பெண்களுக்கு ஹத்னா செய்வது இஸ்லாமிய சட்டமா ?

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
விருத்த சேதனம் அல்லது அரபி மொழியில் ஹத்னா என்றழைக்கப்படும் விடயம் இஸ்லாத்தில் ஆண்களுக்கு வலியுறுத்தப்பட்ட  விடயமாகும் பொதுவாக இன்று இஸ்லாமிய சமூகத்தில் ஒருவரை முஸ்லிம் என அடையாளப்படுத்த இதை ஒரு சான்றாக கூட கொள்வர் .ஹத்னா என்றழைக்கப்படும் விடயம் . நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் சட்டமாக்கிய அம்சம் அல்ல மாறாக பல முன் சென்ற நபி மார்களுக்கும் இதை  சட்டமாக  வகுத்துக் கொடுத்துள்ளான் .இதனால்தான்  தொறாத்  மற்றும் கிருஸ்தவ  வேதங்களில்  இன்று கூட இதன்  சட்ட அம்சங்களை நாம் காணக் கூடியதாக    உள்ளது . இந்தவகையில் பைபளின் புதிய ஏற்பாட்டில் ( லூக்கா 2:21)   (யோவான்  7:220 ,(ரோமர் 2:26)  போன்ற பகுதிகளில் காணக் கூடியதாக உள்ளது.மேலும் பல பகுதிகளிலும் இதை நாம் காணலாம் .


அதே போல் இந்த விடயம் உலக அளவில் இன்று மட்டுமல்ல பன்னெடுங் காலமாக பல்வேறுபட்ட சமூகங்களில் வழக்கத்தில் காணக் கூடியதாக உள்ளது . பல வரலாறுகளில் கிறிஸ்துவுக்கு முன் 2300 ஆண்டுகளுக்கு முன் இவை சமூகங்களில் இருந்தும் வந்துள்ளது  . மேலும் இன்று கூட ஹிப்ரு பைபிள் என்று அழைக்கப்படும் யூதர்களின் மத நூற்களிலும் இவை சொல்லப் பட்டிருப்பதை காணலாம். அதே போன்று இன்று மருத்துவ உலகில் பொதுவாக அங்கீகரிக்கப் பட்ட ஒன்றாக இது காணப்படுகின்றது . இதனால்தான்  ஹத்னா தொடர்பான இஸ்லாமிய வியாக்கியானங்களுக்கு அப்பாலும் பலஅந்நிய சமூகங்களில்  இதனை ஒரு சமூக செயற்பாடாக செய்து கொண்டு வருகின்றனர்.

 
இதே போன்று ஒன்றுதான் பெண்களுக்கு செய்யப்படும் விருத்தசேதனம் ஆகும். இதுவும் பொதுவாக வரலாறுகளில் பன்னெடுங் காலமாக செய்யப்பட்டுக் கொண்டிருக்கும்  ஓன்று Female Genital Mutilation (FGM) என்றழைக்கப்படும் பெண்களுக்கு செய்யப்படும்  இந்த விருத்த சேதனம் எனும் விடயம் ஆண்களுக்கு செய்யப்படும் நியாய பூர்வ  தன்மையில் இருந்து  வேறுபட்டு   இயற்கைக்கு மாற்றமான முறையில் பெண்களுக்கு மேற்கொள்ளப்படுகின்றது. இது  உலக  அளவில் பார்க்கும் போது பெண்களுக்கு விருத்த சேதனம் செய்யும் வழக்கு ஆபிரிக்க நாடுகளில் இன்று கூட மிகவும் பிரபலமானவை . அங்கு பல சமூகங்களில் இம்முறைமை நடை முறையில் உள்ளது. மேலும் புராதன எகிப்தில் இது நாட்டு சட்டமாக வரலாற்றில் இருந்து வந்துள்ளது .
 
மேலும் அரபு நாடுகளில் மத்திய  கிழக்கில் கூட இது வளக்கத்தில்  இருந்து  வந்துள்ளது . எனவே இந்த பெண்கள் விருத்த சேதனம் என்பது உலகில் இஸ்லாம் வருவதற்கு முன்பு இருந்தே பல சமூகங்களில்  வழக்கத்தில் இருந்து வந்துள்ளது .
 
