வெளியூரில் இறந்த ஒருவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தலாமா.?

                   தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
இஸ்லாத்தில் ஒரு விடயம் தொடர்பாக அனுமதி  உண்டா அல்லது இல்லையா ? என்பதை நாம்  அறிந்து கொள்ள குர்ஆனில் அல்லது நபி (ஸல்)  அவர்களின் ஹதீஸ்களில் இதற்க்கு  தெளிவான ஆதாரம் உண்டா என்பதை நாம் அலசி ஆராய வேண்டும். அப்படி தெளிவான சட்டங்கள் இருக்குமானால் அதன் சுற்றுப் புறக் காரணங்களை அறிந்து அந்த சட்டத்தை புரிந்து கொள்ள முனைய வேண்டும்இந்த அடிப்படையில்  நபி (ஸல்) அவர்கள் ஒரு விடயத்தை செய்தால் அதை இரண்டு பகுதிகளாக செய்வார்கள். ஓன்று குறிப்பாக ஒரு கடமையை தனித்துவம் கருதி செய்வார்கள். அதாவது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட தனித்துவ சட்டமாக அது இருக்கும்.

மற்றது பொதுவாக செய்வார்கள் அல்லது ஏவுவார்கள் அது அவர்கள் உட்பட ஒட்டு மொத்த சமூகத்துக்கு இஸ்லாமிய சட்டமாக இருக்கும்
குறிப்பாக செய்யும் விடயங்கள் நபி ஸல் அவர்களுடய செயல்களின் பின்னணியில்  அவர்களால் ஏதோ ஒரு வகையில் வேறு வழிகளால்  சுட்டிக் காட்டப்படும் அதற்குப் பின்னால் வேறு ஒரு சந்தர்பத்தில் ஒரு போதும் அந்த அமல்கள் செய்யப்படமாட்டாது அது நபி ஸல் அவர்களுக்கு மட்டுமே உரித்தான விசேட சட்டம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அது பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.

அதே வேளை அவர்களால் பொதுவாக எல்லோருக்குமாக ஏவப்பட்ட அல்லது செய்யப்படும்  விடயங்கள் தொடர்ந்து இஸ்லாமிய சட்டமாக பின்பற்றப்படும் கடமைகளாக இருக்கும் மீண்டும் மீண்டும் அவர்களால் அது பற்றி பல வழிகளால் வலியுறுத்தப் பட்டதாகவும்  இருக்கும். உதாரணமாக நாம் செய்யும் அன்றாட இஸ்லாமிய கடமைகளை குறிப்பிடலாம்.அதாவது தொழுகை அல்லது சகாத் போன்ற வணக்கங்களை குறிப்பிட முடியும்.  

நபி ஸல் அவர்கள் குறிப்பாக ஒரு செயலை குறிப்பிட்ட நபர்  சார்பாக அல்லது அவர்களின் சார்பாக செய்வதானால் அது அவர்களுடைய விசேட கவனிப்பாக இருக்கும் என்பதை நாம் கூறினோம் ஏனனில் அது அல்லாஹ்விடம் வேண்டப்படும் விசேட பிரார்த்தனை அல்லது சிபாரிசாக இருக்கும். இது நபியவர்கள் அல்லஹ்வின் தூதர் என்பதற்கு அவர்களுக்குள்ள தனி அந்தஸ்தாகும் .அதே போன்று குறிப்பான விடயங்கள் நபி ஸல் அவர்களுக்கு அல்லது அவரின் குடும்பத்துக்குள்ள அல்லது குறிப்பிட்ட சில சாராருக்கு  தனி சட்டமாக இருக்கும் .இது மற்ற யாருக்கும் சட்டமாக இருக்காது .

இந்த அடிப்படையில்  வெளி ஊரில் மரணித்த ஒருவாருக்காக நாம் ஜனாசா தொழுகை நிறைவேற்றுவது தொடர்பான சட்டம் என்ன என நாம் பார்ப்போமானால் முதலில்  ஜனாஸா தொழுகை சம்மந்தமாக இஸ்லாம் என்ன கூறுகின்றது என நாம் பார்க்க வேண்டும். இஸ்லாமிய சரியாவில்  இது  பரல் கிபாயா என்று சட்டம் வகுக்கின்றது. அதாவது ஒரு கிராமத்தில் ஒருவர் மரணித்தால் ஓரிருவராவது சேர்ந்து தொழுகை நடத்தினால் போதுமானது ஏனைய மக்களின் கடமையும் அதிலிருந்து நீங்கிவிடும்.

இதற்கு ஆதாரமாக நபி ஸல் அவர்கள் சார்பாக வரும் செய்தியில்  “அபூ தல்ஹாவின் மகன் இறந்த போது நபிகள் நாயகம் (ஸல்அவர்களும்இறந்தவரின் பெற்றோரும் மட்டுமே தொழுதனர்
.                                      
ஒட்டு மொத்த சமுதாயமும்  ஹாகிம் தொழவில்லை (1/519) என்ற இந்த செய்தியில் இருந்து குறிப்பிட்ட ஒருசாரார் மய்யிதுக்காக தொழுதால் போதுமானது என்பதை நாம் விளங்கி கொள்ளலாம் .இதனால்தான் நபி ஸல் அவர்கள் ஒரு முறை  “ கடன்பட்டவரின் உடல் கொண்டு வரப்பட்ட போது இவருக்கு நீங்கள் தொழுகை நடத்துங்கள்என்று நபி ஸல்  அவர்கள் கூறினார்கள் மற்றவர்கள் தொழுத இத்தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல் அவர்கள்   பங்கேற்கவில்லை 2297, 5371)எனவே இந்த தொழுகை  குறிப்பிட்ட சாராரின் தொழுதால் போதுமானது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இப்படியான ஒரு செய்தி இந்த ஜனாசா தொழுகை  தொடர்பாக இருக்கும் போது நபி ஸல் அவர்கள் முக்கியத்துவம் கருதி வெளி இடங்களில் மரணித்த ஒருவருக்கு ஜனாசா தொழுகை நடத்துவார்களா ? என்பதை நாம் பார்த்ததில்லை என்றே பதில் வரும் ஆனால் வெளியூரில் மரணித்தவருக்கு நாம் தொழ முடியும் என்பற்கு  எல்லோரும் காட்டும் ஆதாரம் நபி ஸல் அவர்கள் அபி சீனிய நாட்டு நஜ்ஜாஸ் என்ற ஒரு மன்னனுக்கு அவர்கள் அந்த மன்னன் இஸ்லாத்தை ஏற்ற நிலையில் மரணித்தார் என்பதற்காக தொழுகை நடத்தினார்கள் என்பதை ஆதாரமாக கூறுகின்றனர்.

இங்கு நபி ஸல் அவர்கள் மன்னன் நஜ்ஜாசுக்கு தொழுகை நடத்திய காரணம் என்ன ? இது ஒரு சிறப்புக் காரணம் ஹதீஸ்கள் தெளிவாக புரிந்தால் நாம் விளங்கிக் கொள்ளலாம் .

நபி ஸல் அவர்கள் யாருக்காகவும் சிறப்பாக ஒரு விடயத்தை நாடிச் செய்தால் அது எல்லோருக்கும் தொடர் சட்டமாக ஆகாது .நாம் மேலே கூறியது போல்  அது சிறப்பு சட்டமாக இருக்கும். அதை நாம் எப்படி விளங்கிக் கொள்வோம் என்றால் இப்படியான விசேடமாக செய்யப்படும் செயலை மீண்டும் மீண்டும் நபி ஸல் அவர்கள் அதனை செய்யாமல் இருப்பார்கள். இந்த பின்னன்யில்தான் நபி ஸல் அவர்கள் நஜ்ஜாசி மன்னருக்கு தொழுகை நடத்தினார்கள்.

