தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
நீண்ட நேரம் குர்ஆன் ஓதித் தொழுவதற்காக குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு.
நீண்ட நேரம் குர்ஆன் ஓதித் தொழுவதற்காக குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு.
அதிகம் மனப்பாடம் இல்லாதவர்கள் குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழுவதற்கு எந்தத் தடையும் இல்லை. நபி(ஸல்) அவர்கள் சிறு குழந்தையைச் சுமந்து கொண்டு தொழுகை நடாத்தியுள்ளார்கள். ஆயிஷா(ரழி) அவர்களின் அடிமை ஒருவர் குர்ஆனைப் பார்த்து ஓதி அன்னையவர்களுக்கு இமாமத் செய்துள்ளார்கள். (புஹாரி)
எனவே, குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழுவதற்குத் தடை இல்லை. இருப்பினும் முன்னால் பெரிய முஸ்ஹபை வைத்து அதைப் பார்த்துத் தொழ முடியுமாக இருந்தால் தக்பீரைப் பேணுவதில் குழப்பம் இருக்காது. கையில் குர்ஆனை வைத்து அதைப் பார்ப்பதிலும், தாள்களைப் புரட்டுவதிலும் கவனம் சிதறுவதை விட மனனமான சூறாக்களை ஓதித் தொழுவது சிறந்ததாகும்.
மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
இதையும் பார்க்க >>
* துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்பு...* ஆஷுரா நோன்பின் சிறப்புகள்
* ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சி படிகள் (பெற்ற...
* மஸ்ஜிதுந் நபவியில் நபி (ஸல்) அடக்கம் செய்யப்பட்டார...
Post a Comment