பிரச்சினை இதுதான் இஸ்லாத்தில் இது சட்டமாக்கப் பட்டுள்ளதா ? என்பதுதான். .இதற்கு இஸ்லாமிய வழியில்  பதில் சொல்வதானால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை . ஆனால் முஸ்லிம் சமூகத்தில் இது வழக்கத்தில் உள்ள படியால் சற்று விரிவாக ஆராயலாம் என்று நினைகின்றேன் .பொதுவாக ஆண்களுக்கு ஹத்னா செய்வதை இஸ்லாம் வழிமுறையாக ஆக்கி உள்ளது .இஸ்லாம் சட்டமாக்கிய பல விடயங்கள் இஸ்லாத்துக்கு முன்னர் சமூக வழக்கங்களில்   உள்ளதுதான். உதாரணமாக ஆண்களுக்கு ஹத்னா  செய்வது ,பெண்கள் இத்தா  இருப்பது,போன்ற பல விடயங்களை குறிப்பிடலாம்
 
ஆனாலும் இஸ்லாம் அவற்றை ஒழுங்கு படுத்தி எமக்கு தந்துள்ளது. ஆண்களுக்கு ஹத்னா  செய்வது கூட நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு முன்னர் அப்போது அரேபியாவில் இருந்துள்ளது.  ஆனால்  அதை இஸ்லாம் எமக்கு சட்டமாக வகுத்து தந்துள்ளது  . அப்போது சமூக வழக்கத்தில் இருந்தது என்பதற்காக இஸ்லாம் சட்டமாக ஆக்கவில்லை ,இப்ராஹீமிய சமூகத்தின் சிறப்புக்களின் ஓன்று இது என்பதால் இதை சட்டமாக ஆக்கியுள்ளது   இந்தவகையில் பெண்களுக்கு ஹத்னா செய்வது என்பது சமூக வழக்கங்களில் இருந்தாலும் இஸ்லாம் எமக்கு அதை சட்டமாக அருளவில்லை ஏனனில்  இஸ்லாமிய வரலாற்றில் ஒருபோதும் இது சட்டமாக இருந்ததில்லை  .ஆனால் இஸ்லாமிய சமூக அமைப்பில் அதனை சட்டமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.
 
உண்மையில் ஆண்களுக்கு செய்வதை மருத்துவா ரீதியாக எடுத்துக் கொண்டாலும் பெண்களுக்கு செய்வதை மருதுவரீதியாகக் கூட எடுக்க முடியாது .அதற்கு நியாயப்படுத்த எந்தக் காரணத்தையும் கூற முடியாது.சிலர்  இஸ்லாத்தில் இது சட்டமாக உள்ளது என்பதற்கு  இப்படியான ஒரு காரணத்தையும் கூறுவர் அதற்கு  சில நபி மொழிகளையும் ஆதாரமாகவும் காட்டுவர். அதாவது.
 

“ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து கத்னா செய்யப்படும் இரு உறுப்புக்கள் சந்தித்து விட்டாலே (இருவர் மீதும்) குளிப்பு கடமையாகிவிடும்”  என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (579)

 

இங்கு நபி ஸல் அவர்கள் பயன்படுத்தி உள்ள அரபு சொல் ஹிதாநாணி என்பது அதாவது இரண்டு ஹத்னா செய்யப்பட்ட உறுப்பு என்பது பொருள் கொள்கின்றனர். அதாவது அரபியில் ஒரு சொல்லை இவ்வாறு இரண்டு சொல்லாக பயன்படுத்தி வந்தால் எந்த சொல் முதன்மையாக குறிப்பிடுகின்றதோ அதனை அதன் பிரதான கருத்தாக கொள்வர். அல்லது இரண்டு சகோதர சொற்களையும் அதன்  கருத்தாக கொள்வர். உதாரணமாக அபவானி  என்ற அரபு  சொல். அபுன் என்றால் தந்தை எனவே நாம் இதனை இரண்டு தந்தை என்று எடுப்பதில்லை. தந்தை மற்றும் தாய் என்றே எடுக்கின்றோம் .

 

அதே போன்று நபி (ஸல்) அவர்கள் அஸ்ரைனி இரண்டு அசருகள் என்று சுபஹ் மற்றும் மக்ரிப் தொழுகைகளை குறிப்பிட்டுள்ளனர் .இவ்வாறு பல சொற் பிரயோகங்களை நாம் காணலாம் . இதே போன்று அரேபியர் கமரைனி என்று சூரியன் மற்றும் சந்திரன் இரண்டையும் குறிப்பிட்டுள்ளனர் .இதே பாவனைதான் ஹிதானானி  என்று இரண்டு ஹத்னா  செய்யப்பட்ட என ஒரு அரபு பிரயோகத்தை  நபி (ஸல்) அவர்கள்  கூறியுள்ளனர். இங்கு இரண்டு ஹத்னா செய்யப்பட்ட என்று குறிப்பிடப் பட்டிருந்தாலும்  இவ்வாறு பயன் படுத்தப் பட்டுள்ளதாலும் ஒரு வர்கத்துக்கு இந்த சட்டம் இஸ்லாத்தில் அமுலில் உள்ளதால் அதை மட்டுமே சட்டமாக எடுக்க வேண்டும் . மற்ற சாராருக்கு சட்டம் இல்லாத படியால் இதனை சட்டமாக எடுக்க தேவை இல்லை .

 

அதே போன்று பெண்களுக்கு ஹத்னா செய்வது உலக வழக்கு உள்ளது  என்பதற்காக இது சட்டமாக இருக்குமோ என்று யூகித்து கொள்ளவது மகா தவறு . எனவே நேரடியாக தெளிவாக சட்டம் இல்லாத விடயங்களை சட்டம் எனக் கூறுவது இஸ்லாமிய சட்டத்துக்கு புறம்பானது . மேலும் ஒரு செயற்பாடு  நபி (ஸல்) அல்லது சஹாபாக்கள் காலத்தில் இருந்துள்ளது என்று நாம் அறிந்து கொள்வது இஸ்லாத்தில் சட்டமாகாது. உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் போது  தொப்பி தலை பாகை மற்றும் முகத்திரை போன்றவற்றை நீக்குமாறு கூறினார்கள் என ஆதாரமான நபி மொழிகளில் வந்துள்ளது என்பதற்காக   அவைகள் ஹஜ்ஜின் பின் கட்டாயம் அமுலாக்கப் படும்சட்டம் என நாம் விளங்கிக் கொள்ளக் கூடாது .இது அர்த்தம் அல்ல. படர்க்கையில் சொல்லப்படும் ஒரு விடயம் நேரடியாக இஸ்லாத்தில் சட்டமாகாது .அப்படி ஒரு விடயத்தை பற்றி சொல்லப் பட்டால் அதற்கான தெளிவான சான்றுகள் வேண்டும் .

 

எனவே சட்டங்கள் சமூக வழக்கத்தில் இருப்பதல்ல   அவை நபி (ஸல்) அல்லது அல்லாஹ்வினால் தெளிவாக கூறப்பட்டிருக்க வேண்டும் .இந்த வகையில் பெண்களுக்கு  ஹத்னா செய்வது என்பது நபி ஸல் காலத்தில் இருந்ததோ இல்லையோ. அவை இஸ்லாமிய சரியாவில் சட்டமாக்கப் படவில்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் பெண்களுக்கு செய்யப்படும் ஹத்னாவில் உள்ள மருத்துவ ரீதியான எந்த சான்றுகளும் பெண்களை ஹத்னா செய்யும் போது இல்லை இஸ்லாத்தை பொறுத்தவரையில் சமூக வழக்கத்தில் உள்ள ஒன்றை சட்டமாக ஆக்கினால் அதில் ஏதாவது காரணம் இருக்க வேண்டும் .வெறும் காரணம் இல்லாத ஒன்றை சட்டமாக்க யாரும் முனையக் கூடாது .

 

மேலும் ஆண்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் ஹத்னா செய்ய ஏற்பாடு செய்கிறோம் அப்படி பெண்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவர்களுக்கு ஹத்னா செய்யும் நடைமுறை உள்ளாதா ?இல்லையே .எனவே சமூக வாய்ப்புகள் மற்றும் கட்டாயதத்னமை போன்றவற்றை கொண்டு இஸ்லாமிய சட்டங்களை அணுக வேண்டும் .

                                               
                                                          தூய வழி ஆசிரியர்  அஸ்ஷேஹ் றஸ்மி மூஸா சலபி

இதையும் பார்க்க :- 
 
 
        

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget