ளுஹா தொழுகை தொடர்பாக நபி வழி என்ன..?

                         தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
சிலர் ளுஹா தொழுகை தொழ வேண்டும் எனக் கூறுகிறார்கள். இதேவேளை நபி (ஸல்) அவர்கள் தொழவில்லை எனவும் கூறுகின்றார்கள். இதன் நிலைப்பாடு என்ன?

விடை :- 
ளுஹா தொழுகை தொடர்பாக நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் வரக்கூடிய ஆதாரமான ஹதீஸ்களை நாம் பார்க்கும் போது இதற்கான பதிலை தெரிந்து கொள்ளலாம். நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் ளுஹா தொழமாட்டார்கள். ஆனால் வெளியில் சென்று வந்தால் தொழுவார்கள்.

இதை ஆயிஸா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அப்துல்லாஹ் பின் ஸகீக் கூறுகின்றார் நபி (ஸல்) அவர்கள் ளுஹா தொழுபவர்களாக இருந்தார்களா? என ஆயிஸா (ரழி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'இல்லை . வெளியிலிருந்து வந்தால் தவிர'' என பதிலளித்தார்கள். (புகாரி)

இவ்வாறே மக்கா வெற்றியின் போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றிருந்த வேளையில் அவர்கள் எட்டு ரக்அத்துகள் தொழுததாக உம்முஹானி (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி).
இதேவேளை நான்கு ரக்அத்துகளும் தொழுபவர்களாவும் இருந்திருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் எத்தனை ரக்அத்துகள் ளுஹா தொழுபவர்களாக இருந்தார்கள் என ஆயிஸா (ரழி) அவர்களிடம் கேட்ட போது நான்கு ரக்அத் தொழுபவர்களாக இருந்தார்கள். மேலும் அதைவிடவும் கூடுதலாகவும் தொழுவார்கள். (புகாரி)
ஏன் தொடராக தொழவில்லை?
மக்களுக்கு பர்ளாக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தொடர்ச்சியாக அதைத் தொழாதவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதையும் ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஓர் சில அமலை அவர்கள் செய்வதை பார்த்து மக்களும் செய்தால் மக்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ எனப் பயர்கின்ற போது அதை செய்வதற்கு விரும்பினாலும் அதை செய்வதை விட்டுவிடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் அறவே ளுஹா தொழவில்லை (வெளியில் இருந்து வந்தால் தவிர) . ஆனால் நான் தொழுது வருகின்றேன். (புகாரி)

ஏனையவர்கள் வழமையாக்கிக் கொள்ளலாமா?
இது நபி (ஸல்) அவர்களின் நிலையாக இருந்தாலும் பிறருக்கு தொழுவதற்கு ஆசையூட்டுபவர்களாக இருந்துள்ளார்கள்.
அபூஹூரைரா (ரழி )அவர்கள் கூறுகின்றார்கள் இரண்டு ரக்அத் ளுஹா தொழுவதற்கும் ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நோன்பு பிடிப்பதற்கும் தூங்குவதற்கு முன் வித்று தொழுவதற்கும் என்னுடைய நேசர் எனக்கு உபசேதம் செய்தார். இதனால்தான் ஆயிஷா (ரழி) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் தொழாவிட்டாலும் நான் தொழுதுவருகின்றேன் எனக் கூறியுள்ளார்கள்.
இதே வேளை இன்னும் சில ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்கள் ளுஹா தொழவில்லை எனக் கூறி உள்ளனர். இப்னு உமர் (ரழி) அவர்கள் இது பித்அத் என கூறிய செய்திகளும் வந்துள்ளது. அந்த செய்திகள் தொழுததாக வருவதற்கு முரண்படாது.
ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் பெரும்பாலும் ளுஹா தொழுபவராக இல்லாததால் அதிகமானவர்களுக்கு அவர்கள் சில சந்தர்ப்பங்களில் தொழுதது தெரியாதிருந்திருக்கிறது. அதனால் அவர்கள் தொழவில்லை என அறிவித்திருக்கின்றார்கள்.
இதேவேளை சில சந்தர்ப்பங்களில் தொழுததை கண்ணுற்ற ஆயிஸா (ரழி) போன்ற ஒருசிலர் தொழுததாகவும் அறிவித்துள்ளார்கள். இதனாலேயே இந்த மாறுபட்ட அறிவிப்புகள் வந்துள்ளது.   
எனவே முடியுமானவர்கள் வழமையாக இரண்டோ அல்லது நாலோ அல்லது எட்டோ முடியுமானதை தொழுதுவரலாம். தவறினால் முடியுமான நேரங்களில் தொழுது கொள்ளலாம். அதிலும் குறிப்பாக பிரயானங்களிலிருந்து வந்தால் தொழுது கொள்ளலாம்.
இவ்வாறே ளுஹா நேரத்தில் ஊருக்கு வரவேண்டி ஏற்பட்டால் ஆரம்பத்தில் பள்ளிவாயலுக்கு சென்று இரண்டு ரக்அத் தொழுவிட்டு பின்னர் வீட்டிற்கு வருவது நபிவழியாக வந்துள்ளதால் அதைப் போன்று நாமும் செய்ய பழகிக் கொள்வோமாக.
இவ்விரண்டு ரக்அத்துகள் பள்ளிக் காணிக்கையா? அல்லது ளுஹாத் தொழுகையா? எனும் சர்ச்சை இருந்தாலும் அந்த நேரத்தில் அவ்வாறு தொழுவது சுன்னாவாகும்.
                                                                              மௌலவி:- ஆன்சார் தப்லீகி-
                                        
இதையும் பார்க்க:-
                 * வெளியூரில் இறந்த ஒருவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தலாம...
            *  மிஸ்வாக் செய்வது தொடர்பாக சில நபிமொழிகள்.
            *  மறுமைக்காக பெற்றோரை பேணி நடப்போம்..!
            *  ஸக்காத் வழங்குவதாக நேர்ச்சை செய்யலாமா.. ?
            *  பெண்களின் இத்தா என்பது இருட்டறையா..? 


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget