கொலஸ்டரோல் என்பது என்ன?
தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
இது எமது உடலிலுள்ள ஒரு கொழுப்புப் பொருள். இது உடலுக்குத் தேவையான பொருளும் கூட. உதாரணமாக, பால் சார்ந்த ஹோர்மோன்களான ஈஸ்ரோஐன், புரொஜெஸ்டரோன் ஆகியவற்றின் உற்பத்திக்கு அவசியமானது. கலங்களின் பகுதியாகவும் உள்ளது.

ஆனால் இரத்தத்தில் வழமைக்கு மேலான இதன் அதிகரிப்பு நோய்களுக்கு காரணமாகிறது. கொலஸ்டரோல் தவிர்ந்த வேறு கொழுப்புக்களும் எமது உடலில் உள்ளன. கொலஸ்டரோல், ரைகிளிசரைட் (TG), பொஸ்போ லிப்பிட்ஸ் ஆகிய அனைத்துமே கொழுப்புக்கள் (Lipids) எனப்படுகின்றன.