இதை நாம் விளங்கிக் கொள்ள ஹதீஸ்களை நுணுகி ஆராய்ந்தால் நபி ஸல் அவர்கள் நஜ்ஜாஸ் மன்னனின் மரணம் தொடர்பாக கூறும் போது “ இன்றை தினம் அபீஸீனியாவில் நல்ல மனிதர் ஒருவர் இறந்து விட்டார். வாருங்கள்! அவருக்குத் தொழுகை நடத்துவோம்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்தோம். அவர்களுடன் நாங்கள் அணிவகுத்து நிற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி 1320, 3877, இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்

நபி ஸல் அவர்கள் யாருக்கும் இதற்க்கு முன்னோ பின்னரோ இவ்வாறு தொழுகை நடத்தவில்லை இது நஜ்ஜாஸ் மன்னருக்கு  மட்டுமுள்ள அம்சம் என்பதை மீண்டு நபி ஸல் அவர்கள் கூறும் போது “நஜ்ஜாஷி மன்னர் முஸ்லிம்கள் வசிக்காத பகுதியில் இறந்து விட்டார். எனவே உங்கள் சகோதரருக்குத் தொழுகை நடத்துங்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நுல்கள்: அஹ்மத் 14434, 14754, 15559, 15560, 15561,

முஸ்லிம்கள் வசிக்காத பகுதியில் இறந்து விட்டார். என்ற இந்த அடிப்படையில் நபி ஸல் அவர்கள் தொழுகை நடத்திய அந்த மன்னர் ஒரு விசேடமானவர் என்பதும் அவருக்கு ஏற்கனவே தொழுகை நடத்தப்படவில்லை என்ற காரணமும் கூறப்படுகின்றது .எனவே நபி ஸல் அவர்கள் ஒருவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட பின்னர் அவருக்காக தொழுகை நடத்தும் சட்டத்தை எமக்கு கற்பிக்கவில்லை. 

அப்படி அது சட்டமாக ஆகியிருந்தால் அது பர்ளு கிபாயா  என்ற தரத்தில் இருந்து கட்டாய வாஜிப் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் அப்படியான இந்த சட்டம் தொடர்ந்தும் சமூகத்தில் செய்யப்படக் கூடிய சட்டமாக இருந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அப்படி இல்லாவிட்டால்  நிபாந்தனைகள் இன்றி வெளி இடங்களில் மரணித்த சகலருக்கும் நாம் இந்த தொழுகையை ஏதோ ஒரு வகையில் நிறைவேற்ற கடமைபட்டவர்களாகி விடுவோம்.

இதே போன்று இன்னோர் விடயத்தையும் இந்த செய்திகள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது நபி அவர்கள் “ ஒருவர் பள்ளிவாசல்களைப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அவர் இறந்து விட்டார் என்று மக்கள் கூறினார்கள். 'எனக்கு அது பற்றி அறிவித்திருக்க மாட்டீர்களாஅவரது அடக்கத்தலத்தை எனக்குக் காட்டுங்கள்என்றார்கள். அவரது அடக்கத்தலம் வந்து அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 458, 460, 1337

இங்கு நபி ஸல் அவர்கள் தான் தொழுகையை தவற விட்டது காரணமாக அந்த நபாருக்கு அவர்கள் தொழுகை நடத்துகின்றனர் இதுவும் நபி ஸல் அவர்கள் தனது சிறப்பு செயல் என்பதை கூறும் போது “இந்தக் கப்ருகள் இதில் அடக்கப்பட்டவருக்கு  இருள் நிறைந்ததாக உள்ளன. நான் அவர்களுக்குத் தொழுவதன் மூலம் அவர்களது கப்ருகளை அல்லாஹ் ஒளிமயமாக்குகிறான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கான காரணத்தைக் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஸீத் பின் ஸாபித் (ரலி) நூல்கள்: நஸயீ 1995, இப்னுமாஜா 1517

இங்கு நான் தொழுவதன் மூலம் என்னும் வார்த்தையை கூறுவதானால் இப்போது நபி ஸல் உயிருடன் இல்லை எனவே இது நபி ஸல் அவர்கள் உயிருடன் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை சட்ட நுணுக்கம் தெரிந்த எவரும் புரிந்து கொள்வர். எனவே இந்த செய்தி மூலம் நபி ஸல் அவர்கள் இந்த இரண்டு பேருக்கும் தனது வாழ்நாளில் தொழுகை நடத்தியுள்ளனர் இவை அவர்களுக்குரிய சிறப்பு தகுதி என்பதை அவர்களே தனது வாயால் கூறியும் உள்ளனர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

எனவே இந்த இரண்டு நபருக்கும் தொழுகை நடத்திய காரணங்களையும் நபி ஸல் அவர்கள், கூறியுள்ளனர் என்பதை நாம் இரண்டு நபி மொழிகளுக்கும் மேலதிக விளக்கமாக வந்துள்ள நபி மொழிகளை கொண்டு அறியக் கூடியதாக உள்ளது . எனவே இந்த ஜனாஸா தொழுகை வேறு எந்த நபாருக்கும் இதற்க்கு பின்னால் தொழ  அனுமதி இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி உலகில் உள்ள நாம் கலந்து கொள்ளாத சகலருக்கும் தொழுகை நடத்துவதானால் அது பாரிய நடை முறை சிக்கலை தோற்றுவிக்கும் .அது கட்டைய கடமையாகவும் போய்விடும்.

மேலே நபி ஸல் அவர்கள் தொடர்பாக வரும்  செய்திகளை பார்த்தால் நபி ஸல் அவர்கள் தனது சிறப்பை வெளிக்காட்ட பயன்படுத்தும் அம்சங்கள் என்பது எமக்கு தெளிவாகும் .அப்படி நாம் தொழ  முடியும் என்றால் மேலே கூறப் பட்ட சிறப்புக் காரணங்கள் தவிர்ந்த வேறு ஆதாரங்கள் இருக்க வேண்டும் அதற்க்கான போதிய சான்றுகளை காட்ட வேண்டும் .
இந்த வகையில் நபி ஸல் அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு தகுதி ஏன் நாமும் ஆதாரமாக கொண்டு செயற் படுத்தலாம்தானே என்று கேட்க முடியாது அவர்கள் பல விடயங்களை குறிப்பாக செய்துள்ளனர் அது குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே உரித்தானது.

Ø ஒரு முறை பாதையால் நடந்து செல்லும் போது இரண்டு வேதனை  செய்யப்பட்டுக் கொண்டிருந்த கப்ருகளுக்கு  ஈச்சம் குச்சியை நாட்டி வேதனையை குறைத்தார்கள் நாம் அப்படி குச்சிகளை கப்ருகளுக்கு நாட்டினால் ஜனாசக்களுக்கு வேதனை குறையாது அது அந்த குறிப்பிட்ட ஜனாசாக்களுக்கு  மட்டுமே தகுதியானது அது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டது .

Ø மேலும் ஒரு முறை ஹஜ் பெருநாள் தினத்தில் தொழுகை நடத்துவதற்கு முன்னால் உள்கியா கொடுத்த சகாபியை அங்கீகரித்து அந்த உள்கியாவை ஏற்றுக் கொண்டார்கள் அது அவருக்கு மட்டுமே உள்ள சலுகை என்றும் ஏனைய சகாபாக்களுக்கு விளக்கி கூறினார்கள்.

Ø  நபி ஸல் அவர்கள் தாயத்து கட்டுதல்  தொடர்பாக உரை ஆற்றும் போது உக்காஸ் என்ற சகாபியை அவர் நபியிடம் சுவர்க்கம் செல்லும் பட்டியலில் சேர்க்கக் கோரிய போது அதை அங்கீகரித்தார்கள் வேறு ஒரு சகாபியும் விண்ணப்பித்த போது உக்கஸ் முந்திவிட்டார் என்று அந்த வேண்டுகோளை நிராகரித்தார்கள்.

Ø அசரதுள் முபச்சிரீன் என்ற பத்து சகாபாக்களை சுவர்கத்துக்கு நன்மாரயணம்  கூறினார்கள் இதே போன்று நபி ஸல் அவர்கள்.

v  நமக்கு ஒரே நேரத்தில் நான்கு திருமனக்ங்கள் மட்டுப் படுத்தி இருக்கும் போது அவர்கள் நான்கிற்கும் மேற்பட்ட திருமணங்களை நிறைவு செய்தார்கள்.

v ஹிஜாப் என்ற தனி சட்டம் நபி ஸல் அவர்களின் மனைவியருக்கு மட்டும் விதியாக்கப்பட்டது (மறைந்து வாழ்தல்)

v  ஹதீஜா ரலி அவர்களுக்கு அல்லா சுவர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டியுள்ளதாகக் கூறினார்கள் இவை போன்ற ஏராளமான செய்திகள் நபி ஸல் அவர்களிக்கு மட்டும் உரித்தானது என்பதை காட்டும் வலுவான பல ஆதாரங்கள் உள்ளன அவைகளை பக்கங்கள் பெருகிவிடும் என்பதை அறிந்து சுருக்கிக்  கொள்கின்றேன்.


  இந்த அடிப்படையில் தான் நபி ஸல் அவர்கள் நஜ்ஜாஸ் என்ற மண்ணுக்கும் தொழுகை நடத்தினார்கள் அதவும் அவருக்கு உலகில் யாரும் தொழுகை நடதியிருக்காத சந்தர்ப்பத்தில் தான் இதனை செய்தார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் இதை நாம் மேலே குரிப்பிட்டுமுள்ளோம்.

 இந்த சிறப்பு செய்திகளை ஆதாரமாக கொண்டு யாரும் யாருக்கும் வெளியூரில் மரணித்தால் ஊரை கூட்டி ஜனாஸா தொழுகை நடத்த ஆதாரம் தேடக் கூடாது. என்பதை  கவனித்தில் கொள்ள வேண்டும். சியாரதுள் குபூர் என்ற கப்ருகளை தரிசித்தல் என்ற விடயத்தை கூறிய நபி ஸல் அவர்கள் ஒரு போதும் அங்கு அவர்களுக்காக தொழுங்கள்  என்று கூறாமல் நீங்கள் அவர்களுக்காக பிரார்த்தியுங்கள் என்று கூறினார்கள் எனவே ஒருவருடைய ஜனாஸா  நமக்கு கிடைக்காவிட்டால் அவர்களுக்கு பிராத்திக்க வேண்டும் அப்படி தொழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தி செயற் படுவோமானால் அது நபி ஸல் அவர்களின் சுன்னாவுக்கு மாற்றமான ஒன்றாக போய்விடும்.

அதுவும் குறிப்பாக சமூகத்தில் மரணிக்கும் செல்வந்தர்கள் அல்லது சமூக செல்வாக்குப் பிரசைகளுக்கு மட்டும் நாம் இந்த தொழுகையை நிறைவு செய்தால் அது மேலும் சமூக பிரச்சினையாக மாறிவிடும் .அது முகஸ்துதியை தோற்றுவிக்கும் சாதாரணமாக பள்ளியோடு தொடர்புள்ள ஒரு முஸ்லிமுக்கு நாம் இதை செய்யமாட்டோம் ஆனால் அதிகம் உலக செல்வாக்கோடு உள்ள ஒருவருக்கு நாம் செய்ய முற்படுகின்றோம் இது இஸ்லாத்தில் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

முடிவு
எனவே எல்லோருக்கும் கட்டாயம் இல்லாத ஒரு தொழுகையை மற்றவர்களுக்கு அறிவுறுத்தி இப்படி நாம் இந்த தொழுகையை தொழ முற்படல் அது வேறு ஒரு சட்ட பொறி முறையாக போய்விடும் .எனவே   வெளி இடங்களில் மரணித்தவர்களுக்கு நமக்கு ஜனாஸாவில் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஜனாசா  தொழுகையை நடத்த அல்லது  தொழ எமக்கு நபி ஸல் அவர்கள் அனுமதி வழங்கவில்லை  என்பதை நாம்  தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சிலருக்காக நபி ஸல் செய்தது அவர்களுக்கு வழங்கப்பட்ட தனி சிறப்பம்சமாகும் .அல்லா மிகவும் அறிந்தவன்.


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget