August 2015

                             தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமை நிறைவேற்றப்படுவது இஸ்லாமிய உம்மாவின் மீது விதியாக்கப்பட்ட கடமையாகும். உம்மத்தின் அங்கத்தவனான வசதி படைத்த ஒரு முஸ்லிம், ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ்ஜை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளான்.இஸ்லாத்தின் அர்கான்கான்களில் ஒன்றான ‘ஹஜ்’ கிரிகை பெண்களுக்கான ‘ஜிஹாத்’ என்ற அந்தஸ்துப் பெற்றதொரு கடமையாக இருக்கின்றது.

                                தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

குடும்பக் கட்டப்பாடு, கருச்சிதைவு பற்றிய இஸ்லாமிய வரையறைகள்மனித இனம் நிலைபெற வேண்டுமென்பது திருமண அமைப்பின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும். இனப்பெருக்கத்தின் மூலமே மனித இனம் நிலைக்க முடியும். இஸ்லாம் இனப்பெருக்கத்தை விரும்பி உற்சாகப்படுத்துகின்றது. ஆயினும், ஏற்புடைய நியாயமான காரணங்களுக்காகக் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு அனுமதி வழங்குகின்றது.
நபிகளாரின் காலத்தில் குடும்பக்கட்டுப்பாட்டிற்குரிய வழிமுறையாக அமைந்தது ‘அஸ்ல்’எனும் செயற்பாடாகும். ‘அஸ்ல்’ என்பது ஆண் தனது இந்திரியத்தைப் பெண்ணின் கர்ப்பவறையைப் போய் அடைய விடாது தடுத்துக் கொள்வதைக் குறிக்கும். நபித்தோழர்கள் இம்முறையைக் கையாள்வோராய் இருந்துள்ளனர். ‘அல்குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த வேளையில் நாங்கள் ‘அஸ்ல்’ செய்வோராய் இருந்தோம்.’ என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு கூறியுள்ளார். (ஆதாரம் – புஹாரி, முஸ்லிம்)

‘நீங்கள் நன்மை செய்வதற்கும், (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்கும், மக்கள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்களது சத்தியங்களின் மூலம் அல்லாஹ்வைத் தடையாக ஆக்காதீர்கள். அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன்; நன்கறிந்தவன்.’ (2:224)
நல்ல விடயங்களைச் செய்யமாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டு அதில் முரட்டுப் பிடிவாதத்துடன் இருப்பது கூடாது.

                                தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!   

மாதவிடாய் காலங்களில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் அழகான வழிமுறையை காட்டி தந்துள்ளது. அவைகளை கட்டாயம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாதவிடாய் பெண்ணும், கணவனும்
மாதவிடாய் பெண்களை அன்றைய காலத்தில் யூதர்கள் ஒதுக்கி வந்தார்கள். அந்த ஹதீஸை முதலில் கவனியுங்கள்.

ஸஹாபாக்கள் என்போர் யார்.? ஸஹாபாக்களிடத்தில் குறை காண முடியுமா.? ஸஹாபாக்களை குத்திக் காட்டி கேலியாக பேச முடியுமா.? என்பதை தெளிவுப் படுத்துவதற்காக இக் கட்டுரை எழுதப்படுகிறது.
சமீப காலமாக ஸஹாபாக்களை மிக மோசமான, தவறான வார்த்தைகளால் பேசப்பட்டு, அப்படி பேசுவது குற்றமில்லை என்றளவிற்கு சா்வசாதாரணமாக ஸஹாபாக்கள் மதிக்கப் படுவதை கண்டு வருகிறோம். ஸஹாபாக்களை எப்படியான வார்த்தைகளால் குத்திக்காட்டி பேசினார்கள் என்று தேவையான இடத்தில் சுட்டிக் காட்டவுள்ளேன்.

                   தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
இஸ்லாத்தில் ஒரு விடயம் தொடர்பாக அனுமதி  உண்டா அல்லது இல்லையா ? என்பதை நாம்  அறிந்து கொள்ள குர்ஆனில் அல்லது நபி (ஸல்)  அவர்களின் ஹதீஸ்களில் இதற்க்கு  தெளிவான ஆதாரம் உண்டா என்பதை நாம் அலசி ஆராய வேண்டும். அப்படி தெளிவான சட்டங்கள் இருக்குமானால் அதன் சுற்றுப் புறக் காரணங்களை அறிந்து அந்த சட்டத்தை புரிந்து கொள்ள முனைய வேண்டும்இந்த அடிப்படையில்  நபி (ஸல்) அவர்கள் ஒரு விடயத்தை செய்தால் அதை இரண்டு பகுதிகளாக செய்வார்கள். ஓன்று குறிப்பாக ஒரு கடமையை தனித்துவம் கருதி செய்வார்கள். அதாவது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட தனித்துவ சட்டமாக அது இருக்கும்.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget