தனி மனித வழிபாட்டின் மொத்த வடிவமாக ஷீஆயிஷம் உள்ளது. அலி (ரழி) அவர்கள் மீதான வழிபாட்டின் மீதுதான் இந்த மதமே நிறுவப்பட்டுள்ளது. அலி (ரழி) அவர்களையும் தமது இமாம்களையும் எல்லை மீறிப் புகழ்வதுதான் இவர்களின் மதத்தின் சாரமாக உள்ளது. இவர்களில் சிலர் அலி (ரழி) அவர்களை அல்லாஹ்வின் இடத்திற்கே உயர்த்தினர். இவர்களது ஒரு பாடலில், ‘லாஇலாஹ இல்லஸ் ஸஹாரா’ பாத்திமா தவிர வேறு இறைவன் இல்லை என்றும் இடம்பெற்றுள்ளது.
தமது பன்னிரெண்டு இமாம்களும் மறைவானவற்றை அறிந்தவர்கள் என்றும், பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்ட மஃசூம்கள் என்றும் நம்புகின்றனர். தமது இமாம்களுக்கு முர்ஸலான தூதர்களோ, சங்கையான மலக்குகளோ அடைய முடியாத உயர்ந்த அந்தஸ்து உள்ளதாக நம்புகின்றனர்.
முஸ்லிம் சமூகத்திற்குள் கப்று வழிபாட்டை நுழைவித்ததில் இவர்களுக்கு அதிக பங்கு உள்ளது. ஹஜ்ஜுக்கு வந்தாலும் இவர்கள் கப்றுகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
ஹுஸைன் (ரழி) அவர்களது கப்ரை ஸியாரத் செய்பவர் அல்லாஹ்வை அர்ஷில் சந்தித்தவர் போலாவார் என்று இன்றுவரையும் பிரசாரம் செய்கின்றனர். கப்றுக்குச் செல்லும்போது தவழ்ந்தும் இழுகியும் செல்லும் காட்சிகளை இன்றும் இணையத்தளங்களில் காணலாம்.
கர்பலா பூமி, மக்கா, மதீனா, பலஸ்தீனத்தை விட இவர்களிடம் புனிதம் பெற்றதாகும். கர்பலா யுத்தம் நடந்த தினத்தை துக்க தினமாக இன்றும் அனுஷ்டிக்கின்றனர். தமது உடல்களில் காயத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ‘யா ஹுஸைன்! யா ஹுஸைன்!’ என்று ஒப்பாரி வைக்கின்றனர்.
இஸ்லாமிய வரலாற்றில் கர்பலா எனும் தினம் எங்கும் இல்லை. அது புதிதாக ஷீஆ மதத்தினரால் உருவாக்கப்பட்டது. கர்பலா எனும் இடத்தைத்தான் காண முடிகிறது. மூன்றாம் கலீபா உஸ்மான் (ரழி) அவர்களிள் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையில் இருந்து கர்பலாவின் பின்னணி துவங்குகிறது.
நான்காம் கலீபாவாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அலி (ரழி) அவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் பல சவால்களை எதிர்கொண்டார்கள். அதில் மிக முக்கியமானது உஸ்மான் (ரழி) அவர்களை படுகொலை செயதவர்களை கண்டு பிடித்து ஷரீஆத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதாகும். இவ்விடயம் தொடர்பில் கருத்து முரண்பாடு ஏற்பட இரு குழுக்களாக முஸ்லிம்கள் பிரிகின்றனர். இதன் ஒரு கட்டமாக கலீபா அலி (ரழி) அவர்களுக்கும் ஆயிஷா (ரழி) அவர்களுக்குமிடையில் நடைபெற்ற ஜமல் யுத்தம் காணப்படுகிறது.
பின்பு கலீபா அவர்களுக்கும் முஆவியா (ரழி) அவர்களுக்குமிடையில் நடைபெற்ற “சிப்பீன்” யுத்தம் என்பன கர்பலா நிகழ்வின் வழிகோலிய காரணிகளாக இருந்ததன. இவ்யுத்தம் இடையில் நிறுத்தப்படுகிறது. இதன் விளைவாக அலி (ரழி) அவர்கள் தரப்பு இரண்டாக பிளவு படுகிறது. இந்நிமிடத்தில் இருந்து அலி (ரிழி) அவர்களின் படையிலிருந்து வெளியேரிச் செய்றவர்கள் “காவாரிஜ்” என்றும், சேர்ந்து இருந்தவர்கள் “ஷீஅது அலி” என்றும் இரு பிரிவுகளாக பிரிந்தனர்.
அன்றய காலத்தில் அழைக்கப்பட்ட ஷீஅது அலி என்பதற்கும் இன்றைய ஷீஆ மதத்திற்குமிடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. கலீபா அவர்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற இஸ்லாத்தின் போதனைக்கமைய அலி (ரழி) அவர்களின் அரசியல் சார்ந்த நகர்வுகளுக்கு சார்பாக இருந்தார்களே தவிர இன்றைய நவீன ஷீஆ மதத்திற்கும் அவர்களுக்குமிடையில் எள்ளளவும் தொடர்பில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அலி (ரழி) அவர்கள் ஸஹீதாக்கப்பட்ட பின்பு ஆட்சி பொறுப்பை அவரின் புதல்வர் ஹஸன் (ரழி) ஏற்றார்கள். இஸ்லாமிய உம்மத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தனது பதவியை விட்டுக் கொடுத்து முஆவியா (ரழி) அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை கையளித்தார்கள். முஆவியா (ரழி) அவர்களின் ஆட்சிக்கு பின்னர் அவரது மகன் யசீத் பின் முஆவியா (ரஹ்) ஆடசிப் பீடம் ஏறினார்.
யசீத் பின் முஆவியா (ரஹ்) அவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் கர்பலா எனும் இடத்தில் ஹுஸைன் (ரழி) அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். யசீத் (ரஹ்) ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஹுஸைன் (ரழி) மற்றும் சிலர் “பைஅத்” செய்ய மறுக்கிறார்கள்.
இந்நிலையில் ஈராக் வாசிகள் தொடர்ந்தேர்ச்சியாக கடிதங்கள் அனுப்புகிறார்கள். தாங்களை அங்கு வரும் படியும் தங்களுக்கு தலைமை பொறுப்பை ஏற்குமாறும் கூறினார்கள். ஈராக் வாசிகளின் உண்மை நிலையை முஸ்லிம் பின் அகீல் என்பவரிடம் உறுதிப்படுத்திக் கொண்ட பின் ஈராக்கை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார்கள். இதன் போது மூத்த நபித்தோழர்கள் குறிப்பாக இப்னு அப்பாஸ், இப்னு உமர் போன்றோர் ஹீஸைன் (ரழி) அவர்களை ஈராக் போவதை தடுக்க முயற்சித்தார்கள். இறுதியில் அனைத்தும் தோல்வியடையவே, பயணம் தொடர்கிறது வழியில் கர்பலா எனும் இடத்தை ஹுஸைன் (ரழி) அடைந்தார்கள். அங்கே யசீதின் படைவசம் சிக்கிட சில நிகழ்வுகளுக்கு பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் ஸஹீதாக்கப்படுகின்றார்கள்.
ஹுஸைன் (ரழி) அவர்களுக்கு நிகழ்ந்த இத்துயர சம்பவத்தை ஞாபகப்படுத்தும் முகமாக ஷீஆக்கள் மேற்கொள்ளும் சடங்குதான் இந்த கர்பலா நிகழ்வு. அதில் நடக்கும் அசிங்கமான சடங்குகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு காணப்படுகின்றன.
கர்பலா தினத்தன்று ஷீஆ மத அறிஞர் மிம்பர் மேடை ஏரி சிறப்புரையும், குத்பாவும் நிகழ்த்துவதுடன் இவ்வுரைகள் ஏனைய குத்பாக்களைப் பேன்றல்லாது உரத்த சப்தத்துடன் கத்துவதுடன், இறம் பாடும் தொணியில் கர்பலா நிகழ்வை கவிதை வடிவில் பாடுவார்கள்.
ஒவ்வெரு ஷீஆ மதத்தினரும் வாலினால், அல்லது கூரிய ஆயுதத்தினால் தனது தலையிலிருந்து இரத்தத்தை ஓட்டி ஹுஸைன் ரழி அவர்களை ஞாபகப்படுத்திக்கொள்வார்கள்.
அஹ்லுல் பைத், மற்றும் ஹுஸைன் ரழி அவர்கள் பட்ட கஷ்டத்தை உணரும் விதமாக தீ மிதித்து கொள்வார்கள். இதன் பின் “லைலதுல் மஃசூஸ்” எனும் களியாட்டம் இடம்பெறும். அதாவது ஆண்களும் பெண்களுமாக ஓர் அறையில் ஒன்று சேர்ந்து, விளக்குகள் படிப்படியாக அணைக்கப்பட்டு, ஆடைகள் கழைந்து கூட்டு வழிபாடு நிகழ்த்துதல் என்பது இதன் பொருளாகும்.
கர்பலா எனும் இடத்திலிருந்து ஹுஸைன் (ரழி) அவர்களின் அடக்கஸ்தளத்திற்கு நெற்றி பூமியை முத்தமிட்ட படி நடைப்பவணி மேற்கொள்வார்கள். இவ்வாறு இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளை தகர்க்கக்கூடிய பல்வேறு அனாச்சாரங்களை கைகொள்வார்கள்.
இறைவனை ஒருமுகப்படுத்தி அவனுக்கு இணையேதும் கூடாது என்று கூறும் இஸ்லாத்தில் தனிமனித வழிபாடு எப்படி சாத்தியமாகும். ஷீஆக்களால் உருவாக்கப்பட்ட அது முஸ்லிம்களின் ஒரு பண்டிகையாகவே பல முஸ்லிம்களும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாத்தைத் தகர்க்கும் அனாச்சாரங்களை கண்டிக்க வேண்டிய சில மார்க்க அறிஞர்கள், மௌலவிகள் கூட இந்த முஹர்ரம் மாதத்தில் ஆஷுரா நோன்பு என்ற தலைப்பில் ஹுஸைன் (ரலி) யின் கர்பலா போர்க்களத்தையும், சோக வரலாற்றையும் பேசி மக்களிடம் பாராட்டுகள் பெறுவதுதான் கொடுமையிலும் கொடுமை.
இப்படி ஹுஸைன் (ரலி) இறந்ததை பெரும் துக்க தினமாக அனுஷ்டிக்க மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நான்கு கலீபாக்கள் ஆட்சி நடத்தினார்கள். அவர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களின் இறந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவில்லை எனும் போது அவர்களது பேரர் என்ற காரணத்தினால் அவரை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்துவது வரம்பு மீறிய செயலாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஹஸன், ஹுஸைன் இருவரும் உலகின் இரு நறுமணம் மிக்க மலர்கள். (ஆதாரம் புகாரி)
இப்படிப் பல சிறப்புகள் அவ்விருவருக்கும் உண்டு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இவர்கள் பெயரால் நடத்தப்படும் பித்அத்துக்களை ஷிர்க்குகளை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. யா அலீ!, யா ஹுஸைன்! என்று அவர்கள் இறந்த தினத்தில் மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைப்பது பக்தி எனும் பெயரில் தன் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வது போன்றவற்றை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “(மரணித்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுது) தன் கன்னத்தில் அடித்துக் கொண்டோரும் சட்டையைக் கிழித்துக் கொண்டவரும், அறியாமைக்கால அழைப்பைக் கொண்டு அழைத்தவரும் நம்மைச் சார்ந்தவரல்ல.”(அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூது (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
மேலும் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித் தராத வழியில் ஹுஸைன் (ரலி) அவர்களின் மறைவிற்காக நோன்பு வைப்பது அத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பது நேர்ச்சை செய்வது, பாத்திஹா ஓதிக் கொளுக்கட்டை போன்ற பதார்த்தங்களைப் பரிமாறுவது போன்ற அனாச்சாரங்களை முஸ்லிம்கள் களைவதோடு அறியாத முஸ்லிம்களையும் எடுத்துக் கூறித் தடுக்க வேண்டும்
அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி)
இதையும் பார்க்க:-