மாதர்களுக்கான மார்க்கத் தீர்வுகள் என்ன..?

                            தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
கேள்வி :-
வீட்டில் தொழும் போது பெண்கள் தங்கள் இரு பாதங்களையும் கட்டாயம் மறைக்க வேண்டுமா?

விடை:-
பொதுவாக அன்னிய ஆண்களுக்கு முன் பெண்கள் தனது இரு பாதங்களும் வெளியில் தெரியாமல் மறைத்துக் கொள்வது கடமையாகும்.
இதேவேளை ஓர் பெண் மஹ்ரமான ஆண்களுக்கு முன் தொழும் போது அல்லது வீட்டில் தனிமையில் தொழும் போது கால் பாதங்களை மறைக்க வேண்டுமா என்ற கேள்விக்கான விடையில் நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் ஆதாரமான செய்தி எதுவும் வரவில்லை.

வீட்டில் உள்ள பெண்கள் தங்கள் தலைகளை திறந்த நிலையில் இருந்தாலும் தொழுகையின் போது தலையை மறைக்க வேண்டும் என வழிகாட்டிய நபி (ஸல்) அவர்கள் அதைப் போன்று கால் பாதங்களையும் மறைத்துக் கொள்ள வேண்டும் என எந்தக் கட்டளையும் இடவில்லை. என்றாலும் உம்முஸலமா (ரழி) அவர்களைத் தொட்டும் ஓர் செய்தி பின்வருமாறு அறிவிக்கப்படுகிறது.

'ஓர் பெண் வேட்டி இல்லாமல் மேலாடையுடனும் தலை முக்காட்டுடனும் மட்டும் தொழுவாழா என நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, அவளின் மேலாடை அவளின் இரு பாதங்களின் மேற்பகுதியையும் மறைக்கக் கூடியதாக இருந்தால் அனுமதியாகும் என அவர்கள் பதில் அளித்தார்கள்' (அபூதாவுத்)
இந்த செய்தியில் இரு குறைபாடுகள் உள்ளது.
 
முதலாவது: இந்த செய்தியை அறிவித்த உறுதியான அறிவிப்பாளர்கள் நபிகளார் சொன்னதாக கூறவில்லை என இமாம் அபூதாவுத் அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது இது உம்முஸலமா (ரழி) அவர்களின் சொந்த கருத்தாக கூறப்பட்டதே உண்மையான அறிவிப்பாகும்.

இரண்டாவது: உம்முஸலமா (ரழி) அவர்களின் சொந்த தீர்ப்பாக வரும் அறிவிப்பும் ஓர் பலஹீனமான ளயீபான அறிவிப்பாளரினூடாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதனை வைத்து சட்டம் எடுக்க முடியாது.
எனவே வீட்டில் அஜ்னபிகள் இல்லாத வேளையில் ஓர் பெண் தொழும் போது கட்டாயம் பாதங்களின் கீழ்ப்பகுதியையோ அல்லது மேற்பகுதியையோ கட்டாயம் மறைக்க வேண்டும் என்பதற்காக சொக்ஸ் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் அதற்கு எந்த ஆதாரமும் நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆதாரம் இல்லாமல் ஓர் விடயத்தை மார்க்கத்தில் கட்டாயப்படுத்துவது மிக ஆபத்தான விடயமாகும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

                                                                         மௌலவியா :- விகாயா (ஷரயியா)

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget