ஒட்டக பால் ,சிறுநீர் நோயைக் குணப்படுத்தும் ஓர் அதிசயம்

                                         தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

'உக்ல்' குலத்தைச் சேர்ந்த சிலர் நபி(ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச் சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல், அந்த ஒட்டகங்களின் மேய்யபரை கொலையும் செய்துவிட்டு ட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர்.

எனவே, (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களுக்குப் பின்னால் நபி(ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அவர்கள் பிடித்துவரப்பட்டு, அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டி, (மேய்ப்பவரின் கண்களைத் தோண்டி எடுத்த) அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு, அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அந்த நிலையிலேயே சாகும் வரை விட்டுவிடச் செய்தார்கள். (ஆதாரம் புகாரி )

மேலும் இந்த ஹதீஸ் முஸ்லிம், திர்மிதி, முஸ்னத் அஹமத், பய்ஹகீ இன்னும் பல கிரந்தங்களிலும் காக்கூடியதாக உள்ளது. இந்த ஹதீஸில் குற்றவியல் தண்டனை முறை ஒருபுறம் இருக்க ஒட்டகத்தின் சிறுநிரை குடிக்கலமா? அது நஜீஸ் இல்லையா? எனும் கேள்வியும் எழுகிறது அது நஜிசாக இருந்தால் நபி (ஸல்) அவர்கள் அதனை குடிப்பதற்கு ஏவியிருக்கமாட்டார்கள் மற்றும் மேலுள்ள ஹதீஸில் இருந்து ஒட்டகத்தின் சிறுநீரும் அதன் பாலும் ஒன்று சேர்க்கப்படும் போது நோய் தீர்க்கும் ஒரு மருந்தாக பயன் படுத்தப்படுவதும் நமக்கு தெளிவாகிறது அந்த வகையில் ஓட்டகத்தின் பால் மற்றும் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகையான மருந்து, புற்றுநோயைக் குணப்படுத்தும் என்று அரபு நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகில் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் பேர் புற்று நோயின் காரணமாக இறந்து வருகின்றனர். அரபு நாடுகளில் இதயநோய் மற்றும் தொற்று நோய்களுக்கு அடுத்தபடியாக, புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக புற்று நோய் மருத்துவம் குறித்த ஆராய்ச்சிகளை அரபு பயோ டெக்னாலஜி றிறுவனம் மேற்கொண்டது. பல்வேறு அரபு நாடுகளையச் சேர்ந்த விஞ்ஞானிகளும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அவர்கள் ஒட்டகத்தின் பால், சிறுநீரிலிருந்து ஒரு வகையான மருந்தை தயாரித்தனர். இந்த சோதனைக்காக அவர்கள் எலிகளைப் பயன்படுத்தினர். ஏலிகளின் உடலில் புற்றுநோய் செல்களை புகுத்தி, அவற்றிற்கு புற்றுநோயை உண்டாக்கினர். புpன் ஒட்டகத்தின் பால், சிறுநீரிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தை 06 மாத காலத்திற்கு எலிகளுக்கு கொடுத்தனர். இந்த மருந்தின் மூலமாக உலிகளுக்கு இருந்த புற்று நோய் குணமானது.
எலிகளின் உடலில் இருந்த புற்று நோய் செல்கள் அனைத்தும் நீங்கி வீரியமுள்ள புதிய செல்கள் உருவாகி இருந்தது. தற்போது இந்த எலியானது மற்ற எலிகளைப் போல் மிகவும் ஆரோக்கியமாக துள்ளி விளையாடுகிறது. ஒட்டகத்தின் பால், சிறுநீரகத்தின் மூலம் தாயாரிக்கப்பட்ட மருந்தானது, உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கச் செய்கின்றது.மேலும் அவை, புற்று செல்களை அகற்றி, புதிய செல்களை உருவாக்குகிறது.

இந்த மருந்தினால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. எனவே, மனிதர்களுக்கும் இந்த மருந்தினைப் பயன்படுத்தலாம், புற்று நோயைக் குணப்படுத்தி விடலாம் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அடுத்த கட்டமாக மனிதர்களின் உடலுக்கள் இந்த மருந்தினைப் புகுத்தி, ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதிலும் வெறறி பெற்றால் மருந்து விரைவில் பயன்பாட்டிற்கு வந்து விடும் என விஞ்ஞானிகள் உறுதியளித்துள்ளனர்.
                                                                 
                                                                மௌலவி:- அப்துல் ஹமீட் (ஸரயி)
 இதையும் பார்க்க :- 
                            * இஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்கு அரை பாக... 
 
 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget