الله عليه وسلم يصلي بالليل ركعتين ركعتين، ثم ينصرف فيستاك)
இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் நபி ஸல் அவர்கள் இரவு நேரத்தில் இரண்டு, இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள். பின்னர் அதிலிருந்து திரும்பி மிஸ்வாக் (பற்சுத்தம்) செய்வர்களாக இருந்தார்கள். நூல்:- அல்ஹாவீ அல்கபீர்
-------------------------------------------------------------------------------------
وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم (كان إذا دخل بيته بدأ بالسواك)،
رواه مسلم
நபி ஸல் அவர்கள் வீட்டினுல் நுழைந்தால் மிஸ்வாக் செய்வது கொண்டு ஆரம்பிப்பவர்களாக இருந்தார்கள். என அன்னை ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்:- முஸ்லிம்

-------------------------------------------------------------------------------------
وعن عمران رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم: (أنه كان لا ينام إلا والسواك عنده، فإذا استيقظ بدأ بالسواك).
நபி ஸல் அவர்கள் மிஸ்வாக் குச்சி அவர்களிடம் இருக்கும் நிலமையில் அன்றி இரவில் உறங்கமாட்டார்கள். காலையில் எழுந்தால் “மிஸ்வாக் செய்வார்கள். அறிவிப்பவர் இம்ரான் றழி அன்ஹு அவர்கள்.
நூல்:- அல்ஹாவீ அல்கபீர்
-------------------------------------------------------------------------------------
وعن زيد بن خالد الجهني قال: (ما كان رسول الله صلى الله عليه وسلم يخرج من بيته لشيء من الصلوات حتى يستاك).
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மிஸ்வாக் செய்யும் வரை எந்தத் தொழுகைக்காக்கவும் தனது வீட்டை விட்டும் வெளியேறமாட்டார்கள். அறிவிப்பாளர். சைத்துப்னு காலிதுல் ஜுஹனீ நூல்:- அல்ஹாவீ அல் கபீர்
-------------------------------------------------------------------------------------
وَرُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم أَنَّهُ قَالَ: " طَهِّرُوا أَفْوَاهَكُمْ بِالسِّوَاكِ، فَإِنَّهَا مَسَالِكُ القرآن "
மிஸ்வாக் கொண்டு உங்களது “வாய்களை” துப்பரவு செய்யுங்கள்.நிச்சயமாக அது அல் குர்ஆன் செல்லும் பாதைகளாக இருக்கின்றன.
عَنِ ابْنِ جُبَيْرٍ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ - أَنَّهُ قَالَ: " مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالسِّوَاكِ حَتَى خَشِيتُ أَنْ يَدْرِدَنِي ". أَيْ: تَتَنَاثَرُ أَسْنَانِي،
எனது பற்கள் கீழே உதிர்ந்து (விழுந்து) விடுமோ என்று நான் அச்சம் கொள்ளும் வரை “”மிஸ்வாக் (பற்சுத்தம்)கொண்டு வானவர் ஜிப்ரீல் அவர்கள் எனக்கு “வஸிய்யத்” செய்பவர்களாக இருந்தார்கள். என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, இப்னு ஜுபைர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ، مَرْضَاةٌ لِلرَبِّ
“மிஸ்வாக் ” செய்வது வாயை சுத்தப்படுத்தும், இறைவனின் திருப் பொருத்தத்தை பெற்றுத்தரும். என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். நூல்:- முஸ்னத் அஹ்மத்
قَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ -: " اسْتَاكُوا عَرْضًا وَادَّهِنُوا غِبًّا وَاكْتَحِلُوا وِتْرً
அகலத்தால் ‘மிஸ்வாக்” செய்யுங்கள்,! ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு எண்ணை வையுங்கள்.!, ஒற்றைப்படையாக கண்ணுக்கு “சுறுமா” இடுங்கள்!, என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்:- ஷர்ஹு முக்தசறுல் முசனீ
எவ்வாறு - மிஸ்வாக்செய்வது..?
وهو يقول: أُع أُع والسواك في فيه كأنه يتهوع)، وهذا التهوع يكون إذا أدخل الإنسان السواك إلى داخل فمه لتنظيف أسنانه أو لسانه.
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் தமது கையிலுள்ள ஒரு குச்சியால் பல் துலக்கும் போது உவ், உவ் என்று சொல்வதை நான் கண்டேன். குச்சியோ அவர்களது வாயில் இருந்தது. இவ்வாறு செய்தது அவர்கள் வாந்தி எடுப்பது போல் இருந்தது. புகாரி-244:இதையும் பார்க்க >>
                      * நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே! 
                      * இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்..! 
                      * இந்த உலக வாழ்கை பற்றி அல்லாஹ் கூறும் போது..!! 
                      * இம்மை,மறுமையில் வெற்றி பெற..(பெற்றோரை பேணுதல்) 
                      * இரத்த உறவை துண்டிப்பவன் சுவனம் புகுவானா?Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget